(Reading time: 33 - 66 minutes)

 

ரு நாட்டிற்கு அரசன் என்பவன், தன் மக்களுக்கே முதற் சொந்தம்… அதில் தாயும், தகப்பனும், உடன் பிறந்தோரும், மனைவியும், பிள்ளைகளும் இரண்டாம் பட்சமே… அரசனாய் அவர் எடுத்த முடிவு, மனைவியான சீதாவிற்கு பாதகமாய் ஆனது அவரின் குற்றமாகுமா?... அவளைப் பிரிய மனமில்லாது தன் அரசன் பதவியை தியாகம் செய்யவும் முன்வந்தார்… இருந்தும் விதியின் முடிவு தானே அங்கு ஜெயித்தது.. அவருக்கே அவர் சீதையைப் பிரிந்ததின் மூலம், உயிருடன் கொள்ளியிட்டுக்கொண்டார்…. அவரின் வருத்தம், கண்ணீர், துயரம் அனைத்தையும் அந்த ராமனின் சீதா மட்டுமே அறிவாள்… சீதா அவரை ஒருநாளும் குறை சொல்லியதில்லை… அவளுக்கு தெரியும் அவளின் ராமனைப் பற்றி… மனிதர்கள் தான் இன்றளவும் விவாதிக்கிறார்கள், ராமன் சீதாவிற்கு இளைத்தது அநீதி என்று… நம் கைகளில் உள்ள விரல்களே ஒன்றுபோல் இல்லாதபொழுது, வெவ்வேறு எண்ணங்கள் கொண்ட மானிடர்கள் மட்டும் ஒருமித்த கருத்தை கொண்டிருப்பார்களா?... அவரவர் பார்வையில் காட்சிகள் மாறுபடுவது இயற்கையே… வாழ்ந்தால் அந்த சீதா-ராம் போல ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு என்றும் மாறாத காதலுடன் வாழ வேண்டும்… இது என்னுடைய கருத்து அம்மா… நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள்…”

அவளின் அழுத்தமான, கருத்தை கேட்டு, கோதையும் சிந்தித்தார்… பெண்ணாக இருந்து சீதாவிற்காக பரிந்து பேசாமல், ஸ்ரீராமிற்காக வாதாடுகிறாளே… இவள் அவரின் பக்தை தான்… ஆணின் மனநிலையை அவனின் இடத்திலிருந்தும் யோசிக்கிறாளே… இவள் வித்தியாசமானவள் தான்…

“உன்னுடைய கருத்து தவறு அல்ல ரிகா… உன் மனதில் உள்ளதை சொல்லியிருக்கிறாய்… அவரவர் எண்ணங்களைத் தடையின்றி கூற இந்த சுதந்திர நாட்டில் எல்லோருக்கும் உரிமை உள்ளது… நீ சொன்னது போல், ஒவ்வொருவரும் நிறத்தில், குணத்தில், மட்டும் வேறுபாடு கொண்டிருப்பதில்லை… எண்ணங்களிலும் செயல்களிலும் கூட வேறுபாடு கொண்டிருப்பர்… அவரவருக்கு அவரவர் பார்வைகள் சரியாகும்… அதற்காக மற்றவரின் பார்வை தவறானது என்று குற்றமோ பழியோ சுமத்த இயலாது ரிகா… மீறி சுமத்தினால், அது அவர்களின்  கருத்துக்களை அடுத்தவரின் மனதில் வற்புறுத்தி திணிப்பதற்கு சமமாகும்… நீ உன்னுடைய கருத்தை திணிக்கவில்லையே… உன் பார்வையில் நீ எடுத்துரைத்திருக்கிறாய்… அவ்வளவே…”

“சரிம்மா…”

“இன்னும் என்னம்மா யோசனை…”

“ஒருவரின் கருத்தை அலசி ஆராய்ந்து அதில் பிழைகள் தானே எல்லோரும் கண்டுபிடித்து முன்வைக்கிறார்கள்… யாரும் குறை சொல்லாமல் இருப்பதில்லையே…”

“அது தான் மனித இயல்பு… மனிதனாகப் பட்டவன் வாழ்க்கையில் பிழைகள் செய்யாமல் இருப்பதில்லை… ஆதலால் விமர்சிப்போர் விமர்சிக்கட்டும்…. நீ தவறு செய்யவில்லை… அதனால், மன்னிப்பும் அவசியமில்லை ரிகா…”

“சரிம்மா…”

ழுகிறாள், ஆனால், சம்மதம் சொல்லவில்லையே… என்ன செய்ய? என்று சிந்தித்தவன்,

விழிகளிலே உன் தேடல்

செவிகளிலே உன் பாடல்

இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்

காதலுக்கு விலையில்லை

எதை கொடுத்து நான் வாங்க

உள்ளங்கையில் அள்ளித் தர என்னைவிட ஏதுமில்லை

யாரைக் கேட்டு வருமோ காதலின் நியாபகம்

என்னைப் பார்த்த பிறகும், ஏனிந்த தாமதம்ஏனிந்த தாமதம்

நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்…???????????”

என்று அவளின் முன்னே பெரும் தவிப்புடன் பாடினான்… அவள் ஏதும் சொல்லாமல் இருக்கவே, கண் மூடி நின்று விழிகளுக்குள் போராடிக் கொண்டிருந்தான்…

பிரிந்தாலும் உன்னைச் சேரும் உயிர் வேண்டும் சம்மதமா?...”

என்ற அவளின் குரல் கேட்டதும் சட்டென விழி திறந்தவனை மீண்டும் அவளின் குரல் கலைத்தது….

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாகஉன்னோடு நானாகவா

பிரியமானவனே…. …. பிரியமானவனே….”

என்று பாடியபடி அவன் விழிகளுக்குள் பார்த்தாள்… அவனின் சந்தோசம் அவன் முகத்தில் தெரிந்தது…

“சவி…” என்ற அழைப்புடன் அவளை நெருங்கியவனை தடுத்து நிறுத்தியது அவனின் கைபேசி…

“சே… யாருடா… இந்த நேரத்தில்… ஒரு மனுஷனை சந்தோஷமா இருக்க விட மாட்டாங்களே… சே…”

அவனின் புலம்பலை கேட்டவள் சிரித்தாள்…

“உனக்கு சிரிப்பா இருக்கா… ஒரு நாள் தனியா மாட்டாமலா போயிடுவ… இரு உன்னை அப்பறமா பேசிக்கிறேன்…” என்றவாறு கைபேசியை பார்த்தவன், கொஞ்சம் பயந்து தான் போனான்…

“சொல்லுங்க அண்ணா…”

“எங்க டா இருக்க?...”

“வீட்டில் தான்…”

“அது தெரியும்டா… வீட்டில் தான் எங்கே இருக்கிறாய்?...”

“தோட்டத்தில்…”

“தோட்டத்துக்கா?... அங்கே எதுக்குடா இப்போ போன?...”

“அது.. வந்து… “

“என்னடா இழுக்குற?...”

“ஒன்னுமில்லை அண்ணா…”

“இல்லையே… நீ… சரி இல்லையே… இந்நேரத்தில் அங்கே என்னடா வேலை உனக்கு?...”

“சுத்திக் காட்டுறேன் அண்ணா…”

“யாருக்குடா?…”

“அக்கா ஃப்ரெண்டுக்கு…”

ஓஹோ… கதை அப்படி போகுதா?... “நினைச்சேண்டா… நீ… என் கண்ணில் படாதப்பவே நினைச்சேன்… அங்கேயே இரு… நான் அங்க ரெண்டு நிமிஷத்தில் வந்துவிடுவேன்… எங்கேயாச்சும் எஸ்கேப் ஆகின மகனே… அவ்வளவுதான்…”

“அண்ணா… நாங்க வீட்டுக்குள்ளே தான் போயிட்டிருக்கோம்…. நீங்க இங்க வர வேண்டாம்…”

“டேய்…” என்று முகிலன் பேச ஆரம்பிக்கும் முன்னே “டவர் இல்ல அண்ணா.. சரியா கேட்கலை… நான் வச்சிடுறேன்…” என்று வைத்துவிட்டான்…

“யாரு… உங்க அண்ணாவா பேசினாங்க?..”

“ஹ்ம்ம் ஆமா… சீக்கிரம் வா… போகலாம்…”

“ஏன்?...”

“அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது... உன்னையும் என்னையும் சேர்ந்து என் முகிலன் அண்ணா பார்த்தாரோ நான் செத்தேன்…”

“உங்க அண்ணா பேரு ஆதர்ஷ் தானே?... ஃபங்க்ஷனில் கூட அவர் பேசினாரே… இப்போ வேற பேரு சொல்லறீங்க…?”

“முகிலன் அண்ணா இரண்டாவது பிறந்தவங்க… சரி சரி வா.. போகலாம் சவி… சீக்கிரம்…”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.