(Reading time: 24 - 48 minutes)

ந்த அலங்கரிக்கப்பட்டிருந்த ஆடிட்டோரியத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு குழு photo எடுத்துக் கொண்டிருந்தது. அனு, ஆரு, நந்து, ஜெனியை காவ்யா photo எடுக்க முயலும் போது, சட்டென்று அவர்கள் பின்னால் வந்த கவின் அனைவரின் தோள் மேல் கைபோட்டு இருப்பது போல் போஸ் கொடுக்க, காவ்யா கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு முறைத்தாள். பின்னால் திரும்பி பார்த்த அனு, கவின் ஈ என்று இளிப்பதைப் பார்த்து,

“டேய்.. monkey.. girls-ஆ நிக்கிறோம்ல.. நடுவுல வந்து நிக்கிற..” என்று கேட்க

“girls-ஆ இங்க எங்க பொண்ணுங்க இருக்காங்க..?” என்றபடி கைகளை நெற்றியில் வைத்து தேடுவது போல் நடிக்க, ஆளுக்கு ஒரு அடியை போட்டு விட்டு

“ஆமாமா.. உனக்கு நாங்கள்ளாம் girls-ஆ தெரிவோமா.. அங்க இருக்கிறவ மட்டும் தேவதையா தெரிவாளே?” என்று வேண்டும் என்றே தீப்தியை காட்ட, திரும்பி அவளைப் பார்த்தவன் ஒரு நிமிடம் மலைத்து விட்டான். வெள்ளை சோளியில் தேவதை போலவே இருந்தாள்.

“ஆமா அனு.. தேவதை மாதிரியே இருக்கா...” என்று வாய் தானாக உளர, தலையில் ‘நங்’ என்று ஒரு கொட்டு விழுந்தது.

“ஆ.. பிசாசு” என்று தலையை தேய்த்தபடி திரும்பியவன், ஜெனி பல்லைக் கடித்துக் கொண்டு கையை தேய்த்தபடி நிற்பதை கண்டு அசடு வழிய மற்றவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

“ஓகோ.. என்னப் பாத்தா பிசாசு மாதிரி தெரியுதா?” என்று ஜெனி கேட்க

“சே.. சே.. நீ தான் ஜெ.லோ வாச்சே..” என்றவன் தொடர்ந்து

“அட!! பாரு கண்ணு.. நீயும் நானும் சேம் கலர் dress, சேம் பின்ச்..” என்று கிள்ள வந்த கையை ‘பட்’ டென்று ஒரு அடிபோட்டு

“டேய்.. நல்லா முழிச்சுப் பாரு.. நீ நான் மட்டுமில்ல.. ஊரே ஒரே கலர் dress தான் போட்டிருக்கு” என்று காட்ட,

“ஆமாம்ல.. இருந்தாலும் நீ இவ்ளோ அறிவாளியா இருக்க வேண்டாம்..” கவின் சொல்ல,

“ஜெனி உன்ன ஓட்டிட்டு இருக்கான்.. நீ tube light-ஆம் அதத்தான் அப்படி சொல்றான்” என்று அனு திரியை பத்த வைக்க

“ஆரம்பிச்சுட்டா,, ஏய் உங்க சித்தப்பா பேரென்ன எட்டப்பண்ணா..? போட்டு விட்டதற்காக அவன் கேட்க, அனு அதையும்

“ஆரு உங்க daddy-ஐ பத்தி தான் கேக்கிறான்..” என்று ஆருவை உள்ளே இழுக்க

“தாய்குலமே” என்று கையை தலைக்கு மேல் தூக்கி கும்பிடு போட்டான். பிறகு

“பிள்ளைய பெத்து விடுங்கடான்னா.. நல்லா தொல்லைய பெத்து விட்டுருக்காங்க” என்று புலம்ப

"என்னடா...ஏதோ தொல்லைன்னு கேட்டுச்சு..?" என்று ஜெனி கேட்க,

" உன்னப் போய் மாமா அப்படி சொல்லுவேன்னா குட்டிமா...இதோ இந்த பீப்பா சாரி பாப்பாவத்தான் சொன்னேன்..."என்று அனுவைக் காட்டி கூறவும்,

" டேய்...நான் பீப்பாவா, ? உன் நொல்லக் கண்ண நல்ல டாக்டர்கிட்ட போய் காட்டு.." என்று வரிந்துக்கட்டிக் கொண்டுவர,

" ஓ.கே...ஓ.கே அத அப்பறம் பார்கலாம் ..அப்போ முதல்ல ஃபோட்டோ எடுப்போம்..காவ்யா கோச்சுக்கப் போறா..காவ்யா...காவ்..."என்று அவளைத் தேட,

" ஹலோ...அவ போய் அறமணி நேரமாச்சு.,நின்னு உன் மொக்கையெல்லாம் கேட்டுட்டு இருப்பாளாக்கும்.,ஒழுங்கா போய் ஃபோட்டோ எடு...போ.." என்று அவனை விரட்ட,

" ம்க்கும்...உங்கள எல்லாம் நேர்ல பாக்குறது கஷ்டம், இதுல லென்ஸ் வழியா ஸூம் பண்ணி வேற பாக்கனுமாக்கும்.." என்று புலம்பியபடி போனவன்,

"ஓ.கே...ச்சீஸ்..."என்று சொல்லிவிட்டு மனதிற்குள் ' அப்பாடி இந்த ஒரு செகன்ட்தான் வாயை மூடுதுங்க..'  என்றபடி அவர்கள் கேமராவில் எடுத்தவன், தன் மொபைலிலும் எடுத்துக் கொண்டான்.

" எதுக்குடா உன்னோடதுல எடுத்த...?" அனுவும்,ஜெனியும் அதட்ட,

"சும்மாதான்...புது மொபைல் திருஷ்டி பரிகாரம் வேண்டாமா..." என்றுவிட்டு அவர்கள் கிட்ட வருவதற்குள் மறைந்து விட்டான்.
இவ்வளவு களேபரத்தில் இரண்டு விஷயங்கள் சத்தம் இல்லாமல் நடந்து முடிந்தது. ஒன்று, தன்னை கண்களால் தேடி சோர்ந்து போன நந்துவை , அவளுக்கு தெரியாமல் ஏக்கத்தோடு தன்னைத் தேடும் அந்த விழிகளை தன் மொபைலில் படம் பிடித்துக் கொண்டான் சந்துரு. அடுத்தது, ஆருவின் அருகில் எதார்த்தமாய் வருவதுபோல் அருகில் நின்று க்ளிக் கொண்டது வின்சியின் கேமரா. எடுத்தது அனுவே தான்.பலநாள் பிறகு வின்சியின் முகத்தில் புன்னகையைப் பார்க்க அவளுக்கும் சந்தோஷமாய் இருந்தது. அதே சந்தோஷத்துடன் நடந்தவள், தனியாக நின்று சாப்பாட்டை கொரித்துக் கொண்டிருந்த கதிரைப் பார்த்து அவனிடம் சென்றவள்,

" ஹல்லோ...சார்...என்ன தனியா இருக்கிங்க...எப்பவுத் கேங்கோட தான சுத்துவீங்க..." என்று படபடவென்று பேசியவள், அவன் புன்னகையுடன் அவளையே பார்க்க,

" என்னாச்சு சார்..தனியா சிரிச்சா எங்க ஊர்ல வேற பேர் சொல்லுவாங்க தெரியுமா..." என்றாள்,

"ஏன் சொல்லமாட்ட...இப்ப இங்க யார் சீனியர், யார் ஜூனியர்னு தெரியல..." என்றான் நக்கலாக,

" என்ன பண்ண...நீங்க தான் சீனியர் மாதிரி நடந்துக்கவே மாட்டேங்கறீங்க...சோ...நாவலாவது போய் சார ராக் பண்ணலாமேன்னு வந்தேன்..." என்றாள் அவளும் அதே நக்கலுடன்,

" அப்படியா.,நீ இவ்ளோ ஃபீல் பண்றப்போ உன்ன கண்டிப்பா ராக் பண்ணனுமே..." என்று யோசித்தவன், சட்டென்று தன் அருகில் வந்த விஜயகாந்தை அழைத்து,

"இவளுக்கு உன்கிட்ட ஏதோ பேசனுமாம்...ரொம்ப ஆசைப்படுறா..." என்று அவனிடம் கோர்த்து விட்டுவிட்டு, அவளைப் பார்த்து

" என்ஜாய்" என்றுவேறு கூறினான். அனு சைகையாலே போகாதே என்று கெஞ்ச, அதை சட்டை செய்யாமல் நமுட்டுச் சிரிப்புடன் அகன்றான்.

"அட..அனு, இத என்கிட்ட நீ நேர்லையே சொல்லிருக்கலாம்ல...எனக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்கு...இந்த வொயிட் டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்க..." என்று அவன் ஜொள்ள சாரிப்பா சொல்ல ஆரம்பிக்க, அவன் ஜொள்ளில் அவள்தொப்பகட்டையாக நனைந்து போனாள். அவளை அங்கிருந்து நீந்தி காப்பாற்றிய அருண், அதை கவினிடன் சொன்னவுடன் விழுந்து விழுந்து சிரித்தவன்,

" வொய் பிளட்...சேம் பிளட்...வாய வச்சிட்டு சும்மா இருக்கனும்..இதுக்கு பேர்தான் சொந்த காசுலையே சூன்யம் வச்சுக்கிறது...ஹா...ஹா.." என்றான். அருணும் தன் பங்கிற்கு,

" அவர் பசங்க கிடச்சாலே கடலையைப் போடுவாரு...இன்னும் ஒரு மாசத்து நீ தான் அவரோட பி.பி.சி நியுஸ்.." என்றான்.

" போதும் நிறுத்துங்கடா...ஏதோ காப்பாத்தினியேன்னு பாக்கறேன்...எல்லாம் அந்த கதிர்னால வந்தது.. இதே வேலையாப் போச்சு அவர்க்கு...ஒருநாள் இருக்கு..." என்று அனு பொறிய,

“ எல்லாம் அவர் வேலையா....அவர் பாக்கத்தான் அமைதியா தெரிவாரு, பயங்கற குசும்பு...சத்தமில்லாம எல்லா வேலையும் செய்வார்....ஆனா உன் வாய்க்கு கூட பூட்டுப் போட ஒரு ஆள் இருக்காரேன்னு சந்தோஷமா இருக்கு...” என்றுவிட்டு அவளைப் பார்த்தவன், அவள் சிந்தனை வேறெங்கோ இருப்பதைக் கண்டு யோசனையாக அருணிடம்,

“அந்த சீனியர் முகத்த பக்கத்தில பார்த்திருப்பாளோ....? ஒரு மாதிரி முழிக்கிறாளே...!!” எனவும், அருண்,

“இருக்கும்...இருக்கும்....நானே கண்ணை மூடிட்டுத்தான் இவளை கூட்டிட்டுவந்தேன்....ஒரு வேளை இவள காப்பாத்தினதுனால என்ன நினச்சு ட்ரீம் அடிக்கிறாளோ..?” என்று சட்டைக் காலரைத் தூக்கிவிட்டு கேட்டவனை ஏற இறங்க பார்த்த கவின்,

“அவ நினக்கிறது இருக்கட்டும்...அவளோட டார்ச்சர உன்னால ஒரு மணி நேரம் தாங்க முடியுமா...?....இதுல காலம் பூரா யோசிச்சுப் பாரு...?” எனவும்,மேலே பார்த்து யோசித்த அருணிற்கு, அனு சேலையை வரிந்து கட்டிக்கொண்டு கையில் பூரிக்கட்டையுடன் அவனைத் துரத்துவது போல் கற்பனை விரியவும்,

“ஐய்யயோ.....நான் அண்ணனாவே இருந்துட்டு போறேன்..All Indians are my sisters….” என்றான்.

அங்கு வந்த ஆருவும் நந்துவும், ஜெனி கிளம்பிவிட்டதாக கூறினார்கள். பிறகு தங்களுக்கும் நேரமாவதால் நாளைப் பார்க்கலாம் என்று கூறி ஹாஸ்டலுக்குச் சென்றார்கள்.

காலேஜ் ஃபங்க்ஷன் ஆரம்பித்து பல வாரங்கள் சென்றிருக்க, பாடங்கலும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. முதல் வருட மாணவர்களை மட்டும் விட்டுப் பிடித்தனர். உண்மையில் அவர்கள் ஆர்வத்தை ப்ரொஃபசர்களால் அடக்க முடிய வில்லை...மற்ற வருடங்களில் இருப்பவர்களுக்கு அதெற்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அங்குபெற முடிந்தது.

இன்னும் ஒரு வாரத்தில் சம்மர் வெகேஷன் வரப் போவதால், யார் யார் வீட்டிற்கு போவது என்று ஒரு பெரிய பேச்சுவார்த்தையே நடந்தது.

(இந்த சம்மர் வெகேஷன் ஃபஸ்ட் அப்றம் செகண்ட் இயர்க்கு மட்டும் தான்...அதுவும் அவங்க பிரின்சிக்கு இருக்குறதே கொஞ்ச முடி, அதையும் இந்த மே வெயில்ல இவங்கள மேச்சு கொட்டிப் போயிரக்கூடாதேன்னு பயந்து விடுறது தான்னு...)

ஜெனியின் அப்பா அவளை வெளியில் எங்கும் அனுப்பமாட்டார் என்பதால் அவளைத் தவிர அனைவரும் போவதாக முடிவுசெய்யப்பட்டது. அதன்படி முதல் வாரம் அனுவின் வீட்டிற்கும், இரண்டாவது வாரம் நந்து மற்றும் அவள் அப்பாவுடன் அவர்களின் காரைக்குடி வீட்டிற்கு செல்வது என ஏற்பாடானது. மீதி நாட்களில் நந்து தன் அப்பாவுடன் இருக்க வேண்டும் என்றுவிட்டாள்.

அனைவரும் மிகவும் குதூகலமாக லீவை நோக்கி காத்திருக்க, அதுவும் இந்தா அந்தா என்று போக்கு காட்டிவிட்டு வந்தேவிட்டது. விடிந்தால் கிளம்ப வேண்டும் என்பதால் விடிய விடிய பேசியபடி ட்ரெஸ்ஸை பேக் செய்தவர்கள், விடிகாலையில் தான் உறங்கவே செல்ல, பெட்டில் விழுந்த அடுத்த நொடி அனுவின் மொபைல் அலறியது. எடுத்து பேசியவளின் முகம் இருண்டு போனது..

“என்ன...என்ன ???“ என்று கேட்டவர்களிடம், அதிர்ச்சியுடன்

“ஆக்ஸிடென்ட்.....” என்றாள்.

யாருக்கு?????

 

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 06

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 08

நினைவுகள் தொடரும்...  

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.