(Reading time: 36 - 71 minutes)

தன் முன்பு சென்று காரை நிறுத்தவும் கவினுக்கு புரிந்துவிட்டது.

ஆனால் இவள் எதிர்பார்த்தது போல் அவன் மறுப்பு ஏதும் சொல்லவில்லை. ஆனால் பலமாக ஆச்சர்யபட்டான்.

“ஹேய்....எப்டி குல்ஸ்...உனக்கு இதெல்லாம்...” என ஆரம்பித்தவன்

 “முட்டகண்ணி...வர வர ஆள கவுத்ற அத்தனை டெக்னிகிலும் எக்ஸ்பெர்ட் ஆகிட்டு இருக்க...” என்றபடி அவள் கைபிடித்து அழைத்துப் போனான் உள்ளே...

“அது...நீங்க...ஒத்துக்க மாட்டீங்கன்னு நினச்சேன்...என்ட்ட உங்களுக்கு குடுக்க இத தவிர வேற ஒன்னுமில்லை....அதான்....”

இவள் சொல்ல அவன் நின்று இவள் முகம் பார்த்தான். முன்பிருந்த முகபாவம் இல்லை.

“ப்ளீஃஸ் கவிப்பா....கெஞ்சி கேட்டுகிறேன் வேண்டாம்னு மட்டும் சொல்லிடாதீங்க..நான் முதல் முதல்ல உங்களுக்குன்னு கொடுக்கிறது.....”

கனிந்து விட்டது அவன் முக பாவம்.

“நீ தந்து நான் வேண்டாம்னு சொல்வேனா...? அதோட....எனக்கே நீ எதையாவது தரனும்னாலும் என் கைய நீ எதிர்பார்க்கிற நிலைலதான் நன் உன்னை வச்சிருக்கேன் என்ன...? அது இவ்ளவு நாள் எனக்கு தோணலை...இனி கவனிச்சுகிடலாம்...”

அடுத்து அவளை உட்கார வைத்துவிட்டு அவனே செய்ய வேண்டிய வேலைகளை கவனித்தான். அதற்குள் அவன் நண்பர்கள் இருவர் வர கையெழுத்திடும் வேலையை மாத்திரம் வேரி செய்யும்படி அனைத்தையும் அவர்களே செய்து முடித்தனர்.

பத்திரபதிவு முடிந்து அலுவலகத்தைவிட்டு இவர்கள் வெளியே வரவும்

“ஒரு நிமிடம்...” என்றபடி இவள் கையை பற்றி இழுக்காத குறையாய் அழைத்துச் சென்றவன் பதிவு அலுவலகத்திற்கு பின்னிருந்த மரங்களடர்ந்த பகுதிக்குள் நுழைந்து ஒரு மரத்தோடு அவளை சாய்த்து அழுந்த அவளுக்கு முத்தாரமிட்டான்.

“ஐம் வெரி வெரி ஹாப்பி டுடே....நம்ம கல்யாண நாளுக்கு அடுத்தபடியா இதுவும் எனக்கு முக்கியமான டே... “

அப்ப குழந்தை விஷயம் தெரிந்த நாள்...? மனதிற்குள் தோன்றினாலும் அதை அப்பொழுதுக்கு மனதில் கூட கிளர அவளுக்கு விருப்பமில்லை.

என்னவனோடு நானும் சந்தோஷமாக இருக்கப்போகிறேன்...

மீண்டுமாய் இவர்கள் கார் அருகில் வரும்போது ஒரு தனியார் வங்கியிலிருந்து அக்கவ்ண்ட் ஓபன் செய்து தரவென ஒரு நபர் வந்து நின்றார்.

“எனக்கு ஏற்கனவே அக்கவ்ண்ட் இருக்குது...”

“அது உங்க வீட்ல தந்தது....இது நான் என் வைஃப்க்கு கொடுக்கிறது...”

அவன் குரலின் தொனியை உணர்ந்தவள் அத்தனை பாரங்களிலும் கட கடவென கையெழுத்திட்டாள்.

அன்று இரவு அணை திறந்த வெள்ளமாய் கவின். அவனோடு அவனுடைய அவள்.

றுநாள் வேரிக்கான புது அக்கவ்ண்ட்டில் மாத மாதம் வட்டியை எடுத்துக்கொள்ளும்படியாய் ஒரு பெரும் தொகை ஃபிக்ஃஸட் டெடாசிட்டில் புக் ஆகி இருப்பதாக அவளது அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்தது. அதோடு மற்றொரு தொகை லிக்விட் காஷ் ஆக.

இத்தனைக்கும் வீட்டிலிருக்கும் பணம் இன்றுவரை இவள் பொறுப்பில் தான் இருந்து வருகிறது என்பது வேறுவிஷயம்.

இந்த கவின் இருக்கானே....

அன்று இரவு அவனிடம் இதைப் பற்றி குறிப்பிட்டாள்.

“வீட்ல இருக்கிறது நம்ம ரெண்டுபேரும் எடுத்து செலவு செய்றது...ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம சர்ப்ரைஸ் எதுவும் கொடுக்க முடியாது...உனக்கே உனக்குன்னு ஒரு உலகம் டெம்ரவரியாகவாது வந்து போகும் தானே...அதான் அக்கவ்ண்ட்ல டெபாசிட் செய்துட்டேன்...அதோடு நம்ம கம்பெனில இருந்து உனக்கு இனி சேலரி வரும்...”

“ஆங்... இனி நீ ஆஃபீஸ்க்கு வரனும்னு சொல்லாம சொல்றீங்களோ...? நான் அங்க வந்து 2 மாசம் ஆகுது...”

“சே..இல்லடா...வரனும்னு தோண்றப்ப வா...பட் எப்டினாலும் நீ பார்ட் ஆஃப் அவர் கம்பெனி தானே...”

“ம்....பார்ட் ஆஃப் கவின்னு நினச்சேன்...இது வெறும் பார்ட் ஆஃப் கம்பெனிதானா...ப்ச்...நாட் இன்ட்ரெஸ்ட்டட்..”

அவள் விளையாட்டாக அலுத்துக்கொள்ள  பார்ட் ஆஃப் கவின் கதை அரங்கேற தொடங்கியது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

வேரியும் நீலாவும் எதிர்பார்த்ததையும்விட வெகு வேகமாக இரண்டே வாரத்தில் இவர்கள் அனுப்பி இருந்த ப்ரொஃபைல்களில்  ஒருவரான ஆன்ட்ரூவும் ஒஃபிலியாவும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக ஒஃபிலியாவே நீலாவை அழைத்துச் சொன்னாள்.

ஆன்ட்ரூ ஆங்கிலோ இண்டியன்....சென்னையில் பிறந்து வளர்ந்தவன்....இவர்களது ரியோடிஜெனிரோ அலுவலகத்தில் நல்ல பதவியில் இருந்தான்..

வேரிக்குதான் கொஞ்சம் டென்ஷனானது. எதற்காக இவ்வளவு சீக்கிரமாக முடிவெடுக்கிறாள் ஒஃபிலியா என்று. அவசரபட்டு அவள் தவறான வாழ்க்கைக்குள்  நுழைந்துவிடக் கூடாதே...

அதை ஒஃபிலியாவிடமே கேட்டாள்.

“நம்ம ஊர்ல விசாரிக்கதான் டைம் எடுத்துபாங்க...அரேஞ்ச்டு மேரேஜ்ல முடிவு செய்ய எடுத்துக்கிடுற டைம் குறைவு தானே...விசாரிக்க வேண்டியதெல்லாம் நீலாம்மா தான் விசாரிச்சு அனுப்பிட்டாங்களே....எனக்கும் ஆன்ட்ரூக்கும் பிடிச்சுருக்கு...தென் ஏன் போஃஸ்ட்போன் செய்யனும்...? அதான் இப்போ எங்கேஜ்மென்ட்....வியன் எப்ப கம்பெனிக்குள்ள திரும்பி வாரானோ அப்ப மேரேஜ்..அவன் ரியோல இருக்க டிசைட் பண்ணா நாங்க கலோன்....இல்ல வியன் கலோன்னு டிசைட் பண்ணா நாங்க ரியோல இருப்போம்....கம்பெனிக்கு அப்பதான் சரியா வரும்..”

அவள் வார்த்தைகள் நியாயமாய்பட்டது.

அடுத்து ஒஃபிலியா ஆன்ட்ரூ நிச்சயதார்த்தம் மனோகர் தம்பதியினரின் சென்னை பீச் ரிசார்ட்டில் படுகோலாகலமாக நடந்தேறியது.

முதுகுவரை நீண்டிருந்த சுருட்டை முடியை மேலாக சின்னதாக கிளிப் மட்டும்  செய்து, விரித்துவிட்டு, மெரூன் நிற ஜரிகை பட்டும், காதில் ஜிமிக்கியும், நீண்ட ஒற்றை மாலையும், விழா மேடையில் முழு மகிழ்ச்சியும் பொங்கும் அழகுமாய் நின்றிருந்த ஒஃபிலியாவைப் பார்க்க வேரிக்குள் நிறைவு.

ஜோடியை வாழ்த்த கவினோடு மேடை ஏறினாள் வேரி.

“ரொம்ப அழகா இருக்கீங்க....பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குது...விஷ் யூ ஆல் த பெஸ்ட்..” வேரி வாழ்த்த

ஒஃபிலியாவோ இவளை அணைத்துக்கொண்டாள்.

“அம்மா சொன்னாங்க...எல்லாம் நீங்க செய்த அரேஞ்ச்மென்டுன்னு....ரொம்பவும் தேங்க்ஸ்...” என்றவள் அகிலிருந்த கவினை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டுமாக இவள் கண்களைப் பார்த்தவள்

“சாரி...நான் ஒரு தப்பு செய்துட்டேன்...பட் நீங்க எல்லாத்தையும் சரியாக்கிடீங்க...” என்றாள்.

“அதெல்லாம் ஒன்னுமே இல்லை....அதை நீங்க நினைக்கவும் கூடாது...அதபத்தி பேசவும் கூடாது...நீங்களூம் மிர்னாவும் எங்களுக்கு ஒன்னுதான்...”

மீண்டுமாய் இவளை அனைத்துக்கொண்ட ஒஃபிலியாவின் கண்கள் அவள் மனதைப்போல் நிறைந்துவிட்டன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.