(Reading time: 12 - 23 minutes)

தியும் மதியும் மட்டுமே அந்த செக்ஷனில் இருக்க, மதி பார்க்க ஆரம்பித்தாள். அவள் செலக்ட் செய்யும் புடவைகளை பார்த்தவன், அவள் சிம்பிளாக விரும்புவதை பார்த்து அதிக டிசைன்களோ, ஜரிகையோ இல்லாமல் இலைப் பச்சையில் அழகான செல்ப் பார்டரும், நுணுக்கமான வேலைப் பாடும் கொண்ட சேலையை அவள் தோளில் வைத்துப் பார்த்து அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று கேட்டான். தோளோடு அணைத்தாற் போல் இருந்த ஆதியைக் கண்ணாடியில் பார்த்த மதி, முகம் சிவக்க தலையாட்டினாள்.

அதையும் சேர்த்து எடுத்து வைத்தவன், பிறகு அவனும் கோட் செலக்ட் செய்ய சென்றான். ஆதியைக் காணாது தேடி வந்த சிறியவர்கள் அவர்கள் இருவரையும் பார்த்து விட்டு திரும்பி சென்று விட்டனர்.

கோட் எடுத்து முடித்தவுடன் பெரியவர்களோடு வந்து அமர்ந்து கொண்டனர். அப்போது பெரியவர்களும் அவரவர்க்கு எடுத்து முடிக்க மணி ஒன்றரை ஆகியது.

எல்லோரும் சாப்பிட சரவண பவன் சென்றனர். அங்கே கூட்டமாக இருந்ததால் இடம் கிடைத்தவுடன் பெரியவர்கள் எல்லோரும் அமர, சிறியவர்கள் சற்று நேரம் காத்திருந்தனர். பிறகு இவர்களுக்கும் இடம் கிடைக்க, எல்லோரிடமும் என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் செய்த ஆதி, மதியிடம் ஒன்றும் கேட்காமல் விட்டான்.

இதை மற்றவர்கள் கவனிக்கவில்லை என்றாலும், சூர்யா கவனித்தான். அவனுக்கு அண்ணன் மேல் கோபமாக வந்தது. இதைப் இப்போது பெரிது படுத்தினால் அதுதான் கஷ்டமாக இருக்கும் என்று எண்ணியபடி பேசாமல் இருந்தான்.

ஆர்டர் செய்தவைகள் வர, ஒரு புலவ் மட்டும் எக்ஸ்ட்ரா இருந்தது. ஆதி புல் மீல்ஸ் ஆர்டர் செய்திருந்ததால் அவனுக்கு முதலில் வந்த சப்பாத்தியை மதியின் தட்டில் வைத்து சாப்பிடு என்றான். மதியும் சாப்பிட ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்த சூர்யா வியந்து விழி விரித்தான். மற்றவர்களும் இதே போல் ஷேர் செய்தாலும் ஆதியிடம் இதை யாரும் எதிர் பார்க்கவில்லை. சப்பாத்தி மட்டுமில்லாமல், ஆதி தன்னுடைய சாப்பாடு முழுக்கவே அவளோடு ஷேர் செய்தான். அவளுக்கு ஆர்டர் செய்த புலவையும் ஷேர் எடுத்துக் கொண்டான்.

சாப்பிட்டு கை கழுவி வரும்போது சூர்யா “ஆதி இது நீதானா? நீ யாரோடும் சாப்பாடு ஷேர் செய்ய மாட்டாயே? எப்படி அண்ணியோடு மட்டும் ஷேர் செய்கிறாய்?” என்று வினவினான்.

“சிறு வயதியிலேயே ஹோட்டல் செல்லும் போது நாங்கள் இருவரும் மட்டும் ஷேர் செய்து சாப்பிடுவோம். மதியைத் தவிர வேறு யார் என் தட்டில் கை வைத்தாலும் பிடிக்காது. நானும் மதியும் புல் மீல்ஸ் இரண்டு வாங்கினால் நிறைய வேஸ்டாகி விடும் என்று பெரியவர்கள் எங்கள் இருவருக்கும் ஒரு சாப்பாடு வாங்கி ஷேர் செய்ய பழக்கி விட்டனர். இரு குடும்பங்களின் பிரிவிற்குப் பிறகு நான் யாரோடும் ஷேர் செய்வதில்லை. 15 வருடங்கள் கழித்து இன்றுதான் மீண்டும் சாப்பிட்டோம்.” என்று கூற,

“அப்படி என்ன பிரச்சினை அண்ணா நம் இரு குடும்பங்களுக்குமிடையில்? சொல்லப் போனால் அம்மா, அப்பா, அத்தை. மாமா நம்மளைதான் பார்க்காமல் தடுத்திருக்கிறார்களே தவிர, அவர்கள் நால்வரும் தொடர்பில்தான் இருந்திருக்கிறார்கள். எனக்கு தலை சுற்றுகிறது”

“எனக்குத் தெரிந்த வரை இது எல்லாம் நம் பத்மா அத்தையின் வேலையாகத் தெரிகிறது. என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இதைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்றால் அம்மா மீனாக்ஷி அத்தையிடம் கேட்க வேண்டும். உங்கள் திருமணம் முடிந்த பிறகு பேசலாம் என்று இருக்கிறேன்.” என்றான் ஆதி.

சரி. அதற்கும் அண்ணிக்கும் என்ன சம்பந்தம்? இப்போது உன்னைப் பார்த்தால் அண்ணியைப் பிடிக்காமல் மணந்தது போல் தெரியவில்லை. உன்னைப் பற்றி உன்னை விட நம் அத்தைக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

“உன் அண்ணி என்றைக்கு என்னை அவளின் அத்தானாக பார்ககிறாளோ அன்று அவளிடம் எல்லாம் சொல்லி விடுவேன். இத்தனை நாள் நான் அவள் முழு சம்மதமில்லாமல், மாமாவிற்காக என்னை மணந்தாள் என்று எண்ணியிருந்தேன். அன்றைக்கு அத்தை சொன்னார்களே என்னைத் தவிர மதி யாரையும் மணந்திருக்க மாட்டாள் என்று அதுதான் இப்போது எனக்கு நம்பிக்கையைத் தந்திருக்கிறது. அதனால்தான் இப்போது அவளிடம் என்னுடைய உணர்வுகளை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறேன்.”

“ஆனால் ஆதி உன்னை சரியான சாமியார் என்று நினைத்தேன். நீ ரொமான்ஸில் கமலை மிஞ்சி விடுவாய் போல”

அவன் மண்டையில் தட்டிய ஆதி “நான் என்றைக்கு என்னைச் சாமியார் என்று சொன்னேன். நீயாக நினைத்துக் கொண்டால் நானா பொறுப்பு” என்று கூறியவன், “உனக்கு இன்னொரு ஸ்கூப் நியூஸ், உன் அண்ணியும் என்னைத் தவிர வேறு யாரையும் அவள் தட்டில் கைவைக்க விட மாட்டாள். வேண்டுமென்றால் உன் ஆளிடம் விசாரி என்றான். வா இப்போது போகலாம்” என்று அழைத்துச் சென்றான்.

அவன் கூறியது போல் வாணியிடம் சூர்யா விசாரிக்க, வாணியோ “ஐயோ .. அவள் தட்டில் டேஸ்ட் பார்க்கக் கூட அவள்தான் எடுத்து வைப்பாள். நாம் எடுத்தோமானால் சாப்பிடாமல் எழுந்து சென்று விடுவாள். இன்றைக்கு நடந்ததைப் பார்த்து நானே அசந்து போய் அமர்ந்திருக்கிறேன்” என்றாள்.

பிறகு மீண்டும் கடைக்குச் சென்று, நெருங்கிய உறவினர்களுக்கு புடவை, வேஷ்டி எடுத்து விட்டு, அவரவர்கள் தங்கள் வீட்டு மணப்பெண்களுக்கு தேவையான புடவைகளை எடுத்தனர். இதில் ஒருவர் மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்க, ஆதிதான் மதியை அழைத்து அவளுக்கு அவன் தனியாக சேலைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னான்.

மேலும் “மதி, என்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் ஒரு 8 பேர் திருமணத்திற்கு வருவார்கள். அவர்கள் நம் திருமணத்தின் போதே வருவாதகச் சொன்னவர்களை, சந்தர்ப்பம் சரியில்லாததால் கூப்பிடவில்லை. அவர்களுக்கு நம் கலாச்சாரம் மேல் மிகுந்த ஈடுபாடு. 8 பேரில் 3 பேர் பெண்கள். அவர்களுக்கும், என் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் இரண்டு பேரின் மனைவிகளுக்கும் பட்டுச் சேலை செலக்ட் செய்.”

இவர்கள் அதற்கு சென்று விட, எல்லாரும் வேலைகளை முடித்து ஐந்து மணியளவில் வெளியே வந்தவர்கள் நேராக காமாட்சியம்மன் கோவிலுக்கும், வரதராஜ பெருமாள் கோவிலுக்கும் சென்று விட்டு சென்னை திரும்பினர்.

காலையில் போல் அரட்டை இல்லாவிட்டாலும், அவரவர் துணைவர்கள் தோள் சாய்ந்து அமர்ந்திருந்தனர். இளையராஜாவின் காதல் பாடல்கள் ஒலிக்க இதமான மௌனத்தில் பயணம் செய்தனர். இப்போதும் ஆதி மதியின் கையைப் பிடித்தபடி வண்டி ஓட்டினான்.

சென்னையை அடைந்த போது, எல்லோரும் களைத்திருப்பதால் வீட்டுப் பெண்கள் மேலும் கஷ்டப்பட வேண்டாம் என்று நேராக ஹோட்டலுக்குச் சென்றனர்.

பெரியவர்கள் அவரவர் விருப்பப்படி சாப்பிட, இளையவர்கள் நாண் மொத்தமாக சொல்லி விட்டு இரண்டு மூன்று சைட் டிஷ் சொல்லி சாப்பிட்டனர். அப்போதும் அதிதி மதியின் தட்டில் கோபி மஞ்சுரியனைப் போட, ஆதி வேகமாக “அதிமா .. மதி கோபி சாப்பிட மாட்டாள்.” என்று தடுத்தான்.    

சூர்யாதான் “அண்ணா … சும்மா பின்ற போ… நானெல்லாம் உன் பக்கத்துல கூட வரமுடியாது” என்று கிண்டல் செய்ய , அவனை தோளில் தட்டியவன் “பேசாமல் சாப்பிடு” என்றான்.

வீட்டிற்குச் சென்ற பின் பிரகாஷ் அவர்கள் காரை எடுத்துக் கொண்டு தன் பெற்றோரோடு செல்ல, ஆதி, வாணி, அவள் அப்பா அம்மாவைக் கொண்டு விட கிளம்பினான்.

“இருக்கட்டும் ஆதி. நாங்கள் டிரைவரோடு செல்கிறோம் நீங்கள் அலுப்பாக இருக்கிறீர்கள்” என்றார் சுந்தரம்.

மதியைப் பார்க்க  அவளும் அதையே சொல்ல , டிரைவரிடம்

“நீங்கள் அவர்களை வீட்டில் இறக்கி விட்டு விட்டு வண்டியை இங்கே விட்டு சாவியை வாட்ச்மேனிடம் கொடுத்துவிட்டுக் கிளம்புங்கள். நாளை காலை நீங்கள் வர வேண்டாம். மதியத்திற்கு மேல் வந்தால் போதும்” என்று கூறி அனுப்பி விட்டான்.

தங்கள் அறைக்குச் சென்ற ஆதி, மதியிடம் “மதி இன்றைக்கு நான் உன்னைச் சங்கடப்படுத்தி விட்டேனா?” என்று வினவ,

அவள் “இல்லை. எனக்கு இன்றைக்கு மறக்க முடியாத சந்தோஷமான நாளாக இருந்தது. என்னுடைய நினைவுகள் 15 வருடம் முன்பிருந்த ஆதியையும், மதியையும் கண்டது. தேங்க்ஸ்” என்று கூறியவளைப் பார்த்த ஆதி,

இப்போதும் என் வினுக் கண்ணம்மா என்னை ஆதியாகத்தான் பார்க்கிறாளா அத்தானாகப் பார்க்கவில்லையா என்று மனம் ஏங்கியது.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:903}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.