(Reading time: 17 - 34 minutes)

08. சதி என்று சரணடைந்தேன் - சகி

ன்று ஆதித்யாவின் மூலம் இருவரும் இன்னாறென்று அறிந்தவர்கள் முன்பைவிட நெருக்கமாகவே பழகினர்.

ராகுல் தீக்ஷாவை மீண்டும் சதி என்றே வெறுப்பேற்ற தொடங்கினான்.

அவள் எத்தனையோ முறை கூறியும் அவன் அவளை விடுவதாய் இல்லை!!

Sathi endru saranadainthen

ஒருநாள்...

புயல் மழை...

"சதி!அவசரமா என் கூட வா!"என்றான் ராகுல்.

"எங்கே?"

"முக்கியமான இடத்துக்கு போகணும்!"-என்று அவளை இழுத்துக்கொண்டு போனான்.

இருவரும் காரில் ஏறினர்.

"எங்கே போறோம்?"

"கேள்விக்கேட்காம வா!"-என்று ஒரு காட்டுப்பகுதிக்கு போனான்.

"இங்கே எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க?"

"ம்..உன்னை கடத்திட்டு வந்திருக்கேன்!"-அவர்கள் செல்ல செல்ல காடு இருண்டது.

"வா!"-காரை நிறுத்திவிட்டு அவளை அழைத்தான்.

"ராகுல் எனக்கு பயமா இருக்கு!"

"நான் இருக்கேன் வா!"-அவள் தயக்கத்தோடு வந்தாள்.அவன் ஒரு பழைய சேதமடைந்த வீட்டிற்குள் சென்றான்.

தீக்ஷா திகிலோடு பின் தொடர்ந்தாள்.

"நீ இங்கேயே இரு!"-என்று அவன் மட்டும் அந்த வீட்டிற்குள் சென்றான்.நேரம் ஆனது அரை மணி நேரம்,ஒரு மணி நேரம் அவன் வரவில்லை.

"ராகுல்!"அவள் குரல் தந்தாள்.

பதில் இல்லை.பயத்தோடு உள்ளே நுழைந்தாள்.

சுற்றி இருள்!!!அவனை காணவில்லை!!!

"ராகுல்!"-பதில் இல்லை.

திடீரென அவள் தோள் மீது யாரோ கை வைக்க,அலறியப்படி திரும்பினாள்.ராகுல் தான்!!!

"நான் உன்னை வெளியே தானே இருக்க சொன்னேன்!"

"எனக்கு பயமா இருந்தது!"-அவள் பயத்தோடு கூறிய அழகை அவன் ரசிக்காமல் இல்லை.

அப்போது திடீரென பயங்கரமான இடி இடிக்க,அவள் பயத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.

அச்செய்கையில் அவன் தடுமாறி போனான்.திடீரென்று கிடைத்த அவள் நெருக்கம் அவன் புத்தியை செயலிழக்க செய்தது.

அவனிடம் பேச்சில்லை.

அவன் மனம் விழித்துக்கொண்டது.

மென்மையாக

"சதி!"என்றான்.

"எனக்கு பயமா இருக்கு ராகுல்!"அவள் அழுது விடுவாள் போல் இருந்தது.

அவனுக்கு அவளை விலக்கவும் மனமில்லை.

"சரி வா! நாம போயிடலாம்!"-ராகுல் சதியை அணைத்தப்படி நடந்தான்.

ஏனோ தீக்ஷாவின் இதயம் அச்சமயம் தாறுமாறாய் துடித்தது.

அவனது அன்பிலும்,அரவணைப்பிலும்,பாதுகாப்பிலும் அவள் உருகி போயிருந்தாள்.

வெளியே பயங்கர மழை காரை அடைவதற்குள் இருவரும் நன்றாக நனைந்திருந்தனர்.

தீக்ஷாவின் விழிகள் இன்னும் பயத்தை தியாகிக்கவில்லை.

"சதி!ஆர் யூ ஓ.கே.?"

"யா...ஐ ஆம் ஆல்ரைட்!"-அவள் கண்கள் ஒரு இடத்தில் நிலைக்கவில்லை.

ராகுல் அவள் முகத்தையே பார்த்தப்படி இருந்தான்.

அந்தக்குழந்தைத்தனமான முகம் அவனை கட்டிப்போட்டது.

திடீரென்று அவள் சுயநினைவு பெற...

பேச்சை மாற்றினான்.

"அன்னிக்கு என்னமோ ஒரு பார்பி டாலுக்காக அப்படி சண்டை போட்ட?இன்னிக்கு ஒரு இருட்டுக்குப் போய் பயப்படுற?"-என்று சிரித்தான்.

"போதும்...ரொம்ப சிரிக்க வேணாம்!"

"சிரிக்கறதா?ஆபிஸ் வா!போஸ்டர் அடித்து ஒட்டுறேன்!"

"என்னது?"

"இன்னிக்கு நீ க்ளோஸ்!"

"ப்ளீஸ் யார்கிட்டையும் சொல்ல வேணாம்!"

"ஐயோ!நீ பயப்படுற அழகை பார்க்கணுமே!பேயை நேர்ல பார்த்தா மாதிரி ஒரு லுக் விட்ட பாரு!பேயே தெறித்து ஓடிடும்!!"

"நீங்க இருக்குற இடத்துல பேய் வேற தனியா வரணுமா?"

"என்ன செய்ய!நான் ஓடி இருந்தா!நீ அங்கேயே மயக்கம் போட்டு விழுந்திருப்பியே!"-சண்டை போட்டுக்கொண்டனர்.

"ராகுல் ப்ளீஸ்!"

"ஓ.கே அழுதுடாதே!!'-அவன் சிரித்தப்படி காரை எடுத்தான்.

அச்சமயம் அங்கு ஏதோ ஊளையிடுது போல சப்தம் கேட்க,அவள் பயத்தில் ராகுலின் கரத்தைப் பற்றி கொண்டாள்.

அவளது மென்மையான அந்தத்தீண்டலில் மெய்மறந்து தான் போனான் அவன்.

"அது என்ன சத்தம்?"-அவன் ஏதும் பேசாமல் அவளையே பார்த்தப்படி இருந்தான்.

"உங்கக்கிட்ட தானே கேட்கிறேன்?"-அவள் மீண்டும் கேட்க,சுயநினைவு வந்தவனாய்,

"அது ஏதோ நரி பக்கத்துல இருக்கும்!"

"ஈஸ்வரா!"

"ஏன் அவர் இருப்பார்னு சொல்லுறீயா?"

"ராகுல் கிண்டல் பண்றதை விட்டுட்டு சீக்கிரம் காரை எடுங்க!"

அவளை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.அவன் காரை பின்பக்கமாக நகர்த்தி கிளம்பினான்.தீக்ஷாவிற்கு அப்போது தான் முகத்தில் நிம்மதி படர்ந்தது.

"நாலு நாள் ஜூரத்துல படுத்துட மாட்டியே!"-சிரித்தப்படி கேட்டான் ராகுல்.

அவள் பதில் பேசாமல் அவனை முறைத்துக் கொண்டு சென்றாள்.

"பார்த்து ஆபிஸ் தீப்பிடித்து எரிய போகுது!"-அவள் அதை கவனிப்பதாய் இல்லை.

ராகுல் சிரித்தப்படி அமர்ந்தான்.அவன் மனம் முழுதும் தீக்ஷாவே நிரம்பி இருக்க,

அவன் மூளை கூறியது...

"தீக்ஷாவை நீ விரும்ப கூடாது!"-அது எச்சரித்தது.

அவனுக்கு அப்போது தான் உரைத்தது

தன் மனம் கட்டுப்பாட்டை விலகி உள்ளது என்று!!

(ஏற்கனவே இவன் ரொம்ப நல்லவன்!இதுல ஞாபகம் வேற படுத்திடுச்சா!இனி,அந்தப்பொண்ணை நிமிர்ந்துக்கூட பார்க்க மாட்டானே!)

ஏனோ தீக்ஷாவை பற்றிய நினைவுகள் ராகுலை விலக மறுத்தன.அவன் நீண்ட நேரமாய் அந்த ஹாலில் இருந்த ராதாகிருஷ்ணர் சிலையை பார்த்தப்படி அமர்ந்திருந்தான்.

கண்களில் ஏதோ தேடலோடு நாராயணனின் தோள் மீது சாய்ந்தப்படி அவன் குழலிசையினை ரசிக்கும் அக்கன்னிகையை காணும் பொழுதிலினில் காலை தீக்ஷா செய்த செய்கை நினைவிற்கு வந்து இம்சை செய்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.