(Reading time: 33 - 66 minutes)

 

வ்னீஷுடன் நடந்து கொண்டிருந்த ஷன்விக்கோ இந்த நாள் இவ்வளவு இனிமையாகவும், சுமையாகவும் இருந்திருக்க வேண்டாமென மனம் சொல்லிக்கொண்டிருந்தது…

பக்கவாட்டில் அவனது முகம் பார்த்தாள், கன கச்சித உடல், கூர் நாசி, அலைபாயும் கேசம், பிறை நெற்றி, காந்த விழி… என்று ரசித்தவளின் மனதில் காதல் மின்னல் உண்டானது… அவள் பார்ப்பதை உணர்ந்த அவன் மனம் துண்டானது… இன்று வரை காணாத அன்பை கண்டவள் போல் மலராகி நின்றிருந்தாள் அவள்… சட்டென்று ஏதோ உருத்த அவளைப் பார்த்தவனின் விழிகளில் காமம் இல்லை, அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கணும் என்ற தாய்மை உணர்வு மேலிட்டது… பல நூறாண்டு வாழ வேண்டுமென்ற கரை இல்லாத காதல் தெரிந்தது…

தாய்க்குப் பின் தாரம் என்றே அவன் மனது சொன்னது… எனக்கு இவள் தாய் தான்… இவளுக்கு நானும் தாய் தான்… அவன் அவளைப் பார்த்த வினாடி அந்த பார்வையில் சிக்குண்டவள், விழி தாழ்த்திக் கொண்டாள்… அவள் வெட்கத்தைக் கண்டவன் இதழ்களில் இளநகை அரும்பியது…

அவர்களின் மனநிலை அறிந்தார்போல் அந்த நேரம் அந்த பாடல் ஒலித்தது…

உன்னை நான் கண்ட நேரம் எந்தன் நெஞ்சில் மின்னல் உண்டானது…”

ஷன்வியின் இருதயத்தில் மின்னல் சட்டென தோன்றி மறைந்தது…

என்னை நீ கண்ட நேரம் எந்தன் நெஞ்சம் துண்டானது…”

அவனின் மனம் இரு துண்டாதனதை அவனும் உணர்ந்தான்….

காணாத அன்பை நான் இன்று கண்டேன் காயங்கள் எல்லாம் பூவாக…”

ஷன்விக்கு தன் மனதை சொல்லியது போல் இருந்த வரிகளில் திக்கிப்போனாள்…

காமங்கள் ஒன்றே என் காதல் அல்லகண்டேனே உன்னை தாயாக…”

அவனுக்கோ தன் எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது என்ற தவிப்பில் இருந்தவன் இந்த பாடலையே தூதாக கொண்டு சன்னமாக அவளுக்கு கேட்கும்படி பாடிக்கொண்டே வந்தான்…

அவளுக்கு அவன் பார்வை சொன்னதை இப்பொழுது இந்த வரிகள் உணர்த்தியது தான் தாமதம் என்பது போல்,

மழை மேகம் பொழியுமா?...”

நிழல் தந்து விலகுமா?...”

என்று அவளும் பாடினாள்…

நீ இல்லை என்றால் என் வாழ்வில் என்றும் பகலென்ற ஒன்று கிடையாது…”

இன்று காதல் பிறந்த நாள்என் வாழ்வில் சிறந்த நாள்…”

மணமாலை சூடும் நாள்பார்க்கவா?...”

என்று தவிப்போடு அவள் முகத்தைப் பார்த்து பாடினான்…

சொல்லிவிட்டான், இறுதியில் அவனது மனங்கவர்ந்த காதலியிடம் தன் காதலை அழகான இசையோடு அர்த்தமுள்ள வரிகளாய் சொல்லிவிட்டான்… அவளின் பதில் என்ன இனி?... கேட்டே விட்டானே நேரே… அவள் அவனைப் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லையே… அதற்குள் காதல் சொல்லிவிட்டேன் என்று என்னை தவறாக எண்ணுவாயா ஷன்வி?... எதுவாக இருப்பினும் உனக்காக ஏற்பேன்…

சட்டென்று அழுதுவிட்டாள் ஷன்வி…

அவள் திட்டுவாள், பேசாமல் போவாள், என்று எதிர்பார்த்திருந்தவன், அவள் அழுவாள் என்று மட்டும் எதிர்பார்க்கவில்லை… அவளை அழ விட அவனுக்கு சம்மதமில்லை…

“சவி… ப்ளீஸ்… அழாத… என்னாச்சுமா?... எதுனாலும் சொல்லுடா… ஏண்டா அழற?...” என்று கேட்டான்…

அவனின் சவி என்ற அழைப்பில் தொலைந்து போனாள், அவளின் அழுகையும் நீண்டது… அவன் ஒருமையில் அழைத்ததும் புரிந்தது… அவன் தனக்கானவன் என்ற எண்ணம் மேலோங்கி விட்டதை அவள் மனம் உறைத்தது…

ஒரு ஜீவன் அழைத்தது…”

ஒரு ஜீவன் துடித்தது…”

இனி எனக்காக அழவேண்டாம்…”

இங்கு கண்ணீரும் விழவேண்டாம்…”

உன்னையே எண்ணியே வாழ்கிறேன்…”

அவர்கள் இருவரின் மனதை ஒருவரிடத்தில் இன்னொருவர் சொல்லுவது போல் பாடல் ஒலித்து முடித்தது…   

ஷன்விக்கு நடப்பதை நம்ப இயலவில்லை…

அவ்னீஷோ வானத்தில் பறப்பதை போல் உணர்ந்தான்…

இருவரின் கண்களும் பல பல கதைகள் பேசிக்கொள்ள அங்கு பேச்சுகள் தேவையற்றதாய்…

ரிகாவிற்கு கோதையைப் பிடித்தது மிக… தன் தாயைப் போல் உள்ள அவரிடம் ஏனோ மனதளவில் ஒரே நாளில் நெருங்கியதை போல் உணர்ந்தாள்…

ஆனால் அவள் போட்டுக் கொண்டிருக்கும் மௌனத்திரையின் பின்னே ஒளிந்து கொள்ளவும் செய்தாள்…

அதை கோதை கவனித்ததை பாவம் இவள் தான் அறியவில்லை…

“உனக்கு ஸ்ரீராம் என்றால் இஷ்டமா ரிகா?...”

“ஹ்ம்ம்… பிடிக்கும் அம்மா… எல்லா கடவுளும் பிடிக்கும், இவரும் கணேஷும் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்…”

“ஹ்ம்ம்.. பிள்ளையார் எல்லாருக்கும் பொதுவான கடவுள்…. ஆனால், ஸ்ரீராம் என்றாலே அவர் ஏகப்பத்தினி விரதன் அப்படிங்கிறது தான் நம்ம எல்லாருக்கும் நியாபகம் வருகிற ஒரே விஷயம்…”

“இருக்கலாம் அம்மா…”

“இது மத்தவங்க நினைக்கிறது… நான் உன்னோட நினைப்பைப் பத்தி கேட்டேன்…”

“எனக்கு தனிப்பட்ட முறையில் அவரை ரொம்ப பிடிக்கும்… அவர் பத்தி நான் தெரிந்து கொள்ள ஆரம்பித்த நாட்களிருந்தே…”

“ஏன் மா?...”

“தெரியலைமா… சரியா… என் மனசுக்கு அவரைப் பிடிச்சுப்போச்சு…”

சின்னதாய் சிரித்தவர், “அப்போ அவரோட குணங்கள் உனக்குப் பிடிக்கலை… அப்படித்தானே…”

“அம்மா!!!... ஒருவரைப் பிடித்தால், அவரோட குணங்களும் அதில் அடக்கம்… மனதிற்கு பிரித்து பார்க்கும் தன்மை எல்லாம் இல்லை அம்மா…”

“அவரோட எந்த குணம் உனக்குப் பிடித்தது?...”

“சிறந்த மனிதன் அம்மா… அவர்… கடவுளின் அவதாரம் தான்… இருந்தாலும் அவர் எல்லோருக்கும் நல்லது செய்தார்… அவர் கடமையை அவர் திருந்த செய்தார்…”

“சீதாவை நெருப்புக்குள்ளே இறக்கின செயல் நல்லதா?... அவளைப் பிரிய சொன்னார் தன்னை விட்டு… கணவன் மனைவிக்காற்றும் கடமையா இது?...”

“அவர் சீதாவை சந்தேகப்பட்டு அந்த செயல் புரியவில்லை அம்மா… அவரும் சீதாவும் எடுத்தது மானிடப்பிறவி… அதில்… சில நியதிகளும் உண்டு… அதற்கு அவர்கள் உட்பட்டவர்களே… சோதனைக்காலம், மனிதருக்கும் ஏற்படுமே… அதில் மனிதர்களாய் அவதாரம் எடுத்த அவர்கள் மட்டும் என்ன விதிவிலக்கா?... அவருக்கு தெரியும் தன்னுடைய ஜானகி பற்றி… ஆனால் அவளைப் பற்றி அவதூறாய் பேசுபவர் ஒவ்வொருவரிடத்திலும் சென்று அவர் அதை புரிய வைக்கவோ, விளக்கவோ முடியாதே… அதனாலே அந்த அக்கினிப் பரீட்சை நிகழ்ந்தது… அவளின் பரிசுத்தம் போய்விட்டதென்றும் அதனால் தசரத மைந்தன் அவளை விலக்க வேண்டும் என்று மக்கள் சொல்லும்போது, அவரால் அவளைப் பிரிய முடியுமா?... ஏதேனும் ஒரு வழியில் அவள் மாசற்றவள் என்று உலகுக்கு அறிவுருத்த எண்ணியே அந்த அக்கினிக்குள் சீதாவை பிரவேசிக்க கூறினார்… அவர் சொல்லிவிட்டாரே தவிர, அவர் இருதயம் துடித்த துடிப்பும் தவிப்பும் வேறொவருக்கும் தெரியாமல் போயிருக்கலாம்… ஆனால் அவரின் பத்தினி சீதாவிற்கு தெரியும்… புரியும் அவரின் சொல்லொன்னா மனவேதனை… அதன் பிறகும் அவளுடன் சேர்ந்து வாழ இயலவில்லை அவரால்… அவளை விட்டுப் பிரிய நேர்ந்தது விதியின் சதியால்…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.