(Reading time: 77 - 154 minutes)

மை……மைய்….மைய்யூ”

அவன் முழுதுமாக நடுங்குவதைப் பார்க்க முடிந்தது அவளால்.

“இ..இது….”

அவனை ஆறுதலாக கைப்பற்றினாள் மலர்விழி.

“எனக்கு தெரியும்…..நாம இங்க நார்வே வர்ற வரைக்கும் தெரியாது தான்….ஆனா வருஷம் போக போக புரிஞ்சிட்டு….”

உயர் ஆழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் மிரண்டு போய் பார்த்தான் வசிகரன்.

“ நீங்க கறுப்பா இருக்றீங்கன்னு இருக்ற காம்ப்ளக்ஸ்…. என் ப்ரபோசல் வர்றதுக்கு முன்னால மூனு பொண்ணு வீட்ல இருந்து உங்கள வேண்டாம்னு சொல்லி இருந்தாங்கன்னு சொன்னீங்க…. அது மாதிரி நானும் சொல்லிடுவேன்னு தோணிருக்கும் உங்களுக்கு…..”

இவளை இறுக்கி அணைத்தான் வசிகரன்…..”ஐயோ உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மைய்யூ…..நீ என் உயிர் மைய்யூ….”

அவன் அணைப்பை விலக்கவில்லை மலர்விழி. மாறாக அவன்மீது தனக்கு வெறுப்பு இல்லை என காண்பிக்கும் படியாக அவனை தானும் அணைத்துக் கொண்டாள்.

“தெரியும் வசிப்பா…..என்ன எங்காவது பார்த்திருப்பீங்க…..உங்களுக்கு பிடிச்சிருக்கும்…..எங்க மத்த பொண்ணுவீடு மாதிரி நானும் உங்கள வேண்டாம்னு சொல்லிடுவனோன்னு தோணிருக்கும்…. அதான் போட்டோவ மாத்தி அனுப்பி என்ன சம்மதிக்க வைச்சுட்டா….கல்யாணத்தன்னைக்கு கல்யாணத்த நிறுத்த  பொண்ணுங்களுக்கெல்லாம் தைரியம் இருக்காது…. கல்யாணம்னு ஆகிட்டா பொண்ணுங்கிறவ என்ன ஆனாலும் நீ தான் ஹஸ்பண்ட்னு ஒத்துப் போய்ருவானு நினச்சு ப்ளான் செய்துருப்பீங்க….நம்ம ஊரு பொண்ணுங்கல்லாம் கல்யாணத்துக்கு பிறகு வேலைக்கு கூட போக மாட்டாங்க…..கட்டுனவனே உலகம்னு இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை உங்களுக்கு”

“மைய்யூ ஐ லவ் யூ மைய்யூ…..நீ இல்லாம என்னால ஒரு நொடி கூட முடியாது மைய்யூ….”

“நான் தான் நீங்க நினச்ச பொண்ணு இலக்கணத்துல இல்லாம இருந்து உங்களை கொஞ்சம் படுத்திட்டேன்…..”

“இல்ல மைய்யூ……சாரிடாமா…..கல்யாணம் செய்ற வரைக்கும் நான் நீ சொன்ன மாதிரிதான் யோசிச்சேன்……என் சந்தோஷம் என் விருப்பம்தான் முக்கியமா பட்டுது….உன் பக்கத்த நான் நினச்சு கூட பார்க்கல…..ஆனா கல்யாணத்துக்கப்றம்….ஒவ்வொரு நொடியும் உன் உருவத்தை தாண்டி உன் மனச பார்க்க ஆரம்பிச்சேன்….கல்யாணத்துக்கு முன்ன நான் உன்ன விரும்புனத என்னால விருப்பம்னே இப்ப ஒத்துக்க முடியல….கல்யாணத்துக்கு பிறகு நான் உன்ன நான் விரும்ப ஆரம்பிச்சதுதான் காதல்…..அதுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சாமா நான் என் தப்பை உணர்ந்துட்டேன்….ஆனா இந்த போட்டோ மாத்தி அனுப்னது தப்புன்னு நம்ம கல்யாணத்தன்னைக்கு நீ துடிச்ச பார்த்தியா அப்பவே உணர்ந்துட்டேன்…. ஆனா அதை உன்ட்ட சொல்ல எனக்கு இன்னைக்கு வரைக்கும் தைரியம் இல்லை….விஷயம் தெரிஞ்சா நீ இன்னும் எவ்ளவா துடிச்சுப் போவன்னு பயம்…ஆனா ஒன்னை மட்டும் புரிஞ்சுக்கோ மைய்யூ நான் உனாக்காக வாழ ஆரம்பிச்சு எவ்ளவோ காலமாச்சு…”

“தெரியும் வசிப்பா…..இந்த போட்டோ மாத்தினது நீங்கதான்னு எனக்கு புரியுறதுக்கு முன்னமே நீங்க என் மேல உயிரையே வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரிஞ்சிட்டு, அதானல இந்த விஷயம் புரிஞ்சப்ப கஷ்டமா இருந்தாலும் கூட, உங்களை அதுக்காக ஹர்ட் செய்யனும்னு கூட எனக்கு தோணல….உங்கட்ட இதை நேருக்கு நேரா கேட்டுக்க கூட தோணலை….ஏன்னா அப்றம் ஒவ்வொரு தடவையும் நான் உங்களபத்தி என்ன நினைக்கனோன்னு ஒரு இன்செக்யூரிட்டி, ஒரு அவமான உணர்வோட என்ட்ட பழகுவீங்கன்னு தோணிச்சு….முடிஞ்சு போனதை கிளறி ஏன் உங்க நிம்மதிய நம்ம சந்தோஷத்தை கெடுத்துக்கனும்னு கேட்காமலே இருந்துட்டேன்….”

“ மைய்யூ….என்ன மன்னிச்சிட்டியா மைய்யூ” இன்னும் இறுக்கமாய் அணைத்தான் அவளை.

“இன்னைக்கு இதை பேசி தீர்த்துட்டா தான் உங்களுக்குள்ள இருக்ற பயம் போகும்னு தோணிட்டு….அதான் பேசிட்டேன்… இப்ப நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான்… இத காரணமா வாச்சு இந்தியா போகாம இருக்கனும்னு நினைக்காதீங்க….”

இந்தியா கிளம்புவதற்கான ஆயத்தங்களை அப்பொழுதே ஆரம்பித்தான் வசிகரன்.

சென்னையில் ரேயாவின் அப்பா வீட்டில் விருந்து முடிந்து ஒவ்வொருவராக விடை பெற்றுச் செல்ல, ரேயாவுடன் அவளது காரில் கிளம்பினான் ஆதிக். வீட்டு காம்பவ்ண்ட் சுவரை தாண்டவும் அவன் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள் ரேயா. திருச்சி வரைக்கும் நைட் ரைட் என்பது ப்ளான்.

“என்னாச்சு ரேயு…?”

“ஒன்னுமில்லையே ஜஸ்ட் என்ஜாயிங் யுவர் நியர்னஸ்…..”

“ம்…”

“லவ் யூ ஆதிப்பா..”

தன் இடக்கையால் தன் தோளில் சாய்ந்திருந்த அவள் தலையை சுற்றிப் பிடித்தான்.

“மீ டூ டா குட்டிப் பொண்ணு”

‘உங்களுக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப நல்லா இருக்குது….”

“தேங்க்ஸ்டா…”

“…………………..”

“ரேயுமா என்னாச்சுடா, என்ட்ட சொல்ல மாட்டீங்களா?”

“ப்ச்…”

“ஹேய் குட்டிப் பொண்ணு நமக்கு கல்யாணமாகி கரெக்ட்டா 9 டேஸ்தான் ஆகுது…அதுக்குள்ள என்ன இந்த சலிப்பு…?”

“…………………………..”

இப்பொழுது அவன் தோளோடு சேர்த்துப் பிணைந்து கொண்டது அவள் கை. இன்னுமாய் சென்று ஒண்டினாள் தன்னவனிடம்.

“ஏன் ரேயு சொல்ல மாட்டேன்ற…இவன்ட்ட சொல்லி என்ன ப்ரயோஜனம்னு தோணிட்டா?”

“சே…” அவசரமாக எழுந்து உட்கார்ந்தாள்.

“அதுக்கில்ல ஆதிக்……முன்னால உங்கட்ட பேச ரொம்ப ஆசையா இருக்கும்……அப்ப முடியலை…இப்பவும் உங்கள பார்த்தவுடனே கல்யாணம்…..அடுத்தும் உங்கட்ட உட்கார்ந்து பேச கூட உங்களுக்கு லீவ் இல்ல….இதெல்லாம் இப்ப உங்கட்ட சொன்னா உங்க சிச்சுவேஷன் புரியாம பேசுற மாதிரி இருக்கும்….”

“ஹேய் கண்டிப்பா….”

அவன் எதோ தொடங்கவும் அவனது மொபைல் சிணுங்கவும் சரியாக இருந்தது.

“ஆதிக் ஒரு முக்கியமான விஷயம்……நாளைக்கு மார்னிங் நீங்க வந்தனா மேம இங்க மீட் பண்ணனுமாம்…” சரித்ரன் சொல்ல காரை யு டர்ன் எடுத்து வந்த வழியே திருப்பினான் ஆதிக்.

“இன்னைக்கு ஸ்டே இங்க எங்க வீட்டுக்கு வாங்களேன்…”

“இல்ல சரன் அண்ணா….இங்க உள்ள எங்க வீட்டுக்கே போய்டுறோம்…..அது கொஞ்சம் இங்க இருந்து பக்கம்….”

“வீட்டு சாவிக்கு என்ன செய்வீங்க?”

“அங்க கெஸ்ட் ஹவுஸில் மெயின்டனன்ஸ்சுக்குன்னு ஒரு ஃபேமிலி ஸ்டே பண்ணிருக்காங்க…..”

“தென் ஓகே…நாளைக்கு பார்ப்போம்…” சரித்ரன் பேசி முடிக்கவும் மொபைலை வைத்த ஆதிக் அருகிலிருந்தவளை பார்த்தான்.

“எவ்ளவு சீக்ரம் முடியுதோ அவ்ளவு சீக்கிரம் லீவ் எடுக்கேன் சரியா ரேயுமா?”

ஆனால் அவளுக்கோ இதற்குள் மனமெல்லாம் வந்தனாவின் அழைப்பாய்…. எதற்காய் இருக்கும் என திரும்பி இருந்தது.

அடுத்து அவர்கள் சென்னையிலிருந்த தங்கள் வீட்டிற்கு போய் மெயின்டனஸிற்கு  இருந்தவர்களிடமிருந்து சாவியை வாங்கி வீட்டை திறந்து உள்ளே நுழைந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.