(Reading time: 6 - 12 minutes)

01. காற்றே என் வாசல் வந்தாய்!!! - கீர்த்தனா.ஆர்

ந்தோஷ சாரல் தினம் ஜன்னல்

தேடி வர செய்யும் சொந்தமல்லோ!!

நாம் பாடும் பாட்டை

Katre en vasal vanthai

தினம் கேட்கும் சிலைகளும்

தலையை ஆட்டுமல்லோ!!

 

அழகான சின்ன தேவதை

அவள்தானே எங்கள் புன்னகை

நாள் தோறும் இங்கு பண்டிகை

நம் வானில் வான வேடிக்கை

இது போல சொந்தம் தந்ததால்

இறைவா வா நன்றி சொல்கிறோம்

உனக்கேதும் சோகம் தோன்றினால்

இங்கே வா இன்பம் தருகிறோம்

சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்

அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்....

"ஹாய் மாம்ஸ்!! குட் மார்னிங் "என்றபடி தனது ஜாக்கிங்கை முடித்து  கொண்டு வீட்டில் நுழைந்தான் ஆதவன்.

 "மாம்ஸ் நீங்க என் செல்ல அம்மா தானே!! போய் சூடா ஒரு கப் காப்பி எடுத்துட்டு வாங்க பாக்கலாம். கம் ஆன்! ஹ்ம் க்விக் க்விக் " என்று மீனாக்ஷியின் தோளை பிடித்து சமையல் அறையில்  நுழைந்தான்.

"டேய்! டேய் ! விடுடா !! ஹப்பா தோள்பட்ட வலிக்குது. உனக்கு என்ன இன்னும் சின்ன பையன்னு நினைப்பா. இந்நேரம் உனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல பையன் இருந்திருக்ககணும். உன்னோட ப்ரெண்ட் தன ரமேஷ் தம்பி. அவனுக்கு கல்யாணம் ஆகி 2 வயசுல பையனும் இருக்குது. எல்லாம் என் தலை எழுத்து" என ஆதவனை திட்டியபடி காப்பியை நீட்டினார்.

"என்ன மாம்ஸ் நீங்க. பெத்தவங்களுக்கு தன் பிள்ளைங்க எப்பவும் சின்ன பசங்க தான் சரி சரி விடுங்க மாம்ஸ் " என்று உடனடியாக வெள்ளை கொடியை பறக்க விட்டான். " டேய் ரமேஷ் நீ மட்டும் இப்போ என் முன்னாடி இருந்த செத்தடா மவனே!" என்று நண்பனை மனத்தில் திட்டி கொண்டு இருந்தான்.

"ஆமா இன்னிக்கு என்ன வீடு ரொம்ப அமைதியா இருக்கு. இன்னும் அந்த குட்டி பிசாசு தூங்கிட்டு இருக்குதா."

"டேய் எருமை! நான் இன்னிக்கு காலைல சீக்கரமாவே எழுந்திருச்சிட்டேன். நீ தான்டா காலைல ஊர சுத்திட்டு வர." என்று அவனின் முதுகுக்கு பின்புறம் நின்று தலையில் கொட்டினாள் மதுமதி.

"அதுக்கு எதுக்குடி தலைல கொட்டின."  அம்மா இவள  பாருங்கமா அண்ணன்னு கொஞ்சமாது மரியாதையை  தராளா "   தன் அன்னையின் முன் சிறு பிள்ளையாய் நின்று நியாயம் கேட்டான்.

"அடிங்க எருமைன்னு சொல்றயா. இருடி வரேன்" என்று அவளை அடிக்க துரத்தினான்.

"போடா அதியமான்!!" அவனை மேலும் கடுப்பேற்றி விட்டு அவன் பிடியில் சிக்காமல் தோட்டத்தில் நுழைந்தாள்.

வர்களின் சண்டையை பார்த்து "டேய் காலைலயே ரெண்டு பேரும் ஆரம்பிச்சிடிங்களா உங்க பஞ்சாயத்தை. முருகா நீ தான் இவங்களுக்கு நல்ல புத்தி குடுக்கணும்" என்றபடி சோபாவில் அமர்ந்தார் மீனாஷி.

"என்ன மீனு! காலைலயே எதுக்கு முருகனை தொல்லை பண்ற.

அவரு பாவம். விட்டு விடு.  அது தான் உன் புலம்பலை கேட்க நான் இருக்கேன்ல அப்புறம் என்ன, இப்போ  நீ போய் எனக்கு சூடா ஒரு காபி போட்டு கொண்டு வா. அதை குடிச்சிட்டே உன்னோட புலம்பலை கேட்கறேன்." என்று கண்சிமிட்டிய படியே கூறினார். அப்போது தான் காலை நடைபயிற்சியை முடித்து கொண்டு உள்ளே நுழைந்த சொக்கநாதன்.

"உங்களுக்கும் உங்க பையனுக்கும் இதே வேலையா போச்சு தினமும்.

இந்தாங்க நீங்க கேட்ட காபி" என்று அவர் கையில் கோப்பையை     திணித்தார்மீனாஷி.

"இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கோவபடுற" என்று தன் மனைவியின் அருகே அமர்ந்து கனிவாக கேட்டார்.

அவரின் செயலில் நெகிழ்ந்து " எல்லாம் தினமும் நடக்கற கூத்து தான் வர வர ரெண்டு பேரும் பண்ற லூட்டி தாங்க முடியலைங்க, இன்னிக்கு ரெண்டும் காலைலயே சண்டைய ஆரம்பிச்சிட்டாங்க."

"அவங்க அப்பா மாதிரியே ரெண்டு பெருகும் பிடிவாதம்" என்று கூறி செல்லமாக முறைத்தார் மீனாஷி.

"ஹா! ஹா ! என்று சிரித்தபடியே அவரின் தோள் மீது கை போட்டு

         "சொக்குபொடி மீனாஷி

           சொக்கநாதன் நான்தாண்டி 

           சொக்குபொடி மீனாஷி

           சொக்கநாதன் நான்தாண்டி"

என்று பாடியபடி மீண்டும் கண்சிமிட்டினார்.

அவரின் செயலில் வெட்கப்பட்டு "சும்மா இருங்க!! நீங்க பண்ற வேலைக்கு பசங்களே பரவால. கல்யாண வயசுல ரெண்டு பசங்கள வெச்சிட்டு நீங்க பண்ற வேலை இருக்கே!! முருகா" என்று மறுபடியும் முருகனை துணைக்கு அழைத்தார்.

"என்னோட பொண்டாட்டி பாத்து தான நான் பாடுறேன். அத கேட்க யாருக்கும் உரிமை இல்லை." என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே ஆதியும் மதுவும் உள்ளே நுழைந்தனர்.

"ஆஹா ரெண்டு பேரும் ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடா!! அது எப்படிப்பா நீங்க அம்மாவ பார்த்து விழுந்துட்டீங்க" என்று தந்தையை கிண்டல் அடித்தாள்.

"டேய் போடா. போய் வேலைய பாரு. இதையே எத்தன தடவ  கேட்ப நானும் உனக்கு எத்தன தடவ பதில் சொல்றது." என்று சலிக்காமல் பதில் கூறினார்.

"ஹ்ம் ஆமா உங்களோட பதில நீங்க தான் பெருமையா சொல்லிக்ணும். எனக்கு நேரம் ஆகுது  நான் ஆஃபீஸ் கிளம்பறேன். மாம்ஸ் டிபன் எடுத்து வைங்க 5 நிமிஷத்துல வறேன், 

"ஹே மண்டு மது  நீயும் சீக்கரமா கிளம்பு" என்று கூறிய படியே மாடியில் இருக்கும் தனது அறையை நோக்கி இரண்டு இரண்டுபடிகளாக தாவினான்.

"இதுங்க ரெண்டு பேரும் சரியான கூட்டு களவாளிங்க!! போகும் போது சண்டை போட்டே போச்சுங்க. இப்போ உள்ளே வரும் போது எதுமே நடக்காத மாதிரி வராங்க. அப்படி என்ன தான் பண்ணுவாங்கன்ணு தெரியலை. எனக்கு தான் இங்க டென்சன் ஆகுது."

"விடு மீனு !! இவங்க இப்படி இருந்தா  தான்  வீடே  வீடு மாதிரி இருக்கு. இல்லைனா நல்லாவே இருக்காது. சரி எனக்கும் நேரம் ஆகுது டிபன் எடுத்து வை. குளிச்சிட்டு வறேன். பசங்களும் இப்போ வந்துருவாங்க" என்ற படி தனது அறையை நோக்கி சென்றார்.

மீனாஷி சொன்னது சரியே என்பதற்கு, சற்று முன் தோட்டத்தில் அப்படி தான் நடந்தது. (வாங்க அவங்க ரெண்டு பேரும் என்ன பண்ணாங்கன்னு போய் பாக்கலாம்.)

துவை துரத்தி கொண்டு தோட்டத்தை சுத்தி ஓடி கொண்டு இருந்தான் ஆதி. "ஏய் ஒழுங்கா நில்லு. ஓடாத மண்டு மது. அப்றம் ஒரு நாள் என்கிட்ட நீ வசம்மா மாட்டுவடி. அப்போ உனக்கு தான் நஷ்டம்."

"போடா அதியமான். அத அப்போ பாத்துக்கலாம்.நீ பெரிய பிசினஸ்மேன் தான். அதுக்காக  இப்ப கூட லாப  நஷ்ட கணக்கு  பார்க்க கூடாதுடா."

"பாவம் உனக்கு வர பொண்டாட்டி .கணக்கு பார்த்தே வாழ்க்கைய நடத்துவ போல. என்கிட்ட உன்னோட பப்பு வேகாதது வெவ்வவே " என்று கூறி அவன் பிடியில் சிக்காமல் ஓடி கொண்டு இருந்தாள்.

அதுவரை அவளை துரத்தி கொண்டு இருந்த ஆதி, முகம் மலர தன் தேவதையை மனத்தில் நினைத்து ரசித்து கொண்டு இருந்தான்.

"லவ் யூ சோ மச் ரிதுகுட்டி. சீக்கரமே இங்க வந்துடுடா" என்று மனதினுள் கூறி மென் நகையை பரவ விட்டான்.

அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகையை  கண்டு " என்னடா!! உன் ஆளு நினைப்பா . முகமே பிரகாசமா இருக்கு" என்று கேட்ட கொண்டே அவன் அருகில் வந்தாள்  மதுமதி.

"ஹி ஹி ஆமா மதுமா. எப்டி கரெக்ட்டா கண்டு பிடிச்ச "

"அது தான் உன்னோட முகத்த பார்த்தவே தெரியுதே. ரொம்ப வழியாத, வா உள்ளே போலாம் அப்பா வந்தாச்சு"

"சரி வா போலாம். "என்று கூறிபடியே நடந்தான்.

"ஆனா ஒண்னுடா. ஆள் ஆளுக்கு வீட்டில ரொமான்ஸ் பண்றீங்க. வீட்டில ஒரு சின்ன பொண்ணு இருக்குதுன்னு யாருக்காவது நினைப்பு இருக்கா."

ஆதி அதற்கு சுற்றும் முற்றும் பார்த்தபடி " சின்ன பொன்னா. அது யாரு மதுமா. நம்ம வீட்டில அப்டி யாரும் இல்லையே. " என்று கூறி சிரிப்பை அடக்கினான்.

"டேய் வேண்டாம். இப்போ தான் ஒரு சண்டை முடிவுக்கு வந்துச்சு . மறுபடியும் என்கிட்ட அடி வாங்காத.

"சரி விடுடா. உனக்கும் ஒரு காலம் வரும். " என்று கூறி சமாளித்தான்.

" ஹ்ம் அந்த தைரியத்துல தான் இப்போ உன்ன சும்மா விடுரேன்."

"அடிப்பாவி எல்லாம் என் நேரம்டி" என்று கூறி கொண்டே இருவரும் உள்ளே நுழைந்தனர்.

அப்போ தாங்க அவங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அதனை பார்த்த மதுமதி "இவங்க பண்ற லொள்ளு தாங்க முடியல டா சாமி " என்று மனத்தினுள் புலம்பி கொண்டு இருந்தாள்.

இவளை நினைத்து அங்கு வேறு ஒரு ஜீவன் உருகுவது தெரியாமல்!!!

தொடரும்

Episode # 02

{kunena_discuss:848}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.