(Reading time: 21 - 41 minutes)

ல்லை ஆன்ட்டி, அம்மா ஸ்பெஷல் கிளாஸ் வச்சுருக்காங்களாம் அதனால வர லேட் ஆகும், இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஆன்ட்டி, அங்கிள் எங்கே? உங்களை தனியாக விட்டுட்டு எங்கே போனாங்க? இன்னைக்கு தேஜுக்கு போட்டி நீங்கதான் ஆன்ட்டி இந்த புடவையில ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவள் பங்கிற்கு பேசிக்கொண்டே இருந்தாள்.

“அனு அனு போதும் பிரேக் விடு, பதில் சொல்லனும்ல உங்க அங்கிள் அவங்க ஃப்ரிண்ட்ஸ் கூட பேசிக்கிட்டு இருக்காங்க, என்னதான் இரவு உணவு வெளியில் இருந்து தயார் பண்ணினாலும் எப்பவும்போல் அதன் பொறுப்பு என்னது தானே அதான் நான் மட்டும் குட்டிபோட்ட பூனை மாதிரி சமையல் அறையை வந்து பார்த்துகிட்டு இருக்கேன் போதுமா இந்த விளக்கம்?” என்று பொறுப்பான குடும்ப தலைவியாக பதில் கூறினார்.

“அது சரி ஆன்ட்டி ஆனால்..” என்று அனு மீண்டும் துவங்க, “நான் சொன்னேன்ல இந்த வாயாடி பேச ஆரம்பிச்சால் நிருத்தமாட்டாள்னு பாருங்க இப்பயே என் காதுல ரெத்தம் வருது” என்று அனுவை வாரியவாறு தன் காதில் கை வைத்து பார்த்தாள் தேஜு. 

“கரெக்ட் தான்” என்று லதா சிரிப்பின்னூடே அனுவை வாரினார்.

“நீங்களுமா ஆன்ட்டி” என்று சிணுங்கினாள் அனு.

“சரி விடு அனு இப்படி பல்பு வாங்குறது உனக்கு என்ன புதுசா?”என்று அனுவை கிண்டல் அடித்துவிட்டு “சரிம்மா நாங்க வரவேற்ப்பில் நிக்கிறோம்” என்று லதாவிடம் சொல்லிக்கொண்டு அனுவை வெளியே அழைத்து சென்றாள் தேஜு. பேசியவாறு வெளியே வந்த அனன்யா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ““ஹே தேஜு உனக்கு இவ்வளவு கசின்ஸா?””

““அது எப்படிடி கசின்ஸ்(cousins) அத்தனை பேரும் என்னோட வயசுலேயே இருப்பாங்க அறிவாளி? எல்லாம் என்னோட பழைய ஸ்கூல் மேட்ஸ்”” என்று தேஜு பதில் கூற அனுவிற்கு ஒரு சந்தேகம் தோன்றியது.

“ஓஹோ... எல்லாரையும் கூப்பிட்டு இருக்கியா?” என்று சந்தேகமாக அவள் கேட்க

அனு ஏன் அவ்வாறு கேட்கிறாள் என்று தேஜுவிற்கு புரிந்து போனது... “ம்ம்ம்ம் எல்லாரையும் கூப்பிட்டு இருக்கேன் ஆனால் அஷ்குட்டி மட்டும் வரமுடியாதுன்னு சொல்லிட்டான் அனு ஏதோ வேலை இருக்காம்” என்று அவளின் முக வாட்டத்தை கவனித்தவாறே கூறினாள்.

“அப்படி என்ன பெரிய வேலை ஹ்ம்ம்” என்று மனதில் சிறு ஏமாற்றதுடன் பேச்சை தொடர்ந்தாள் “நான் ஒன்னும் அவனுக்காக கேட்கலை தேஜு” என்று கூறி மீண்டும் நடக்க துடங்கினர்.

“ஓஹோ நம்பிட்டேன்... சரி வா போய் எல்லாரையும் வரவேற்கலாம்”. என்று அழைத்தாள்.

தாமே ஒரு விருந்தினராக வந்த இடத்தில் எப்படி மற்றவரை வரவேற்பது என்று கூச்சமாக தோன்ற “இல்லைமா நீ போ நான் தோட்டதில் உட்காந்திருக்கேன்” என்று கூறி தோட்டத்தில் மற்ற  தோழிகளோடு சென்று அமர்ந்துக்கொண்டாள். அஸ்வத் வருவான் என்று எதிர் பார்த்து இருந்தாள் அனு, அவன் வராதது சிறு ஏமாற்றமே எனினும், மெல்லிசை மனதை வருட மற்றவை மறந்து அதை ரசித்தவாறு அமர்ந்து இருந்தாள்.

“அம்ம்ம்மா” என்று யாரோ அடிபட்டு வழியில் கத்தியது கேட்டு திரும்பி பார்த்தாள் அனு. தோட்டத்தையும் நடை பாதையையும் பிரிக்க போடப்பட்டிருந்த கல்லில் இடித்துக்கொண்டு வழியில் ஓரமாக ஒரு பெண்மணி நிற்பதை பார்த்து அவரிடம் சென்றாள் அனு, “அச்சோ என்ன ஆன்ட்டி பார்த்து வரக்கூடாதா ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டவாறு அவரை அருகில் உள்ள நாற்காலியில் அமர வைத்து அவரது காலைப் பார்த்தாள்.

“இல்லைமா ஒன்னும் இல்லை ஏற்கனவே அடிப்பட்ட புண்ணுலையே அடிப்பட்டுருச்சா அதான் கொஞ்சம் வலிக்குது” என்று கூறினார்.

“”அச்சோ போட்டிருந்த bandaid வந்துருச்சு ஆன்ட்டி, உங்ககூட யாரும் வரலையா?” கனிவாக கேட்டாள்.

“”என் பையன் என்கூடதான் வந்தான்மா, அவனோட ஃப்ரண்ட்ஸ பார்த்துட்டு வர போயிருக்கான். கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வரியாமா?” என்று அந்த பெண்மணி கேட்க

““கொஞ்சம் இருங்க ஆன்ட்டி நான் போய் தண்ணீயும், பேண்ட்எய்டும்(bandaid) எடுத்துகிட்டு வரேன்” என்று கூறி அனு தேஜுவிடம் சென்றாள். வரவேற்பில் நின்றுக்கொண்டிருந்த தேஜுவிடம் சென்று “தேஜு அங்க ஒரு ஆன்ட்டிக்கு அடிப்பட்டிருக்கு, பேண்ட்எய்டு தாயேன்” என்று அனு கேட்க தேஜு அவசரமாக சென்று எடுத்து வந்தாள்.

“யாருடி அந்த ஆன்ட்டி? பெரிய அடியா? நீயே தண்ணீர் எடுத்துக்குரியா அனு நான் கொஞ்சம் அவசரமாக போகணும்” என்று அக்கறையும் கெஞ்சலுமாக கேட்டுக்கொண்டாள்.

“யாருனு தெரியாது தேஜு பெரிய அடியல்லாம் இல்லை சின்ன அடிதான் பேண்ட்எய்டு போதும், சரி நீ போ நானே தண்ணீ எடுத்துகிட்டு போறேன்” என்று கூறி அவசரமாக சமையல் அறையின் புறம் சென்றாள்.

சமையலை முடித்த வேலையாட்கள் அனைத்தையும் தோட்டத்தில் அடுக்கி வைத்து இரவு உணவிற்கு தயார் நிலையில் இருந்தனர். அனு கிட்சன் செல்ல அங்கு யாருமே இல்லாததால் தானே தண்ணிர் எடுத்தாள், “ஹாய்” என்று தன் காதருகில் குரல் கேட்க பயத்தில் கையில் இருந்த டம்ளரை தவற விட்டாள் அனு.

யாரென்று கோவமாக திரும்பியவள் சிறிதும் எதிர் பார்க்காத வண்ணம் அங்கு அஸ்வத்தை கண்டாள்.

“அச்சோ சாரி சாரி பயந்துட்டியா? நான் சும்மா...” என்று அவன் என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாற, அனுவிற்கு கோவம் குறைந்தது “ஹ்ம்ம் சரி விடு பரவாலை நீ என்ன இங்க பண்ணுற? நீ வர மாட்டனு தேஜு சொன்னா” என்று மீண்டும் தண்ணிர் பிடித்துக்கொண்டே கேட்டாள்.

“அப்போ நான் வருவேனா இல்லையானு தேடிருக்க? அப்படிதானே?” என்று புன்முறுவலுடன் அவளிடம் கேட்டான்.

தவளை தன் வாயால் கெடுமாம் கடவுளே வாய மூடிட்டு இருந்திருக்கலாம் என்று எண்ணி கொண்டு “நான் ஒன்னும் கேட்கலையே அவளாக தான் சொன்னாள்” என்று சமாளித்தாள்.

“இல்லையே எனக்கு வேற மாதிரில செய்தி வந்துச்சு, நீ என்னை தேடினதாக சொன்னாங்களே” என்று சந்தேகமாக அவளை பார்த்தான்.

எல்லாம் இந்த நூடுள்ஸ் வேலையாதான் இருக்கும் அவளுக்கு இருக்கு என்று மனதில் தேஜுவை திட்டிக்கொண்டிருந்தாள். ஆபத்பாண்டவன் போல் இடைமறித்து ““இப்போ யாரு தேஜுவா? உனக்கு யாரையாவது திட்டுறது தான் முழு நேர வேலையா?”” என்று அவள் மனதை படித்தவன் போல் கூற அனன்யாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.

இவன் எப்படி எப்பவும் நம்ம மனசில இருக்குறதை அப்படியே சொல்லுகிறான் இவன் இவ்வளவு புத்திசாலியா இல்லை நம் முகம் நம்மளை காட்டிக்கொடுக்கிறதா? என்று புரியாமல் தடுமாறினால்... யோசனையெல்லாம் முடிந்து நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அஸ்வத்தின் மரூன் நிற ஷர்ட் தென்பட இப்போது தான் தேஜு ஏன் அவ்வாறு கேட்டாள் என்று புரிந்துது.... நினைவின் எதிரொலியாக அனு சிரித்தாள்.

“ஏன் சிரிக்கிற?” என்று அஸ்வத் கேட்க அனு தான் தேஜுவை கிள்ளியதையும் பதிலுக்கு தேஜு அவளிடம் கேட்டதையும் கூறினாள். இதை கேட்டவனின் கண்களில் குறும்பு மின்ன “i dont mind” என்று கூறி அவளிடம் கையை நீட்டினான். அவனது செய்கை கண்டு கிண்டல் செய்ய முயல  ஆனால் அவனது பார்வையில் பேச முடியாமல் தடுமாறினால் அனு. அதை பார்த்து ஆனந்தமாக ரசித்துக்கொண்டு இருந்தான். அவன் தன்னையே பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று உணர்தவளின் கன்னங்கள் செம்மையுற துவங்கின அதை காட்டி கொள்ளகூடாது என்று தோன்ற “but i mind” என்று மெல்லியதாக கூறி அவள் நகர்ந்தாள்.

அவளுடன் சேர்ந்து நடக்க துவங்கினான் அஸ்வத்.. அவனது பார்வையில் தடுமாறியது ஏன் என்று புரியாமல் யோசனையில் எதுவும் பேசாமல் வந்தாள் அனு. அமைதியாக வரும் அனுவை விட எப்போதும் வாயாடும் அனுவையே அஸ்வதிற்கு பிடித்திருந்தது எனவே அவள் மௌனத்தை கலைக்க “என்னை பத்தி என்ன நினைக்குற?” என்று கேட்டான் அஸ்வத்.

சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்ற முயற்சிக்கிறான் என்று புரிந்து போக முகத்தில் மகிழ்ச்சியுடன் அவன் புறம் திரும்பி இடுப்பில் கையை வைத்துக்கொண்டு “உன்னை பத்தி தானே சொல்லட்டுமா?” என்று கண்கள் சிரிக்க நக்கலாக புருவம் தூக்கி அவன் பதிலிற்காக காத்திருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.