(Reading time: 47 - 94 minutes)

ம் அவன் கவிதைகளைப் படிக்கும் போது அது வெறும் ஃபேவரிடிசம் என தோன்றிய உணர்வு, அவனுடம் பேச ஆரம்பித்த காலத்தில் இது அதையும் தாண்டி வேறோ என குழப்பிய ஒன்று, சமீப காலத்தில் Are  ல் அவனுடன் மனம்விட்டு பேசத் தொடங்கிய பின் இது முகம் தெரியா ஒருவன் மேல் வரும் முட்டாள் தன காதல் என்று வருத்திய ஒன்று, இப்பொழுது இந்த நொடி அங்கீகரிக்க தக்க உள்ளுணர்வு என தோன்றுகிறது அவளுக்கு. உயிர் வாழும் காலம் மட்டும் இவனுடன்தான் இனி இவள்.

இதற்குள் வலபுறமாக ஓடியவன் ரைட் டர்ன், ரைட் டர்ன், ரைட் டர்ன் 4வது ரைட் டர்னில் பார்க்கிங்கை ஒரு வட்டமிட்டு இவள் கார் புறமே வந்திருந்தான். கார் கதவு திறந்திருக்க அதற்குள் அவளைத் திணித்தவன்

“கிளம்பு “ மூச்சிளைக்க அலறலும் உறுமலுமாக ஒரு கர்ஜனை கட்டளை.. துரத்துபவர்கள் பின்னால் ஓடி வர…..இவள் ட்ரைவர் சீட்டில் அமர்ந்து அங்கேயே விட்டிருந்த கீயை வைத்து   காரை ஸ்டார்ட் செய்யப் போனவள்,

“வாங்க ஜீவா” என கெஞ்சலும் மிரட்சியுமாக கத்தினாள்.

“ஜஸ்ட் உன் பின்னால வர்றேன் மூவ்..”

அங்கிருந்து பறக்கும் பிஸ்டல் தோட்டாவிற்கு விலகி அருகிலிருந்த அடுத்த காருக்கு அடியில் உருண்டான்.

வேறு வழி இன்றி இவள் கிளம்ப, அருகிலிருந்த தன் காரை திறந்து கொண்டே அதை நோக்கி ஓடியவன் இரண்டாம் நொடி அந்த காரில் சுகவியின் காரை பின்  தொடர்ந்தான். அவளை யாரும் மீண்டுமாய் பிடித்துவிடக் கூடாதே…

சுகவி இதுவரை இருட்டில் ஜீவா முகம் பார்க்கவில்லை. இப்பொழுது பின்னால் வரும் அவன் காரில் முகம் பார்க்க முயல்கிறாள். ஆனால் அத்தனை ட்ராஃபிக்கில் முகம் தெரிந்துவிட்டாலும்….

இதற்குள் தன்னுடன் வந்திருந்த செக்யூரிடி வாகனத்திற்கு அவள் தகவல் சொல்ல அவர்கள் அவள் வாகனத்திற்கு அருகில் வந்து சேர, இப்பொழுது ஜீவாவின் காரைக் காணவில்லை.

அரண் அவள் பாதுகாப்பு உறுதிப் பட்டவுடன் விலகிக் கொண்டான்.

இன்னும் அரணாய் தன்னை வெளிப் படுத்தும் நேரம் வரவில்லை. அந்த லோன் இன்னும் ட்ரான்ஸ்ஃபர் ஆகவில்லையே….

அந்த கிட்நாப்பர்ஸ் பிடிக்கப்பட்டு விட்டார்கள். இவளை கடத்தி சென்று இவள் அப்பாவை மிரட்டி பணம் பறிக்க நினைத்தவர்களாம் அவர்கள்.

வீட்டிற்கு வந்ததும் FBயில் கேள்வி மேல் கேள்வி கேட்டவனிடம் எல்லாவற்றையும் சொன்னாள் சுகவிதா. அவனோ அவளை காய்ச்சி எடுத்துவிட்டான்.

 “இப்டிதான் சேஃப்டி பத்தி அக்கறையே இல்லாம வருவியா நீ” அதுதான் அந்த திட்டின் சாரம்சம்.

சுகவிதாவிற்கு அவனது ஒவ்வொரு திட்டும் ஆனந்த சுக மழை, அன்பின் மொழி நிலை. உரிமையுடன் திட்டுகிறானே…

என்னவன்…என் மீது எல்லா உரிமையும் உள்ளவன்…எனை ஆளவும், தோள் சேரவும், உயிர் சூழவும் உயிருற்றவன். உற்றவன் எனக்குற்றவன். ஜீவன் என் ஜீவன்.

ரணுக்கோ சுகவிதாவை தவிர்த்தாக வேண்டும் என்றுதான் அறிவுக்குப் படுகிறது. ஆனால் அதை நடை முறைப் படுத்த தான் முடியவில்லை. FB  பக்கம் கூட போகாமல் இருந்தவன் அந்த ஸ்கைவாக் நிகழ்ச்சி அன்று பேசிவிட்டான்.

அவள் பத்திரமாய் வீடு போய் சேர்ந்தாள், இனி இப்படி கவனக் குறைவாக செக்யூரிடியைவிட்டு வெகு தூரம் விலகி வர மாட்டாள் என்றெல்லாம் உறுதி செய்யாமல் இவன் எப்படி நிம்மதியாய் இருப்பதாம்??

அதன் பின்னோ சுகவி இவனுடன் பேசுவதில் வெளிப்படையாய் தெரிய தொடங்கியது  காதல். இவன் மீதான அவளது விருப்பம், அக்கறை எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தினாள். நான் உன்னை காதலிக்கிறேன் என வாய்விட்டு சொல்லவில்லையே தவிர அவளது அத்தனையிலும் காதல் வாசம்.

அதோடு இவனைப் பற்றி தெரிந்து கொள்ள துடித்தாள். அவளிடம் மறைக்க இவனுக்கு வேதனையாக இருக்கிறது, சொல்லவும் வழி தெரியவில்லை. அவளோ தவிக்க தொடங்கி இருந்தாள்.

அவளது ஒவ்வொரு வார்த்தையிலும் அவளது வலியை இவனால் உணர முடிந்தது.

“ஏன் ஜீவா நான் உங்களப் பத்தி எது கேட்டாலும் சொல்ல மாட்டேன்றீங்க…? உங்களப் பத்தி தெரிஞ்சா என்ன ப்ரச்சனையாகிடும்னு நினைக்கீங்க….? எந்த விஷயமா இருந்தாலும் நான் உங்க கூடதான் இருப்பேன்….ஐ மீன் உங்களுக்கு ஃபேவரா உங்களுக்கு சப்போர்டிவாத்தான் இருப்பேன்…. ஏன் இப்டி என்னை நம்பாம விலகி விலகிப் போறீங்க….? என் மனசு புரியலையா ஜீவா? என்னை நம்பமாட்டீங்களா?“ அவள் கெஞ்சத் தொடங்கி இருந்தாள் இவனிடம்.

அதைத் தாங்க இவனுக்கு முடியவில்லை.

அதோடு இப்பொழுது அவள் அனுபவிக்கும் அத்தனை வலிக்கும் பின்னாளில் இவனைத்தான் காரணமாக்குவாள். ஏதோ அவளை அழவைக்கவே இவன் இப்படி எல்லாம் நாடகம் ஆடியதாக நம்பித் தொலைப்பாள்.

  அவன் க்ரிகெட் விளையாடுவதே அவளைவிட அவன் பெரிய ஆள் என காண்பித்துக் கொள்ளத்தான் என சந்தேகம் இன்றி நம்புபவளாயிற்றே…. அரண் உயிரோடு இருப்பதே சுகவிதாவை மூக்குடைக்கத்தான் என்பது போல் ஒரு பார்வை அவன் மீது…. சமீபத்தில் தான் அவள் அரண் பத்தி இதுவரை கொடுத்திருந்த அனைத்து இன்டர்வியூக்களையும் தேடிப் பிடித்துப் படித்திருந்தான் இவன்.

ஆக திரும்பவும் அரண் அவளைத் தவிர்த்தான்.  மனம் அவள் பற்றியே பர பரத்தாலும் முடிந்த வரை இயல்பாய் இருக்க முயன்று கொண்டிருந்தான் அவன். இவன் FB யில் அவள் மெசேஜ்களை கூடப் பார்க்கவில்லை கடந்த இரு வாரங்களாக.

ரவு 10 மணி. தன் அறையில் படுத்து ஜன்னல் வழியாய் வானத்தை வெறித்துக் கொண்டிருந்தான் அரண். இவன் மொபைல் சிணுங்கியது. ப்ரபாத்திடம் இருந்து அழைப்பு.

“என்னடா…?”

தன் கசினோட பார்டிக்கு  ஈசிஆர் ரிசார்ட்டுக்கு வந்திருந்த சுகவிதா அங்கிருந்து கிளம்பி 4 அவர்ஸ் ஆகிறது.. ஆனால் இன்னும் வீட்டிற்கும் செல்லவில்லை. செல்ஃப் ட்ரைவிங் வேறு அவள் மொபைல் ரிங்காகிறது தான் ஆனால் அவள் அதை ஏற்கவில்லையாம்….

ப்ரபாத்துக்கு அரணை சுகவிதா விஷயத்தில் உள்ளே இழுக்க விருப்பம் இல்லை….. ஆனாலும் இப்பொழுது வேறு யாரிடம் கேட்க?

“அந்த மன்யத் விஷயம் திரும்ப எதுவும் ப்ரச்சனையாகி இருக்காதுல்ல மாப்ள…” ப்ரபாத் தன் கவலையை வெளியிட்டான்.

“நோ சான்ஸ்…..அதுக்கு வழி இல்லை….” அதை மறுக்கும் போதே அரணுக்கு வேறு ஒன்று தோன்றுகிறது.

“ஒன் மினிட் டா…” அவசர அவசரமாக FB யில் லாகின் செய்கிறான் அரண்.

அவளிடமிருந்து 423 மெசேஜஸ். கடைசி சிலவற்றை அவசரமாக படித்தான்.

“நான் எவ்ளவு சொல்லிப் பார்த்துட்டேன் நீங்க என்னை நம்பலை உங்க பக்கம் என்ன இஷ்யூனு கூட சொல்லலை….. ஆனா இதை இப்படியே விட என்னால முடியாது….நீங்க அவாய்ட் பண்ணிட்டா நான் உங்கள மறந்துடுவேன்னு நினைக்கீங்க பாருங்க….அதை என்னால டைஜஸ்ட் பண்ணவே முடியலை….. நீங்கன்னா எனக்காக சாக கூட ரெடியா இருப்பீங்க….ஆனா நான்னா ஜஸ்ட் நீங்க என்ட்ட பேசலைனாலே உங்கள மறந்துடுவேன் என்ன?….

நானும் உங்களுக்காக சாக கூட தயாராத்தான் இருப்பேன் ஜீவா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.