(Reading time: 17 - 34 minutes)

தை பார்த்து கொந்தளித்த செல்வி “என்னைக்கும் இல்லாத பாசம் உனக்கு உங்கக்கா மேல இன்னைக்கு வந்துடுச்சா. நாங்க உன்னை கூப்பிட்டா நீ எங்களையே இப்படி அசிங்கப்படுத்துரியா” என்றார் கோபமாக.

“இதுக்கு மேல எங்கக்காவை பத்தி ஏதும் பேசாதீங்க சொல்லிட்டேன். உங்க அண்ணன் பொண்ணை உங்க பையனுக்கு குடுன்னு கேளுங்க. அதுக்கு தான் உங்களுக்கு உரிமை இருக்கு. அப்படி இல்லாம எங்கக்காவை பத்தி பேசினீங்கன்னா இங்க தேவை இல்லாத பிரச்சனை தான் வரும். சொல்லிட்டேன்”

அவரை கோபமாக முறைத்த அக்கா தங்கைகள் தன் அண்ணனை பார்த்து “இப்ப முடிவா நீ என்னண்ணே சொல்ற. இங்க இவ்வளவு பிரச்சனை ஆகிடுச்சி. இதுக்கு அப்புறம் உன் பொண்ணை எங்க கல்யாணம் பண்ணி குடுப்ப. அப்படியே நீ வேற யாருக்காச்சும் பண்ணி குடுத்தாலும் ஊர் தான் என்ன சொல்லும். ஒழுங்கா என் பையனுக்கு குடு. ராணி மாதிரி நான் பார்த்துக்கறேன்”

“அட. வேற யாருக்காச்சும் ஏன் குடுக்கறாங்க. அதான் அந்த பொண்ணுக்கு பிடிச்ச பையனே இங்க இருக்கானே. அப்புறம் எதுக்கு வேற பையன்.” என்றார் மோகன்.

“நீ பேசாத டா. நான் இப்ப எங்கண்ணன் கிட்ட தான் பேசறேன். ஆனா நீ சொல்றது நடக்காது. உங்கக்கா அதான் ராஜீ தெளிவா சொல்லிட்டா. நானே என் பையனுக்கு அந்த பொண்ணை கட்டற எண்ணத்துல நான் இல்லைன்னு. போதுமா. இதோட நீ பேசாத. நீ சொல்லுண்ணே. இப்ப கடைசியா நீ ஒரு முடிவு சொல்லு”

அவரை எரித்து விடுவதை போல் பார்த்த ராஜகோபால் “சீ நீ இனிமே என்ன அண்ணன்னு கூப்பிடாத. என்ன சொன்ன. உன் பையனுக்கு கட்டி குடுத்தா ராணி மாதிரி பார்த்துப்பியா. அதுக்கு எக்ஸாம்பில் தான் இப்ப காட்டுனியா. மோகன் சொன்ன மாதிரி ஓடி போய் கல்யாணம் பண்ண பொண்ணை நீங்க திருட்டுத்தனமா பார்த்துட்டு வருவீங்க. எதுவுமே பண்ணாத என் பொண்ணை நடு வீட்டுல எல்லாரையும் கூட்டி அசிங்க படுத்துவியா. உன் பொண்ணா இருந்தா நீ இப்படி பண்ணியிருப்பியா. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து நீங்களும் எனக்கு என்னென்னவோ பண்ணீங்க. ஆனா இன்னைக்கு பண்ணீங்க பாரு எல்லாத்துக்கும் உச்சக்கட்டமா. போதும் எல்லாம் போதும். என் பொண்ணுக்கு நான் யாரை வேணும்னாலும் கட்டி வைப்பேன். அது என் இஷ்டம். நீங்க யாரு அதுல தலையிடரதுக்கு. உங்களை எப்ப தட்டி வைக்கனுமோ அப்ப தட்டி வச்சிருக்கணும். அப்படி பண்ணியிருந்தா இன்னைக்கு இந்த அளவுக்கு வந்திருக்காது. போயிடுங்க. என் கண்ணு முன்னாடி ரெண்டு பேரும் நிக்காதீங்க.”

ஒன்றும் கூற இயலாமல் அங்கிருந்து வெளியேறினர் சுதாவும் செல்வியும்.

அங்கிருந்த அனைவரையும் பார்த்த மோகன் “அண்ணா. இவங்க பேச்சை எல்லாம் நீங்க ஒரு பேச்சா எடுத்துக்காதீங்க. எதுவா இருந்தாலும் யோசிச்சி செய்ங்க. நான் உங்களுக்கு சொல்ல வேண்டாம். உங்களுக்கு தெரியும்.” என்றார்.

கண்களை மூடி திறந்த ராஜகோபால் “ஜோதி. எல்லாத்தையும் எடுத்து வை. நாம கிளம்பலாம்” என்றார்.

அதற்குள் இடைமறித்த மோகன் “என்னண்ணே. இப்ப போய் கிளம்பறேன்னு சொல்றீங்க.” என்று கேட்டார்.

“இல்லை மோகன். நீயும் தானே இங்க நடந்ததை பார்த்த. இதுக்கு அப்புறம் இங்கே இருக்க சொல்றியா”

“அதுக்கு இல்லை அண்ணே. பசங்களை நம்ம குல தெய்வம் பூஜைக்காக தான் வர சொல்லியிருக்கீங்க. இப்ப இந்த பிரச்சனையால நீங்க ஊருக்கு போயிட்டீங்கன்னா அதை தான் நாளைக்கு இந்த ஊரே பேசும். நமக்கு அது வேண்டாம்ன்னே. நீங்க இருங்க. வந்ததுக்கு சாமியை கும்பிட்டிட்டு போங்க. அந்த சாமி உங்களுக்கு நல்ல வழி காட்டும்”

லக்ஷ்மியும் “அவர் சொல்றதும் சரி தாங்க. நாம இருந்து நாளைக்கு சாமி கும்பிட்டிட்டே கிளம்பலாம்” என்றார்.

பின்பு மோகன் சூழ்நிலையை சகஜமாக்க அனைவரையும் தன் வீட்டிற்கு அழைத்தார்.

ஆனால் இப்போது தனிமை மட்டுமே வேண்டும் என்று எண்ணிய ராஜகோபால் “நாங்க வரலை, இவங்க மூணு பேரையும் கூட்டிட்டு போ” என்றார்.

அவரும் சரி என்று கிளம்பினார்.

இளவரசன் மட்டும் அவரிடம் வந்து மண்டி போட்டு அமர்ந்து “நிஜமாவே சாரி மாமா. நான் உங்களுக்கு இவ்வளவு பெரிய அவமானத்தை வாங்கி தரணும்ன்னு நினைக்கலை. சாரி மாமா.” என்றான்.

“அதெல்லாம் இப்போதைக்கு பேச வேண்டாம்ப்பா. நீ மோகன் கூட போய்ட்டு வா போ” என்று அனுப்பி வைத்தார்.

அவரின் வீட்டுக்கு சென்றும் மூவரும் யாரிடமும் எதுவும் அவ்வளவாக பேசவில்லை. திரும்பி வரும் வழியில் ஜோதி இளவரசனை காரை நிறுத்த சொன்னாள்.

காரை நிறுத்தி விட்டு என்னவென்று கேட்ட இளவரசனிடம் காரை விட்டு இறங்கி “நீங்க பேசுங்க. நான் கொஞ்ச நேரம் வயல் எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் இப்ப பேச வேண்டி இருக்கும்” என்று கூறி விட்டு சென்று விட்டார்.  

இளவரசனுக்கு இனியாவை எப்படி பேஸ் செய்வது என்றே தெரியவில்லை. தான் தான் இது எல்லாவற்றிற்கும் காரணம் என்று அவன் மனம் உறுத்திக்கொண்டே இருந்தது. அதனால் இனியாவிடம் ஏதும் பேச இயலாமல் கண்ணை மூடி அமர்ந்து விட்டான்.

பின் சீட்டில் இருந்து இறங்கி முன் வந்தமர்ந்த இனியா இளவரசனின் கையை பிடித்துக் கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து “இளா” என்று கூறிக் கொண்டே தேம்பினாள்.

அவள் அழுகையை தாங்காமல் “சாரி இனியா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. இது எல்லாத்துக்கும் நான் தான் காரணம். ஆனா நான் எதையும் வேணும்ன்னே பண்ணலை டா. ஐ’ம் ரியல்லி சாரி. ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு” என்றான்.

அவள் இன்னும் தன் அழுகையை நிறுத்தாமல் “என்ன இளா நீங்க. இப்படி எல்லாம் பேசறீங்க. நீங்க எதுக்கும் ரீசன் இல்லை. அத்தை தான் எல்லாத்தையும் பெரிசாக்கிட்டாங்க” என்றாள்.

“இல்லை இனியா. நீ எது சொன்னாலும் தப்பு என் மேல தான்”

“இல்லை இளா. அந்த சிட்டுவேஷன் எனக்கு புரியுது. இட் வென்ட் ராங். நான் அதை ஒத்துக்கறேன். பட் என்னண்ணே தெரியாம அங்க யாரெல்லாம் இருக்காங்கன்னு யோசிக்காம எனக்கு என்னவோன்னு நினைச்சி என் கிட்ட வந்து என்னடா என்னாச்சின்னு நீங்க கேட்டீங்கல்ல அந்த செகன்ட்ல நீங்க என் மேல வச்சிருக்கற அபெக்ஷன் புல்லா நான் பீல் பண்ணேன் இளா. அப்ப உங்க பேஸ் ல தெரிஞ்ச அந்த அக்கறை, அந்த ரியாக்ஷன் எதுவுமே என்னால மறக்க முடியாது. அதனால தான் என்னாலையும் அதுல இருந்து சடனா வெளிய வந்து எதுவும் சொல்ல முடியலை. பட் இந்த ப்ரோப்லம் எல்லாத்தையும் தாண்டி நான் கொஞ்சம் ஹாப்பியா தான் இருக்கேன்.” என்றாள் கண்ணில் கண்ணீரோடு.

ஐ லவ் யூ இளா

ஐ லவ் யூ வெரி மச்

இளவரசனுக்கு பேச்சே வரவில்லை.

இவ்வளவு பெரிய பிரச்சனையாக ஆனதால் அவனாலேயே அவனை மன்னிக்க இயலவில்லை. இவள் கோபப்படுவாள், திட்டுவாள் என்று எதிர்ப்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக பேசுகிறாள். அதுவும் தான் ஐ லவ் யூ என்று கூறியதற்கு, அதை பீல் பண்ணாம சொல்ல மாட்டேன்னு சொன்னவ, இப்ப இந்த பிரச்சனைக்கு இடையில ஐ லவ் யூன்னு சொல்றா.

இனியாவையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் இளவரசன். மனதில் இத்தனையும் ஓடியதே தவிர அவனால் வாய் திறந்து ஏதும் பேச இயலவில்லை.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த இனியா “என்ன இளா நான் சொன்னதுக்கு பார்மலா ரிப்ளை பண்ண மாட்டீங்களா” என்றாள்.

இளவரசன் அவளை தோளோடு அனைத்துக் கொண்டு “ஐ லவ் யூ டூ டா” என்றான். அவன் மனம் நிறைந்திருந்தது.

இது ஒன்றே போதும். இனி எல்லாவற்றையும் சமாளித்து விடலாம் என்று எண்ணினான்.

ஆனால் இன்று தானே வந்து ஐ லவ் யூ என்று கூரியவளே எல்லாவற்றிற்கும் பிரச்சனையாக நிற்பாள் என்று அவன் முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.   

தொடரும்

En Iniyavale - 17

En Iniyavale - 19

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.