(Reading time: 27 - 53 minutes)

14. நனைகின்றது நதியின் கரை - அன்னா ஸ்வீட்டி

வளுக்கு விவரம் தெரிந்து ஒரு ஆணின் கோபத்திற்கு, பதில் கோபம் கொள்ளாமல், சங்கல்யா மிரண்டு போன முதல் அனுபவம் இதுதான். கூடவே மனதில் அத்தனை வலி தவிப்பு. ஒரு வார்த்தையில் எத்தனை எளிதாய் விலக்கிவிட்டான். முன்பு ஏதோ ஒருவகையில் அவனுடன் மனம் இணைந்து இருந்ததா என்ன? ஏன் இப்படி வெட்டப் பட்டது போல் துண்டிக்கப்பட்டது போல் ஒரு வலி? ஆனால் இதையெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க இதுவல்ல நேரம்….அவளால் அன்பரசியை இந்த நிலையில் விட்டுவிட்டு எங்கும் போக முடியாது…. கீழே கிடந்த மொபைலை கையில் எடுத்து

“அம்மா சர்ஜரி முடிஞ்சு சரியா பேச ஆரம்பிக்கவும் போய்டுவேன் ஜோனத்…ப்ளீஸ் அதுவரைக்கும் பெர்மிஷன் தாங்க….”அழுகையும் கண்ணீருமாய் ஒரு கெஞ்சல்.

“அதெல்லாம் முடியாது….இப்பவே கிளம்பு நீ…..” இளக்கமென்பது துளி கூட இல்லாத குரலில் அவன்.

Nanaikindrathu nathiyin karai“ப்ளீஸ் ஜோனத்….”

“ஏன் இப்டி என் உயிர எடுக்க நீ…..லுக் அங்க உயிருக்கு போராடிட்டு இருக்றது என் அம்மா…..எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து என் உலகம் அவங்க தான்……நான் அங்க வர்ற வரைக்கும் அவங்க இருப்பாங்களா மாட்டாங்களான்னு…..” அவன் வலிக்க வெடிக்க சொல்லிக் கொண்டு போக, இவள் அலறினாள்.

“ஐயோ…அப்டிலாம் சொல்லாதீங்க….அம்மாக்கு ஒன்னும் ஆகாது….”

“ஷட் அப்….ஃபார் ஹெவன் சேக் ஷட் அப்……..இந்த போலி பாசம்லாம் இப்ப வேண்டாம்……முதல்ல இடத்தை காலி பண்ணு….என் அம்மாக்கு நோ சொல்ல முடியாத அளவு பாசத்துல என் கூட எங்கேஜ்மென்டுக்கு ஒத்துக்கிட்டு, அப்றம் அதுக்கு பழி வாங்க, என்னை ஹர்ட் செய்றதுக்காகவே, எனக்கு எது அதிகம் வலிக்கும்னு பார்த்து என் ஃப்ரெண்ட்ஸ பனிஷ் பண்ணிருக்க…..என்ன ஒரு பாசம் உனக்கு என் அம்மா மேல!!!…..என் அம்மா மேல உண்மையா பாசம் இருந்தா என்னை ஹர்ட் பண்ண தோணுமா உனக்கு…..? எனக்கு வலிச்சா என் அம்மாக்கு வலிக்காதாமா?....போய் என் அம்மாட்ட சொல்லிப் பாரு  ஐ ட்ரீட்டட் ஜோனத் திஸ் வேன்னு….அப்டியே அவங்களுக்கு குளுகுளுன்னு இருக்கும்…. ”

சத்தியமாக இந்த நொடி வரை அவளுக்கு இது தோன்றி இருக்கவே இல்லை. அதெப்படி ஒருத்தரை வெறுத்து மற்றவரை நேசிக்க முடியும்? ஆணை வெறுத்து பெண்ணிடம் மட்டும் எப்படி பாசம் காட்ட முடியும்….உடலில் இருக்கின்ற கை மட்டும் தான் எனக்கு பிடிக்கும்…..கால் எனக்கு பிடிக்காது என காலில் சூடிட்டுக் கொள்வது போலல்லவா இது? ஆணும் பெண்ணும் உலகம் என்ற உடலின் வெவ்வேறு அவயங்கள் அல்லவா? அன்பரசியை நேசித்து ஜோனத்தை எப்படி வெறுத்தாள் இவள்? சுகவிதாவை நேசித்து அரணை மட்டுமாய் தண்டிக்க முடியுமா என்ன?  என்ன ஒரு மூடத்தனம்????

You might also like - Unakkaga mannil vanthen - A romantic comedy blended with fantasy... 

“சாரி ஜோனத்….” இவள் தொடங்க அதற்கு மேல் தொடரவிடாமல் சலித்தான் அவன்.

“இன்னொரு தடவையும் இந்த ஃபேக் சாரியா???….”

பின்பு சீறினான்.

“போதும் சங்கல்யா உன் ட்ராமா…..நாய் தான் கக்கினதை தின்ன திரும்பும்…..கேள்விப் பட்டிருக்கியா….? செய்தது தப்பு….இனிமே செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு,  திரும்பவும் அதே தப்ப  செய்றவங்களை பத்தி இப்டிதான் சொல்லி இருக்குது….….. என் அம்மா இப்டி இருக்ற இந்த நேரத்துல ஒரு வெறிநாயை கயறுல கட்டி கைல பிடிச்சுகிட்டு அலைற மாதிரி உன்னை கூட வச்சுக்க என்னால முடியாது….”

கடைசியாக கெஞ்சினான்….”.தயவு செய்து இந்த சிச்சுவேஷன்லயாவது என்னை படுத்தாம விடேன்…என் அம்மா சரியாகவும் உனக்கு எவ்ளவு தோணுதோ அவ்ளவு கடிச்சுக்கோ, இப்ப என்னை விட்டுடேன் ப்ளீஸ்… என்னால முடியலை….”

வெறி நாய்….. என்ன சொல்லிவிட்டான் இவன்????!!! ஒரு மனம் கொதிக்க…..நீ செய்த வேலையை இதைவிட சாஃப்டா எப்படி டிஸ்க்ரைப் செய்றதாம் என்றது அடுத்த மனது….திருடின்னு சொல்லாம விட்டானே…..அவன் இடத்துல நீ இருந்து உனக்கு யாராவது இப்படி செய்திருந்தா??? 30 கை விரிய பந்தாடி இருக்க மாட்டாளா இந்நேரம்…..இவனென்றால் ப்ரச்சனை வராம பார்த்துக்கிறேன் கிளம்பிப் போன்னுதான சொல்றான்…. மனம் மீண்டுமாக அவன் புறம் கனியத்தான் செய்கிறது…..பாவம் அவன் அம்மா இருக்ற நிலையில அவன் இவளை வேறு சமாளிப்பதென்றால்….. அதிலும் கடைசியில் அவன் சொன்ன ‘என்னால முடியலை’ யில் இதற்கு மேல் அங்கு இருக்க நினைப்பது சுயநலம் என தோன்றிவிட்டது.

அன்பரசியுடன் இருக்க வேண்டும் என்ற இவளது உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஜோனத்தை இந்த சூழ்நிலையில் இதற்கு மேலும் துன்புறுத்துவது எப்படி சரியாகும்? இவள் நிச்சயமாக அவன் பயப்படுவது போல் அவனை வருத்தும் எதையும் செய்து வைக்க போவது இல்லை தான். ஆனால் அப்படி இவள் எதையும் செய்ய மாட்டாள் என்ற நம்பிக்கையை எழுப்பி கட்ட இப்பொழுது வழி இல்லை.

“ ஓகே ஜோனத்….நான் கிளம்புறேன்….அம்மா சரியான….”

அவளை பேசி கூட முடிக்கவிடவில்லை அவன்.

 “வெரி கைன்ட் ஆஃப் யூ…..குட் பை” இணைப்பை துண்டித்திருந்தான். ஆக இனி இவன் இவளிடம் பேசப் போவது கூட இல்லை. உலகம் உடைந்து விழுவது போல் ஒரு உணர்வு. இனி இவள் உலகில் ஜோனத் இல்லை என்றால்….நினைக்கவே எத்தனை வெறுமையாய்….

இருண்டுபோய் நிற்பவளைப் பார்த்ததும் அருகில் வந்த அரண்….” என்னாச்சு லியா? ஏன் இப்டி பயந்து போய்…..ஒன்னும் ஆகாது….எல்லாம் சரியாகிடும் “ என குத்து மதிப்பாக ஆறுதல் சொன்னான்.

நன்றியாய் சிரிக்க முயன்றாள். மனதிற்குள் வலி.

“என்னாச்சு லியா? எதாவது பெரிய இஷ்யூவா?...எதுனாலும் சொல்லு என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்…”

அவன் உண்மையாய் சொல்கிறான் என இவளுக்கும் தெரியும் தான்…. அது அவனது குணம். ஆக அரண்  இந்த சூழ்நிலையில் இவள் டைரியை திருடி விற்க முயன்றதை ஜோனத்திடம் சொல்லி இருக்க மாட்டான். அப்படியானால் அவனுக்கு அதை சொன்னது யார்…? அதை அரண் ஜோனத்திடம் சொல்லாமல் மறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் இவளுக்கு இல்லைதான்….ஆனால் ஏற்கனவே தன் அம்மா குறித்த மனவேதனையில் இருப்பவனிடம் இதை யார் ஏன் இப்பொழுது சொல்ல வேண்டும்? சட்டென நினைவில் வருகிறது பாம்ப்ப்ளாஸ்ட்…. அரண் ஜோனத் இவர்களை சுற்றி சதி வலை பின்னப்படுகிறதோ?

“அண்ணா அந்த பாம்ப்ளாஸ்ட்…அது யார் வேலைனு….?” கேட்க ஆரம்பிக்கவும் தான் ஞாபகம் வருகிறது…..இவட்ட இதை சொல்வானாமா?....

“தெரியலை லியா…இன்னும் ஒரு லீடும் கிடைக்கலை….. “ அவன் எந்த சிந்தனையும் இன்றி சொன்னான்.

“அவங்க டார்கட் ப்ராபர்டி டிஸ்ட்ரக்க்ஷன் தான்…..அப்பா அன் எக்‌ஸ்பெக்ட்டடா உள்ள போய்ட்டாங்க போல….ஃபினான்ஸியல் லாஸ்தான் ஹெவி….நல்ல விஷயம் என்னன்னா நோ டெத் டோல்…. அவங்க அதை எய்ம் பண்ணவே இல்லை….இன்ஃபாக்ட் அவாய்ட் பண்ண பக்காவா ப்ளான் செய்திருக்காங்க….”

“ஓ…” அப்டின்னா செய்தவங்க இன்டென்ஷன் என்ன? இவள் மனம் இப்படி ஓட

“இதையெல்லாமா இப்ப நினச்சு குழம்பிகிட்டு இருக்க….நீ முதல்ல வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு… யூ வில் ஃபீல் பெட்டர்….ஹாஸ்பிட்டலையே பார்த்துகிட்டு இருந்தா பாஸிடிவான எதுவும் ஞாபகம் வராது….ஆன்டிக்கு ஒன்னும் ஆகாது….நைட் முழுக்க நீ தூங்கலை….”

அவன் அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டு இருப்பதை திரும்பவுமாக சொல்ல எளிதாக ஒத்துக் கொண்டாள் இம்முறை.

கிளம்பனும். ஜோனத் வர்றதுக்கு முன்னால இங்க இருந்து போய்டனும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.