(Reading time: 17 - 34 minutes)

ன் நிலைமை தான் உங்களுக்கு தெரியுமே! உங்களுக்காக ஒத்துகிட்டு தான் நான் இங்கே வந்து இருக்கேன். நீங்க உங்க லட்சியத்தை அடைய வேலையை விடனும்.. அப்போ நமக்கு சாப்பாட்டுக்கு... வாழ்க்கையை நடத்த பணம் தேவை.. அங்கே இருந்தா சம்பளம் பத்தாதுனு தான் நான் இங்கே வந்ததே! என்ன மூன்று மாதம் னு இருந்தது இப்போ எட்டு மாதம் னு ஆயிட்டு.. அவ்வளவு தானே! எனக்கு மட்டும் என்ன உங்களையேல்லாம் விட்டுட்டூ இங்க வந்து இருக்க சந்தோஷமா என்ன?

பொய் சொல்லாதே குழலீ! நான் உன்கிட்ட நடந்துகிட்ட முறையை பார்த்து தான்.. 'ஐயா சாமி நீயும் வேண்டாம் உன் உறவும் வேண்டாம்! நீ இருக்கிற திசைக்கு ஒரு கும்பிடு!' என்று தானே தப்பித்தோம் பிழைத்தோம்னு கிளம்பி போய்யிட்ட!' என்றான் பிரபு சற்று இறங்கிய குரலில்.

லூசா டா சிவாநாதா நீ???

……………………..

எவ்வளவு முறை கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல சொல்லிட்டு இருக்கேன்! காது கொடுத்து கேளு! தப்பித்தோம் பிழைத்தோம்னு ஓடி வந்தா மாதிரி பேசற? அப்போ நான் சொன்ன ஒரு வார்த்தையை கூட நம்பவில்லை நீ? அன்னைக்கு நடந்தது எல்லாவற்றையும் யோசிச்சு பாருங்க... இவ்வளவுக்கு பிறகும்... உன்னை விட்டுவிட்டு தனியா இருக்க எனக்கு கஷ்டமாயிருக்காதா??? திட்ட வேண்டாமே னு பார்க்கிறேன்.. போங்க போய் படுத்து தூங்குங்க!

இணைப்பை அணைத்துவிட்ட இருவரின் மனதும் அவர்களுடைய பெங்களூரு பயணத்தையும் அதற்கு அடுத்து வந்த இரண்டு நாட்களை அசைப்போட்டது!

அதை எண்ணும் போதே அன்றைய எக்சைட்டட் ஸ்டேட்டை நினைத்து மனம் துள்ளியது!

ன்று...

ஏன்? விஷாலும் திவ்யாவும் என்னை அண்ணினு கூப்பிட்டா உங்களுக்கென்ன? எவ்வளவு நல்லா கூப்பிடுறாங்க? என்ன பொறாமையா?

ஏன் எனக்கு என்ன பொறாமை?

நான் அர்ஜுன் கிட்ட பேசினா உங்களுக்கு என்ன? பொறாமை தானே? பின்னே வேற என்ன?

ஹலோ? நக்கல்லா?

யாரு? நானா?

பின்னே இல்லையா?

நான் உங்ககிட்ட கொஞ்சம் பேச...

நீ பேசாதே!!! அன்னைக்கு நைட் என்னலாம் பேசன? அதுவும் வேறு யாருக்காவது மனைவியாகி இருந்தாலும் இந்த உடம்பில் உயிர் இருந்திருக்காது...என்னை மறக்க முடியலை..இந்த பிறவியில் நீங்க தான் என் கணவர்...அது இதுன்னு.... சொன்ன?

கொஞ்சம் வெளிபடையா பேசலாமா?

பேசலாம்..' என்றான் பிரபு.

நான் சொன்னதேல்லாம் அப்படியே தான் இருக்கு!’ என்றாள் குழல்.

காரை ஒரம்கட்டி நிறுத்தினான் பிரபு...

எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் சினீயர்..ரொம்ப!!!

உங்க கம்பீரம்.... நடை உடை பாவனை.... செயல்...எல்லாமே! உங்க தமிழ் உச்சரிப்பு எல்லாமே!

............

நான் ஸ்க்கூல்ல சொன்னதுக்கும் இதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குங்க!

அப்ப ஒன்னுமே தெரியாத வயசு... அப்போ நீங்க ஒரு இன்ஸ்பிரெஸன்.... உங்களோட சீகரெட் அட்மைரர் நானு! சொல்ல போனா என்னோட முதல் க்ரஷ் நீங்க!

..............

என்னங்க...

ம்ம்ம்.........

அப்போ நீங்க எனக்கு ஒரு ஹிரோ! அதனால தான் அன்னைக்கு உங்க ப்ரேண்ட்ஸ் கேட்கும் போது "ஆமாம்.. உங்களை ரொம்ப பிடிக்கும்"ணு சொன்னேன்!

பட்.. அப்போ சொல்றதுக்கும் இப்போ சொல்றதுக்கும் நிறைய வித்யாசம் இருக்குங்க... தன் காதலை சொல்லும் முயற்சியில் நெஞ்சம் படப்படக்க ஒரு ஆழ்ந்த மன நிலைடயில் இருந்து பேசினாள் குழலீ.

இரண்டு நிமிட மௌனம் இருவரிடமும்!

குழலீ...!

இருங்க நான் பேசி முடிசிடுறென்!

இல்லை....தேவையில்லை! உன்னோட கன்ஃவேஷன்ஸ் எதுவும் தேவையில்லை!  நான் உன்கிட்ட இதேல்லாம் கேட்கலை....

நீங்க கேட்கலை... ஆனா சொல்ல வேண்டியது என்னோட கடமைங்க...

செந்தில் அத்தான் வீட்டிலேயும் சரி... அர்ஜுன் வீட்டிலேயும் சரி என்னை அவங்க மருமகளா ஆக்கனும் நு பார்த்தாங்க. பட்... அத்தான் அண்ட் அர்ஜுன் இரெண்டு பேருமே எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்..

அத்தான் என்னை விட வயசுல பெரியவர்... அவரை கல்யாணம் செய்துக்க கேட்கும் பொது எனக்கு வயசு 18. காலேஜில் முதல் வருடம் முடிசிருந்தேன். அப்போ கூட எனக்கு விருப்பம் இல்லை... அப்புறம் நடந்த கதை தான் உங்களுக்கு தெரியுமே!

என் அப்பா இறந்த போது அர்ஜுன் அப்பா வந்து அவனுக்காக என்னை பெண் கேட்டார்.. எங்க இருவருக்குமே அப்படி ஒரு எண்ணம் இதுவரை வந்ததில்லை...சின்ன வயசிலிருந்தே ஒன்னா வளந்தவங்க நாங்க.. அதனால முடியாதுனு சொல்லிட்டோம்.

ஆனா... திருமணம் செய்துக்கனும்னா இப்படி ஒரு ஆளை செய்துக்கனும்நு நினைச்சது... ஆர்யன் மாமாவை பார்த்து தான்! ஏனா... அவருக்கும் உங்களுக்கும் பெரிய வித்யாசம் நான் பார்க்கலை! ஏனோ அவரை பார்க்கும் போது நீங்க தான் நினைவுக்கு வருவீங்க...பட் அப்போ இது புரியலை எனக்கு! அவரும் ஆர்த்தியும் கல்யாணம் செய்துக்க போறாங்கனும் போது அவ்வளவு துடிச்சிருக்கேன்...என் அப்பா இருந்தா ஆர்யனை திருமணம் செய்திருக்கலாமேனு கூட நினைச்சிருக்கேன்!

ஆனா இதுயெல்லாம் எவ்வளவு முட்டாள் தனம் நு இப்போ புரியுது பிரபு!

என்னைக்கு உங்க போட்டோவ கல்யாண வரனுக்கு பார்தேனோ... அடுத்த நிமிடம் நான் சொன்ன பதில்... 'இந்த கல்யாணத்துக்கு முழு சம்மதம்'. 

அப்போ இருந்து என்னை நானே கேள்வி கேட்டு பார்த்தேன். நீங்க இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லீ ஒரு காரணம் சொன்னீங்களே... அப்போ தான் முதல் முறையா.. இப்படி இருக்க மனசு துடிச்சேன். நீங்க என்னை அவமான படுத்தினாலும் மனசு நீங்க நல்லா இருக்கனும்னு நினைச்சேன்...அப்போ தான் நாகராஜ் அங்கிள்ட்ட போய் பேசினேன்...

அன்று நடந்தவற்றை கூறினாள் குழலீ. அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தான் பிரபு!

எல்லாவற்றையும் சேர்த்து வைத்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தான் என் மனதில் பூதாகரமாய் எழுந்து நின்றது...

என்னது??? - பிரபு தான் கேட்டான்.

என் மனதில் நீங்காமல் நிலையிருப்பது நீங்க மட்டும் தான்.. ஐ லவ் யூ பிரபு! நான் உங்களை என் உயிராய் விரும்புகிறேன் பிரபு! உங்களை எந்த காரணத்திற்கும் இழக்க நான் தயாராயில்லை!

அது வரை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவன்... அடுத்த நொடி அவளை ஆக்ரோஷமாய் இழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்தான் பிரபு!

மிகவும் அருகில் கேட்ட அந்த காரின் நீண்ட ஹாரனால் தான் சுய நினைவுக்கு வந்தனர் இருவரும்... 

விலகவும் மனமில்லாமல் நெருங்கவும் முடியாமல் தவியாய் தவித்துக் கொண்டடிருந்தது இரு மனமும். முகம் சிவந்து விலகாமல் கிறங்கி கிடப்பவளை கண்னோடு கண் பார்த்தான். அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.