(Reading time: 9 - 17 minutes)

ம் பிரபு” இது சித்ர குப்தரின் பதில்.

“அப்படியென்றால் இவன் பூமிக்கு மீண்டும் போவதற்கு அது போதும் குப்தரே” எமன் கூறினார்.

“அடடா இந்த மனுசன் இவ்வளவு நல்லவரா இருக்கிறாரே, இவரைப் போய் திட்டிவிட்டாயே விஷ்ணு” என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

“ஆயினும் இது எப்படி சாத்தியம் பிரபு” மீண்டும் முட்டுக்கட்டை போட்டார் சித்ர குப்தர்

“சித்ர குப்தா சார், உங்களுக்கும் எனக்கும் அப்படி என்ன பிரச்சனை. எமன் சார்தான் முடியும் என்று சொல்கிறாரே அப்பறம் நீங்க ஏன் குறுக்க குறுக்க பேசுறிங்க?” சித்ர குப்தரை பார்த்துக் கேட்டான்.

“மானிடா உன் நாவை அடக்கு” என்று என்னை பார்த்துக் கூறிவிட்டு “குப்தரே, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன், இப்போது இந்த மானிடனின் உடல் எங்கு இருக்கிறது” எமன் சித்ர குப்தரை கேட்டார்.

“இவனுக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லாததால் இவனது உடல் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில்தான் இருக்கிறது பிரபு” சித்ர குப்தர் கூறினார்.

“நல்லது, இவன் உடலை உடனே இவன் இல்லத்திற்கு மாற்றுங்கள்” என்று கூறினார் எமன்.

அதைக் கேட்ட குப்தர் தன் கணினியில் எதோ செய்துவிட்டு “ மாற்றிவிட்டேன் பிரபு” என்று கூறினார்.

எமன் என்னைப் பார்த்து “நான் கூறியது அனைத்தும் நன்றாக நினைவில் இருக்கிறதா?. உனக்குச் சரியாக 90 நாட்கள்தான் அவகாசம், அதற்குள் நீ அந்தப் பெண்ணை காதலிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.

“நல்லா நினைவு இருக்கிறது, அதே போல் நீங்கள் கூறியது உங்களுக்கு நினைவில் இருக்கிறதா, இந்த 90 நாட்களும் எந்தக் கடவுளும் எனக்கு எந்தப் பிரச்சனையும் தரக்கூடாது” என்று அவர் கூறியதை மீண்டும் அவருக்கு நினைவு படுத்தினேன்.

“உங்கள் ஊரில் ஒரு நடிகர் கூறுவாரே, நான் ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி என்று அதே போல் தான் என் வாக்கும் நான் ஒரு தடவைக் கூறினால் நூறு தடவை கூறியதற்குச் சமம், அதனால் என் வாக்கில் சந்தேகம் வேண்டாம்” எமன் கூறினார்.

“இந்த டயலாக் எப்படித் உங்களுக்குத் தெரியும் எமன் சார்” நான் கேட்டேன்

“இண்டர் நெட்டில் சமீபத்தில் தான் இந்தப் படம் பார்த்தோம், நைஸ் மூவி, குட் அக்டிங்” சித்ர குப்தர் பதில் கூறினார்.

“அப்படி போடு அறுவாலை, ரொம்ப டெக்னாலஜி டெவளப்மண்ட் தான்” நான் கூறினேன்.

“அது போகட்டும் உன்னிடம் நான் மற்றொரு முக்கியமான விஷயம் கூறவேண்டும்” என்றார் எமன் என்னைப் பார்த்து.

நான் “சொல்லுங்கள் எமன் சார்” என்றேன்.

“நீ இங்கு வந்ததோ, இங்கு நடந்ததே எதுவும் பூமியில் யாரிடமும் கூறக்குடாது, மீறிக் கூறினால்” அவர் முடிப்பதற்குள்

“இந்த டயலாக் தான் எனக்குத் தெரியுமே, எத்தனைப் படங்களில் பார்த்துருக்கேன், இங்கு நடந்ததை வெளியே கூறினால் என் தலை வெடித்துவிடும் அவ்வளவுதானே” நான் மிகவும் கர்வமாக கூறினேன்.

“நீ நிரைய படங்கள் பார்த்து கெட்டுதான் போயிருக்கிறாய், உன் தலை ஒன்றும் வெடித்துவிடாது, இங்கு நடந்ததை நீ வெளியில் கூறினால் கேட்பவர்கள் உன்னைத்தான் பைத்தியம் என்று கூறுவார்கள். நீ இறந்தாய், எமனைப் பார்த்தாய், பின்பு மீண்டும் பூமிக்கு வந்தாய் என்றால் யார் நம்புவார்கள், அதனால் தான் கூறினேன் இங்கு நடந்ததை வெளியே கூறவேண்டாம் என்று” எனக்கு பல்பு கொடுப்பதுபோல் பதில் கூறினார் எமன்.

என் மூக்கு உடைபட்ட சத்தம் பூமியில் இருக்கும் மக்களுக்கே கேட்டிருக்கும், அப்படி உடைபட்டது என் மூக்கு.

“சரி இப்போது நீ பூலோகம் செல்” என்று கூறிவிட்டு தன் கையை என்னை நோக்கி நீட்டினார் எமன். அடுத்த நொடி என் கண்ணில் இருந்து எம லோகம் மறைய ஆரம்பித்தது.

உடனே சித்ர குப்தர் எமனைப் பார்த்து “என்ன பிரபு இப்படி செய்துவிட்டிர்கள்” என்றார்.

அதற்கு எமன் சிரித்துக் கொண்டே “எல்லாம் எனக்குத் தெரியும் சித்ர குப்தரே, நீர் நடப்பதை வேடிக்கை மட்டும் பாருங்கள்” என்றார்.

சட்டென என் படுக்கையில் இருந்து விழித்து எழுந்தேன். இரண்டொரு நிமிடம் எனக்கு என்ன நடந்ததென்று புரியவில்லை, மெல்ல மெல்ல நடந்த அனைத்தும் எனக்கு நினைவுக்கு வரத் தொடங்கியது. இது கனவா என்பதற்காக என் கைகளை கில்லி பார்த்து நடந்தது கனவில்லை என்று புரிந்து கொண்டேன். எமன் கூறியது சரிதான் நடந்ததை என்னாலே நம்பமுடியவில்லை, இதை வெளியே கூறினால் சத்தியமா நம்மைப் பைத்தியம் என்றுதான் கூறுவார்கள், அதனால் வெளியே கூறக்குடாது. சட்டென எழுந்து அருகில் இருந்த கேலண்டரை திருப்பிப் பார்த்தேன். எமன் கூறியது போல் இன்றிலிருந்து சரியாக 90ஆவது நாள் பிப்ரவரி 13, விடிந்தால் காதலர்கள் தினம்.

தே சமயம் அனு வீட்டில்

பட்டுப் புடவையில், ஒரு லைட் மேக்கபோடு, ஆடம்பரம் எதுவும் இல்லாமலே தேவலோக கன்னியை போல் அமர்ந்திருந்தாள் அனு. மாப்பிளை மிடுக்கோடு அமர்ந்து அனுவை பார்வையாலே களவாடிக் கொண்டிருந்தான் தீபக். இருவீட்டாரும் ஆளாளுக்கு தன் அருகில் இருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். 

“பொண்ணு-பையன் ஜாதகத்தை வச்சி பார்க்கும் போது வரும் மாசி மாதம் 2 ஆம் தேதியில் வர முகுர்த்தம் அமோகமா இருக்கு, அன்னைக்குக் கல்யாணம் நடந்தால் பொண்ணும்-பையனும் 100 வருஷம் சந்தோஷமா இருப்பா, பெத்தவா நீங்க என்ன சொல்றீங்க” கையில் இருந்த கேலண்டரை பார்த்த படிக் கூறினார் ப்ரோகிதர். அனைவரும் பேசுவதை நிருத்தி விட்டு அவரைக் கவனித்தனர்.

“மாசி 2 என்றால் இங்கிலிஷ் தேதி என்ன ஐயரே?” தீபகின் தந்தை சக்திவேல் கேட்டார்.

மீண்டும் கேலண்டரை பார்த்துவிட்டு “பிப்ரவரி 14” என்றார் ப்ரோகிதர்.

தொடரும் . . .

Episode # 04

Episode # 06

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.