(Reading time: 12 - 23 minutes)

"ம்.. நல்லா தெரியதே......  காலையில அண்ணனுக்கு கொடுத்த மரியாதை மாலையில காணாமல் போய்கொண்டிருக்கிறதே."

"ஆமா உனக்கு இப்ப அது தான் முக்கியம்.  என்னை கடுப்பேத்தாமல்  சொல்றியா இல்லையா?"

"இது தாண்டி நீ...  அத விட்டிட்டு மரியாத எல்லாம் கொடுத்து எதுக்கு ம்.... நீ என்கிட்ட ஓடராவே கேட்டிருந்தாலும் கண்டிப்பா அத நான் செய்திருப்பேன் ஓகே.. " என்று அயியின் தலையை வருடிய படி சொன்னான்.

"தாங்க்ஸ் டா."

"குட்  இத தான் எதிர் பாத்தேன்  ஆனால்  நீ எதிர் பார்த்தது தான் இன்னிக்கு நடக்கல ஐ ஆம் சோரி....."

விருக்கென தமயனிடம் இருந்து விலகி  "என்னடா சொல்றே எனக்கு ஒண்ணுமே புரியல? நீ மீற் பண்ணினியா உனக்கு அவனை  புடிக்கலையா? இதுக்கு  தான் இவளவு டயலோக் பெசினனியா?"

"ஏன் உனக்கு இவளவு கோபம் என் மேல இதே கோபத்தை சங்கர் கிட்ட காட்டு "

"ஏன்? ஏன் நான் சங்கர் கிட்ட கோபப்படனும்?"

"ஏன்னா  உனக்காக  இம்போர்டன்ட் மீற்றிங்கை கூட கான்சல் பண்ணிட்டன். ஓன் அவர் வெயிட் பண்ணியும்  சங்கர் வரல. சரி கால் பண்ணலாம் என்றால் சுவிச்ட் ஆவ்.  உனக்கு கால் பண்ணலாம் என்றால் என்னோட போன் DEATH ஆகிடிச்சு.  இதுக்கு என்னை பிடிச்சு வாங்கிறா"

" சாரி டா .... தேவை இல்லாமல் உன்னை திட்டிட்டன்.  ஆனால் வாறன் என்று சொல்லிட்டு இப்பிடி போனையும் ஆவ் செய்து அவனும் வராமல் இருக்கமாட்டான்.  நா அவனுக்கு ட்ரை பண்றன். "

 " சரி நீ கால் பண்ணி பாரு நான் பிரெஷ் ஆகிட்டு வாரன்."

எத்தனை முறை கால் செய்தும் சங்கரை தொடர்பு கொள்ள முடிய வில்லை.

பாண்ட் சர்ட்டில் இருந்து  சோர்ட்ஸ் ரீ- சேட்டுக்கு மாறியவன் தங்கையை தேடி மொட்டை மாடிக்கு வந்தான். அவள் முகம் வாடி இருப்பதை பார்த்து 

"என்னாச்சுடா  ஏன் இப்பிடி கவலையா இருக்க. ஏய் அழுகிறாயா?"

"இல்லண்ணா  எத்தனை முறை கால் பண்ணினாலும் ச்விச்ட் ஆவ் இல தான் இருக்கு எனக்கு பயமா இருக்கு அவனுக்கு எதாவது  ஆயிருக்குமோ என்று கவலையா இருக்கு." என்று அஸ்வின் தோள்களில் சாய்ந்து அழத் தொடங்கிகினாலள்.

"ஹே லூசு என்ன இது சின்ன பிள்ளை போல அழுது கொண்டு. எவ்வளவு தைரியமான பொண்ணு நீ என்னண்டே எதுக்கு அழ வேண்டும் .  இப்ப என்ன அவரது போன் தானே ஆவ்ல இருக்கு அவரோட ஆபீஸ் நம்பருக்கு கால் பண்ணலாம் வா."

அபி  சங்கரின் ஆபீசுக்கு கால் செய்தாள்.  "அவன் வேலை விஷயமாக ராஜஸ்தானுக்கு உடனே புறப்படும் படி ஆகி விட்டது. அவனது போன் தவறுதலாக கீழே விழுந்து உடைந்து விட்டது. நீங்கள் போன் செய்தாள் சொல்லி விட சொன்னான். இன்னும் ஒரு மாதத்தில் வந்து விடுவான் . உங்கள் அண்ணனுக்கும் சாரி சொல்ல சொன்னான்" என்று சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாட்டம் கூறிவிட்டு போனை வைத்தான் சங்கரோடு வேலை செயும் ரவி.

"மலர்ந்த  முகத்துடன் அபி தமையனிடம் எல்லாவற்றையும் ஒப்பித்தாள்.

"சரி இப்பதான் தெரிஞ்ச்சு போச்சில்ல அப்புறம் என்ன இனியாவது போய் பிரெஷ் ஆகிட்டு வா"

"என்ன வந்ததும் வாராததுமா அண்ணனும் தங்கையும் மொட்டமாடில இருந்து தனியா கதைக்கிறீங்க ?"     என்று  அவர்களது தாய் மணிமேகலை கேட்டபடி இருவரது கையிலும் ரீயும் வடையும் கொடுத்தாள்.

"அதுவாம்மா இன்னிக்கு உங்க வெட்டிங் அனிவசரியை எப்பிடி வீட்டிலேயே புது டிஷ் பண்ணி பாமிலியா உக்காந்து அரட்டை அடித்து கொண்டாடலாமா? அல்லது கோவில் பீச் சினிமா என்று சுத்தலாமா என்று அபி கேட்டிட்டிருந்தால். உங்ககிட்ட கேப்போம் என்று கீழே வர வெளிக்கிடுறோம்  நீங்க மேலேயே வந்திட்டீங்க" என்று சொல்லி சமாளித்தான்.

கண்களாலேயே அபி அஸ்வினுக்கு நன்றி சொல்லி விட்டு வடையை சுவைத்தாள்.

"உங்களுக்கு எது ஆசையோ அதை செய்வோம் ஆனால் கண்டிப்பா அம்மன் கோவிலுக்கு போகணும் அஸ்வின் நீயும் வரணும்."

"ம் சரிம்மா அப்பா வந்ததும் கோவில் சினிமா அப்புறம் செட்டினாடில நல்ல புடிபுடிச்சிட்டு வாரம் ஒ....கே......"என்று சொல்லி விட்டு தனது அறையை நோக்கி சென்றான்.

"ஹிம் இவனுக்கு திருமணமாகி பேரன் பேத்திய கொஞ்சிற வயசில எங்களுக்கு திருமணநாள் கொண்டாடிக் கொண்டிருக்கான். " என்று மனதுக்குள் குமைந்தாள்.  

மேகலைக்கு  தனது அண்ணன் மகள் சர்ஜிகாவை அஸ்வினுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசை. அவளும் தன் மகனுடன் சில காலங்களாக போராடிக் கொண்டிருக்கிறாள். அவனோ பிடி கொடுத்தே பேசமாட்டேன் என்கிறான். 

ஒருவேளை யாரையாவது காதலிக்கிறான் போல அப்பிடி என்றாலாவது பரவாயில்லை அவளையே திருமணம் செய்து தருகிறோம் என்றும் கேட்டுப் பார்த்தால்.  ஆனால் அவன் தனக்கு இந்த காதல் திருமணம் இதிலெல்லாம் விருப்பமும் இல்லை நம்பிக்கையும் இல்லை என்று சொல்லி விட்டான். இப்போது எனது லட்சியம் எனது கம்பனி அது தான் எனக்கு முக்கியம் கலியாணத்தைப் பற்றி பேசாதீர்கள் என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விடான்.    

மேகலை பயந்து போனாள் தனது மகனின் வாழ்க்கை இப்படியே தனி மரமாகவே முடியப் போகிறதோ என்று தினமும் இறைவனை வேண்டிக் கொள்வாள்.

(பாவம் இந்த தாய் மகன் இப்போது ஒரு பெண்ணின் காதலுக்காக ஏங்கி தவிப்பது தெரியாமல் போய் விட்டது.  )

சுதன் வீட்டில்

"ன்னடா  திடீர் என்று வந்து நிக்கிறாய்? கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறாய். உடம்பு ஏதாவது சரி இல்லையாடா?"

"பிச்..... அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா நான் நல்லாத்தான் இருக்கன். உனக்கு தான் உடம்பு முடியாத மாதிரி கனவு கண்டேன். அது தான் பாத்திட்டு போலாம் என்று வந்தேன். அதுக்கு போய்.... சரி உனக்கு பிடிக்கல என்றால் நான் இன்னிக்கே கிளம்புறன்." 

"என்னப்பா இது இதுக்கு போய் கோவிச்சு கிட்டு கிளம்பிட்டாய்  சரி உனக்கு எப்ப ராசா பரீட்சை? நல்ல படிக்கிறியா? "

"ம்... நல்லா படிக்கிறான் அம்மா அடுத்த வாரம் எக்ஸாம்ஸ் தொடங்குது நான் நாளைக்கு கிளம்பிடுவன்." என்று சொல்லி தாயின் மடியில் தை சாய்த்தான்.

சுதனின் தாய் பூங்கோதை எதுவும் பேசாது மானின் தலையை வருடி விட்டாள். 

அவன் கண்களை முட முயன்றான். ஆனால் அவன் காதுகளில் புவிகாவின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது .

" என்னாசு.... என்கிட்ட என்ன தயக்கம் சொலுங்க..."என்றாள். புவிகா

சுதனுக்கு மகிழ்ச்சி கொப்பளித்தது இவள் என்னிடம் எவ்வளவு உரிமை எடுத்து கொள்கிறாள். நான் தான் இத்தனை நாளும் வீணாகக் விட்டேன். இதோ இப்போதே என் காதலை சொல்லி விடுகிறேன் காதலியே. என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவளிடம் தன காதலி கூற அவள் முகம் பார்த்தான். 

"என்னாச்சு சுதண்ணா?  ஏதாவது ஹெல்ப் வேணுமா? அதுக்கு தான் தயங்குறீங்களா? இதோ பாருங்க எப்போ நீங்க என்னை அந்த சீனியர் பசங்க ராக் பண்றப்போ  காப்பாத்தினிங்களோ அப்பவே நீங்களும் மது அண்ணன் போல தான்.  நானும் உங்ககிட்ட பேச ரை பண்ணி இருக்கன் பட் நீங்க தான் யார் கிட்டயும் பேசுறதில்லையே. ம்ஹீம்.... விட்டாள் இப்பிடியே பெசிட்டிருப்பேன் சொல்லுங்கண்ணா என்ன வேணும் ?" என்று  எதிரில் நிற்பவனின் மன நிலை தெரியாது பேசிக் கொண்டே போனாள்.

 பாவம் காதல் சொல்ல வந்த காதலனை அண்ணனாக்கி விட்டாள்.  அவன் இதயம் சுக்கு நூறாய் வெடித்து சிதறியது. தன துக்கத்தினை தனக்குள் புதைத்து விட்டு. "இல்ல நான்  உங்க கூட பிறகொருநாள் கதைக்கிறன் நீங்க இப்ப கிளாசுக்கு கிளம்புங்க என்று சொல்லி விட்டு கனத்த கால்களுடன் அன்றே தன் தாயின் மடி தேடி புறப்பட்டான் திருவல்லிகேனிக்கு.

 இனிமேல் சுதன் புவிகாவை காதலியாய் பரப்பானா இல்லை தங்கையாய் பார்ப்பானா? காலம் தான் அவன் வேதனையை களைய வேண்டும். 

தொடரும்!

Go to episode # 05

Go to episode # 07


{kunena_discuss:702}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.