(Reading time: 15 - 29 minutes)

துருவனோட அப்பா…” என்ற பதிலில் தூக்கி வாரிப்போட்டவனாய் அவன் இருந்தான்…

கணவன், குழந்தை, என அவள் இருக்க வேண்டும் என்று விரும்பினான் தான்… அவள் வாழ்வின் அந்த தெரியாத பிரச்சினைக் கண்டறிய வேண்டுமென துடித்தான் துடிக்கின்றான் தான்… இன்று இதுதான் தன் குழந்தையின் தகப்பன் என அவள் ஒருவனை அறிமுகம் செய்யும் போது ஏனோ ஒரு வலி அவன் இதயத்தின் உள் வரை சென்று தாக்கியது…

காதலித்தவன் அல்லவா… காதலித்த மனம் சற்றே துடித்து ஏங்கியது தனது காதலியை எண்ணி…

அவளை வேறொருவராக பார்க்க அவனால் ஏனோ இந்த நொடியும் முடியவில்லை… தான் விரும்பியவள் அவள்… அவளை அவ்வாறே அவன் மனமும் பார்க்கிறது…

இன்னொருத்தருக்கு மனைவியாக நினைக்க அவன் மனம் ஏனோ அவளை ஏற்க மறுக்கும் மாயமும் அவனுக்கு மர்மமாய் இருந்தது…

பெரும் முயற்சி செய்து அதிலிருந்து வெளிவந்து,

“வெளிநாட்டுல இருந்து வந்துட்டாரா?...” எனக் கேட்டான் குரலில் இயல்புத்தனத்தை கொண்டு வந்து…

“ஹ்ம்ம்…” என்றாள் அவள்…

You might also like - Oru kootu kiligal... A family drama...

“சரி… வீட்டுக்குத்தானே போறோம்… அவரை வீட்டுக்கு சீக்கிரம் வர சொல்லு… பார்த்து பேசிட்டு போறேன்…” என்றான் அவன் எதார்த்தமாய்…

“வேண்டாம்…” என்றாள் உடனேயே…

“ஏன்?...” என்ற அவன் கேள்விக்கு,

“வேண்டாம்னு சொன்னா விடுங்க… அவ்வளவுதான்…” என்றாள் அவள் கோபமாய்…

“இப்போ எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு?... சரி… விடு… நான் அவர் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன்…” என அவன் சொன்னதும்,

தானாக சிரித்தாள் அவள்…

“எதுக்கு இப்போ சிரிக்குற?...” என புரியாமல் கேட்டான்…

“இல்ல வெயிட் பண்ணி பார்த்துட்டு போறேன்னு சொன்னீங்கல்ல.. அதான்…” என்றாள் அவள் மீண்டும் சிரித்துக்கொண்டே…

“ஏன் அதிலென்ன இருக்கு… அவர் வர லேட் ஆகுமா?...”

“ஹ்ம்ம்… ஆமா…”

“ஓ… சரி… நீ போன் பண்ணி வர சொல்லேன்… ப்ளீஸ்…”

“….”

அவன் கெஞ்ச அவள் அமைதியாய் இருக்க, அவன் மீண்டும் கேட்டான்…

கடைசியில் ஒரு பெருமூச்சுடன், “வீடு வந்துருச்சு… வண்டியை நிறுத்துங்க…” என சொல்லவும் தான் அவனுக்கே வீடு வந்தது புரிந்தது…

காரிலிருந்து இறங்கியவள், அவனை உள்ளே அழைக்க, அவனும் வந்தான்…

ள்ளே இருந்து வந்த கோகிலவாணி, ருணதியை பார்த்ததும், திருதிருவென முழிக்க, மகத்திற்கு ஏன் இப்படி பார்க்கிறார்கள் இவளை அதும் இத்தனை பயத்துடன் என்ற எண்ணம் வந்திருந்தது…

இருந்தும் எதுவும் கவனிக்காதவன் போல் இருந்து கொண்டான் வேறெங்கோ பார்த்தபடி…

“வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு சொல்ல முதலில் பழகு…” என்றாள் ருணதி கோகிலவாணியை முறைத்தபடி…

நீ திடீர்னு இப்படி முன்னாடி வந்து நின்னா நான் அதிர்ச்சியில பேச முடியாம போகாம என்னடி செய்வேன்?...

பயம் இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் சிரித்தபடி, “வாங்க தம்பி… வாங்க….” என அழைக்க, அவனும் சிரித்தபடியே தலை அசைத்தான்…

“அன்னைக்கு தான் உள்ள வராமலே போயிட்டீங்க… வாங்க உட்காருங்க…” என அவனை அமரவைத்துவிட்டு ருணதியைப் பார்க்க, அவள் துருவனை தேடியபடியே அவரை பார்க்க,

“நான் உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் தம்பி… இருங்க…” என சொல்லிவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடினார் அவர்…

“அய்யய்யோ… கிராதகி… சீக்கிரம் வந்துட்டாளே… துருவனை தேடுறாளே… இப்போ நான் என்ன செய்யுறது?... அவன் எங்கன்னு கேட்டா?... நான் மாட்டிப்பனே… அச்சோ…. பெருமாளே… காப்பாத்துப்பா…” என அடுப்படியில் அவர் புலம்பியபடி நிற்க,

“என்ன பாட்டி… எனக்கு காபி தருவீங்களா மாட்டீங்களா?...” என்றபடி மகத் வந்தான்…

“தம்பி… அது… நீங்க என்ன இங்க… நானே வந்திருப்பேனே…” என்று அவர் சமாளிக்க,

“ருணதி தான் பாட்டிகிட்ட நீங்களே போய் கேட்டாதான் குடுப்பாங்கன்னு சொன்னாங்க… அதான்…” என அவன் விளக்கம் குடுக்க,

“கிராதகி… என்னை இப்படி வேற மாட்டி விடுறாளா?... இவளை…” என எண்ணியவரின் மனம்,

அவளை திட்டுறது இருக்கட்டும்… இப்போ அவ உன்னை கேள்வி கேட்பா.. அதுக்கு எப்படி பதில் சொல்லுறதுன்னு முதலில் யோசி கோகி… என எடுத்துக்கொடுக்க,

“ஆமாமில்ல…” என்றாள் அவர் வாய்விட்டே…

“என்ன பாட்டி… என்ன சொன்னீங்க….” என்ற மகத்… அவர் எதையோ யோசித்துக்கொண்டே இருந்த வேளையில் காபி போட்டுவிட்டு அவரைப் பார்க்க

“அச்சோ தம்பி… நீங்களே போட்டுட்டீங்களா?.. நான்தான் போடுவேன்ல… எதுக்கு இப்படி அவசரம்?....” என அவர் சொல்ல

“பின்ன நீ காபி போட்டு தருவேன்னு சொல்லி அவர் வெயிட் பண்ணிட்டே இருந்தா அடுத்த வருஷமானாலும் நீ இப்படியேதான் இருப்ப… எதுவும் செய்யமாட்ட….” என்றபடி வந்தாள் ருணதி முகம் கழுவி விட்டு….

வெறும் முகத்துடன் வந்த ருணதியை கோபமாக முறைத்தார் கோகிலவாணி…

“நீ செஞ்ச தப்புக்கு நான் தான் உன்னை இப்படி முறைக்கணும்… நீ என்னடான்னா என்னை முறைக்குறீயா?... இருக்கட்டும் உன்னை அப்புறம் பேசிக்கிறேன்…” என மனதில் எண்ணிக்கொண்டாள் ருணதி…

“ஏண்டி அறிவு கெட்டவளே… உனக்கு எத்தனை தடவை சொல்லுறது… முகம் கழுவிட்டு இப்படி பொட்டில்லாம வந்து நிக்காதன்னு…” என அவர் பொரிய,

“ஆமா, உனக்கு வேற வேலை இல்லை… சும்மா எப்பப்பாரு பொட்டு வை அது இதுன்னு… சும்மா இரு கோகி நீ… எரிச்சல் பண்ணாத…” என அவள் சொல்லியதும்,

“சரி பாட்டி… நான் காபி எடுத்துட்டு ஹாலுக்குப் போறேன்…” என்றபடி நகர்ந்தான் ட்ரேயில் காபியுடன் மகத்…

அவன் நகர்ந்ததும், கோகியை துளைத்த பார்வையுடன் ருணதி ஏறிட, கோகிலவாணியோ

“கூப்பிட்டீங்களா தம்பி…” என்றபடி ஹாலுக்கு விரைந்தார்…

“நான் போட்ட காபி உங்களுக்கு பிடிக்குமா இல்லையான்னு தெரியலை… குடிச்சுப்பார்த்துட்டு சொல்லுங்க பாட்டி… இந்தாங்க…” என்றபடி அவருக்கு ஒரு கப் காபியை அவன் நீட்ட, அவர் அதை வாங்கிக்கொண்டார்…

“ருணதி… இது உங்களுக்கு…” என அவன் அவளுக்கும் கொடுக்க, அவளும் வாங்கிக்கொண்டாள்…

காபியை வாங்கி பருகிய கோகிலவாணி அவனை புகழ்ந்து தள்ள, அவன் லேசாக சிரித்தான்…

“எப்படி தம்பி இவ்வளவு நல்லா காபி போடுறீங்க?... எங்க வீட்டு காபியை குடிச்ச மாதிரியே இருக்கு…” என சொல்ல, அவன் பார்வை சட்டென்று ருணதியிடம் நின்றது…

அவளுக்கும் அந்த பார்வையின் அர்த்தம் புரிய, சட்டென்று முகம் திருப்பிக்கொண்டாள்…

“பழக்கம் பாட்டி…” என்று அவன் பதில் சொல்ல, பழக்கமா?... என அவர் யோசிக்க, அவரை மேலும் யோசிக்கவிடாது, ஒரு கேள்வியைக் கேட்டாள் ருணதி…

“துருவ் எங்க?...”

அவள் கேட்டதும் கோகிலவாணிக்கு புரையேறிவிட, ருணதி அவரின் தலையில் தட்டிக்கொண்டே

“துருவ் எங்கன்னு கேட்டேன்…” என மீண்டும் கேட்க, கோகிலவாணி திருதிருவென்று முழித்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.