(Reading time: 15 - 30 minutes)

தியின் விரல் துப்பாக்கியில் அழுந்தும் முன், ஹரி, அவன் கையைப் பிடித்துக்கொள்ள, ஆதி அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயல, கடைசியில், ஆதி அவன் முயற்சியில் ஜெயிக்க, இருவருக்கும் நடந்த கைப் போராட்டத்தில், ஆதியின் உடம்பில் தோட்டா நுழைந்தது…

சாகரி அப்படியே நிலைகுலைந்து போய் நிற்க…. ஆதியோ அவளைக் காப்பாற்றி விட்டோம், அவள் உடம்பில் சின்னக்கீறல் கூட ஏற்படவில்லை என்ற நிம்மதியில், அவளைப் பார்த்து நிறைவுடன் புன்னகைத்தான்…

ஹரியோ, என்ன முட்டாள்தனம் பண்ணிட்டடா?... பாவி… வாடா… உடனே மருத்துவமனைக்குப் போகலாம்… வா… என்று ஆதியை அழைக்க… அவன் அசைந்தானில்லை…

ரிகா… நீயாவது சொல்லும்மா… என்றவன் அவள் பதிலை எதிர்பார்த்து அவளைப் பார்க்க… அவள் சிலையென நிற்பதையும், அவள் கண்கள் மட்டும் ஆதியின் உடம்பில் ஏற்பட்ட காயத்தையேப்  பார்த்திருப்பதையும் கண்டான்…

நான் வெளியே இருக்கிறேன் ஆதி… சீக்கிரம் மருத்துமனை போக வேண்டும்டா… அதை நினைவில் வைத்துக்கொள்… இரண்டு நிமிடத்திற்குப் பிறகு நான் வருகிறேன்… என்றபடி சென்றுவிட்டான் ஹரி…

விழிகள் முழுக்க காதலையும், அவள் மீதான நேசத்தையும், அவள் உயிரை காப்பாற்றி விட்டதற்கான நிறைவும் நிறைந்து தழும்பியது ஆதர்ஷின் விழிகளில்…

அத்தனை முறை நான் கேட்டேன் இலங்கேஷிடத்தில்… அவன் மறுத்துவிட்டான்… அன்றே உன்னிடத்தில் உண்மையை அவன் சொல்லியிருந்தால், இன்று உன் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருக்கும் நிலை உண்டாகியிருக்காது… உனக்கு ஆபத்து என்று தெரிந்த பின் என்னால் வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை… எனக்குள்ளே இருக்கும் உன்னை விட, எனது இந்த உயிர் எனக்கு பெரிதாய் தெரியவில்லையடி கண்மணி… அன்று நான் உன்னை கண்ணுக்குள் வைத்து காத்திருந்தால், இத்தனை வருடம் நீ இந்த துன்பங்கள் அனுபவித்திருக்க மாட்டாய் தானே… அன்று என் கவனக்குறைவினால் தானே இத்தனை கஷ்டங்களும் உனக்கு… என்னை மன்னித்துவிடுடா… என்று அவன் தழுதழுத்த குரலில் சொல்ல…

அவளிடம் அப்போதும் அசைவே இல்லை… விழிகள் மட்டும் நீரைப் பெருக்கிய வண்ணம் இருந்தது…

அவள் மௌனம், அவனை கொல்லாமல் கொல்ல…

ரத்தம் தோய்ந்திருந்த தன் வலக்கையை வலியைப் பொறுத்துக்கொண்டு உயர்த்தி,… இரண்டு கைகளையும் அவளை நோக்கி விரித்தபடி…

அடி மௌனம் வேண்டாம் கண்மணியே

ஒரு வார்த்தைப் பேசி விடு

நான் எனக்குள் இல்லை…  தொலைத்துவிட்டேன்

நீ என்னை மீட்டுக்கொடு…”

என்று சொன்னவன், விழிகளினால் அவளை அழைக்க… அவள் உடல் அழுகையில் அதிர்ந்து குலுங்குவது தெரிந்தது அவனுக்கு….

வேண்டாம்டா… என்றவனுக்கு அதற்கு மேல் நிற்க முடியாமல் போக… சுவரில் அப்படியே சாய்ந்தான்…

அவள் ராம்ம்ம்ம்ம்………….. என்ற கதறலுடன் அவனிடம் ஓடி வந்தாள்…

தன் துப்பட்டாவை எடுத்து, அவன் தோள்பட்டையில் குருதி பெருகும் இடத்தில் வைத்து கட்டினாள்… அவன் வலியை முகத்தில் காட்டாதவாறு இருந்தான்…

அவன் விழிகளில் அவள் உருவம் மிக அருகில் தெரிய…

அவன் உளமாற சிரித்தான்… தோட்டாவின் குறுகுறுப்பு வலியாக மாற, விழிகள் பாதி செறுகியது அவனுக்கு….

அவளுக்கு இதயத்துடிப்பு அதிகமானது… அவளின் முகம் கலவரத்தைக் காட்ட, அதைப் பார்த்தவன் அவளைத்தேற்றும் விதமாக,

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா

நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா…”  என்றான்… சந்தோஷத்துடன்…

ஹரிண்ணா………….. என்றழைப்பு ஹரியின் காதில் எட்ட, அவன் வேகமாக உள்ளே வந்தான்…

ருத்துவமனையில், அவ்னீஷ், ரிகா எங்கே?... என்று கேட்டான் ஹரி…

அண்ணி… அங்கே தான் இருக்கிறாங்க… என்று சாகரியை நோக்கி கை காட்டினான் அவ்னீஷ்…

அண்ணனை இங்கே கொண்டு வந்ததிலிருந்து அங்கே தான் இருக்கிறாங்க… இன்னும் அப்படியே நின்னு வேண்டிக்கிட்டு தான் இருக்கிறாங்க… நான் போய் பேசிப் பார்த்தேன்… ஆனா, அவங்க யார் சொல்லுறதையும் கேட்குற நிலைமையில் இல்லை… நீங்க போய் பேசிப் பாருங்கண்ணா… போங்க… என்றவன், ஹரிண்ணா, ஆ…..தி……. அ…….ண்……ணா இப்போ எப்படி இருக்குறாங்க… ஒன்னும் பிரச்சினையில்லையே… என்றவன் கண்கள் நீர் சிந்த, ஹரி அவனை அணைத்துக்கொண்டான்…

சின்னப்பையன் மாதிரி இதென்னடா, அழுகை… லூசு… என்று அவனை அதட்டியவன், நீ வா என்னுடன்… என்று அவனை அழைத்துக்கொண்டு, ரிகாவிடம் சென்றான்…

தெய்வத்தின் முன் கண் மூடி நின்று வேண்டிக்கொண்டிருந்தவள், ரிகா என்ற ஹரியின் அழைப்புக்கும் கண் திறக்கவில்லை…

ஆதியிடம் பேச உனக்கு ஆசையில்லையாடா?... அவன் உனக்காக அங்கு காத்திருக்கிறான் உயிர் பிழைத்து…. என்று சொல்ல சட்டென்று விழி திறந்தவள் கண்கள், நீரை முதலில் கடவுளுக்கு காணிக்கையாக்கிவிட்டு, இதழ்கள் நன்றி சொன்னது…

அண்ணா… நான்…. அண்ணா… அவரை…. என்று அவள் திக்கித்திணற…

நீ போய் பாருடா… போ… என்றான் சிரித்தமுகத்தோடு…

சரிண்ணா… என்று இரண்டடி எடுத்து வைத்தவள், சட்டென்று திரும்பி வந்து, ஹரியை அணைத்துக்கொண்டு சில நிமிடங்கள் அழுதாள்…

தேங்க்ஸ்ண்ணா… என்று அவனிடம் அழுது கொண்டே சொன்னவளிடம், அண்ணனுக்கு தேங்க்ஸ் சொல்வாங்களாடா?... என்று கேட்க…

ஹ்ம்ம்… அப்போ இனி சொல்லலை… சரியாண்ணா.. என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் அவள்…

பல வருடங்களுக்குப் பிறகு அவளின் பழைய உற்சாக குரலையும், சிரிப்பையும் கண்டவன் மனம் நிறைய, அவளின் தலையில் கைவைத்து நீ எப்பவும் இப்படியே சிரிச்சிட்டே இருக்கணும்டா ரிகா… என்றான் மகிழ்ச்சியோடு…

நீங்க ஆசிர்வாதம் பண்ணிட்டீங்கல்ல, இனி நான் சந்தோஷமா தான் இருப்பேன்… என் அண்ணா மாதிரி… சரிதானே அண்ணா… என்று கேட்டுவிட்டு, நான் போய் அவரைப் பார்த்துட்டு வருகிறேண்ணா, என்றவள் சிட்டெனப் பறந்து விட்டாள்…

அவள் சென்ற திசையையேப் பார்த்துக்கொண்டிருந்த ஹரியின் தோள் மீது கை வைத்தான் அவ்னீஷ்…

ஹரியின் விழிகளில் சில துளி நீர் உண்டாகியிருந்தது…

ஹரிண்ணா…. என்னை சொல்லிட்டு நீங்க அழறீங்க… சின்னப்பிள்ளை மாதிரி…

இல்ல… ஈஷ்… அவள் இதே போல் சிரித்து எத்தனை வருஷமாச்சு… இன்னைக்கு தான் ஈஷ் நான் சந்தோஷமா இருக்கேன்… எனக்கு இது போதும்டா… போ…..து…..ம்… என்றவன் மனம் நிறைந்தது போல் வார்த்தைகளும் நிறைய… அவன் விழிகள் மட்டும் நீரில் நனைந்தது சுகமாய்…

அந்த நேரம், அவ்னீஷிற்கு போன் வர, அவன் அதை ஹரியிடம் காட்டி, முகிலன் அண்ணன் தான், இதோட நானூறாவது தடவையா போன் பண்ணுறார்… இப்போ மட்டும் நாம பேசலைன்னா, அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் மும்பை வந்திடுவார்… இப்போ என்ன ஹரிண்ணா பண்ணுறது?... என்று கேட்டான்..

நீ என்னிடம் போனைக்கொடு… என்று அதை வாங்கியவன், ஹலோ முகில் மச்சான்… என்றான்..

என்னடா… மச்சான்????… எங்கடா போய் தொலைஞ்சீங்க… போன் பண்ணினா போன் எடுக்க மாட்டீங்களா?... எங்கடா அந்த ஆதி?... உங்களை தனியா விட்டது என் தப்புடா… நானும் உங்ககூடவே வந்திருக்கணும்… என்று பொரிய…

ஹாஹா.. மச்சான்… உனக்கொரு ஹேப்பி நியூஸ்… நம்ம வீட்டில் சீக்கிரம் டும் டும் டும் கேட்கப் போகுதுடா… என்று ஹரி சொல்ல…

என்னடா சொல்லுற டாக்டர்??… என்ற முகிலனின் கேள்விக்கு, நம்ம தங்கையும் நம்ம மச்சானும் சேர்ந்துட்டாங்கடா… என்று சொல்ல… முகிலன் அங்கே ஆர்ப்பரித்தான்…

நான் உடனே வீட்டில் எல்லாரிடத்திலும் சொல்லுறேண்டா… என்றபடி போனை வைத்துவிட்டான் முகிலன் மேற்கொண்டு எதைப் பற்றியும் கேட்காமல்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.