(Reading time: 35 - 69 minutes)

னால் இவன் செயலைத்தான் அவள் புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. இவன் போலீஸ் ஆஃபீசர் என்பது கூட அவளுக்கு தெரியாது….காஷுவல்வேரில் வந்து கன்னத்தில் அடித்தால் என்ன நினைப்பாளாம் அவள்?

அவள் வீடு தெரியும் இவனுக்கு…..அவள் வேலை செய்யும் அலுவலகமும் தான். அதுவரை அவளிடம் பேச அவன் முயன்றது இல்லை…..வேலைக்கு போய் செட்டிலான பின் அவளை அப்ரோச் செய்வது தான் நியாயமாக பட்டிருந்தது அது வரை.

இப்பொழுதோ இவன் செயலை விளக்கியாக வேண்டும் என்று தோன்றிவிட்டது. போலீஸ் ஆஃபீசராக வீட்டிற்கோ அவளது ஆஃபீஸிற்கோ அவளை தேடிச் செல்வது அப்படி ஒன்றும் நல்ல இமேஜை அவளுக்கு உருவாக்காது என்ற நினைவில் முடிந்த வரை அவளை வெளியிடத்தில் வைத்து சந்திக்க முயன்றான் தான்….ட்ரெய்னிங்கில் இருப்பதால் அகாடமியைவிட்டு வெளிச்செல்லும் வாய்ப்பு இவனுக்கு வீக் என்டில் மட்டும் தான் உண்டு..அப்பொழுது எத்தனை முறை அவளை அவன் பார்த்துவிட முடியும்…?

அப்படி அவன் அவளைப் பார்க்க நேர்ந்த ஓரிரு சமயங்களிலும் அனல் பறக்கும் ஒரு ஆசிட் பார்வையுடன் கூட வரும் நட்புக் கூட்டத்துடன் விலகிப் போய்விடுவாள். பேசும் அளவிற்கு வாய்ப்பு கொடுத்ததே இல்லை.

இந்த சமயத்தில் தான் ப்ரபாத் சங்கல்யா திருமணம்.

You might also like - Moongil kuzhalanathe... A family drama...

அடுத்து அவனுக்கு போஸ்டிங் சென்னையில் அரண் க்ரூப்ஸ் பாம்ப்ளாஸ்ட் கேஸ்….சரநிதா ஸ்போர்ட்ஸ் நியூஸ் கவரேஜிற்காக அப்ராட் போய் விட்டாள்.

“அண்ணி எதோ நீங்க என்னைப் பத்தி சொன்னத வச்சுதான் இன்னைக்கு என்னைப் பார்த்த பிறகும் டின்னர்ல இருந்து எழுந்து ஓடலை அவ….இப்பவாவது சொல்லுங்க உங்க ரெக்கமென்டேஷன் இல்லாம என் கேஸ் பாஸாகுமா என்ன?....ஆனால் அப்ரோச் டெக்னிக்லாம் எங்க அண்ணாட்ட கேட்க வேண்டி இருக்குது…”

சிரித்தாள் சங்கல்யா….

“நீங்கல்லாம் ப்ளான் போட்டா போட்டுகிட்டே இருக்க வேண்டியதுதான்….நான் ஒரு உருப்படியான ஐடியா சொல்றேன்…வொர்க் அவ்ட் ஆகுற ஒரே ஐடியா…”

 “என்னது அண்ணி…?”

“ஒழுங்கா போய் அவங்க அம்மாட்ட பொண்ணு கேளுங்க….அவ அம்மா சொன்னா கேட்பா…”

“நான் கல்யாணத்துக்கு வழி கேட்கேன்…நீங்க கம்பால அடிவாங்க வழி செய்றாப்ல தெரியுது…”

“ஏன்?”

“இது அவள கம்பல் பண்ற மாதிரி ஆகாதா?”

“உங்க அண்ணனுக்கு தம்பியா இருந்துட்டு கேட்க்ற கேள்வியப் பாருங்க…..”

ஒரு நொடி தன் அண்ணியை அதிசயமாக பார்த்தான்.

“சொல்றத சொல்லிட்டேன்…அடுத்து உங்க இஷ்டம்” முடித்தாள் சங்கல்யா.

சங்கல்யாவின் குணத்திற்கு பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் பேசச் சொல்வதென்றால்….நிச்சயம் சரநிக்கு இந்த திருமணத்தில்  சம்மதம் இருக்கிறது என்று தானே அர்த்தம். சரநி சங்கல்யாவோட ஃப்ரெண்ட்….ஆக விஷயம் உறுதியாக தெரிந்திருக்கும்….

“இவன் தேர்ற கேஸா தெரியலை சிக்‌ஸர்…..நாமதான் பார்த்து எதாவது செய்யனும்…சித்திட்ட சொல்லி நாம போய் சரநி வீட்ல பேசலாம்” ப்ரபாத் தான்.

‘உங்க அண்ணி குணத்துக்கு அடி மனதில் என்னை கல்யாணம் செய்றதுல சம்மதம் இல்லைனா நடிப்புக்குன்னு கூட அவளால ஃபியான்சின்னு ஒத்துக்க முடியாது…..அதான் அவள் ஃபியான்சின்னு ஒத்துகிட்டா அதுக்கப்புறம் இந்த கல்யாண கனவு னலாம்…..இல்லைனா இது கண்டிப்பா நடக்கவே போகாத விஷயம்னு ஒரு முடிவோடதான் முதல்ல அவட்ட அப்படி ஒரு ப்ரபோசல் வச்சேன்…’ ப்ராபாத் முன்பு சொன்னது இப்போது இவனுக்கு ஞாபகம் வருகிறது. பொண்ணோட மனதை பத்தி உறுதியாய் தெரியாமல் ஆசையை வளர்க்க கூடாது என்பவன் இப்பொழுது இப்படி சொல்வது என்றால்….

அண்ணனை திரும்பி ஒரு லுக் விட்டான் ப்ரவிர்.

 “ நாங்கல்லாம் இப்படித்தான் இழுத்தடிச்சமா….பொண்ண பார்த்த அடுத்த அரை மணி நேரத்துல அவ என் ஃபியான்சிடா…”

‘ஏய் ஃபைவ் ஃபீட் டெய்ரி மில்க் உன்னால என் மானம் போகுது’ மனதிற்குள் சரநிதாவிடம் குற்றம் சொன்னான் போலீஸ்காரன்.

“உனக்கு சரநியா வந்து ப்ரபோஸ் செய்தாதான் போல…” சீண்டினான் அண்ணன்.

‘சாக்லேட் நீ இன்னைக்கு சட்னி.’ ஒரு முடிவோடு கிளம்பினான் காதலன்.

டந்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த சரநி “எனக்கு இன்னுமே இந்த ஒரு விஷயம் ரொம்ப…. இல்ல…. கொஞ்சம் இன்செக்யூர்டா இருக்குது ப்ரவிர்…அவங்கல்லாம் செலிப்ரெடீஸ்…அதோட ரிச் பிபுள்….உண்மையில் நீங்க அடிச்சதுக்கெல்லாம் நான் ஓடி ஒளியலை…அந்த இன்சிடென்ட் நடந்த அன்னைக்கே எனக்கு எல்லா விஷயமும் புரிஞ்சிட்டுது….அந்த பொண்ணு கல்ப்ரிட்..நீங்க போலிஸ்…என்னை தப்பா புரிஞ்சிட்டீங்கன்னு…பட் என் பயம் உங்க பேக்ரவ்ண்ட்…உண்மையில் எனக்கு அந்த மீட்டுக்கு பிறகு உங்க மேல ஒரு அட்ராக்க்ஷன்…உங்களைப் பத்தி என்னால முடிஞ்ச வரை விசாரிச்சேன்….அப்பதான் நீங்க ப்ரபாத் அத்தானோட தம்பினு தெரிய வந்துச்சுது…நான் சாதாரண மிடில்க்ளாஸ் கேர்ள்….” அதற்கு மேல் பேச முடியாமல் நிறுத்திவிட்டாள் அவள்..

ஆழ்ந்து அவளைப் பார்த்தான்….

”அண்ணி பேக்ரவ்ண்ட் கொஞ்சமாவது உனக்கு தெரிஞ்சிருக்கும்தானே…..அண்ணாவையும் அண்ணியையும் சேர்த்து வச்சுருப்பது அன்பு…….அவங்க ஃபினான்ஸ் இல்ல….பணம் இருக்றவங்கல்லாம் ரிச் கிடையாது….அன்பு இருக்றவங்க…அதுவும் நதி மாதிரி பொங்கி ஓடுற அன்பு இருக்றவங்கதான் ரிச்…..பணம் இல்லாதவனுக்கு பணம் குடுத்தா அவன் வாழ்க்கை செழிக்கும்னு எந்த கேரண்டியும் இல்லை….ஆனா இந்த அன்புங்குற ஜீவ நதி இருக்கே அது ஓடுற கரைல பாலை மண்ண அள்ளிப் போட்டா கூட நனைக்கும்…..என்ரிச் செய்யும்…செழிக்க வைக்கும்… அந்த வகையில நீயும் நானும் ரிச்சா இருக்றோம்ன்றது என் நம்பிக்கை… தவிர அண்ணா தான் க்ரிகெட்டர்…..நான் ஒரு பொலீஸ் ஆஃபீசர்…..உன்னை மாதிரி பண வகையில் மிடில் க்ளாஸ்தான்…”

மலர்ந்திருந்தது சரநிதாவின் முகம்.

ன்று இரவு பார்டி செலிப்ரேஷன் என எல்லாம் முடிந்து தங்கள் அறைக்கு திரும்பினர் அரணும் அவன் மனைவியும்.

“ஹயா தூங்கிட்டு தான இருப்பா ஜீவா….”

பார்ட்டியிலிருந்து குழந்தையை தங்களுடன் எடுத்துக் கொண்டு கிளம்பியிருந்தனர் அனவரதனும் புஷ்பமும்.

“அடுத்த ரூம்தான விதுமா…ஹயா நம்ம தேடினா கண்டிப்பா ஆன்டியும் அங்கிளும் நம்ம எழுப்பிடுவாங்கடா” சொல்லியபடி புடவையில் இருந்தவளை பின்னிருந்து அணைத்தான் தன்னோடு.

“அதெல்லாம் மாட்டாங்க….இன்னைக்கு அம்மாவே சமாளிச்சு தூங்க வச்சுடுவாங்க…”

“ஏன்…இன்னைக்கு என்ன…?”

“இன்னைக்கு நான் புடவை கட்டி இருக்கனே”

“சோ?”

“நான் அம்னீஷியால அம்மா வீட்ல இருந்தேன்ல அப்ப நீங்க வீட்டுக்கு வந்தப்ப நான்  புடவை கட்டி இருந்தேன்… எனக்கு வீட்ல வச்சு சாரி கட்ட எவ்ளவு பிடிக்காதுன்னு உங்களுக்கே தெரியும்.”

அவள் முகத்தை தன்னை நோக்கித் திருப்பிப் பார்த்தான் கணவன்.

“எதுக்கு கட்டினேன்னு ரீசன்லாம் கிடையாது..ஜஸ்ட் அன்னைக்கு தோணிச்சு கட்டினேன்….அது தான் உண்மை…என் ஹஸ்பண்ட் பத்தி அப்ப எதுவும் எனக்கு  நியாபகம் இல்லை…ஆனா கூட ஏதோ ஒரு வகையில உங்க ஞாபகமாத்தான்  நான் சாரி கட்டியிருப்பேன்னு என் அம்மாவுக்கு நம்பிக்கை….ஏன்னா நீங்க வேற அன்னைக்கு வேஷ்டி சட்டைனு அதுக்கு மேட்சா வந்து என்னை தூக்கிட்டு போனீங்க… “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.