(Reading time: 12 - 24 minutes)

" ப்பா எப்பவுமே சொல்லுவாங்க அத்தை , நான் உங்களை மாதிரியே இருக்கேன்னு ... உண்மைதானே அத்தை ?" என்று கேட்டாள்  அவரது கைகளை பிடித்து கொண்டு வாஞ்சையுடன் .. அவளது வார்த்தையில் கொஞ்சமும் கல்மிஷம் இல்லை .. சொல்லபோனால் அருகில் கதிரோவியன் நிற்பது கூட அவளுக்கு நினைவில்லை .. தனது அப்பா என்றாவது வாய் மலர்ந்து அத்தையை பற்றி சொல்லியதை அவள் மனதில் நினைத்து வைத்திருக்கிறாள் என்பதே மற்றவர்களுக்கு அப்போதுதான் புரிந்தது ..வாசுகியின் சமாதான பேச்சோ , வரதராஜனின் பாசமோ அல்லது அப்பத்தாவின் வருடலோ ஆற்றாத காயம் இளையவளின் அன்பான பேச்சில் மறைந்தே விட்டது .. சில நொடிகளே என்றாலும் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்து வைத்தார் நாச்சியார் .. வட்ட முகம் , மாநிறம் , லேசாய் பூசினாற்போல் உடல்வாகு , நீண்ட கூந்தலை அழகாய் பின்னல் இட்டு இருந்தாள்  .. நிஜம்மாகவே சின்ன நாச்சியார் தான் ..

" என் ராசாத்தி ... ஆமா கண்ணு " என்றார் அவரும் பூரிப்புடன் .. அவர் வார்த்தையால் சொன்ன செய்திதான் கதிரோவியனின் விழிகளும் எடுத்துரைத்தது .. அதை முதல் ஆளாய் கவனித்தான் ஸ்ரீராம் .. ஏனோ ஸ்ரீராம் மனதில் ஒரு வித அச்சம் படர்ந்தது .. இருப்பினும் அமைதியாகவே நின்றிருந்தான் .. மைத்ரேயியிடமும்  கயல்விழியிடமும் பேசிவிட்டு மனநிறைவுடனே  வீடு திரும்பினார் நாச்சினார் .. அனைவரிடமும் பொதுப்படையாய் பேசிவிட்டு தாயாருடன் கிளம்பினான் கதிரோவியன் ..

" இப்போ சந்தோசம் தானே அம்மா ?" என்றான் அவன் அமர்த்தலாய் ..

" ஏன்டா உனக்கு சந்தோஷமே இல்லாத மாதிரி பேசற ? அவங்க நம்ம சொந்தம் டா .. நீ என் புள்ள டா " என்றார் நாச்சியார் உரிமையை நிலைநாட்டும் விதத்தில் ..

" நான் உங்களுக்கு மட்டும் புள்ள இல்லம்மா .. என் அப்பாவுக்கும் நான் தானே மகன் " என்றான் கதிரோவியன் அமர்த்தலாய் ..

" எங்க பெரியவங்க சண்டையில் , நீங்க சின்னவங்க பாதிக்கபடுறது எனக்கு புடிக்கல கதிர் "

" இவ்வளவு நாளாய் அப்படிதானே இருந்தோம் ?"

" இனி இருக்க வேணாம்னு சொல்றேன் "

" அது கஷ்டம் .. என் அப்பா மனசு குளிராமல் என் மனசு இளகாது "

" இலகும் இலகும் .. அதெல்லாம் சொல்லறவங்க சொன்னா இளகிடும் " என்றார் நாச்சியார் மனதில் எதையோ  கணக்கு போட்டபடி  .. அவருக்கு பதில் சொல்லாமல் காரை எடுத்தான் கதிரோவியன் ..

வீட்டில் ஏதோ விசேஷம் போலும் .. எங்கும் உறவுகள் நிறைந்திருக்க, வேஷ்டி சட்டையில் அமர்களமாய் நின்றான் சகிதீபன் .. முறுக்கு மீசையும் , மிடுக்கு பார்வையும் அவனை கதாநாயகனை போல கெத்தாய்  எடுத்து காட்டியது ..

" தீப்ஸ் .. எங்கடா உன் பொண்டாட்டி ?" என்று உற்சாகமாய் கேட்டவர் நம்ம அருண் தான் .. மனைவியை பற்றி அவர் கேட்டதுமே , இதழோரம் அழகாய் ஒரு புன்னகையை படர விட்டான் அவன் ..

" ரிலாக்ஸ் அருண் .. சகிதீபனின் பொண்டாட்டின்னா சும்மாவா ? ரெடி ஆகா வேண்டாமா ? " என்று மனைவிக்கு ஆதரவாய் பேசியவன் , தங்களது அறைக்கு சென்றான் ..

" யாரு ?" என்று கேட்ட அவனது மனைவி அப்போதுதான் மல்லிகை பூ சரத்தை கூந்தலில் வைக்க போராடி கொண்டு இருந்தான் .. அவனை பார்த்ததுமே முகத்தை கடுமையாய் வைத்து கொண்டாள்  அவள் .. அவனோ கொஞ்சமும் அசராமல் அவன் கைகளில் இருந்த மல்லிகையை வாங்கினான் ..

" என்ன ?" என்று அவள் புருவம் உயர்த்தவும் தலையை இடத்தும் வலதுமாய் அசைத்து பெரிதாய் சிரித்து வைத்தான்  அவன் .. சட்டென தலை தாழ்த்தி அவள் பின்வாங்க , புன்னகையுடன் முன்னேறினான்  சகிதீபன் .. அவனை பார்த்துக்கொண்டே சுவற்றில் சாய்ந்து நின்றாள்  அவள் ..

" ம்ம்ம்கும்ம்ம் " என்று குரலில் சரிபடுத்தி கொண்டவன்

" நெற்றிக்கு அழகா குங்குமம் வெச்சு இருக்க , காதுக்கு அழகா ஜிமிக்கி போட்டு இருக்க , உதட்டுக்கு கூட லேசாய்  லிப்ஸ்டிக் போட்டு இருக்க , ஆனா உன் கண்ணுல ஒரு விஷயம் இல்லையே " என்றான் .. ஏற்கனவே அவன்மீது ஏககடுப்பில் இருந்தவள் இப்போதும் அசுவாரஸ்யமாய்

" எனக்கு மை போட பிடிக்காது " என்றாள் ..

" ஏற்கனவே முட்டை கண்ணு .. நீ பாட்டுக்கு மை கிய்  போட்டு வெச்சிடாதெ  தாயே " என்று சிரித்தவன் ..

" நான் அதையா காணோம்னு சொன்னேன் ?" என்று இழுத்தான் ..

" அப்போ வேறென்ன ?"

" இப்படி தரையை  பார்த்து கேட்டா கண்டிப்பா சொல்ல மாட்டேன் "

" சொல்லலைன்னா போங்க "

" சரி சொல்லவா ?"

"ம்ம்ம்ம்ம் "

" எப்பவும் என்னை முறைச்சுகிட்டே காதலாய் நீ பார்க்கும்போது , உன் கண்ணு ரகசியமா சிரிக்குமே .. அதை காணோம் " என்றான் கிறக்கமாய் ..

" எனக்கு புரியல .. "

" என்னை நிமிர்ந்து பாரு புரியும் "

" மாட்டேன் " என்று மறுத்தாள் ..

" அட சும்மா பாரேன் கிறுக்கி " என்று அவன் சொல்லவும் , லேசாய் சிரித்துக்கொண்டே தலைநிமிர்ந்து அவன் கண்களுக்குள் அவள் ஊடுருவ அவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல இருக்க , அதன் தாக்கத்திலேயே தூக்கத்தில் இருந்து விடுபட்டான் சகிதீபன் ..

" ச்ச .. எல்லாம் கனவா ?" என்றவனுக்கு நிஜம்மாகவே அது கனவு தானா என்று ஏக்கமாக இருந்தது .. அதே கலக்கத்தில் தான்யாவை போனில் அழைத்தான் .. பாதி தூக்கத்துடன் போனை எடுத்தாள்  அவள் ..

" ஹெலோ"

" ஹெலோ மைதாமாவு "

" ம்ம்ம் ..என்ன ஆச்சு ? ஏன்டா  இப்போ பேசற ?"

" மைதாமாவு என் பொண்டாட்டி கண்ணு செம்ம அழகு டீ " என்றான் ..

சத்தியமாய் அவனை புரியவே இல்லை அவளுக்கு .. என்னதான் உளறுகிறான் இவன் ? என்று அவள் விழிக்க

" என்னடா " என்றாள்  அழுது விடுபவள் போல ..

அவனோ சிரித்து கொண்டு " நம்ம சபதத்தில் நான்தான் ஜெயிச்சேன் தனு .. நான் என் வைப் ஐ பார்த்துட்டேன் " என்றான் ..

" என்னடா கனவா ? " என்றாள்  தான்யா எரிச்சலாய் ..

" ம்ம்ம் எஸ் "

" மூடிட்டு போனை வை " என்று கத்தியவள் கோபமாய் போனை வைத்தாள் ..

" அவன் என் பொண்டாட்டி " என்று உரிமை பேசியது அவளுக்கு எரிச்சலை தந்தது .. கையில் கிடைத்த பொம்மையை சுவர் மீது எரிந்து

" டாக் " என்று அவனை திட்டுவிட்டு உறக்கம் தொலைத்தவளாய் படுக்கையில் விழுந்தாள்  அவள் .. தீபனோ , மீண்டும் கனவில் அவள் வருவாளா ? என்ற ஏக்கத்துடன் கண் அயர்ந்தான்..

தே தினம் , விஷ்வாநிகா அழைத்திருந்த காபி ஷாப்பிற்கு வந்தான் கெளதம் .. அவனுக்கு முன்பாகவே அங்கு காத்திருந்தாள்  அவள் .. மிகுந்த எதிர்பார்ப்புடன் சிரித்தவனை பார்க்க அவளுக்கு கஷ்டமாக இருந்தது ..

" ஹை விஷ்வா "

" ஹாய் !"

" ரொம்ப நேரம் ஆச்சா ?"

" இல்லை .. பட் எனக்கு கொஞ்சம் சீக்கிரமா பேசணும் " என்றாள்  பதட்டமாக..

" ஆர் யு ஓகே ? காபி ஆர்டர் பண்ணவா ?"

" இல்ல வேணாம் "

" சரி சொல்லு என்ன விஷயம் "

விட்டால் போதும் என்பது போல மனதில் இருப்பதை கொட்டினாள்  விஷ்வாநிகா .. அவளது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் முகத்தில் ஒவ்வொரு  பிரதிபலிப்பு .. அதிர்ச்சி , துயரம் , கோபம் , ஏமாற்றம் ..அனைத்தையும் உணர்ந்தான் அவன் . அனைத்தையும் பேசி முடித்து அவனது முகத்தை பார்த்தாள்  அவள் ..

" சோ ?" என்றான் கெளதம்

" என் மனசுல இன்னும் அந்த குரல் தான் இருக்கு கெளதம் "

" யூ மீன் ?"

" ஐ மீன் , ஐ லவ் ஒன்லி ஹிம் " என்றாள்  விஷ்வாநிகா

" இப்போ நீங்க இந்த இடத்தை விட்டு போறிங்களா ?" என்றான் கெளதம் காட்டமாய்

" ஐ எம் சாரி "

" ஜஸ்ட் கெட் லாஸ்ட் " என்று அடிக்குரலில் சீறினான் அவன் .. அவனை பார்த்துக்கொண்டே அங்கிருந்த அவள் நகரவும் , இரு கைகளையும் கழுத்தின் பின் அழுத்தி மேஜை மீது முகம் புதைத்தான் கெளதம்.. அடுத்த ஐந்தாவது நிமிடம் இன்னொரு புயல் அவன்முன் அமர்ந்தது ..

" ஜீரோ !" என்றான் கெளதம் கண்ணீரும் ஆதங்கமுமாய் .. 

" என்னடா " என்று கேட்கவேண்டிய இதழ்கள் இறுகி இருக்க , அவன் இமைக்கும் நொடியில் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து  இருந்தாள்  அவன் ஜீரோ என்று அழைக்கும் " சதீரஞ்ஜினி" ..!

குழலின் அடுத்த கீதத்தில் இணைவோம்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:883}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.