(Reading time: 8 - 16 minutes)

02. ஊனமறு நல்லழகே - ப்ரியா

ண்ணியதெல்லாம் நடக்க வேண்டும்

என இறைவனை நான் வேண்டினால்

அவனோ நான் எண்ணியதை மட்டுமாய்

oonamaru-nalazhage

முக்கியமாய் தகர்த்து எறிகிறான்….

அதிர்ந்து நிமிர்ந்த ஸ்ரவந்தியின் கண்களை முதன்முதலாய் நேருக்கு நேர் சந்தித்தான் அவன். அவள் கழுத்தில் மூன்று முடிச்சு போட்ட அந்த அதிரடி மணமகன்.

அதற்கும் மேலாய் அதிர்ந்தவன் நந்தகுமரன் தான். ஆவேசமாய் எழுந்தவன் மாலையை கழற்றி அந்த புதியவனின் முகத்தில் வீசி எறிந்தான்!!

அனைவரும் ஸ்தம்பித்து எழுந்து நிற்க, கனகாம்பாள், ருத்ரா, கணக்கு பிள்ளை மூவரும் வர அபோகும் அபாயம் உணர்ந்தும் கையை பிசைந்து கொண்டு நின்றனரே  தவிர நந்தாவை  தடுக்கவில்லை. அவன் பொதுவாகவே ஆத்திரக்காரன் இப்போது அவனுடைய உயிரையே ஒருவன் பறித்து கொண்டு விட்டான். '

நந்தவனம்' போல் இருக்கும் அவன் வாழ்வில் யானையை போல் புகுந்து அளித்து விட்டான். சும்மா இருப்பான என்ன?

அவன் சட்டையை பிடித்து உலுக்கி அவனை அடிக்க நந்தா கை ஒங்க, அவன் எந்த வேகமும் காட்டமல் நிதானமாய் அவனை தடுத்தான்.

கோவமாக "நந்தா பிஹெவ் யுவர்ச்லேப்" என்று உறுமினான்.

"நாயே யார் யாரடா சரியாய் நடக்க சொல்றது, உன்ன எல்லாம் இவ்வளவு நாள் விட்டதே தப்பு டா, என்ன பெத்து போட்ட அவங்களுக்காக"

"ஸ்டாப் இட் நந்தா" அவன் கர்ஜனை மொத்த மண்டபத்தையும் உலுக்கியது எனலாம். அவன் இவ்வளவு கடைசி தடவையாக இவ்வளவு கோபப் பட்டது எப்போது என்று நினைவு கூர்ந்த கனகம் தான் ஓடி சென்று தன் பேரனை பிடித்து கொண்டு கெஞ்சினார்.

ருத்ராவும் அவன் கை பற்றி அழுது கொண்டே அழைத்து செல்ல, இது குடும்ப விஷயம் என தலையிடாமல் தள்ளி நின்ற அவன் நண்பர்களும் சேர்ந்து அவனை இழுத்து கொண்டு அரை நோக்கி சென்றனர்.

அந்த புதியவன் இவை அனைத்தையும் எந்த சலனமும் இல்லாமல், 'இதெல்லாம் என்னை பாதிக்காது' என்பது போல் நின்றிருந்தான்.

கூட்டத்தினர் சலசலப்புக்கு நடுவே நந்தன் கத்தி கொண்டே சென்று விட்டான். அவன் சத்தம் ஓய வெகு நேரம் ஆனது. அனால் அதை பொருட்படுத்தாமல் இங்கே சடங்குகள் நடைபெற்றன!!

சாவி கொடுத்த  பொம்மையை போல் தன்னிலை பற்றி யோசிக்க கூட மனம் இன்றி செயல் பட்டாள் ஸ்ரவந்தி. என்ன யோசித்து பயன் என்ன அவள் வாழ்வு என்றுமே இப்படி தானே!! அவள் தனக்கென்று சிறகை வளர்த்து அழகு பார்த்து பேணி காத்து பரக்க இருக்கும் நிலையில் வெட்டப்படும் அவள் சிறகுகள்!!!

வெட்ட வெட்ட வளரும்

சிறகுகளாய் கனவுகள்...!!

வளர வளர வெட்டப்படும்

உருக்குலைந்த சிறகுகள்...!!!

வானமே விடியலை கொண்டு

பறந்து விட துடிக்கும் பெண் மனம்....

ஆயிற்று.. அவள் நினைவுகளில் சஞ்சரிக்க.. அவன் மாலை அணிந்து,அவள் தாலிக்கும் நீதிக்கும் திலகமிட்டு, அவள் கை பற்றி அக்னியை வளம் வந்து, பதம் சுமந்து மெட்டி அணிவித்து, சபையோரிடம் ஆசி வாங்கி, அருந்ததி பார்த்து.. திருமணம் முடிந்தது.. வெவ்வேறு திசையில் இருந்து வந்து வெவ்வேறு திசையில் பறக்க துடிக்கும் பறவைகள் ஒரு பெரும்புயல் காரணமாய் ஒரு கூட்டில் தங்க நேர்ந்தால்????

அப்படி தான் இருந்தது இந்த திருமணம்....

மாப்பிள்ளையும் பெண்ணும் பேருக்கு சாப்பிட பின்னர், ஒவ்வொருவராக சாப்பிட வைத்து அவர்களிடம் சிரித்த முகமாய் பேசி அனுப்பி வைப்பதற்குள் கனகம், ருத்ரா, கணக்கு பிள்ளை மூவருக்கும் ஒரு பெருந்தவம் முடிப்பது போல் இருந்தது.

ஆனால் அவனோ மாடியில் சென்று ஒரு அறையில் இருந்து கொண்டான். ஸ்ரவந்தி மணமகள் அறையில் விட பட்டாள்.  

மெல்ல மெல்ல கூட்டம் குறைந்து மிக நெருங்கிய  உறவுகளும் வீட்டிற்கு கிளம்பி சென்ற பின்னர் கனகாம்பாள் அவனை காண செல்ல, அவனே கீழிறங்கி வந்தான்.

"பாட்டி நாங்க கிளம்பனும்"

"என்னது எங்க?!!"

"வீட்டுக்கு, அம்மா கிட்ட கூட சொல்லல, உடனே போகணும் அந்த பொண்ண ரெடி ஆக சொல்லுங்க"

"டேய் என்ன விளையாடறிய? கொன்னுபுடுவேன் படவா.. நீ பாட்டுக்கு என்னமோ வந்த தாலி கட்டுன இப்போ போகணும்னு சொல்ற"

"ஆமா இதுக்கு மேல என்ன கேள்வி கேட்காதிங்க"

"அண்ணா ப்ளீஸ்"

"ருத்ரா நீ ஏதும் பேசாத, போய் ரெடி பண்ணு அவளை"

"ம்ம்"

"நீங்களும் வாங்க பாட்டி"

"எங்க?"

"வீட்டுக்கு"

"அதெல்லாம் வேண்டாம் நீயும் எங்கயும் போகலை, நெறைய சடங்கு இருக்கு உங்க அம்மா அப்பாவ வர சொல்லு நம்ம இங்கேயே முடிச்சுக்கலாம்"

"ரொம்ப நல்ல இருக்கு, பேஷ் பேஷ் இதெல்லாம் நீயும் கூட சேர்ந்து செஞ்ச சதியா?"

இருவரும் திரும்பி பார்க்க எரிமலையின் மருவுருவாய் நந்தகுமரன்.

"இல்லைட ராஜா எனக்கு ஒன்னும் தெரியாது"

"அப்படியா? அப்போ இந்த நிமிஷமே இவன இங்க இருந்து போக சொல்லு"

"டேய் ஏண்டா நீயும் இப்படி பண்ற"

"அப்படி தான் போக சொல்லு.. இல்லை நான் அவன கொன்னுடுவேன்" நந்தன் கோவமாய் கத்த,

கனகாம்பாள் கண்ணீருடன் இருவரையும் பார்த்தாள்.

மணமகள் அறையிலிருந்து வெளி வந்த ருத்ராவும் கண்ணீர் வடிக்க, கல் போன்ற முகத்துடன் நின்றிருந்தாள் ஸ்ரவந்தி.

அரவம் கேட்டு மூவரும் திரும்பி பார்த்தனர். கனகாம்பாள் தன் புடவை தலைப்பில் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.