(Reading time: 14 - 28 minutes)

ரு நாள் மாலை நேரம் அலுவலகத்தில் ஆர்யனின் கேபிேனாடு அமைக்கப்பட்டிருந்த ஓய்வு அறையில் அமர்ந்து தேனீர் அருந்தியப்படி ஷ்யாமும் ஆர்யனும் எதையோ பற்றி தீவிரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

"ரங்கன் சார் கிட்ட இதை பத்தி கேட்டுடலாம் பாஸ்... லீகல்லி மூவ் பன்னா எஃபீஷியன்டா இருக்கும்னு நினைக்கிறேன்..." என்ற ஷ்யாமிடம் 'சரி' என்பது போல் தலையசைத்தவன்

"உனக்கு இன்னைக்கு எதாவது ஷெட்யூல் இருக்கா ஷ்யாம்...?" .

"இல்லை பாஸ்..."

"இந்த 'பாஸ்...பாஸ்' னு என்னை கொள்ளை கூட்டத்து தலைவன் மாதிரி கூப்பிடறத நிறுத்திட்டு நோர்மலா கூப்பிடு டா ...தென் கெட் ரெடி... கொஞ்சம் ரிலேக்ஸ் பன்னிட்டு அப்படியே டின்னர் முடிச்சிட்டு உன்னை ட்ராப் பன்றேன்.." என்றான் நட்பான குரலில்.

அடுத்த அரை மணி நேரத்தில் கார் காந்தி நகர் பப் வசதியுடன் கூடிய உயர் ரக ஹோட்டலை நோக்கி பறந்தது. எப்.எம்மில் ஒலித்த குத்து பாடலை ரசித்தவாறு ஸ்டியரிங்கில் விரலால் தாளம் தட்டியவனை பார்த்து மெலிதாக சிரித்த ஷ்யாம்.

"ம்ம்...ஹேப்பி மேன்.. என்னடா இப்போவெல்லாம் மூஞ்சி முழுக்க ஹை வால்ட்டேஜ்ல ட்யூப் லைட் மின்னுது...."

You might also like - Kalyanam muthal kathal varai... A romantic comedy...

"ஹா ஹா... ஒரு வழியா பழைய மோட் ஆன் பன்னிட்டியே... குட்.."

"சமாளிக்காதடா...கேட்டதுக்கு பதில் சொல்லு...."

"ஸ்பெஷல் ரீசன் ஒன்னுமில்ல.."

"அப்போ ஆர்டினரி ரீசன் இருந்தா சொல்லு கேப்போம்....? சரி சிஸ்டர் எப்படி இருக்காங்க..??"

இந்திராவை பற்றி கேட்டதும் உதட்டில் பூத்த சிரிப்பை மறைக்க முயன்று தோற்றவன் "ம்ம.. இருக்கா..." என்றான் ஒரு வார்த்தையில். ஐந்து நட்சத்திர ஹோட்டலை அடைந்ததும் இருவரும் பேசிக் கொண்டே  பப் பகுதியினுள் நுழைந்தனர்.

மேல்நாட்டு வழக்கத்தை சபை நாகரிகம் என்ற பொய்யான போர்வையை போர்த்திக் கொண்டு பல நாடுகள் போற்றும் பாரம்பரியமான கலாச்சாரத்தில் நஞ்சை கலக்கும் பணியை பலர் மும்முரமாய் செய்து கொண்டிருந்தனர். வண்ண வண்ண வெளிச்சங்கள் தரையிலும் முகத்திலும் மின்ன 'இதெல்லாம் பழக்கப்பட்டது' என்பது போன்ற பாவனையில் ஆர்யனும் ஷ்யாமும் உள்ளே சென்று கூட்டத்தில் ஐக்கியமாகிக் கொண்டனர். 'இன்னிசை' என்பது மாறி அதிர வைக்கும் இசை அந்த அரங்கம் முழுதும் ஒலித்தது. பிடியில்லாத உயரமான இருக்கையில் அமர்ந்து ஆடுபவர்களை கண்டு தானும் உற்சாகமாக கையை உயர்த்தி அமர்ந்தப்படியே ஆடிய நண்பனை அமைதியாக பார்த்தான் ஷ்யாம். ஏதேதோ யோசனையில் இருந்தவனை

"டேய்... எந்த உலகத்தில இருக்க...??" என ஆர்யன் தோளை தட்டியப் பின் தான் உலகிர்கு வந்த ஷ்யாம் "என்னடா...?" என்றான் சாதாரணமாக..

"டேன்ஸ் ஆடலாமானு எல்லா மொழிலையும் கேட்டுட்டேன்...பதில் சொல்லாம நீ எங்கடா மிதந்துட்டிருக்க..? என்ன அப்படியொரு யோசனை..?"

"ஒ..ஒன்..ஒன்னுமில்ல...யு கோ அன்ட் என்ஜாய்... நான் வரல..."

"சம்த்திங் ஃபிஷி... என்னேனு சொல்லப் போகறியா இல்லையா...?"

"ப்ச்...ஒன்னுமில்லேனு சொல்றேன்ல...."

கொஞ்ச நேரம் மழுப்பியவன் ஆர்யனின் முறைப்பில் தயக்கம் நிறைந்த குரலில் திக்கதித் திணறி "இல்லடா... ஷ்ருதி விஷயத்தை பத்தி சிஸ்டர் கிட்ட  சொல்லிட்டையா..?.." என மென்று விழுங்கி ஒருவழியாக கேட்டே விட்டான்.

'ஷ்ருதி' என்ற பெயரில் இறுகியவனின் கண்களில் வடிக்க முடியாத உணர்வு படர சட்டென்று ஆர்யனின் முகம் சிவந்து இயல்பை தொலைத்தது . ஷ்யாமிர்கு நண்பனின் நிலையை நினைத்து மனம் கலங்கினாலும் ஒரு முடிவோடு பேச ஆரம்பித்தான்.

"டேய் மச்சான் ரிலேக்ஸ்... பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. பட் இது எல்லாம் சிஸ்டர்க்கு  நாளைக்கு வேற யாராவது  சொல்லி தெரிஞ்சிதுனா அப்புறம் பேசி புரிய வெச்சு சரி பன்றது ரொம்ப கஷ்டம்டா... உன் முகத்தை பார்த்தாலே தெரியுது உனக்கு இந்த லைஃப் பிடிச்சிருக்குனு... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எல்லாத்தையும் க்ளியரா பேசி முடிச்சிட்டு உன் விருப்பத்தையும் சொல்லிடு..."

ஷ்யாமின் பேச்சிர்கு சரியென்று தலையசைத்தவனின் கண்களிலோ முகத்திலோ பழைய சந்தோஷம் தடமில்லாது காணாமல் போயிருந்தது. இருவரும் அமைதியாக கிளம்பி உணவை முடித்து விட்டு வீட்டிர்கு புறப்பட்டனர்.

Episode # 03

Episode # 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.