(Reading time: 8 - 15 minutes)

சிரிப்புடன் மீண்டும் அவளை இழுத்து அடிப்பட்ட இடத்தில் தன் முத்தத்தால் மருந்திட்டவன் "பேசாம தூங்குடி... நாளைக்கு எனக்கு கம்பனில ஆடிட்டர் மீட்டிங் இருக்கு.." என்றான் ரசகசியம் போல் இளகிய சின்ன குரலில். அவனின் மாயக் குரல் என்ன தந்திரம் செய்ததோ அவளும் மறுப்பேச்சு பேசாமல் ஆர்யனின் மென் அணைப்பில் அழகாய் அவன் கைகளுக்குள் அழகாய் படுத்து உறங்கிப் போனாள்.

 அடுத்த நாள் காலை இந்திராவிர்கு தலை வின்னு வின்னென்று தெறித்தது. ஆர்யன் அவளுக்கு முன்பே எழுந்து கிளம்பி சென்றதால் தன்னவனின் அணைப்பில் துயிலெழுந்த கதையெல்லாம் இந்திரா அறிந்திட வாய்ப்பில்லை. நெற்றியில் இருந்த ப்ளாஸ்டரை தடவியவள் 'என்ன இது' என கண்ணாடியில் சென்று பார்த்தாள். 'அடிப்பட்டிருக்கு...எப்படி' என யோசிக்க முயன்ற சில நிமிடங்களில் தலை வலி இன்னும் அதிகமானது.

குளித்து உடை மாற்றியதும் லேசாக தெரிந்த நெற்றி காயத்தை தலையை வித்தியாசமாக வழித்து வாரி எப்படியோ மறைத்துக் கொண்டு கீழே சென்றவள் நிரஞ்சனாவிடம் காலை வணக்கம் கூறினாள். நிரஞ்சனாவும் மருமகளுக்கு மன நிறைவான புன்னகையுடன் பதில் கூறியதோடு "ஆர்யன் இவ்ளோ சீக்கரம் உன்கிட்ட அன்பா பொருப்பா நடந்துப்பானு நாங்க எதிர்ப்பார்க்கலடா... ரொம்ப சந்தோஷமா இருக்கு.." என பேசிக் கொண்டே போக இந்திராவிர்கு எதுவும் புரியவில்லை.

யோசித்து தலையை உடைத்து கொள்ளவும் முடியாது என எண்ணியவள் ஒரு முடிவோடு "ஓ.. அவர் எனக்கு கிஃப்ட் வாங்கி கொடுத்தது சொன்னாரா..? ஆமாம்மா எனக்கும் ஸ்வீட் ஷாக்கா தான் இருந்துச்சு..." என்றாள் போலியான வெக்கத்தை முகத்தில் பூசிக் கொண்டு.

You might also like - Vidiyalukkillai thooram... A story that focuses on social problems!

நிரஞ்சனா ஆச்சர்யமும் சந்தோஷமும் பொங்க "ஓ... சார் கிஃப்ட் எல்லாம் வாங்கித் தந்தாரா..? ஆனா இந்துமா எங்களுக்கு அது தெரியாதுடா... அவன் நேத்து உனக்கு உடம்பு சரியில்லேனு சாப்பாடு கூட மேல எடுத்துட்டு வந்து கொடுத்தது பார்த்து தான் நானும் அவரும் பிரமிச்சு போயிட்டோம்...." என வெள்ளை மனமாக பேசிய நிரஞ்சனாவை பார்த்து வெளியே சிரித்தாலும் மனதினுள் தன் நெற்றி காயத்திர்கும் தன் கணவனின் திடீர் அக்கறைக்கும் பதில் தேடிக் கொண்டிருந்தாள்.

 ஆர்யனிர்கோ அந்த நாளே புதிதாக தோன்றியது. சில நாட்களாக ஏதோ காரணத்தால் இருண்டு போன முகம் திடீரென்று மங்காத சிறு புன்னகையை குத்தகைக்கு எடுத்தது போல் சந்தோஷத்தோடு காணப்பட்டான்..

அலுவலகத்தில் எல்லோரின் காலை வணக்கத்திர்கும் மலர்ந்த முகத்துடன் பதில் கூறிய தன் நண்பனை வித்தியாசமாக பார்த்த ஷ்யாம் "குட் மானிங் பாஸ்..." என்றான் சந்தேகம் நிறைந்த முகத்துடன்...

நண்பனின் முக பாவனையில் சிரித்தவாறு "வெரி குட் மானிங்டா மாப்ஸ்..." என்றவன் கோப்புகளை ஆராயத் தொடங்கி விட, பல வருடங்கள் கழித்து "மாப்ஸ்" எனும் வார்த்தையில் நெகிழ்ந்து போனான் ஷ்யாம்.

தொடரும்

Episode # 02

Episode # 04

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.