(Reading time: 33 - 66 minutes)

ன்னைக்கு மட்டும் நீ ஃப்ளோல சொல்ற, மத்தபடி என் அம்மாவ எதுவும் சொல்லலைனு புரிஞ்சு கோப படாம இருந்திருந்தேன்னா உனக்கு என்னை பிடிக்காம போயிருக்காதுதான…?”

அத்தனை சூழலிலும் அத்தனை டென்ஷனையும் தாண்டி மெல்ல இவள் மண்டைக்குள் இறங்குகிறது ஒரு புரிதல். ஓ அன்னைக்கு நாம அவன் அம்மாவ திட்டிட்டமோ….? அவனுக்கு அம்மா வேற இல்ல….சுர்னு ஏறிருக்கும்….

“சே……சின்ன வயசு பிகேவியர சீரியஸா எடுக்க நான் என்ன உன்னை மாதிரி லூசா….? நீ அதுக்குப்பிறகு என்ட்ட எவ்ளவு ப்ரச்சனை செய்துறுப்ப…..? அவ்ட் ஆஃப் ஜெலஸ்…இதா இப்ப கூட என்னை கிட் நாப் செய்றியே…இதென்ன ஸ்கூல் பாய் வேலையா? இதுல உன்னை எப்டி பிடிக்கும்?” நம்ம தப்ப இவன்ட்ட ஏன் ஒத்துகனும்? இவன் பெரிய நித்திய நீதிமான்

“இது உன்னை இந்த வெட்டிங் களேபரத்துல இருந்து காப்பாத்த மட்டும் தான் சுகவி….எப்டியும் அரண்தான் ஜீவானு நீ ஒத்துக்கப் போறது இல்ல….அப்றம் ஜீவா வரலைனா பாய்ஷன் சாப்டுவேன்னு வேற ரொம்ப பயம் காட்டிட்ட….”

“சும்மா கதை……ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதாம்…. அப்டி இருக்கு இது….” அவனிடம் சொல்லி வைத்தாலும் இவள் மனதிற்குள்  வேறு கேள்வி. இவளை கிட்நாப் பண்ணி எதாவது செய்யனும்னா இந்த அரண் இப்படி இவள் கல்யாண நாள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?

இவளை உலகமே பார்த்துக் கொண்டிருக்க கூடிய ஒரு நாளில், பகலில் பப்ளிக் ப்ளேசில் வைத்து கடத்தி இப்படி ஒரு சேஸிங் சீன்…முதல்ல இருந்த ட்ரைவர் ஒடித்து ஒடித்து ஓட்டுவதில் வேர்ல்ட் ரெக்கார்ட் பார்டி போல….அவர் ஒடித்த விதத்தில் யாரும் இவர்கள் காரை பின் தொடரும் அளவு லொகேட் செய்ய கூட முடியவில்லை. மனுஷன் செர்பியாவோ….. செக் ரிபப்ளிக்கோ….முகம் அப்டித்தான் இருந்துது….அங்க இருந்து ஹையர் பண்ணி கொண்டு வரனும்னா?

ஆக இவன் தப்பிக்க இத்தனை பிளான் , இத்தனை எஃபர்ட்…. ஆனால் கிட்நாப் மோஸ்ட் வாட்ச்ட் ஈவன்ட்டில்? ஏன்???

அதுக்காக இவளை காப்பாத்த இவன் செய்திருப்பான் என்றெல்லாம் நம்பிவிடவில்லை சுகவிதா. ஆனால் கான்ட்ரடிக்க்ஷன் கருத்தில் படுகிறதுதான்.

“அப்டி காப்பாத்த நினைக்றவங்க ப்ரபுவ அனுப்பிருக்க வேண்டியதான…..நானே கூட வருவனே…..”

“அவன் அம்மா வெட்டிங் வென்யூல இருக்காங்க….உங்கப்பா அவங்கள பிடிச்சு வச்சி மிரட்டினா?”

இதை இவள் யோசிக்கவில்லை தான். 

“அவங்களை எதுக்கு இந்த பால்பாக்கெட் அங்கெல்லாம் அனுப்றான்?” பல்லைக் கடித்தாள்.

“அவங்க அம்மா அங்க வரலைனா….. ப்ரபு உன்னை வெளிய கொண்டுபோக எதோ ப்ளான் செய்றான்னு உங்கப்பா அலர்ட் ஆகிட்டாங்கன்னா…..உன்னை ரொம்ப வாட்ச் பண்ணி எங்களால இப்டி உன்னை வெளிய கொண்டு வர முடியாத மாதிரி செய்துட்டாங்கன்னா?”

பால்பாக்கெட் இவளுக்காக இதெல்லாம் பார்ப்பான் தான்!!!

“ஐயோ…aunty க்கு இப்ப கூட….” இவள் பதற…

“உன் கார்ல நான் கை வைக்ற நேரம் aunty க்கு என் ஆள் ஒருத்தன் கால் பண்ணிருப்பான். அவங்க கிளம்பி வந்துட்டு இருப்பாங்க….ப்ரபு மேட்ச்ல இருக்றதால அவன் மேல கோபம் வர உன் அப்பாக்கு டைம் ஆகும்….அவங்க கவனம் இப்ப என் மேல்தான இருக்கும்….ஆனா இப்ப ப்ரபுவே வந்துருந்தா அந்த டைம் கிடைக்காதுல்ல…..”

இவள் கொஞ்சம் யோசித்தாள்.  அவன் சொல்றது லாஜிகலி கரெக்ட்தான்…. ஆனால் எருமை எல்லோ கலரா இருக்குன்னு சொன்னா கூட நம்பிடலாம்…அதுக்கு யாராவது யெல்லோ பெயிண்ட் அடிச்சிருந்தா ஆகும் தானே …. அதுக்காக அது ஏரோப்ளேன் ஓட்டுதுன்னு சொன்னா நம்ப முடியுமா என்ன?

உண்மையிலேயே இவன் ப்ளான் என்ன? பால்பாக்கெட்டுக்கு இந்த ப்ளான்ல ரோல் இருக்குமோ?

அதற்குள் கார் திரும்பும் இடம் இவர்களது ஃபார்ம் ஹவுஸ். அரண் தான் கொண்டு வந்திருந்த சாவியால் அதன் கதவை திறந்து உள்ளே செலுத்தினான் காரை.

“நம்மள இங்க தேட மாட்டாங்கன்னு….”

“சொன்னது உன் பால் பாக்கெட் தான்….”

கைகள் பின்னால் கட்டப் பட்டிருந்தாலும் தான் ஏதோ சற்று இலகுவாகி இருப்பதை சுகவிதாவால் உணரமுடிகின்றது.

காரைக் கொண்டு போய் வீட்டின் பின் புறம் இருந்த வைக்கல்போரின் அருகில் நிறுத்தினான். சட்டென யார் பார்வைக்கும் படாது.

காரிலிருந்து இவள் இறங்க கதவை திறந்துவிட்டான்.

“உன்ட்ட இருக்ற பாய்ஷனை குடு….கை கட்டை அவிழ்த்து விடுறேன்…..”

அவன் கையை கட்டியதற்கு சொலும் ரீசனும் லாஜிகலி சரிதான். வெல் இன்டென்டட் டூ…..

“அப்டில்லாம் எதுவும் இல்லை….”

“பொய் சொல்லாத சுகவி…நீ தந்துட்டன்னா நானும் நிம்மதியா இருப்பேன்…நீயும் ஃப்ரீயா இருக்கலாம்….”

இது ஒரு ஆர்கியூமென்டாகா அவர்கள் வீட்டிற்குள் சென்ற பின்னும் சற்று நேரம் தொடர்ந்தது.

“நீங்களே யோசிங்க எனக்கு பிடிக்காத வெட்டிங்ல இருந்து நான் தப்பிச்சாச்சு…….இனி எனக்கு எதுக்கு அந்த பாய்ஷன்….ஜீவாவை தேடி கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணி சதோஷமா லைஃபை லீட் பண்ண யோசிப்பனா இல்ல சாகுறதுக்கா?”

அவள் சொல்வது ஏற்றுக் கொள்ளும் படியாய் தோன்ற, ஒரு பெட்டும் உயர கண்ணாடியும் மட்டுமாய் இருக்கும் அந்த ரூமை சுற்றி ஒரு நோட்டம் விட்டு அங்கு அவள் பாதுகாப்பிற்கு ஒன்றும் குறைவில்லை என உறுதி செய்த பின் அவளை விட்டு வெளியே வந்தான் அரண்.

சுகவிதாவோ அரண் வெளியேறிய உடன் தன் இடையில் மறைத்து வைத்திருந்ததன் மேல் அவசரமாக கை வைத்தாள்.

அப்பொழுதுதான் அறையை விட்டு வெளியே வந்திருந்த அரண் அவளை ஏதேச்சையாய்  திரும்பிப் பார்க்க, பின் புறமிருந்து பார்த்தாலும் அவள் செயலின் விபரீதம் புரிய வேகமாக பாய்ந்து சென்று அவளை அசையவிடாதவாறு பின்னிருந்து பிடித்தான்.

சுகவிதாவுக்கு அரண் மேல் கடும் வெறுப்புதான் எப்போதும். அப்படித்தான் அவள் பல காலமாய் உணர்ந்தும் இருக்கிறாள். அவன் ஞாபகம் வந்தாலே கொதிக்கும்தான்.

ஆனால் அவனை சமீப காலமாகத் தான் நேரில் பார்க்கும் வாய்ப்புகள். ஏனோ நேரில் பார்க்கும் போது அப்படி ஒரு கொதிப்பை அவள் உணரவில்லை என்பது உண்மை. அவன் என் எனிமி…அவன்ட்ட நான் இப்டித்தான் நடந்துகிடனும் என இவள் தன்னைத் தானே ஞாபகபடுத்திக் கொண்டுதான் நடமாட வேண்டி இருந்தது.

அதற்கு அர்த்தம் அவள் அரணைப் பார்த்து அட்ராக்ட் ஆனாள் என்றெல்லாம் இல்லை. இவள் எரிச்சல் படும் படி அவன் எதையும் செய்தது இல்லை. பார்வையில் கூட ஒரு கண்ணியம் இருக்கும். அவ்வளவே.

ஆக இன்றும் அதே போலும் ஒரு உணர்வு….

அடுத்தும் அவன் சொன்ன காரணங்கள் முழுதாய் ஏற்றுக் கொள்ளும் படியாய் இல்லை எனினும்,  முழு பொய்யாகவும் தோன்றவில்லை…

 அதோடு நடந்து கொண்டிருக்கும் நிகழ்வில் ப்ராஃபிட் இவளுக்கு ஏராளம்….பெலிக்‌ஸ்ட்ட இருந்து தப்பிச்சுட்டா தானே…..ஜீவாவை தேட டைம் கிடச்சிருக்கு……ஆக ஒருவகையில் அவள் அரண் ப்ரசன்னத்தில் கம்ஃபர்டபிளாகவே இருந்தாள்.

ஆனால் அவன் பின்னிருந்து அணைக்கவும் மிரண்டு போனாள்.

ஆக எல்லாம் நடிப்பா? இதற்குத்தானா? துள்ளி திமிறி அவன் பிடியிலிருந்து விலக பார்க்கிறாள் அவள். ஆண் பிடியல்லவா? அவனது பிடியின் இறுக்கத்தை மீறமுடியவில்லை. இப்பொழுது அவன் கை அவள் இடையில் ஓட உச்ச கட்ட பயத்தில் மயங்கி சரிந்தாள் சுகவிதா.

Friends due to health reasons இந்த எபி ரொம்ப அவசர அவசரமா எழுத வேண்டியதாகிட்டு. Spelling mistakes மற்றும் வேறு எந்த குறைகள் இருப்பினும் பொறுத்தருளவும் please. Thanks.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:879}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.