(Reading time: 13 - 25 minutes)

ன்று தீக்ஷா எடுத்துவந்து தந்த கோப்பினை புரட்டி கொண்டிருந்தான் ராகுல்.சிந்தனை அதில் படராமல் அதை எடுத்து வந்தவளிடம் போனது!!!

கண்கள் திறந்திருந்த நிலையில் கனவுலில் மிதந்தான் அவன்!!!

அவளுக்கு அவன் தாயின் முகம்!!!

எப்படி இது சாத்தியம்?

அவளை பார்க்கும் போது மனதில் ஒருவித மரியாதை எழுகிறது!!!

அவள் பெயர் என்னவென்று கூறினாள்??

தீக்ஷா...

அருமையான பெயர்.அழகாகவும் உள்ளது!!அவளை போல!!!

இதை யோசித்தவன் சட்டென தன்னை தானே கடிந்து கொண்டான்.

ச்சீ..என்ன உளறுகிறேன்!ஒரு பெண்ணை குறித்து நான் யோசிப்பதா!இப்படியும் யோசித்தது அவன் மனம்.

தவித்து கொண்டிருந்தான் பாவம்!!!ஒன்றும் முடியவில்லை!!!

அவன் அருகே பரிதாபமாய் மற்றொரு ஜீவன் அமர்ந்திருந்தது!!அவன் எதை யோசிக்கிறான்??என்று அவனையே பார்த்து கொண்டிருந்தான் டேஜா!!

ம்ஹீம்...அவனால்,யூகிக்க முடியவில்லை!

"அண்ணா!"

"டார்லிங்...ஒரே மாதிரியே உலகத்துல இன்னொருத்தர் இருப்பாங்களா?"

"ஏன்?"

"ஒரு பொண்ணை பார்த்தேன்.அசல் அம்மாவை பார்த்தா மாதிரியே இருந்தது!"

"நம்ம அம்மாவா?"

"கீதா அம்மா!"-அவள் மூளையில் சட்டென ஏதோ பொறி தட்டியது.

"ம்..இருப்பாங்கண்ணா!இப்போ நீயும்,ரகு அப்பாவும் ஒரே மாதிரி இல்லையா?"-அவன் மனம் துணுக்குற்றது.அனு சட்டென பேச்சை நிறுத்தினாள்.

ராகுல் அமைதியாக இருந்தான்.

"நீ என்ன அந்தப் பொண்ணை லவ் பண்றீயா?"-பேச்சை திசை திருப்ப வேறு வழியே இல்லாமல் இதை கூறினாள்.

"ஏ..என்ன பேசுற நீ?நான் போய்!"

"ஆ...எல்லா லவ்வும் இப்படி தான் ஆரம்பிக்குது!"-அவன் கைக்கூப்பி வணங்கினான்.

"போதும் தாயே!"

"பொழைச்சு போ!"

"அண்ணா!சீக்கிரமே நீ கல்யாணம் பண்ணா தானே உனக்கு டைம் பாஸ் ஆகும்?"

"நான் கல்யாணம் பண்ணா உனக்கு எப்படி டைம் பாஸ் ஆகும்?"

"அப்போ உனக்கு டைம் பாஸ் ஆகுமா?ஸோ ...கல்யாணம் பண்ற ஐடியாவுல இருக்க?"

அவன் கைக்கூப்பி விட்டுவிடும்மா தாயே என்பது போல தலையசைத்தான்.

"ரொம்ப பாவமா இருக்க!போனா போகட்டும்!"

"தேவி கருணையே கருணை!"

"நலம் உண்டாகட்டும்"

"அனு!ஒரு முக்கியமான விஷயம்!"

"என்ன?"

"அர்ஜூன்!இங்கே இன்னும் கொஞ்ச நாள்ல வருவான்!"-அவள் முகம் இறுகியது.

"ஏன்?எதுக்கு?"

"கம் ஆன்..!அவன் உன் அண்ணன்டி!"

"எனக்கு இரண்டு அண்ணன் மட்டும் தான்!"

"அடிப்பேன்!அது மாதிரி எல்லாம் பேச கூடாது!"

"அண்ணா!அவன் எப்போ பார்த்தாலும் உன்னை..."

"என்ன?"

"ஒண்ணுமில்லை."

"அவனுக்கு என்னை பிடிக்காது!அவ்வளவு தானே!ஆனா எனக்கு அவன் தம்பி தான்!அர்ஜூன் வரதுக்கு ஏற்பாடு பண்ணு!"

"என்ன அதிகாரம் அதிகமாகுது!"

"என் செல்லம்,என் கண்ணு,என் குட்டி ஏற்பாடு பண்ணும்மா!"

"அந்த பயம் இருக்கட்டும்!"-அனு சிரித்தப்படி எழுந்து போனாள்.

தனிமையில் கண்களை மூடி யோசித்தவனுக்கு அர்ஜூன் சிறு வயதில் கூறியது நினைவு வந்தது.

"நீ என்ன என் சித்தப்பாக்கு பிறந்த மாதிரி இவ்வளவு உரிமை எடுத்துக்குற!எங்கே இருக்கணுமோ அங்கே இரு!"-மனம் கனத்தது அவனுக்கு!!!

இனி என்னென்ன நடக்க போகிறதோ!அவன் வருவது வீட்டிற்கு தெரிந்தால் அம்மா இவன் மீது நிச்சயம் அதீத கோபப்படுவார்!!!

என்ன செய்ய போகிறேனோ!!!

"டேய் மச்சான்!இது ராகுலுக்கு தெரியுமா?"

"தெரியாதுடா!அதான்,எனக்கு பயமா இருக்கு!எல்லாம் இந்த ராட்ஸஸியால!"

"என்னங்கடா?இப்போ என்ன ஆச்சு?"-மாயா சீறினாள்.

"உன்னை யாருடி அந்த பொண்ணை இங்கே மாற்ற வைத்தது?"

"காரணம் இருக்கு!"

"என்னவாம்?"

"நம்ம ராகுலோட தவக்கோலத்தை கொஞ்சம் கலைத்து பார்க்கலாம்னு தான்!"

"நடக்குற காரியமா அது?விவரம் தெரிந்தா ருத்ர தாண்டவக்கோலம் தான்!"-அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே ராகுல் வந்தான்.

அவனை பார்த்த விஜய்,

யாருடனோ போன் பேசுவது போல தன் கைப்பேசியை எடுத்து,

"இல்லைப்பா!நீங்க சொன்னா மாதிரி டாக்டர்க்கிட்ட போனேன்.அவர் இ.சி.ஜி.எடுத்து பல்வலி இல்லைன்னு சொல்லிட்டாங்க!"-அதைக்கேட்ட ராகுல் கேள்வியாய் அவனை பார்த்தான்.

"அப்பறம் பேசுறேன்பா!"-இணைப்பை துண்டித்தவன்,

"என் மச்சான் அப்படி பார்க்கிற?"

"இப்போ போன்ல என்ன சொன்ன?!"

"என்ன சொன்ன?"

"இ.சி.ஜி.எடுத்து பல்வலி இல்லைன்னு சொன்னாங்களா?"

"அடப்பாவி...பயத்துல ஏதேதோ உளர்றனே!"என்று எண்ணிக் கொண்டு,

"நெஞ்சுவலி மச்சான்!கொஞ்ச நாளா ஹார்ட் ரொம்ப வீக்காயிடுச்சு!"-ராகுல் சிரித்தப்படி,

"என்னடா லவ்வா?"என்றான்.

"இப்போ அதுமட்டும் தான் குறை!"

"என்னது?"

"இல்லைடா...அம்மா உன் கல்யாணம் விஷயத்தை பற்றி பேசி பார்க்க சொன்னாங்கடா!"-ராகுல் பெருமூச்சை விட்டான்.

"எந்த டாக்டர்கிட்ட டிரிட்மண்ட் எடுக்கிற?"

"ஏன்?"

"இல்லை...அவர் ஹாஸ்பிட்டல்ல ஐ.சி.யு.வார்டு இருக்கான்னு கேட்டு வைத்துக்கொள்!"

"டேய்!அவனை விடு!நீ சொல்லு எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?"-மாயா தைரியமாக கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.