(Reading time: 6 - 12 minutes)

01. காதலை உணர்ந்தது உன்னிடமே - 01 - சித்ரா. வெ

யர் மந்திரங்கள் ஓத, வந்திருந்தவர்கள் அட்சதை தூவ, ஐயர் கையில் எடுத்து கொடுத்த தாலியை சம்யுக்தாவின் கழுத்தில் கட்டினான் பிருத்வி ராஜ்.

வடபழனி முருகன் கோவிலில் திருமணம், முருகனை வழிபட வந்தவர்கள், அந்த திருமணத்தையும் கண்டு கொண்டே சென்றனர்.

திருமண ஜோடியை கண்டவர்களில், ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு என்று சொல்லாமல் சென்றவர்கள் யாருமே இருக்க முடியாது, அவர்கள் இருவரையும் தனி தனியாக பார்த்தாலே அழகு, இருவரையும் ஒன்றாக பார்த்தால் சொல்லவா வேண்டும்!!! இன்னும் அவர்கள் பேரைக் கேட்ட சில பேர், அவர்கள் பேர் பொருத்தம் கூட பிரமாதம்!!! என்று சொல்லிவிட்டு சென்றனர்.

Kadalai unarnthathu unnidameதாலிக்கட்டியதும் நடக்க வேண்டிய சடங்குகளை ஐயர் நடத்திக் கொண்டிருந்தார், அவர் சொல்ல சொல்ல பிருத்வி அதையெல்லாம் கோபமாக செய்து கொண்டிருந்தான் என்றால், அந்த திருமணத்திற்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அந்த சடங்குகளை செய்து கொண்டிருந்தாள் யுக்தா.

ஐயர் நிலைமை தான் ரொம்ப மோசம்..

இப்படி ஒரு திருமணத்தை அவர் இதுவரை நடத்தியிருக்கமாட்டார், கல்யாண பொண்ணு, மாப்பிள்ளை தான் இப்படி இருக்காங்கனு பார்த்தா, திருமணத்திற்கு வந்திருந்த ஒருத்தர் முகத்தில் கூட சந்தோஷமே இல்லை, (இந்த திருமணத்திற்கு வந்தவங்க ஒருத்தர் கூடவா சந்தோஷமா இல்லைனு நீங்க கேட்பது புரிகிறது, ஏனென்றால், பொண்ணு மாப்பிள்ளையோட சேர்த்து மொத்தம் எட்டு பேர் தான் இந்த திருமணத்திற்கு வந்தது) எது எப்படி இருந்தாலும், இது அவர் நடத்தும் திருமணம், இந்த பந்தத்தில் இணையும் இருவரும் நன்றாக வாழ வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு, அவர் சடங்குகளை செய்து கொண்டிருந்தார்.

சடங்குகள் முடிந்தது என்று ஐயர் சொன்னதும் உடனே அங்கிருந்து பேசிக் கொண்டிருந்த தன் தாய் தந்தையிடம் வந்தான் பிருத்வி, "அம்மா எல்லாம் முடிஞ்சுது இல்ல??? இதுக்கு மேலே எந்த சடங்கா இருந்தாலும் நீங்க பார்த்துக்கங்க நான் வரேன்" என்று அவன் அம்மா வளர்மதியிடம் கூறிவிட்டு வேகமாக சென்றுவிட்டான்.

"என்ன மதி?? இவன் பாட்டுக்கு போறான், நீ பாட்டுக்கு அமைதியா இருக்க?? என்று தன் மனைவியிடம் கேட்டார் செந்தில்.

"என்னை என்ன பண்ண சொல்றீங்க?? இவன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம், இதுல இவன்கிட்ட இன்னும் ஏதாவது சொன்னால் அவன் கோபப்படுவான்"

"சரி மதி, பிருத்வி எங்கே என்று  சுஜாதா கேட்டால் என்ன சொல்லுவ??? என்று கேட்டார் செந்தில்.

You might also like - Krishna Saki... A family oriented romantic story...

உடனே யோசித்த வளர்மதி, தன் மகள் பிரணதியை அழைத்தார், உடனே அங்கு வந்த பிரணதியிடம் "பிரணதி உங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்சதும் கிளம்பிட்டான், அதனால நாமும் வீட்டுக்கு போலாம், நீ சுஜாதா அத்தைகிட்ட இந்த விவரத்தை சொல்லிட்டு, அவங்களையும் வீட்டுக்கு வர சொல்லிட்டு வா, நாங்க கார்க்கிட்ட வெய்ட் பண்றோம்" என்று சொல்லிவிட்டு செந்திலை கூட்டிக் கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றாள், "ஏன் இப்படி சின்ன பொண்ணுக்கிட்ட சொல்ல சொல்ற, சுஜாதா தப்பா நினைக்க மாட்டாளா??" என்று கேட்டார் செந்தில்.

 அவளால் சுஜாதாவின் முகத்தை பார்த்து இந்த விஷயத்தை கூற முடியுமா என்று தெரியவில்லை, அதனால்தான் அவள் பிரணதியை அனுப்பியது, ஏற்கனவே இப்படி ஒரு கல்யாணம் நடக்க தான் தான் காரணம் என்று அவளுக்குள் ஒரு குற்ற உணர்வு அதை மனதில் நினைத்து கொண்டு செந்திலிடம் எதுவும் பேசாமல் சென்றாள் வளர்மதி.

சடங்குகள் முடிந்து பிருத்வி இப்படி போனதும், ஒரு சேர் போட்டு உட்கார்ந்து விட்டாள் யுக்தா, அவள் அருகில் இருந்த சாவித்திரியிடம் "சாவிம்மா இந்த தலையில் வச்சிருக்க ஜடையை கொஞ்சம் எடுங்களேன், எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு" என்று கூறிய யுக்தாவிற்கு தடை விதித்தாள் சாவித்திரி.

"இங்க பாரு யுக்தா, இந்த ஜடையை இப்போ கழட்டக்கூடாது, பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு போய் பாலும் பழமும் சாப்பிட்டதும் தான் இதை கழட்டனும், அதுவரைக்கும் பொறுத்துக்கோம்மா" என்றாள்.

"சாவிம்மா இது எவ்வளவு வெய்ட்டா இருக்கு பாருங்க, கழுத்தை இப்படி அப்படி திருப்ப முடியல" என்று யுக்தா சாவித்திரியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அம்மா சொன்ன விஷயத்தை இவங்கக்கிட்ட எப்படி சொல்வது என்று தயங்கி தயங்கி அவர்கள் அருகில் வந்தாள் பிரணதி.

பிரணதியை முதலி பார்த்த சாவித்திரி, அப்பொழுதான் பிருத்வியும் அவன் அப்பா அம்மாவும் இல்லாததை பார்த்தாள், " என்னம்மா பிரணதி என்ன விஷயம்??? ஆமாம் அம்மா, அப்பா, அண்ணா எல்லாரையும் எங்க காணோம்???" என்று கேட்டாள்.

"அதுவந்து அத்தை..... ஆமாம் சுஜாதா அத்தை எங்கே?? அவங்ககிட்ட பேசனும்" என்று தயங்கி தயங்கி கேட்டாள் பிரணதி.

"அதோ சுஜாதாவும் யுக்தாவோட அப்பாவும், ஐயர்கிட்ட ஏதோ பேசிகிட்டு இருக்காங்க" என்று அவர்களை காண்பித்து, சுஜாதாவை அருகில் அழைத்தாள் சாவித்திரி.

அருகில் வந்த சுஜாதா, பிரணதி தயக்கமாக நின்றிருப்பதை பார்த்துக் கொண்டே, சாவித்திரியிடம் " என்ன அக்கா, எதுக்கு கூப்பிட்டீங்க?? என்றாள்.

அதற்கு சாவித்திரி பதில் கூறும் முன்னே, பிரணதியே பேசினாள், "அத்தை கல்யாணம் முடிஞ்சதும் அண்ணா கிளம்பிட்டார், நாங்களும் வீட்டுக்கு போகிறோம், உங்களையும் வீட்டுக்கு வர சொல்லி அம்மா சொன்னாங்க" என்று சொல்லிவிட்டு அவர்கள் பதிலுக்கு கூட காத்திராமல் சென்று விட்டாள் பிரணதி.

"என்ன சுஜாதா, பொண்ணும் மாப்பிள்ளையும் ஒன்னாதானே வீட்டுக்கு போகனும்??? சரி மாப்பிள்ளை தான் கோபமாக இருக்காரு, இவங்களுக்கு என்ன ஆச்சு? யுக்தாவையும் இவங்க கூடவே கூட்டிட்டு போயிருக்கலாமே??

"அக்கா ஏதோ இந்த கல்யாணம் நடந்ததே பெரிய விஷயம், இதுல இதையெல்லாம் நாம எதிர்பார்க்க முடியுமா?? ஏதோ வீட்டுக்கு வர சொல்றாங்களே அதுவே போதும், நான் அவர்கிட்ட சொல்றேன், நாம கிளம்புவோம்"

"என்ன சுஜாதா, தெய்வ சன்னிதானத்துல இவங்க கல்யாணம் நடந்திருக்கு, முறைப்படி ரெண்டு பேரும் சேர்ந்து முருகனை கும்பிட்டு போகனும், அதுதான் நடக்கல, ஏதோ சங்கடங்களோடு இந்த கல்யாணம் நடந்திடுச்சு, இனிமேயாவது இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கனும்னு , இவங்க பேர்ல முருகனுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம் வா " என்று அழைத்த சாவித்திரிக்கு மறுப்பேதும் சொல்லாமல் சென்றாள் சுஜாதா,

அவர்கள் செல்வதற்கு முன் அவர்களை தடுத்த யுக்தா "சாவிம்மா அதான் நீங்க சொன்ன சடங்குகள் எதுவும் நடக்க போறதில்லையே?? அப்புறம் எதுக்கு இந்த ஜடை, இதை கழட்டுங்க" என்றாள்.

அதைக் கேட்டு முறைத்த சுஜாதாவை கண்களால் சமாதானம் செய்த சாவித்திரி, ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே அதை கழற்றினார்.

முருகனிடம் மனமுருகி யுக்தா மற்றும் பிருத்விக்காக வேண்டிக் கொண்டனர் சாவித்திரியும் சுஜாதாவும். பின் வெளியே வந்ததும், சுஜாதா சாவித்திரியிடம் "அக்கா உங்க மச்சினர்கிட்ட சொல்லி வண்டியை எடுக்கச் சொல்றேன், நீங்க யுக்தாவை கூட்டிக்கிட்டு வெளிய வாங்க" என்று கூறிவிட்டு சென்றாள்.

விஷயத்தை கேள்விப்பட்ட மாதவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, தன் மகளுக்கு இப்படி ஒரு திருமணம் நடக்கும் என்று அவர் கனவில் கூட நினைக்கவில்லை, அவருக்கு பிருத்வியின் வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை, ஒரு கால் டாக்சி ஏற்பாடு செய்து அவர்கள் மூவரையும் அனுப்பிவிட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார்.

"காரில் கண்களை மூடி படுத்துக் கொண்டிருந்த தன் மகளை பார்த்து கொண்டு வந்தாள் சுஜாதா, இந்த திருமணத்தில் துளி கூட விருப்பம் இல்லாமல் அவள் இருப்பது சுஜாதாவிற்கு கஷ்டமாக இருந்தது, இப்படி ஒரு திருமணம் நடக்க தான் தான் காரணம் என்று அவள் மணம் கலங்கியது.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:933}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.