(Reading time: 10 - 20 minutes)

17. நேசம் நிறம் மாறுமா - தேவி

காணி நிலம்வேண்டும், -- பராசக்தி காணி நிலம்வேண்டும்; -- அங்குத்

தூணில் அழகியதாய் – நன்மாடங்கள் துய்ய நிறத்தினவாய் -- அந்தக்

காணி நிலத்திடையே -- ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்; -- அங்குக்

கேணி யருகினிலே – தென்னைமரம் கீற்று மிளநீரும்,

பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம் பக்கத்திலே வேணும்; -- நல்ல

முத்துச் சுடர்போலே – நிலாவொளி முன்பு வரவேணும்;-அங்குக்

கத்துங் குயிலோசை-சற்றே வந்து காதிற் படவேணும்;-என்றன்

சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந் தென்றல் வரவேணும்.

                                                                     பாரதியார்

Nesam niram maaruma

திருமணம் முடிந்த மறுநாள் காலை பிரகாஷ் அம்மா அப்பாவும், சூர்யா , வாணி மதியின் அப்பா அம்மா என எல்லோரும் ஆதியின் வீட்டிற்கே வந்து விட வீடு களை கட்டியது.

ஜானகி ஆதியிடம் “ஆதி, இன்று எங்களோடு நீயும் நம் கிராமத்திற்கு வருகிறாய் தானே?” என்று வினவ,

“வருகிறேன் அம்மா “ என்றான். ஜானகி, ராகவன் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. அந்த நேரம் வாணியை புகுந்த வீடு கொண்டு விட, மீனாட்சி சுந்தரம் தம்பதியர் வர அவர்களும் ஆதியின் சொல் கேட்டு மகிழ்ந்தனர்.

வாணியை சூர்யாவுடன் சேர்த்து முறைப்படி ஆரத்தி எடுத்து மதியும், ஜானகியும் வரவேற்க, அங்கே ஏற்கனவே இருந்த பிரகாஷ், அதிதி இருவரும் அவர்களை ஓட்ட ஆரம்பித்தனர்.

“குட்டிமா, சூர்யாவிற்கு இன்று விடிந்ததே தெரியவில்லையாம். நம்ம ஆதி மச்சான் போன் செய்த பிறகுதான் எழுந்தாராம்” என்று அதியிடம் கேட்க,

“நீங்க வேற ... நம்ம வாணிக்கு எங்க இருக்கோம்னே தெரியலயாம். மீனாட்சி அத்தை வந்து கதவை தட்டோ தட்டி , எங்க லாக்ஐ உடைக்க வேண்டி வருமோ யோசிக்கும் போதுதான் மேடம் கதவை திறந்தாங்களாம்” என்று அவள் பங்கிற்கு ஓட்டினாள்.

சூர்யாவோ “வாணி டார்லிங், நம்ம பிரகாஷும், அதியும் யாரால எழுந்ததுன்னு நினைக்கிற. ஆதி அண்ணா என்னை எழுப்பின பிறகு நான் கால் பண்ணப் புறம் தான் எழுந்ததே. அதிலும் அதி சிஸ்டர் அதுக்குள்ள ஏன் எழுப்பறனு கேள்வி வேற” என்று வார, எல்லோரும் சிரித்தனர்.

கேலி, கிண்டல், கால் வாரல்களோடு  காலை டிபன் முடிய, எல்லோரும் ஆதியின் சொந்த ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகினர். இன்றைக்கும் பெரியவர்கள் அனைவரும் ஒரு காரில் டிரைவரோடு கிளம்ப, மற்றறொரு காரில் இளைஞர் பட்டாளம் கிளம்பியது.

You might also like - Vasantha bairavi... A neat family story...

ன்று காஞ்சிபுரம் சென்றது போல் ஆதி டிரைவர் சீட்டில் அமர, பிரகாஷ் எதை பற்றியும் கவலைபடாமல் அதிதியோடு பின் சீட்டில் ஏறிக் கொண்டான். மதியும், வாணியும் நடு சீட்டிற்கு போக, அவர்களை தடுத்த சூர்யா,

“அண்ணி, நீங்க அண்ணாவோடு பிரன்ட் சீட்டிற்கு போங்க” என்று கூறி விட்டு, வாணியோடு அமர்ந்து கொண்டான்.

மதி ஆதியை முறைக்க ஆதியோ சூர்யாவை பார்த்து “ஏன்டா நீ ... முன்னாடி வரலாம் ல.. “ என்றான்.

“எதுக்கு? இப்போ நானும் லைசென்ஸ் ஹோல்டர் தான். நான் என் பொண்டாட்டியோட தான் உக்காருவேன் “ என்று வம்பு வளர்த்தான்.

மதி “இததான் நான் சொன்னேன். உங்களாலே ... “ என்று சங்கடபட்டாள்.

சூர்யா ஆதியிடம் “அண்ணா, நீ பிரகாஷை முன்னாடி கூப்பிடுக்கோ. “ என, ஆதியோ “டேய். அவர் நம்ம வீட்டு மாப்பிளை. ஞாபகம் வச்சுக்கோ“ என்றான்.

“அப்படின்னா நான் கூட மதி அண்ணி வீட்டு மாப்பிள்ளை தானே. அதுவும் புது மாப்பிள்ளை. “

“உனக்கு முன்னாடி நான் தான் அங்க முதல் மாப்பிள்ளை”

“யாரு இல்லன்னா. ஆனா நீதான் அத்தை மாமா கிட்ட நீ அந்த வீட்டு பையன் மாதிரின்னு சொன்ன. நான் அதெல்லாம் கமிட் பண்ணிக்கலையே “ என்று வார,

ஆதியோ “வச்சான் டா ஆப்பு. இப்போ நான் அப்படியெல்லாம் இல்லைன்னு சொன்னால் வினு கிட்ட பாட்டு வாங்கனுமே. “ என்று முணுமுணுத்தபடி “ராசா நீ அங்கேயே உக்கர்ந்துக்கோ. என்னை வம்புல மாட்டி விட்றாத .. வினும்மா ப்ளீஸ் அவனோட மொக்கைலேர்ந்து என்னை காப்பத்தவாது முன்னாடி உக்காரு” என்றான். சூர்யாவோ ... “ஹா ..ஹா..” என்று சிரித்தான்.

மதி ஆதியை பார்த்து சற்று கோபமாக முன்னாடி அமர, அவளிடம் “சாரி .. வினும்மா ..” என்றபடி வண்டியை ஸ்டார்ட் செய்தான். கொஞ்ச நேரம் எல்லோரும் கல்யாண கலாட்டாக்களை பற்றி பேசி கொண்டிருந்தனர்.

ஆதி அன்று மதியை ஒவ்வொரு முறையும் மதியை வினு என்றே அழைத்தான். சற்று நேரம் கழித்து அதிதி “அண்ணா, அண்ணியை எல்லோரும் மதி என்றுதான் கூப்பிடுகிறோம். நீ மட்டும் என்ன வினு என்கிறாயே ? ஏன்?”

மதியை பார்த்தபடி ஆதி “எனக்கும் உன் அண்ணிக்கும் மூன்று வயது தான் வித்தியாசம். அவள் பிறந்த போது நம் அம்மாதான் அவளுக்கு வெண்மதி என்று பெயர் வைத்தார்கள். அப்போ எனக்கு முழு பெயர் சொல்ல வராமல் வெண்ணு என்று கூப்பிட்டேன். நான் ஈஸியாக கூப்பிட வினு என்று சொல்லி தந்தார்கள். கொஞ்ச நாளில் எல்லோரும் மதி என்று மாற்றி விட, நான் மட்டும் வினு என்றுதான் கூப்பிடுவேன்.”

“ஆனால் இத்தனை நாள் அப்படி கூப்பிட்டதில்லியே. “

நான் அவளோடு நன்றாக பேச ஆரம்பிப்பது இப்போதுதான். அதனால் பழைய படி வினு என்று கூப்பிடுகிறேன். ஏன் உன் அண்ணி என்னை எப்படி கூப்பிடுவாள் என்று கேள்.”

ஏன் ஆதி என்றுதானே.

அவளிடமே கேள்.

மதி ஆதியை பார்த்த படி “அத்தான் என்று தான் கூப்பிடுவேன். “ என்றாள்.

எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர். அதிதிக்கும், வாணிக்கும் எதுவுமே புரியவில்லை. சூர்யாவிற்கு மதி வீட்டாரோடு பழகியது கொஞ்சம் ஞாபகம் இருந்தாலும் இது எல்லாம் நினைவு இல்லை.

சூர்யாவிற்கும், அதிதிக்கும் இவ்வளவு தூரம் பாசமாய் இருந்தவர்கள் எப்படி இத்தனை நாள் பேசாமல் இருந்தார்கள் ... எப்படி குடும்பத்தோடு தொடர்பு இல்லாமல் போனது என்று இவர்களுக்கு புரியவில்லை. அதை ஆதியிடம் கேட்கலாம் என்று எண்ணினாலும் அதற்கு சந்தர்ப்பம் அமையாததால் அப்படியே விட்டு விட்டு வேறு பேச ஆரம்பித்தனர். எல்லோரும் கிராமத்திற்கு வந்து சேரும்போது இரவாகி விட்டதால் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.

றுநாள் காலையில் எழுந்து எல்லோரும் வேகமாக கிளம்பி கோவிலுக்கு சென்று பூஜை முடித்தனர். மூன்று பேருமே திருமணமாகி முதல் முறை வருவதால், சற்று பெரிய பூஜைக்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பூஜை முடித்து வீட்டிற்கு வந்தவர்கள் வீட்டை சுற்றி பார்த்தனர். ஆதி வீட்டில் எல்லோருமே சிறு வயதிற்கு பிறகு இப்பொழுதுதான் வந்திருப்பதால், அவர்களுக்கு அடையாளமே தெரியவில்லை.

நல்ல பெரிய வீடு. கீழே சமையல் அறையோடு, டைனிங் ஹால், நான்கு அறையும் மேலே நான்கு அறையும் உண்டு. எல்லவற்றுக்கும் அட்டாச்ட் பாத்ரூம். தவிர தனியாக வெளியிலும் பாத்ரூம் வசதி இருந்தது. மொட்டை மாடி வேறு. வெயில்லுக்கு இதமாக சுற்றிலும் தென்னை மரங்களும், வேறு பழ மரங்களும் இருப்பதால் காற்று இதமாக வீசியது. தோட்டத்தின் நடுவில் பெரிய பம்ப் செட் வேறு இருந்தது. பம்ப் செட் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் எப்பொழுதும், ஷார்ட்சும், துண்டும் இருக்கும்.

ஆதி தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு, பம்ப் செட் அருகே வந்தவன், வேகமாக டிரெஸ்ஸை கழட்டி விட்டு, ஷார்ட்ஸ் மாற்றிக் கொண்டு குளிக்க ஆரம்பித்தான். அவனை பார்த்து விட்டு, சூர்யாவும், பிரகாஷும் இறங்கினர். அதிதியையும், வாணியையும் அவர்கள் கணவன்மார்கள் உள்ளே இழுத்து விட, ஆதியோ , மதியை பார்த்தவன் அவள் வேண்டாமென்று தலையசைக்கவும், விட்டு விட்டான். மதி அப்படியே கொஞ்ச தூரம் தோப்பிற்குள் சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.