(Reading time: 7 - 13 minutes)

"நான்சென்ஸ் இந்த "சார் " என்று அழைப்பதை நிறுத்து, அப்புறம் இந்த சாரி " என்றான்.

"பரவாயில்லை சார் என்று அழைப்பது தான் உசிதம்" என்றாள்.

"எனக்கு பிடிக்கலை"

"எனக்கு இது தான் வசதி" என்றாள் சற்று முன் சங்கடம் தீராத நிலையில், எதுவும் தனக்கு நிலையில்லை என்ற எண்ணம் எப்போதும் நினைவிருக்கும் வண்ணம்.

"நான் அர்ஜுன் மட்டும் தான்"

" எனக்கு நீங்க அர்ஜுன் சார் தான், அந்த இடைவெளி போதும் நமக்கு" என்றாள் படபடப்புடன்.

புரியாத குழந்தைக்கு புரிய வைப்பது கடினம் இல்லை. புரிந்து கொள்ள மாட்டேன் என்னும் வளர்ந்த அறிவாளிக்கு எங்கே என்ன செய்து ஏற்க்க வைக்க முடியும். முயற்சியை கை விட்டு பெருமூச்சொன்றை விட்டு கார் அருகில் செல்லலானான்.

தேஜுவின் வீடு மாளிகை போல் இருந்தது. "இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க " என்று கொஞ்சும் குரலில் அவளின் உபச்சாரம், அந்த குளிரில் சூடான சாப்பாடு, கோபத்தோடு உளைச்சலோடும் அலைச்சலோடும் இருந்த கவிதாவை சாந்தி செய்தது.

பணம்  மனிதனில் ஏற்ற தாழ்வு எனும் மாயை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. ஒரு முறை பணம், பதவி, எல்லாம் மாயை என்பதும் ஏற்ற தாழ்வு மனிதனாக நடந்து கொள்வதில் இருக்கிறது என்பது  புரிந்து உறுதியான இதயத்துடன் அன்பையும் பண்பையும் கைபிடித்தோமேயானால் நம்மால் சிறந்த மனிதம் வளர்க்க முடியும்.

கவிதாவின் மனம் ஆசை இலட்சியம் எனும் கைகளுக்குள்  பந்தாடியது. அது அவளின் நிலையையும் அர்ஜுனின் நிலையையும் ஒப்பிட்டு பார்த்து நொந்தது.

அவன் நட்பு வட்டத்தில்  இணைவது கூட அவளுக்கு சாத்தியமா என்பது இப்போதிருக்கும் அவள் நிலையில் சந்தேகமே. அர்ஜுன் எதிரில் அவள் தன்னம்பிக்கை எல்லாம் உடைவது போல் உணர்ந்தாள்.

இந்த பிரயாணம் அவளின் நிலையை அவளுக்கு புரிய வைப்பதற்கே அமைந்ததாக எண்ணிக்கொண்டாள் கவிதா.

பரபரப்பாக  வந்த நிஷா "ஆகாஷ் ...!! என் அப்பா சென்னை போயாச்சு... ஈசிஆரில் ஏதோ ரிசார்டில் இருக்கிறார்" என்றாள்.

ஆகாஷ் பொறுமையாக அவனுக்கு கிடைத்த தகவல் என்று    "இவ்வளவு பணம் சம்பாதித்த பின்னும் உன் அப்பாவிற்கு என்ன அப்படி ஆசை?? அங்கே அவர் தங்கி இருப்பது தங்கம் கடத்தலுக்கு " என்றான் குற்றம் சாட்டும் தொனியில்.

நிஷாவிற்கு குன்றலாகி போனது. தந்தையை பற்றி பிடித்தவனே ஆனாலும் இன்னொருவன் தப்பாக பேசி கேட்பதில்.

அவன் திட்டத்தை விரிவாக " அவர் வேலை முடிய மூன்று நாட்கள் ஆகும் அதன் பின் தான் நம் வீட்டை தொடர்ப்பு கொள்வார். நாம் நாளை மதியம் இந்தியா புறப்படுவோம் " என்றான்.

அவள் தலையை ஆட்டிவிட்டு அமைதி காத்தாள். பெற்றவரை நினைத்து வருத்தத்தில்.

அகாஷிற்கு அவன் கருத்து அவளை பாதித்த விதம்  அவள் மௌனம் புரிய வைக்க, "சாரி நான் அப்படி பேசியிருக்க கூடாது " என்றான்.

நிஷா ,"பாரு ஆகாஷ் அவர் என் அப்பா, அவர் சம்பாதிப்பது பற்றியும் அவர் ஆசை பற்றியும் உனக்கு கவலைகள் வேண்டாம், இப்படி  என் அப்பாவை என் முன்னே பேசுவாய் என்றால், நம் உறவு நட்பிலே நிற்கட்டும் " என்றாள்.

துடிக்கும் இதயம் சற்று வேலை நிறுத்தம் செய்தது ஆகாஷிற்கு சில நிமிட தெளிவின் பின் "மை டெவில் இஸ் பாக் " என்றான்.

அவள் கண் விரித்து "என்ன ?" என்று கேட்க, "இதோ உனக்கு பிடித்தவர்களுக்காக பேசும் உன் இந்த பேச்சு தான் எனக்கு மிகவும் பிடிக்கும் " என்றான் அவன்.

நிஷாவிர்க்குள் வியப்பு பரவியது.

அங்கே மகிழ்ச்சி அலை பொங்கியது.

அர்ஜுனிர்க்கும் தகவல் கிடைத்தது நிஷாவின் தந்தை சென்னை வந்தாயிற்று என்று.

கவிதா "சார் எனக்கு மகளிர் தொழில் முனைவோர் கடனிற்கு செக்யூரிட்டி சைன் போட்டு ஹெல்ப் பண்ணுங்க நான் உங்க வீட்டை விட்டு போய்டறேன்" என்றாள் கம்மிய குரலில் அழுகையை மறைத்துக்கொண்டு.

அர்ஜுன் "அதெல்லாம் முடியாது , என்னோடு இரு " என்று பேச்சை முடித்துக்கொண்டு. அவனால் இனி தனியாக செயல்ப்பட முடியாது என்று தோன்ற ஆகாஷிற்கு பேசினான் அவன் பிளான் அறிந்துக்கொள்ள.

அர்ஜுன் பேச பேச ஆகாஷிற்கு புரிந்தது அர்ஜூனால் எப்படி இரு வேறு துறையில் தொழில் செய்ய முடிகிறது என்று.

ஆகாஷிற்கு வலிமை கூடிற்று. யார் மனதும் புண்படாமல் அவனால் நிஷாவை கல்யாணம் செய்துக்க முடியும் என்று. 

தொடரும்!

Go to episode # 11

Next episode will be published as soon as the writer shares her next episode.


{kunena_discuss:700}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.