(Reading time: 7 - 14 minutes)

04. நிழலாய் உன்னை தொடரும்... - வளர்மதி

காரை பார்க் செய்த பின்னரும் அதிலிருந்து இறங்காமல் இருந்த வினிதா பார்த்தனர் அனைவரும்.

“வினிதா உனக்கு வீட்டிற்கு போகனும்னு தொனலையா...?” என அமுதா கேட்க

அவர்களையே உற்று பார்த்தவள் அமைதியாக இறங்கி கார் சாவியை அனிதாவிடம் கொடுத்து “திங்க்ஸ் எல்லாம் எடுத்து மேல போங்க. நான் அப்பறம் வரேன்....” சொன்னவள் அவர்களின் பதிலை எதிர் பார்க்காமல் டென்னிஸ் கோர்டை நோக்கி சென்றாள்

Nizhalaai unnai thodarum

“இந்த ஒரு மாதமாக உனக்கு என்னமோ ஆகிவிட்டது ...” சித்ரா போபமாக சொல்ல

“நான் அம்மாவிற்கு போன் பண்ண போரேன்..”

“நீ வீட்டிற்கு வந்தும் பண்ணலாம் வினி..?”

சித்ரா சொல்லுவதை காற்றில் பறக்க விட்டு இரவு நேர காற்றை ரசித்த படி மெல்ல டென்னிஸ் கோர்டை நோக்கி நடந்தாள் வினிதா. அவளுக்கு அந்த நேரம் தனிமை தேவை பட்டது.

கோர்ட்டினுள் சென்று வேலியின் ஒரமாக அமர்ந்து கால்களை கட்டிக் கொண்டு இருளையே பார்த்தக் கொண்டிருந்தாள்.

வினிதா கண்களை மூடி சற்று முன் பார்த்த கண்களை நினைத்து பார்த்தாள்.  அது யாருடைய கண்? அந்த கண்ணில் இருப்பது என்ன... கோவமா இல்லை வலியா...? ஏதோ ஒன்று அவளை அந்த கண்களை பற்றி நினைக்க வைத்தது.

சித்ரா அவளின் அருகே “வினிதா....” என மென்மையான அழைப்பதை கேட்டு திடுக்கிட்டு அமர்ந்தாள்

அவள் அமர்ந்த இடத்தில் சுற்றி பார்த்தவள் அங்கே யாரும் இல்லதை கண்டு, ச்சே எல்லாம் பிரம்மை என நினைத்தவள் வீட்டிற்க்கு அழைத்து பேசினாள்.

அம்மாவிடம் பேசிய பிறகு மனம் தெளிவாக இருக்க, அந்த நேரம் வீசிய சில்லென்று காற்றுக்கு அங்கேயே இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் போல் அவளுக்கு தோன்றியது. முலம் காலில் கட்டி முகம் வைத்து  கண்களை மூடினாள்.

சற்று நேரத்தில் அவளின் எதிரே யாரோ அமர்வது போல் தோன்ற, அவளின் மனதில் கண்டிப்பாக அது சித்ராவாக இருக்கும் என நினைத்தவள்…

“சித்து உன் தொல்லை இல்லாமல் கொஞ்ச நேரம் இருக்கலாம் பார்த்தா, அதுக்குள்ள உன்னை யார் வர சொன்னது” புன்னைகையுடன் கேட்டு நேரகாக அமர்ந்த்து கண்களை திறந்து பார்க்கையில்…..

அவளின் எதிரே புகை மண்டலமும் அதில் இரத்தமேன சிவந்த விளிகள் அவளையே ஊற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது.

அந்த புகை முட்டம் அவளுக்கு மிக அருகில் இருப்பதால் அவளால் அந்த இடத்தை விட்டு அசைய முடியவில்லை. பயத்தில் அவள் கத்த முயச்சிக்க, வெறும் காற்று மட்டுமே வந்தது.

வினிதா வாய் அசைவதை பார்த்த அந்த கண்கள் கீழே பார்க்க, அதில் இருந்து ஒரு கை மட்டும் அவளை நோக்கி வந்தது.

புதிய எண்களில் இருந்து வந்த அழைப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தாள் சித்ரா.

“சித்ரா போனையே பார்த்தால் அது யார்ன்னு பதில் சொல்லுமா? எடுத்து பேசினால் தான் அழைப்பது யார் என்று தெரியும்!”

அனிதாவை முறைத்தவள் தயக்கத்துடன் “ஹலோ யாரது?”

“நான் ஏழு பேசரேன்...”

“ஹலோ யாருங்க நீங்க?” என்றாள் கோவமாக

“என்ன கோவம் வருது….. நான் ரூபன்ங்க, என் நம்பர் கூட உன்கிட்ட இல்லையா?”

“ஒ நீங்களா? உங்க நம்பர் நான் எதுக்கு செவ் பண்ணனும்?”

“ஆமா ஆமா நீ எதுக்கு செவ் பண்ணனும். உனக்கு என்னுடன் பேச வேண்டும் என்றால் வினிதாவின் போன் மூலம் மெசெஜ் அனுப்பலாம்.. இன்றைக்கு

அனுப்பிய மாதிரி....”

“இவன் எப்படி கண்டுப் பிடித்தான் யோசித்தவள், உடனே வினிதா அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் அதான்.... அது சரி நாங்க எங்க போனலும் அவ உங்களுக்கு மெசெஜ் அனுப்புவலோ…?” கேள்வி கேட்டாள்.

“என்ன பண்ணறது என் செல்லம் எங்க போரன்னு நான் தெரிந்துக் கொள்ளனும் இல்லையா?”

“உங்களுக்கு எதுக்கு தெரியனும்... நான் அவளை கவனித்துக் கோள்கிறேன்… போனை வைங்க.. பை...” போபமாக போனை வைத்தவள் வினிதாவை தேடி சென்றாள்…

வளின் கழுத்தை நோக்கி வந்த கைகளை பார்த்தவள் தலையை பின்னால் இழுக்க, டென்னிஸ் கோர்ட்டின் வேலில் மூட்டிக் கொண்டாள்.

திரும்பு பின்னால் இருந்த வேலியை பார்த்து, பயத்தில் முன்னே பார்க்க அங்கே எதும் இல்லாமல் இருப்பதை கண்டு திகைத்தாள். அது எப்படி மறைந்தது யோசிக்கையிலே

“பாப்பா எதை சுத்தி சுத்தி தேடற….?”

பக்கத்தில் இருந்த சுத்தர தாத்தாவை பார்த்ததும் பயம் சற்று தெளிந்தது.

“ஒன்…..ஒன்னும் இல்ல தாத்தா…” அவள் திக்கி தினறி பேசுவதை பார்த்தவர்

“எதையோ பார்த்து பயந்த மாதரி இருக்கியேம்மா..”

“இல்ல தாத்தா… ஒன்னும் இல்ல..” அவளுக்கு அவரிடம் சற்று முன் நடந்ததை எப்படி சொல்வது என தெரியாமல் மருப்பாக தலை அசைத்தாள். மேழும் இப்போழுது அவள் சொல்லும் நிலையில் இல்லை. உடனே அந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் மட்டும் மனதில் நினைத்தாள்.

“ம்ம்ம்ம்…… ஏன்ம்மா இங்க வந்து தனியாக உற்காந்து இருக்க?”

“வெளியே போய்விட்டு வந்தோம் அம்மாவிடம் போன் பேசனும்ன்னு இங்க வந்தேன் தாத்தா” சொன்னவள் கைபையில் இருந்து கைக்குட்டையை எடுத்து முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டாள்.

“ம்ம்ம்..... சரிம்மா ராத்திரி நேரத்தில் இப்படி தனியா வரதே!” அவர் எச்சரிக்க

“ஒகே தாத்தா” சொன்னவள் மேழும் அங்கே இருக்க முடியாமல் எழுந்து நடந்தாள்…

“நீங்க இன்னும் அந்த வீட்டில் தான் இருக்கியா?”

அவரின் இந்த திடிர் கேள்வியில் அவரின் முகத்தை பார்க்க அதில் எதும் கண்டு பிடிக்க முடியாமல் “ஆமா தாத்தா... ஏன் கேட்கறிங்க?”

“சிக்கிரம் வேற வீடு பார்த்து போங்க....” சொன்னவர் இவளின் பதிலை எதிர் பார்க்கமால் திருப்பி நடந்தார்

இவர் என்ன முதலில் எச்சரித்தார் இப்பொ இப்படி சொல்லிவிட்டு போரார் என போசித்தவளை அனிதாவின் குரலில் கலைந்து.

“என்ன அனிதா என்னை தேடி வந்தியா?”

“ஆமாம் செல்லம்....”

“செல்லமா? என்னடி வம்பு பண்ணனே.....”

“ஹா ஹா ஹா சொல்ல மாட்டேனே.....” என்றாள் குதுகலத்துடன்

“சொல்லடி போடி... நான் சித்ராவிடம் கேட்டுகிறேன்....”

“போ போ அவ தான் உன்னை தேடறது… அமுதா அக்கா கூப்பிடங்கனு அவுங்க வீட்டிற்கு போய் இருக்கா… அதனால் தான் நீ தப்பித்தாய்”

“ஏன்?”

“உன்னுடன் சண்டை போட காத்திருக்கா என்றாள் புன்னைகையுடன்.”

“அவ என்னுடன் சண்டை போடறது உனக்கு சந்தோசமா….?” அருகே தோழியை பார்த்ததும் அவளின் பயம் முற்றிலும் மறைந்து போனது. அவளின் குரலில் இருந்த சந்தோஷம் வினிதாவையும் தொற்றிக் கொண்டது.

“ஹா ஹா ஹா அப்படி எல்லாம் இல்லை…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.