(Reading time: 25 - 49 minutes)

" ப்பா, நானாவது லவ் பண்றதாவது " என்று உடனே அவனிடமிருந்து  பதில் வந்தது. அது என்னவோ அவனுக்கு காதல் மீது மட்டும் எந்த விதமான பற்றும் இல்லை. பொதுவாய் எவரேனும் காதலை பற்றி பேச்சை எடுத்தால் கூட நாகரீகமாய் ஒதுங்கி விடுவான் கிரிதரன். அவனை பொறுத்த மட்டிலும் காதல் என்பது எந்த ஒரு தேவையையும் சார்ந்து  இருக்காமல் மிக இயல்பாய் மலர வேண்டிய ஓர் உணர்வு  ! இன்று வரை அவன் அதை உணர்ந்ததில்லை .. இதற்கு மேல் ? ( அதான் உங்களுக்கே தெரியுமே பாஸ் )

" என்னம்மா புடவை கலர் இவ்ளோ ப்ரைட்டா இருக்கு ?", " ஐயோ பட்டு புடவை தான் கட்டனுமா ?" , "எதுக்கும்மா இவ்ளோ நகை போடுறிங்க ?" , " எதுக்கும்மா இவ்ளோ பூ " என்று ஒவ்வொன்றுக்கும் கேள்வி கேட்ட மகளை  சிரமபட்டு தயார் படுத்தினார் வித்யா.. மாப்பிளை வீட்டுல இருந்து வந்து  கெளம்புற வரை   இவ பிரச்சனை  எதுவும் பிரச்சனை பண்ணாமல் இருக்கணும் ஆண்டவா என்று வேண்டுதல்கள் ஒரு புறம் நடந்து கொண்டே இருந்தது.

" வாங்க வாங்க" என்று விமலனின் குரல் கவிமதுராவின் அறையை எட்டியது..

" வந்தாச்சா சூரக்கோட்டை சிங்கக்குட்டி ...இருடா உன்னை இன்னைக்கு பேசியே கொல்லுறேன்  " என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள்  கவிமதுரா. கிரிதரனோ எப்போதும் போல அதே மயக்கும் புன்னகையுடன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான்.. இரு குடும்பத்தாரும் பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு " எங்க கவிதா ? எங்களுக்கு எந்த பார்மாலிட்டிஸும் இல்லை .. அவளையும் வர சொல்லுங்களேன் " என்றார் மீராவதி இயல்பாய் ..

கண்ணபிரானும் " ஆமா , கிரி எங்களுக்கு எப்படியோ அதே மாதிரி தான் வரபோகிற மருமகளும் " என்றார் ...

" அடடே அத்தை பாரதி கண்ட புதுமைப்பெண், மாமா சூப்பர்  ஜிங் சக்  போலிருக்கே .. அப்போ அவங்க வாரிசு எப்படி  இருப்பானோ " என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள் , உரிமையாய்  அவர்களை அத்தை மாமா என்று சொன்னதை உணரவில்லை.. "இதோ வரேன் " என்று வித்யா  அவளை அழைத்து வர செல்லும் முன்னே காபியுடன்  வந்தாள்  கவிமதுரா.. ஏற்கனவே ரதி போல தொற்றமளிப்பவள், அந் அலங்காரத்தில் அப்சரஸ் போலவே இருந்தாள்... அந்த சூழ்நிலைக்கு வாகாக சிணுங்கியது கண்ணனின் செல்போன்.

" என்ன விலையழகே

சொன்ன விலைக்கு வாங்க வருவேன்

விலை உயிரென்றாலும் தருவேன்

இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன்

ஒரு மொழி இல்லாமல்

ஒரு மொழி இல்லாமல் மௌளனமாகிறேன் "

" இந்த ரிங்டோன் உங்களுக்கு எதுக்குப்பா ?" என்று கிரி கேட்கும்முன்னே

" சூப்பர் ரிங் டோன்  அங்கிள் " என்று சொன்னாள்  கவிமதுரா

"  தேங்க்ஸ் மா...எல்லாம் உங்க அத்தையை இம்ப்ரஸ் பண்ணுறதுக்கு தான் " என்றார்..

" அடடே நான் கூட எனக்கு ஒரு சூப்பர்  என்ட்ரி  கொடுக்கத்தான் பாட்டு போட்டிங்கன்னு நெனச்சேனே " என்று உதட்டை பிதுக்கினாள் கவிமதுரா..

" என்னங்க உங்க  பெண் பண்ணுற வேலையை பாருங்க " என்று பதட்டமாய் சொன்னார் வித்யா.. விமலானோ " எனக்கு இவ பண்ணுற அலும்பலில் மயக்கமே வருது வித்யா " என்றார் ..

கண்ணபிரானோ " நோ நோ கவி ..அதை எல்லாம் நான் மீராவுக்காக மட்டும்தான் பண்ணுவேன் " என்றார் கண்ணன் .. ஏனோ அவளுக்கு அவர்களை மிகவும் பிடித்து இருந்தது ..பலரின் எதிர்ப்புகளை சந்தித்து வித்யாவும் விமலனும் காதல் திருமணம் செய்து கொண்டதாள்  அவர்களுக்கு உறவினர்கள் மிகக்குறைவாகவே இருந்தனர்.. கண்ணன்- மீரா இருவர் மீதும் அவளுக்கு பிணைப்பு வந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது..

" மாப்பிளை சார் பெயர் என்ன ?" என்று சபையில் இயல்பாய் கேட்டு அனைவரின்  ஆச்சர்ய பார்வையையும்  வாங்கி குவித்தாள்  கவிமதுரா..

கிரிதரனோ கணீர் குரலில் " ஐ எம் கிரிதரன் " என்றான்.. அவன் முக பாவனையை வைத்து அவன் எண்ணத்தை  அவளால் யூகிக்க முடியவில்லை.. எனினும் சிரிக்கும்  அவனது கண்கள் அவளுக்குள் இருந்த அபாயமணியை ஒலிக்க வைத்தது..."  அய்யய்யே இவனுக்கு வேற நம்மை பிடிச்சு தொலைஞ்சிடுமோ ?" என்று கலவரமானாள் கவிமதுரா... உடனே " நான் மிஸ்டர் கிரிதரன் கிட்ட தனியா பேசணுமே " என்றாள்.. பெரியோர்கள் பதில் கூறும்முன்னே  " நானும் உன்கிட்ட பேசணும், வா " என்று உரிமையாய்  சொல்லி  அவர்கள் வீட்டு தோட்டத்தை நோக்கி நடைபோட்டான் கிரிதரன்..

" அடபாவி , விட்டா இவன் என் வீட்டுல எனக்கே வழி காட்டுவானோ ?" என்று எண்ணிக் கொண்டே அவன் பின்னால் சென்றாள்  கவிமதுரா ..

" தப்பா எடுத்துகாதிங்க மிஸ்டர் விமலன், கிரி எப்பவுமே இப்படித்தான் இயல்பாய் இருப்பான் " என்றார் கண்ணன் உண்மையை விளக்கும் தொனியில்.. விமலனும் " இல்ல நான்தான் அதை சொல்லணும் மிஸ்டர் கண்ணன் .. கவியை ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம் "என்றார். பெற்றோர்கள் இருவரும்  இங்கு  தத்தம் பிள்ளைகளை பற்றி பேச, அங்கு கை கட்டி நின்றபடி கவிமதுராவின் பேச்சை கேட்டு  இருந்தான் கிரிதரன் ..!

" மிஸ்டர் கிரிதரன்..உங்களை எனக்கு கல்யாணம் பண்ணிக்க சம்மதம் பட் அதுக்கு முன்னாடி சில விஷயங்கள் சொல்லணும் "

" ம்ம்ம் ப்ரோசீட்" என்று ஸ்டைலாய் கை கட்டி நின்றான் அவன். அவனது இலகுவான அணுகுமுறை அவளை கவர்ந்தாலும், திருமணம் வேண்டாம் என்ற எண்ணம் அவள்  மனதை கட்டுபடுத்தியது.

" எனக்கு சில பேட்  ஹேபிட்ஸ் இருக்கு "

" வாவ் இண்டரெஸ்டிங் ..என்னென்ன சொல்லு ?"

" முதல்ல இந்த நீ வா போன்னு கூப்பிடுறதை நிறுத்துங்க .. நான் உங்களை டா போட்டா கூப்பிடுறேன் "

" ச்சச்ச இல்லையே "

" அப்போ நீங்க மட்டும் எப்படி எனக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கலாம் ?"

அவளுக்கு பதில் சொல்லாமல் கைகடிகாரத்தில் நேரம் பார்த்தான் கிரிதரன் ..

" நீ எப்படியும் இன்னும் அஞ்சு நிமிஷம் சொற்பொழிவு ஆற்றுவ, அதுக்கு பிறகு நான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசுவேன் ..சரியாய் பத்து நிமிஷம் கழிச்சு நான் உனக்கு மரியாதை தரணும்னு உனக்கு தோணிச்சுன்னா சொல்லு  கண்டிப்பா தரேன் "என்றான் அவன் ககூலாய் ...

"  இது பாருங்க மிஸ்டர் கிரி, நான் என் அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு .. நிறைய செல்லம் கொடுத்து வளர்ந்த பொண்ணு ..எனக்கு ஒரு வீட்டு வேலை கூட தெரியாது.. என் ரூம் கூட அம்மாதான் கிளீன் பண்ணுவாங்க ... நான் சமைக்க மாட்டேன், வீட்டு வேலை செய்ய மாட்டேன், பெரியவங்களுக்கு  ஓவரா மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டேன் ..நான் ரொம்ப மாடர்ன் ..இந்த மாதிரி புடவையை எல்லாம் சுத்திகிட்டு இருக்குற டைப் இல்லை நான் .. எப்பவும் ஜீன்ஸ் ஷர்ட் தான் எனக்கு பிடிக்கும்...அப்பறம் எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருக்காங்க ... என் லைப் ல நான் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறதே அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்றதுதான் ... அப்பறம் எனக்கு சிக்கனமா இருக்க தெரியாது .. நிறைய செலவு பண்ணுவேன் ... பிடிச்சதை எல்லாம் வாங்குவேன் ... வீட்டுல எப்பவும் நான் சொல்றதுதான் சட்டம் ..எதிர்த்து பேசின எனக்கு பிடிக்காது .. கோபம் வந்தா  கைல கிடைக்கிறதை தூக்கி எரிஞ்சு சண்டை போடுவேன் ... அப்பறம் எனக்கு ஆண்கள்ன்னா  புடிக்காது .. அப்பாவை தவிர வேற யாரையும் மதிக்க மாட்டேன் ...

என்னை நீங்க கல்யாணம் பண்ணுறதா இருந்தா, நீங்க என்னை மாத்த நினைக்க கூடாது .. என் பேச்சை கேட்டுகிட்டு ஒரு அடிமை மாதிரிதான் இருக்கணும். புருஷன்னு சொல்லி என்கிட்ட எந்த ஒரு எட்வாண்டேஜ் உம்  எடுத்துக்க கூடாது ..இதுக்குலாம் சம்மதிச்சா நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன் " என்று தன்னால்  முடிந்தவரை திமிராய் பேசினாள்  கவிமதுரா... கிரிதரனோ அழகாய் சிரித்தான் ..

" இவன் வேற ஏன் இப்படி கன்னத்துல குழி விழுற அளவுக்கு இளிக்கிறான் ? உங்க கன்னக்குழியில் எல்லாம் நாங்க விழமாட்டோம் பாஸ் " என்றாள்  கவிமதுரா மானசீகமாய் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.