(Reading time: 23 - 46 minutes)

 

திமு திமு தீம் தீம் தினம்தள்ளாடும் மனம்

கண்ணில் காதல் வரம்

தம தம தாம் தாம் சுகம்உன்னாலே நிதம்

நெஞ்சில் கூடும் மணம்

அன்பே…. நீ சென்றால் கூட வாசம் வீசும்வீசும்வீசும்வீசும்

என் அன்பேஎன் நாட்கள் என்றும் போல போகும்போகும்போகும்போகும்

என்னுள்ளே என்னுள்ளே தன்னாலே காதல் கணம் கொண்டேன்…”

அவனது எண்ண ஓட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் அவளின் கனவுகள் வந்து அலைக்கழித்து நஞ்சாக்கியது அவனின் நெஞ்சமதை… வீட்டில் உறவுகளின் கொஞ்சலும், அவளைப் பிரிந்த நாளின் கெஞ்சலும் அவனது கண்களில் வந்து அவனை துண்டாக்கி கொன்றது…

கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள் நெஞ்சை நஞ்சாக்கி செல்லும்

கொஞ்சும் உறவுகள், கெஞ்சும் பிரிவுகள் கண்ணை துண்டாக்கி கொல்லும்…”

பைத்தியம் பிடிக்கிறது எனக்கு… ஆம்… என் மனம் இப்போது உன்னைப் பார்க்கணும்… வருகிறேன் உன்னிடத்திலே… உன்னைக் காண வருகிறேன்… என்று தனது வீட்டின் பூஜையறையில் இருக்கும் ராம்-சீதா வை வைத்த கண் வாங்காமல் பார்த்த போது, அந்த சீதையின் வெட்கம், சிரிப்பு, சிணுங்கல் யாவும் அவனுள் உண்டாகியது, சிறிது நேரத்திலேயே அவன் இதயம் இரு துண்டாகி காயங்களும் ஏற்பட்டது… அதனையும் அவன் நேசிக்கவே செய்தான்… வேறென்ன செய்வான் பாவம் அவனும், அந்த காயமும் அவள் தந்ததல்லவா?. அதனாலே அவளுடன் கனவிலே மட்டும் வசிக்கவும் செய்தான் அவனுடைய தனி உலகத்தில்…

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னைக் காண வந்தேனே

உண்டாகிறாய்துண்டாகிறாய்….

உன்னால் காயம் கொண்டேனே….

காயத்தை நேசித்தேனேஎன்ன செய்ய நானும் இனி

நான் கனவிலும் வசித்தேனே…. என்னுடைய உலகம் தனி….”

அந்த நேரம் கோதையின் பாடல் மேலும் முள்ளாய் தைத்தது… சந்தோஷமும், சோகமும் ஒருங்கே தாக்க கண்டவன், அதிலிருந்து விடுபட்டு தனது அறைக்குள் சென்றான், சிலையாய் கீழே இருந்த உருவங்களை, புகைப்படமாய் கண்ணாடி போட்ட பிரேமினுள் வைத்திருந்தான்… அதன் பின்னே யாருக்கும் தெரியாமல் அவளும் அவனும் இருக்கும் ஓவியத்தையும் பாதுகாத்து வைத்திருந்தான்… அவனுக்கே தன் மீது சந்தேகமாய் இருந்தது… இது அவன் தானா என்று… இந்த அளவு அவள் என்னை நிலை குலைய செய்துவிட்டாளா?... அவளின் முகத்தை வருடியவன், பல நாட்கள் அர்த்த ராத்திரியில் விழித்து ஜன்னலின் வழி வந்து தூங்கி செல்லும் நிலவை ரசித்திருக்கின்றான்… அவளின் நியாபக காய்ச்சலில் விழுந்து கண்களுக்குள் காதல் விழாவும் நடத்தியிருக்கின்றான்…

சந்தோஷமும் சோகமும் சேர்ந்து வந்து தாக்க கண்டேனே

சந்தேகமாய் என்னையே நானும் பார்த்துக்கொண்டேனே

ஜாமத்தில் விழிக்கிறேன்ஜன்னல் வழி தூங்கும் நிலா

காய்ச்சலில் கொதிக்கிறேன்கண்ணுக்குள்ளே காதல் விழா.. விழா….’

இனியும் அவனால் முடியும் என்று தோன்றவில்லை… வெட்கத்தை விடுத்து, அவள் இருந்த புகைப்படத்தை மார்போடு சேர்த்தணைத்துக்கொண்டான்… எல்லையில்லாத நிம்மதி அந்த கணநேரம் அவனுக்கு கிட்டியது… அவளே அவன் அருகில் இருப்பது போல் மாயை உருவானது…

அப்பொழுது எதுவோ உறுத்த, சட்டென்று அதை எடுத்த இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றவன் தான், முகிலனையும் ஹரீஷையும் தனது அறை அருகே இருப்பதை பார்த்துவிட்டு, என்ன என்று கேட்டான்… அவர்கள் மழுப்பியதையும் அவன் கவனிக்க தவறவில்லை… என்னை உளவு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் போலும்… இனி கொஞ்சம் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான் ஷன்வியின் வீட்டிற்கு வரும் வழியில் எல்லாம்… ரிகாவை பார்த்தவுடன், தனக்குள் ஏற்படும் பரவசத்தை மறைப்பதற்காகவே வரும் வழியிலெல்லாம் உம்மென்று வந்தான்… சிறிது கர்ஜிக்கவும் செய்தான்…

ங்கு சென்ற பின், முகிலன் எந்த நேரம் தன்னை கேள்வி கேட்க போகிறானோ என்று ஒவ்வொரு நிமிடமும் எதிர்நோக்கிகொண்டிருந்தான்… ஆனால், அதற்கும் முன், அபியின் கேள்வி-பதில் அவனை அப்படியே தூக்கிபோட்டு விட்டது… என்ன செய்ய ஏது சொல்ல என்று கூட அவனுக்கு தோன்றவில்லை….  

அவனை இழுத்துச்சென்று முகிலன் சரமாரியாக கேட்டும், அவன் தெரியாது என்று சாதித்தான்… நினைவெல்லாம் அவளே நிறைந்திருக்க, அவளை தனக்கு நினைவில்லை என்று பொய் உரைத்தான்…

முழுதாக 24 மணி நேரம், இதில் எத்தனை தாக்குதலுக்கு அவன் ஆளாக நேரிட்டது… இதையெல்லாம் விட, இப்பொழுது ஹரி சொன்ன வார்த்தை தான் அவனை செயலிழக்க செய்தது.. உன்னை எனக்கு நினைவில்லை என்று பொய் உரைத்தேனே, அதனால் தான் நீ நிஜமாகவே என்னை மறந்து போனாயோ?... சீதை…. என்றவனை இடம் பொருள் தெரியாமல் சரியவும் வைத்தது...

என் சீதைக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா?... அதனால் தான் ஆசை முகம் மறந்து போச்சே என்று பாடினாளா?... என் முகம் மறந்து போச்சா அவளுக்கு?...

முற்றிலும் துவண்டு ஓய்ந்து போனவனின் அருகே வந்த அனைவருக்கும் அவனது வார்த்தை வியப்பாய் இருந்தது… ஆதியின் என் சீதை என்ற வார்த்தை மட்டுமே அவர்களுக்கு கேட்டது… மற்ற அனைத்தும் அவன் அவனுக்குள்ளே சொல்லிக்கொண்ட வார்த்தைகள்… ஏனெனில் அதை வெளியே அவன் சொல்ல இயலாது… அது அவளுக்கு அவன் செய்து கொடுத்த சத்தியம்…

ஆதி... காதலித்தானா?... சீதை என்கிறான்… யாரு சீதை?... ஆதி… சொல்லு…

கேள்வி கேட்டுவிட்டார்கள்… ஆனால் பதில் சொல்ல வேண்டியவனோ, அமைதியாக இருந்தான்… அவளுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீற அவன் மனம் தயாராக இல்லை…

மௌனமாக இருந்தவனை, ஹரீஷ் தடுத்தான்…

“ஆதி, உன் சீதை யாரென்று நீ சொல்லப்போவதில்லை…? இல்லையா?...”

“………….”

“நீயாக சொல்வாயென்று பார்த்தேன்…. நீ சொல்லவில்லை… எனில் நானே சொல்கிறேன்…”

“ஹரீஷ்….!!!!!!!”

“தெரியும் ஆதி… எனக்கு எல்லாம்…”

“யார் சொன்னது…”

“உன் சீதை அவளுக்கே தெரியாமல் உதிர்த்த ஒன்றிரண்டு வார்த்தைகளின் மூலம்…”

“அவள் தான் இப்போது என் சீதை இல்லையே…” என்று பெரும் வலியுடன் கூறினான்….

“இப்போது இல்லையென்றால், இதற்குமுன் அவள் உன் சீதை இல்லையா?... இல்லை இனிதான் உன்னவள் இல்லாமல் போய்விடுவாளா?...”

“டேய்…. என்னடா பேசுறீங்க… தெளிவாய் சொல்லுங்கடா…”என்று முகிலன் சொல்ல, ஹரீஷ் சிரித்தான்…

“இப்போ இந்த நேரத்துல எதுக்குடா சிரிக்கிற?...”

“உண்மையில் ஆதிக்கு நான் மச்சான் தாண்டா முகிலா…”

“எ..ன்….ன…. சொல்லுற நீ?...”

“இன்னும் புரியலையா முகிலன் அண்ணா, ரிகா அவருக்கு தங்கை- என்றால், ஆதி அண்ணாவும்  அவருக்கு மச்சான் உறவு தானே…”

பெரும் கூச்சலுடன், ஆதி மற்றும் ஹரீஷை தழுவிக்கொண்டான் முகிலன்…

“ரொம்ப நிறைவா இருக்குடா எனக்கு இப்போதான்….”

“ஹ்ம்ம்… இனியும் இருக்கும்டா முகிலா…”

“தேங்க்ஸ்டா ஹரி… நீ இல்லன்னா, இது எதுவுமே எங்களுக்கு தெரிந்திருக்காது…”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா… சரி ஆதி… ஏதோ கேட்க நினைக்கிறான்… அவனிடம் பேசுவோம் முதலில்… அவன் தாண்டா ரொம்ப பாவம்…” என்றான் ஹரி…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.