(Reading time: 19 - 38 minutes)

 

ண்ணா....” அபிஷேக்கின் அலறல் இவள் காதிலும் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள். அபிஷேக்கின் அண்ணன் கையில் நீள துப்பாக்கியுடன் தன் இரட்டை சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தான்.

பார்த்ததும் அந்த வழிப் பறி கொள்ளையர்கள் பதறி விலகி ஓடினர்.

அபிஷேக்கிற்கு அதிக இரத்த இழப்பின் காரணமாக தலை சுற்றியது.

“தயூமா...” அபிஷேக் அழைக்கிறான் தான் ஆனால் வாயிலிருந்து சத்தம் வரவில்லை. இழந்த ரத்தம் காரணம்.

இறங்கு தயனிமா கீழ....” அவளை நோக்கி செல்ல, அவளை பாதுகாப்பாய் கீழிறக்க அபிஷேக்கின் முழு உடலும் மொத்த மனமும் விழைந்தாலும் பலன் என்னமோ பூஜ்யம்தான்.

“அண்ணா அவள பிடி..” கண்களால் அண்ணனிடம் கெஞ்சினான்.

அண்ணன் வந்ததென்னமோ நிஜம். தன் வாகனத்தை நிறுத்தியதும் நிஜம். ஆனால் அவர் வாகனத்தை விட்டு இறங்கவும் இல்லை. இவர்களுக்கு உதவவும் இல்லை.

கடும் வெறுப்பும், கண்கொள்ளா இகழ்ச்சியுமாக பார்த்திருந்தான் இவர்கள் இருவரையும்.

அபிஷேக்கிற்கு காரணம் புரியவில்லை ஆயினும் தன் கனவு நினைவுக்கு வந்தது. உதவி அண்ணனிடம் இருந்து வரப் போவதில்லை.

அண்ணனிடம் கதறி இருக்கும் மிச்ச சக்தியை இழக்க மனமில்லை. திறக்காது என தெரிந்த கதவை தட்டி என்ன ப்ரயோஜனம்.

தயனியைப் பார்த்தான்.

அவளை சுற்றி பல பலத்த எருதுகள் இவன் கண்ணில். நிஜமில்லாத நிழலும் அல்லாத நிழல் நிற எருதுகள்.

அசுத்த ஆவிகளின் மொத்த தாக்குதல். கணவனுக்கு மனைவியின் நிலை புரிந்தது.

மயக்கத்திற்குள் ப்ரவேசிக்க ஆரம்பித்தான்.

மனம் திருந்தினவனுக்கு கர்த்தர் துணை.

தன்னால் தன் சுய பலத்தால் தன்னையோ,  தானே ஆகிவிட்ட தன் தயனியையோ பாதுகாப்பது இயலாத காரியம் என புரிந்துவிட்டது.

கைகளின்றி இவன் அதல பாதாள பள்ளத்தில் விழுந்த கனவு ஞாபகம் வந்தது. அதன் பொருள் இதுதானா. தன் கை தனக்கு உதவாது.

தெய்வமே, ரட்சகா தேவா யேசு நாதா துதிக்கிறேன். காப்பாற்று!!!!

முழு மயக்கம் ஆட்கொள்ள போகும் தருணம்.

யேசு கிறிஃஸ்துவின் அன்பு என்றும் மாறாதது!!

யேசு கிறிஃஸ்துவின் மாறா கிருபை என்றும் குறையாதது!!!

சுகந்தினியின் குரலில் பாட்டு வந்து தொட்டது அபிஷேக்கின் செவியை. கண் திறக்க முடியவில்லை ஆயினும் மயக்க வாசல் மூடிக் கொண்டது.

ரட்சகர் ரட்சிக்க வந்துவிட்டார் என புரிந்தது அவனுக்கு.

மஹிபனும் சுகந்தினியும் கர்த்தரைத் துதிக்க தயனியும் தன் நிலை உணர தொடங்கினாள்.

‘தான் எங்கு நிற்கிறேன்...? தெய்வமே என் அபிக்கு என்னாச்சு...? இதுங்கல்லாம் ஏமாத்துதுன்னு நேத்து தான கண்டு பிடிச்சோம்...’

அவள் மனம் அடித்துக் கொள்ள அவளை சுற்றிய அத்தனை உருவமும் இப்பொழுது நிழல் நிற எருதுகளாய் காட்சி தந்தன அவளுக்கு.

யனி முதல்ல உங்களுக்கு யார் மேலயும் கோபம், வெறுப்பு, கசப்புணர்ச்சி இருந்தா இப்போ அவங்கள மன்னிச்சிடுங்க...குறிப்பா உங்க அத்தைய...” அழுத்தமாய் சொன்ன சுகந்தினியை நோக்கிப் பார்த்தாள் தயனி.

“நம்ம முன்னோரோ நம்மளோ எந்த தப்புமே செய்ததில்லன்னு சொல்ல முடியாது தயனி...அந்த பாவத்திலிருந்து ஆண்டவர் நமக்கு மன்னிப்பு தாரார்னா...அதுக்கு அவர் விதிச்சிருக்க முக்கிய நிபந்தனை நாம நமக்கு கெடுதல் செய்த அடுத்தவங்களை மன்னிக்கனும்ங்கிறது.....நீங்க உங்க அத்தைய மன்னிக்கலைனா உங்களுக்கு கர்த்தரோட மன்னிப்பு கிடைக்காது....”

“அப்படின்னா அவங்க செய்ததெல்லாம் நியாயம்னு கர்த்தர் சொல்றாரா?” கொதித்துக் கொண்டு வந்தது தயனிக்கு.

“அப்படி இல்லங்க தயனி...மன்னிக்கிறதுங்கிறது அவங்க செய்த தப்பை சரின்னு ஒத்துக்கிறது கிடையாது..

அவங்க செய்த கெடுதலுக்கு.... நான் தண்டனை கொடுக்க மாட்டேன்..., கடவுளே பார்த்துகிடட்டும்னு தீர்ப்பிடுறதை கடவுள்ட்ட  கொடுக்கிறது..

மன்னிக்கிறதுங்கிறது கெடுதல் செய்தவங்க கூட மனம் ஒத்துப் போறதும், சேர்ந்து ஐக்கியபடுறதும் கிடையாது..நாம மன்னித்தாலும் .திருந்தாதவங்களைவிட்டு விலகி தான் இருக்கனும். ஆனா மனதுக்குள்ள அவங்க கஷ்டபடனும்னு நினைக்காம கடவுள் அவங்களுக்கு என்ன தர விரும்புராரோ அது நன்மையா இருந்தாலும் அத தரட்டும்னு நினைக்கிறது..

தப்பு செய்தவங்க உண்மையா தன் செயல்கள் தப்புனு உணர்ந்து தன் செயல்கள்ல வாழ்க்கை முறையில... அந்த மாற்றத்தை காண்பித்தால் மட்டுமே அவங்க கூட திரும்ப உறவு பாராட்டுறதும் மன்னிப்பு...

ஆனா உங்க விஷயத்தில அத்தை முடிந்து போன கதை...நல்லதோ கெட்டதோ...கடவுள் பாத்துக் கொள்ளட்டும்னு நினைச்சிட்டு வெளிய வாங்க..ஒருத்தங்கள நாம மன்னிக்கிறோம்னா அவங்களால நமக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு கர்த்தரை பொறுப்பாக்குகிறோம்...இழந்ததை ரெண்டு மடங்கா திருப்பி தர்ற தேவன் அவர்...இப்பவே உங்களுக்கு அபிஷேக்கைத் தரலையா....?”

தன் கணவனின் ஞாபகம் வர அவசர அவசரமாக இறங்கி அவனை நோக்கி ஓடினாள் தயனி. காளை கூட்டமும் கூடவே பறந்து வந்தது. ஆனாலும் அவைகளால் அவளை தடுக்க முயல கூட முடியவில்லை.

“மன்னிப்புங்கிறது அதை பெறுகிறவங்களைவிட கொடுக்கிறவங்களுக்கு பெரிய மன விடுதலையை கொண்டுவரும்...”

ன்னிக்காம இருந்து என்னையும் உங்களையும் கஷ்டபடுத்திட்டேன் யேசப்பா...மன்னிக்க ஹெல்ப் பண்ணுங்க...தயனியிடம் சுகந்தினியின் வார்த்தைகள் இப்படியாய் வேலையைத் தொடங்கின.

மனதிற்குள் அத்தை மேல் ஒரு மன்னிப்பு உணர்வு.  தேவனுடன் மனம் பொருந்தினாள். யேசப்பா உங்களுக்கு என்ன செய்யனும்னு தோணுதோ அதை செய்யுங்க... மன்னிக்காம இருந்ததிற்காக என்னை மன்னியுங்க....

தயனியின் எல்லைகளில் அபிஷேக்கின் எல்லைகளில் போராடுகிற சகல அசுத்த ஆவிகளையும் ஏசுவின் நாமத்தினால் என்றென்றைக்குமாய் கடிந்து கட்டி அப்புற படுத்துகிறேன்....தயனியின் அதிகார கட்டளை காதில் விழுகிறது.

சுற்றிய நிழல் நிற மாடுகள் அத்தனையும் உருவம் கலைந்து ஒன்றாக குழைந்து ஒரு சுற்று காற்றாகி கரு நிற மேகமாகி கடுகி விலகி பட்டென பறந்து தொலைவில் சென்றுகொண்டிருந்த அந்த கொள்ளையர்களின் வாகனத்தை வட்டமிட்டு உள்புகுந்தது. அடுத்த நிமிடம் அந்த வாகனம் வசமிழந்து தலை பிரட்டி தடம் புரண்டு ஆற்று நீருக்குள் சரண் புகுந்தது.

ஓடிச் சென்று தயனியுடன் கூட சேர்ந்து அபிஷேக்கின் அண்ணனும் மஹிபனும் அபிஷேக்கினை காரில் ஏற்ற சுகந்தினி தெய்வத்திற்கு நன்றி கூறி ஜெபித்தபடி வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.