(Reading time: 5 - 10 minutes)

சோலைபுரத்தில்,..................

நான்கடி உயரத்தில் கட்டபட்டிருந்த மதில் சுவர்களுக்குள்ளே பிரமாண்டமாய் மிக பிரமாண்டமாய் அமைக்கப்பட்டிருந்தது அந்த வீடு இல்லை மாளிகை....... மாளிகையின் வயிர்புரத்திலிருந்து கேட் வரை தார் சாலை போடப்பட்டிருந்தது. சாலைகளின் இருபுரங்களிலும் பூங்கா அமைத்து அதன் ஓரங்களில் வண்ண வண்ண  பூச்செடிகள் நடப்பட்டிருந்தது... வயிர்கதவுகளின் பிரமாண்டமும் நுணுக்கங்களும் பார்ப்பவர்களுக்கு வியப்பை அள்ளித்தரும்.. பழத்தலைமுறைக்கு முன்பு கட்டப்பட்டிருந்தாலும் அதன் கம்பிரமானத் தோற்றம் எதிரிகளுக்கு பயத்தை தரும்.. மாளிகைக்கு முன்னே சாலைகளும் பின்னே பச்சை பசேல் வயல்களும் இருந்தன. உள்ளே தூண்களும் கதவுகளும் தேக்கினால் இழைக்கப்பட்டிருந்தன.

பெரிய வரவேற்பரையை ஒட்டியிருந்த அறையில்

“தாம் தரிகிட தோம் தரிகிட திம் தரிகிட தம் தரிகிட.......................

தம் தம் தரிகிட தோம் தோம் தரிகிட தம் தம் தரிகிட தம்ம் தோம் தீம் ........”

பாடலுக்கேற்றவாரு அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தாள் அபி என்கிற அபிநயா.

பாலா – பிரேமா தம்பதிகளின் செல்ல புதல்வி, அவ்வீட்டின் வருங்கால மகாராணி...... நீண்ட கூந்தலும், அதில் வாகாக சூடப்பட்டிருந்த மல்லிகை பூவும் அழகிற்கு அழகு சேர்ப்பது போல் இருந்தது... ஒல்லியான உடல்வாகு மாநிறம், கண்கள் இரண்டும் இரண்டு மீன்களை வைத்தது போல் இருந்தன.. வில் போல் புருவங்கள் , செவ்விதழ்கள்... தெகிட்டாத அழங்காரம்.. தேவதை போல் தோன்றினாள்.. தமிழர் பண்பாட்டை உயிர் என மதிப்பவள்... தன் தாய் தந்தை மனமறிந்து நடப்பவள் .. தங்கைகளுக்கு தமக்கையாக மட்டுமல்லாமல் தாயாகவும் இருப்பவள்... இயல் இசை அவளது இரு கண்கள் என்று கூறலாம்.... கிருஷ்ண பக்தை.. மஹா மற்றும் தாயார் அம்மாள் அபிக்கு பின் பிறந்தவர்கள்.. அதாவது அவர்கள் அவ்வீட்டின் சுட்டி இளவரசிகள்...

“பிரேமா... நம்ம வருங்கால மாப்பிள்ளை வரபோறார்....”

“மாப்பிள்ளைனு நாம மட்டும் சொன்ன போதுமா... சொல்ல வேண்டியவ சொல்லனுமே...”

“அதெல்லாம் சொல்லுவா...”

“ஹும்...”

“நான் நம்ம பசங்க கிட்ட சொல்லி பலத்த வரவேற்பு கொடுக்க ஏற்பாடு பண்றேன்...”

லண்டன்........

“சுபா ... ஐ’ம் கோயங் இந்தியா ...”

“இந்தியா......... “

சுபா ஹரியின் உயிர் தோழி... தமிழ் கலாச்சாரத்தை விரும்புபவள்.. ஹரியின் நேர் ஏதிர் குணவதி..

“எஸ்,,, இட்’ஸ் மை மாம்’ஸ் விஷ்.... ஐ’ம் கோயங் பார் எ டெம்பல் பெஸ்டிவல்... கோயங் டு ஸ்டே வித் மை அங்கிள்’ஸ் பாமிலி... “

“கேன் யு ஜாயின் வித் மீ.. ஐ நோ யு லைக் தெயர் கல்சர்..... உட்யு லைக் டு கம்....”

“எஸ்... நானும் வரேன் ஹரி...”

“ம் .. அப்போ இன்னும் டூ டேஸ்ல நாம இந்தியா போறோம்....”

இரண்டு நாட்களில் இந்தியா போகிற சந்தோஷத்தில் இருந்தாள் சுபா...

ஹரியுடன் சுபா செல்வதில் ஹேமாக்கு விருப்பம் இல்லை .. எனினும் அவள் தமிழ் நாட்டை  பார்க்க விரும்புவதால் ஒன்றும் சொல்லாமல் அனுப்பினாள்.....

சென்னை...........

“டேய்.. ரவி நான் என்னோட ஊர் திருவிழாக்கு போறேன்.. நாளைக்கு ட்ரைன்... நீ இங்க தனியா என்ன பண்ண போற ... பேசாம என்கூட திருவிழாக்கு வா....”

“ம்ம்ம்....”

“ரொம்ப யோசிக்காதடா... அங்க உன் சந்தோஷத்துக்கு நான் கேரன்டீ....”

“அப்போ சரி ... நானும் வரேன்....”

இரண்டு ஜோடி நண்பார்களும் சோலைபுரம் செல்ல தயாரானார்கள்........

இரண்டு ஜோடி  நண்பர்களும் அவர்களின் வாழ்கை, திசை மாற போவதை அறியாமல் பயணித்தார்கள்..

Go to episode # 02

 

தொடர்ந்து பாயும்.......

{kunena_discuss:685}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.