(Reading time: 77 - 154 minutes)

திக்கோடு ரேயா சேர்ந்து இருப்பதற்கு அவர் எரிச்சல் படுவது போல் தோன்றவில்லை எனினும்…..புனிதா சொல்லியிருந்த வகை ஜெயாவாய் இவளிடமோ ஏன் ஆதிக்கிடமோ கூட அவர்  அன்யோன்யம் பாராட்டி பழகவில்லை.

எனக்குத்தான் அம்மா இல்ல….நான் வரவும் ஆதிக்கிற்குமா அம்மா பாசம் இல்லாம போகனும்னு அவளுக்குள் ஒரு மனக் குடச்சல்.

இப்பொழுது வெகு நிம்மதியாய் இருந்தது.

ன்று விருந்து படு கல கல என கழிந்தது.

உணவிற்குப் பின் பெரியவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமாய் குழுமிக் கொள்ள இளையவர்கள் மறு கூட்டமாய்…..ஆனால் அனைவரையும் வயது வித்யாசம் பாராமல் ஓடி ஆடி வம்பிழுத்து கலாய்த்து விளையாடியது அதியின் பெண்கள் 17 மற்றும் 18 வயது தயாவும் இனியாவும் தான்.

பிறந்ததிலிருந்து வசிகரன் குடும்பத்தாரை தவிர வேறு உறவுகள் யாரும் இன்றி வளர்ந்திருந்தவர்களுக்கு இது திருவிழா.

அத்தான் அக்கா பெரியம்மா பெரியப்பா மாமா அத்தை என அத்தனை பேரையும் முறை சொல்லி கூப்பிட்டுக் கொண்டு அங்கும் இங்குமாய் பறந்து கொண்டிருந்தார்கள் இருவரும்.

அப்படியே நடந்த அனைத்தையும் ஃபோட்டாக்களாகவும் விடியோவாகவும் பதிந்து கொண்டே இருந்தனர். அதை விழா முடியவும் மறக்காமல் தங்கள் உடன் வளர்ந்த சகோதரர்களான வசிகரனின் மகன்கள் டேவிஸ்க்கும் ஜெயனுக்கும் அனுப்பி வைத்தனர்.

2015 பெர்கென், நார்வே

யா, இனியா அனுப்பியிருந்த அனைத்தையும் பார்த்து முடித்ததும் மூத்தவன் டேவிஸ் தன் தந்தையிடம் போய் நின்றான். மலர்விழியும் அங்குதான் இருந்தாள்.

 தயாவும் இனியாவும் ஜெயாவின் இருபுறமும் நின்று  அணைத்த படி  எடுத்திருந்த புகைபடத்தை தன் மொபைலில் வசிகரனிடம் காண்பித்தான்.

“இவங்க தான் அத்தையாப்பா…..? பார்க்க கொஞ்சம் நம்ம ஜெயன் சாயல் இருக்குது….” அந்த படத்தைப் பார்த்த வசிகரன் பதில் எதுவும் சொல்லவில்லை.

“இது டேவிட் மாமா அப்டிதான…..?”

“……………………..”

“இது கண்டிப்பா ஆதிக் அத்தானாத்தான் இருக்கும்…..உங்க சாயல்”

வசீகரன் மகனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பார்வையை தவிர்த்தான்.

“இப்டி எல்லோரும் அங்க சேர்ந்துகிட்டாங்க……நாமதான் இப்டி தனியா இங்க இருக்கோம்.”

இதற்குள் அந்த சங்கீத கேஸ் விவகாரம் இங்கு வசீகரன் வீடு வரை விளக்கமாகவே ரீச் ஆகி இருந்தது.

“அதி அங்கிளே அங்க போய்ட்டாங்க…..ஒன்னுமே பரச்சனை ஆகலை……நாம ஏன்பா இப்டி இங்க இருக்கோம்……ஆதிக் அத்தான் எல்லாத்தையும் பார்த்துப்பாங்கன்னு தயா சொல்றாப்பா…..அதி அங்கிள் மாதிரி நீங்களும் ஆன்டிசிபேட்டரி பெய்ல் எடுத்துகிட்டா போதுமேப்பா…..ஏன்பா வர மாட்டேன்றீங்க…?”

மகனை ஒரு பார்வை பார்த்தான் வசிகரன்.

“அங்க நடந்த இந்த பார்டி ஏற்பாடு பண்ணது யாருடா? உன் ஆதிக் அத்தான் தான? உன்னையும் என்னையும் கூப்டானா அவன்? அவன விடு என் அக்கா அவ தேடுனாளா நம்மள? அதி சார்தான் அங்க இருக்கார்ல நம்ம ஃபோன் நம்பர் வாங்கி நம்மட்ட பேச அவங்களுக்கு எவ்ளவு நேரம்டா ஆகும்?....இதுல நமக்கு தேவையானதெல்லாம் ஆதிக் அத்தான் பார்த்துப்பானாம்….போடா….உனக்கு நான்தான் சொந்தம்…எனக்கு நீ தான் சொந்தம்….நமக்கு நம்ம நாலு பேர விட்டா ஒருத்தரும் இல்லை….”

கடகடவென எழுந்து போய்விட்டான் வசிகரன்.

மகன் அம்மாவைப் பார்த்தான். மலர்விழி  மகனை ஆறுதலாக ஒரு பார்வை பார்த்தாள்.

“ அம்மா நீங்களாவது அப்பாட்ட பேசுங்கம்மா….இல்லனா என்னதான் ரியல் இஷ்யூன்னு சொல்லுங்க….எப்டி பார்த்தாலும் லீகலி நாங்க அங்க போறதுக்கு எந்த ப்ரச்சனையும் இல்ல….நானும் ஜெயனும் போய் எல்லோரையும் பார்த்துட்டு வரட்டுமாமா?...இவ்ளவு நாளும் யாரும் இருக்றதே தெரியாது….ஓகே…இப்ப கஷ்டமா தோணுது…”

சொல்லிவிட்டுப் போய்விட்டான் அவன்.

லர்விழி தன் கணவனைத் தேடிச் சென்றாள்.  கடல் புறத்தைப் பார்த்திருந்த அந்த பால்கனியில் நின்றவன் இவளைக் கண்டதும் கண்களை துடைத்துக் கொண்டான்.

மெல்லப் போய் அவன் தோளைப் பற்றி அதில் சாய்ந்தாள் மலர்விழி. அவள் மீது ஆறுதலாக வளைந்து சென்றது கணவன் கரம்.

“வசிப்பா…”

“ம்…”

“அதி சாரையோ அவர் ஃபேமிலியவோ அங்க யாரும் கூப்டலன்னு உங்களுக்கும் தெரியும்…..அவர் போனாரு எல்லோரும் ஏத்துகிட்டாங்க….அவ்ளவுதான்…..வந்தா ஜெயிலுக்கு போற அளவுக்கு சூல்நில இருக்குன்னு தெரிஞ்ச பிறகும் எப்டிப்பா வா ன்னு கூப்டுவாங்க….நம்மள கான்டாக்ட் செய்தாலே நமக்கு பரச்ச்னையாகிடுமோன்னு பயந்து யாரும் கான்டாக்ட் செய்யாம இருக்கலாம்…இல்லனா ஒரு வேள அதி சாரே நம்ம நம்பரை யாருக்கும் கொடுக்காம கூட இருக்கலாம்…..”

மனைவியின் முகத்தை ஊடுருவிப் பார்த்தான் அவன்.

அவளது ரத்த உறவுகளுக்காக ஏங்குகிறாளோ? வலி இருந்தது அவன் பார்வையில். இயலாமையும்.

“அவங்க கூப்டலன்னு போகாம இருக்ற ஆள் நீங்க கிடையாதுப்பா….”

இப்பொழுது அவள் தோளில் சாய்ந்தது அவன்.

“அதி சார் அப்பாட்ட என்னை நீங்க சொல்ல சொன்னது மத்தவங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்கும்….அவங்கள எப்டி ஃபேஸ் செய்யனு பார்க்றீங்களாப்பா?”

“அது…..அப்டி நீ சொல்லலைனா அதி அப்பா போலீஸ்ட்ட போனார்னா….நான் இருபது முப்பது வருஷம் ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்கும்னு அந்த சூர்யா அடிச்சு சொன்னான் மைய்யூ…..உன்னைப் பார்க்காம அத்தன வருஷம் நான் எப்டி…..ஆனா எப்டியும் என் பக்கத்த தான நான் யோசிச்சுட்டேன்….அன்னைக்கு அப்டி சொல்லிட்டு திரும்பி வர்றப்ப நீ எப்டி அழுத…..இன்னைக்கு வரை அதுக்காக என்னால என்னை மன்னிக்க முடியலை…..சாரிமா…”

“இது இதுக்காக 2 கோடியே இரநூத்தி 47 வது தடவை கேட்கிற சாரி….எனக்கு உங்க நிலம புரியாம இல்ல வசிப்பா…அதோட முடிஞ்சு போன விஷயம்….அங்க யாரும் எதுவும் கேட்டாலும் நான் பேசிக்கிறேன்….அதுக்குன்னு பார்க்காதீங்க…உங்களுக்கு உங்க அக்காவ எவ்ளவு தேடுதுன்னு எனக்கு தெரியும்….”

“அதோட அத்தான்ட்ட மன்னிப்பு கேட்காம நான் செத்தா…” அதற்கு மேல் பேசவிடாமல் அவன் வாயை மூடினால் மலர்விழி.

“அப்ப விசாக்கு பார்க்க சொல்வமாபா?”

“இல்ல வேண்டாம்….”

“……………….”

“ப்ளீஸ் என் கூடவே இரேன்….”

சில நிமிடங்கள் கழிந்தது மௌனமாக.

“வசிப்பா…..இந்த கேஸ் விஷயத்த இன்வஃஸ்டிகேட் செய்ததுல அதி சார் போட்டாவா எனக்கு மாத்தி அனுப்னது நீங்கதான்னு கண்டு பிடிச்சு அங்க எல்லார்ட்டயும் சொல்லிடாங்களாப்பா….. நாம அங்க போனா எனக்கு அந்த விஷயம் யார் மூலமாவது தெரிய வந்துடும்னு பயப்படுறீங்களாப்பா?”

மலர்விழி கேட்க தூக்கி வாரிப் போட அவளைப் பார்த்தான் வசிகரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.