(Reading time: 15 - 30 minutes)

ராஜேந்திரன் கழுகாக உருமாறி தன்னுடைய மற்ற கழுகுகளுடன் அந்த அடர்ந்த காட்டிற்கு மேலே விண்ணில் வட்டமிட்டபடி பரந்துக்கொண்டிருந்தான். ஆனால் பொம்மு எங்கேயும் தென்படவில்லை. நீண்ட நேரம் அவன் விண்ணில் வட்டு வந்துக்கொண்டிருந்தான். திடிரென கீழே காட்டின் ஒரு பகுதியில் ஒரு மின்னும் ஒளியை கண்டான் ராஜேந்திரன். உடனே அங்கே சென்றான். அவனுடைய கழுகுகளும் அவனையே பின் தொடர்ந்து வந்தன. காட்டின் அந்த இருட்டான பகுதியை அவன் அடைந்து மின்னும் அந்த ஒளி என்னவென்று பார்த்தான். அவனுக்கு ஆச்சரியம். அங்கே ஒரு மரத்தின் அடியில் ஒரு பானை அந்த பானையில் மின்னும் ஒளிகொண்ட நீரானது இருந்தது.  அதுதான் அமிர்தப்பானை என்று முடிவு செய்தான் ராஜேந்திரன்.

Bommuvin thedal“நான் அதை கண்டுபிடிச்கிட்டேன்!” என்று ராஜேந்திரன் ஆச்சிரியத்தில் தனக்கே கூறிக்கொண்டான்.

அந்த பானையை அவன் நெருங்க முயன்றான். உடனே அவனை சுற்றி பல அணில்கள் வெறித்தனமாக அவனை நோக்கி வந்தன. ஒரு சில அணில்கள் அவன் காலை பிடிக்க ஆரம்பித்த போது ராஜேந்திரன் அவைகளை விரட்டினான். ஆனால் அந்த அணில்கள் அவனை விடுவதாய் இல்லை . ராஜேந்திரன் அவகளை தாண்டி வர முயன்றபோது அத்தனை அணில்களும் அவனை தாக்கி கிழே விழசெய்து அவனை கடிக்க ஆரம்பித்தன.

உடனே ராஜேந்திரனின் கழுகுகள் அங்கே விரைந்து வந்து அந்த அணில்களை தூக்கி வீசின. ராஜேந்திரன் காயத்துடன் எழுந்து மீண்டும் அந்த அமிர்தப்பானையை நோக்கி சென்றான். குனிந்து அந்த அந்த பானையில் உள்ள நீரை பார்த்தான். அதில் ஏதோ தெரிய ஆரம்பித்தது.

ராஜேந்திரன் அந்த அமிர்தத்தை பருகுகிறான். உடனே ராஜேந்திரனை சுற்றி மக்கள் நிறைந்து இருந்தன. அவன் புகழின் உச்சியில் இருக்கிறான். அவன் மற்ற நாட்டு அரசர்களை விட சிறந்த அரசனாய் இருக்கிறான். அவனால் அந்த ஷானுதாவை கொல்ல முடிகிறது. இந்த உலகமே தன்னை நம்பும் சந்தோஷத்தில் சிரிக்கிறான் ராஜேந்திரன்.

அந்த காட்சிகளில் முழுகிய ராஜேந்திரன் அந்த அமிர்தத்தை தொட்டு பார்த்தான். திடிரென அவனுக்கு கையில் மின்சாரம் பாய்ந்தது போல தூக்கி அடிக்கப்பட்டான். மரத்தில் மோதி எழுந்த ராஜேந்திரன் தன் கைகளை பார்த்தான். அவனின் கைகள் அணிலின் கைகள் போல மாறியது. அவனின் உடலும் சிறிய அணிலை போல மாறிக்கொண்டு இருந்தது. அவனால் அதை தடுக்க முடியவில்லை. சீக்கிரமே அவன் ஒரு அணிலாக மாறினான். ராஜேந்திரன் அழுதான். அந்த அமிர்தம் ஒரு போலியான அமிர்தம் என்று அவனுக்கு அப்போதுதான் புரிய வந்தது.

அவனுடைய கழுகுகள் அவனை அடையாளம் காண முடியாமல் ராஜேந்திரனை இங்கும் அங்கும் தேடிக்கொண்டு இருந்தன. ராஜேந்திரன் கண்ணுக்கு இப்போது அந்த அமிர்தம் பச்சை நிறத்தில் தெரிந்தது. அவனை சுற்றி மீண்டும் அந்த அணில்கள் கூட்டம் வந்து நின்றது. ஆனால் அவனை தாக்கவில்லை.

இம்முறைதான் ராஜேந்திரனுக்கு ஒரு விஷயம் புரிய வந்தது. தன்னை அமிர்தத்தை நெருங்க விடாமல் தடுக்க நினைத்த அணில்களும் அந்த போலி அமிர்தத்தால் சபிக்கப்பட்ட மனிதர்கள்தான் என்று.

ரண்டு நாட்கள் சென்றன. அது இரவு நேரம். பொம்முவும் கோக்கியும் உயிருக்கு போராடி அந்த அடர்ந்த காட்டில் ஓடிக்கொண்டு இருந்தனர். அவர்களை துரத்தி பிரகாசமான சிவப்பு நிறத்தில் கோழிகள் நிறைய ஓடிவந்தன.

“கோக்கி என்ன இதுங்க....நம்மள துரத்திகிட்டு வருதுங்க?...என்ன இதுங்கெல்லாம்?” – பொம்மு மூச்சு வாங்கியபடி.

“இதுங்கதான் நெருப்பு கோழிகள்” – கோக்கி மூச்சுவாங்கியபடி.

“என்ன நெருப்பு கோழிகளா?...” – பொம்மு.

“ஆமாம்...இதுங்க எல்லாமே அந்த தீயமரத்தில் பிறந்து வந்துச்சுங்க...இதுங்க உடம்பெல்லாம் நெருப்புங்கதான்...இதுங்க நம்ம உடலை கொத்தினா நாம அகினியில் எரிஞ்சு சாக வேண்டியதுதான்” – கோக்கி.

பொம்மு அதிர்ச்சியுடன் ஓடியபடி பின்னே அவர்களை துரத்தி வரும் அந்த நெருப்பு கோழிகளை கண்டாள். அந்த நெருப்பு கோழிகள் ஓடிவரும் இடமெல்லாம் தீப்பிடித்துக்கொண்டு இருந்தது. ஒருநிமிடம் அவள் நின்றாலும் அவளை அந்த கோழிகள் கொத்தி விடும். ஆனால் அதற்குள் பொம்மு கால் தடுக்கி விழுந்தாள். கோக்கி அவளை கவனிக்காமல் ஓடிக்கொண்டு இருந்தது.

கோக்கி திரும்பி பார்த்து அதிர்ச்சியில் அங்கே நின்றது. பொம்முவை கொத்துவதற்கு பாய்ந்து வந்தன நெருப்பு கோழிகள். பொம்மு பயத்தில் கண்களை மூடினாள். திடிரென நீராலான ராட்சத பாம்பு ஒன்று அங்கு பாய்ந்து வந்தது. அது அங்கே இருந்த நெருப்பு கோழிகளை வாயில் பிடித்து முழுங்கியது. அந்த அந்த நெருப்பு கோழிகள் நீர் பாம்பின் வாய் வழியாக வயிற்றுக்கு செல்வது கண்ணாடியை போல் பொம்முவுக்கும் கோக்கிக்கும் தெரிந்தது. நெருப்பாலான அந்த நெருப்புகோழிகள் நீர்ப்பட்டவுடன் இறந்து விட்டன. நீர் பாம்பு பொம்முவை கண்டுக்கொள்ளாமல் இடதுப்பகக்ம் எங்கோ செல்ல ஆரம்பித்தது. பொம்முவுக்கும் எல்லாமே கனவு போல் இருந்தது. கோக்கி பொம்முவை நெருங்கி வந்தது.

“நல்லவேளை நீங்க தப்பிச்சிடீங்க...” கோக்கி பெருமூச்சு வாங்கியபடி.

பொம்மு எழுந்து நின்றாள். அந்த நீர்ப்பாம்பு செல்லும் இடமெல்லாம் நீர் சிந்துக்கொண்டு இருந்தது. அந்த நீர் பட்டு அங்கே நெருப்பு கோழிளால் எரிய ஆரம்பித்த  தீ அனைத்தும் அணைந்து போனது.

“அது என்ன?” – பொம்மு.

“அது நீர்ப்பாம்பு...அதுக்கு நெருப்பு கண்டாலே பிடிக்காது...அதனால எங்கே நெருப்பு எரிஞ்சாலும் அது வந்து அணைச்சிடும்...” – கோக்கி

“என்ன சொல்ற?...அது நம்மை எதுவும் பண்ணதா?” – பொம்மு.

“இல்ல எதுவும் பண்ணாது...அது நல்லதுதான்.” – கோக்கி.

பொம்மு தன் கையில் இருக்கும் வரைபடச்சுருளை  விரித்து பார்த்தாள். அவள் தேடி வந்த ஒரு அமிர்தப்பானை இன்னும் சிறிது தூரத்தில்தான் இருக்கிறது. அதுவும் அந்த நீர்ப்பாம்பு போகும் திசையில்தான் இருக்கிறது.

“நாம அந்த பாம்பு போகிற திசையில்தான் நாமளும் போகணும்...” – பொம்மு

“அய்யயோ!” – கோக்கி கத்தினான்.

“என்னாச்சு?” – பொம்மு பதறி.

“நான் அந்த நீர்ப்பாம்பு நல்லதுனுதான் சொன்னேன்...ஆனால் அது வாழற இடம் ரொம்ப மோசமான இடம்.....எங்களோட நெறய குட்டிச்சாத்தான்கள் அந்த பக்கமா போய் ஆபத்துல சிக்கி  இறந்துட்டாங்க....” – பொம்மு.

“ஏன்? அங்கே என்ன இருக்கு? அது அந்த பாம்புகள் வாழற இடம்தானே?” – பொம்மு.

“ஆமாம்....ஆனா அதுங்க வாழற இடம்....மரணக்கிணறு....” – கோக்கி நடுங்கியபடி.

“என்ன மரணக்கிணறா?” – பொம்மு புரியாமல்.

“அது ஒரு மிகப்பெரிய கிணறு......அந்த கிணறை காப்பதற்கு ஒரு பொண்ணு அங்கே இருக்கா...அவ அந்த கிணறை யாரு எட்டிப்பார்த்தாலும் அவங்களை கொன்னுடுவா!” – கோக்கி.

பொம்மு அதிர்ச்சியடைந்தாள். அவள் மனதில் தற்போது ஒரே ஒரு கேள்விதான் ஓடிக்கொண்டு இருந்தது. ஒருவேளை பொம்மு தேடி செல்லும் அந்த அமிர்தம் அந்த கிணற்றில்தான்  இருந்தால்?....

தொடரும்

Go to Bommuvin Thedal episode # 07

Go to Bommuvin Thedal episode # 09

{kunena_discuss:697}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.