(Reading time: 10 - 20 minutes)

06. ஐந்து - பார்த்தி கண்ணன்

முன்குறிப்பு: அன்பு வாசகர்களுக்கு,  முதலில் இந்தக் கதையினை இவ்வளவு நாட்களாகத் தொடர்ந்து வந்தமைக்காக என் இதயப்பூர்வமான நன்றிகள். எனது இந்த முதல் முயற்சிக்குக் கிடைத்த உங்கள் ஆதரவும்,பாராட்டுக்களும் மனதை நெகிழச்செய்கின்றன. இந்தப் பகுதியினைத் தொடங்கும் முன் நான் சொல்ல நினைத்தது இது தான்.  இந்தக் கதையை கொஞ்சம் அதிகமாகவே வேகப்படுத்தி முடிக்கப்போகின்றேன். நேரமின்மை காரணமாக, இந்தக் கதையை தொடங்கியபோது நான் எழுதத் திட்டமிட்டபடி இப்பொழுது கொண்டு செல்ல இயலவில்லை. ஒரு பக்கத்தை முடிக்கவே கிட்டத்தட்ட இரண்டு மூன்று வாரங்கள் பிடிக்கின்றது. ஆகவே இனியும் இந்தக் கதையினை அதிக எபிசோடுகலாகக் கொண்டு செல்ல விரும்பவில்லை. கதையின் கருவான அந்த சஸ்பென்சையும் சீக்கிரமாகவே வெளிக்கொண்டுவருகிறேன். நான் திட்டமிட்ட பல காட்சிகளை நீக்கிவிட்டேன். நேரடியாக இறுதிகட்டத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். Lets go!!

கே அங்கிள், வந்துட்டே இருக்கேன்" காரை ஓட்டியபடியே போனில் பேசிக்கொண்டிருந்தான் முகுந்த்.

அருகில் அமர்ந்துகொண்டிருந்த நித்யா, அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் பேசுவதை உற்று கவனித்தாள்.

“ரொம்ப அவசரம்,முக்கியமான விஷயம் அங்கிள். நேர்லயே வர்றேன். அஞ்சே நிமிஷம்"

ainthu

போனைக் கட் செய்து வைத்தான்.

ஜேம்ஸின் உடலை அடக்கம் செய்து முடித்த அடுத்த நொடி, நித்யாவை அழைத்துக்கொண்டு படுவேகமாய் புறப்பட்டுவிட்டான்.  இந்த மூன்றாவது மரணம் இப்பொழுது அனைத்தையும் உறுதிப்படுத்திவிட்டது. நடந்த மரணங்கள் எல்லாம் விபத்துகள் அல்ல. திட்டமிடப்பட்ட கொலைகள்.

“உன் அங்கிள் எப்படி ஹெல்ப் பண்ணப் போறார்?” அவள் கேட்டாள்.

“அவர் ரிட்டயர்ட் ஆபிசர். அவருக்கு இருக்கிற காண்டாக்ட்ஸ் வச்சு விசாரிக்க சொல்லப் போறேன். அந்த அரவிந்த் அஞ்சலி யாரு? அவங்க குடும்பமா எங்க இருக்கு, அவங்க ரெண்டு பேரோட சாவுக்கு அப்புறமா அவங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க, எல்லாமே தெரிஞ்சாகனும். இந்த விஷயத்துல சம்பந்தப்பட்ட யாரோ தான் இதுக்கெல்லாம் காரணமா இருக்க முடியும். அவங்க நம்ம கிட்ட வர்றதுக்கு முன்னாடி நாம முந்திக்கனும்"

“அப்போ பேய் இல்லையா?”

“ஜஸ்ட் ஷட் அப் நித்யா"

கார் கோயம்புத்தூரிலிருந்து சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. லேசாக மழை தூறிக்கொண்டிருந்தது. நகரத்தைக் கடந்து அதிகம் போக்குவரத்து இல்லாத சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது. அவர்களின் பின்னால் ஒரு லாரி இவர்களை சீரான தொலைவில் பின்தொடர்ந்து கொண்டிருந்தது. அதை இவர்கள் கவனிக்கவில்லை.

You might also like - En Uyirsakthi... A family oriented romantic story

அந்த லாரியின் அவன் தான் ஒட்டிகொண்டிருந்தான். அவன் இன்று  இவர்களைக் கொல்லத் திட்டமிடவே இல்லை. ஆனால் முகுந்த்தின் அடுத்தகட்ட நடவடிக்கையை அறிந்ததும், இந்த முடிவை எடுத்துவிட்டான். மேலும் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டால் மீண்டும் இவர்கள் இருவரையும் சேர்த்துக் கொல்லும் வாய்ப்பு கிடைப்பது கடினம் என முடிவு செய்துவிட்டான். இப்போது இவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில், அந்த நீண்ட நெடுஞ்சாலையில் இந்த இறந்து வாகனகளைத் தவிர எதுவுமேஇல்லை. சாலையின் வலதுபுறத்தில் பெரிய பள்ளம். அற்புதமான வாய்ப்பு. லாரியை காரை நோக்கி விரட்டினான்.

முகுந்த் வேகமாக வரும் லாரிக்கு வழிவிடும் வகையில் வலது பக்கமாய் ஒதுங்கினான். ஆனால் லாரி இவனை நோக்கி வருவதை கவனித்தான். 

அடுத்த இரண்டாவது நொடியில் லாரி அந்தக் காரை பின்பக்கத்தில் இடித்துத் தூக்கி எறிந்தது. முகுந்த்,நித்யாவின் வீலென்ற அலறல் அந்த பயங்கரமான மோதலின் சத்தத்தை மீறி வெளியே கேட்கவில்லை. கார் காற்றில் வட்டமடித்தபடியே பள்ளத்தில் விழுந்தது.

லாரியை விட்டு அவன் இறங்கி ஓடி வந்து ஆவலோடு பள்ளத்தில் எட்டிப்பார்த்தான். கார் பள்ளத்தில் இருந்த ஒரு சிறிய  மரத்தின் மேல் விழுந்து, அந்த மரம் ஒடிந்து போய், அதில் சிக்கி செங்குத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அதற்குள்ளே அவர்கள் இருவரும் அசைந்துகொண்டிருப்பதைக் கண்டான். நிதானமாய் கீழே இறங்கினான் அவர்களை நோக்கி.

இவன் காரினருகே சென்ற போது , அங்கே காரின் நொறுங்கிய முன்பாகத்தில் சிக்கி முகுந்த் திணறிக்கொண்டிருந்தான்.  நித்யா காரிலிருந்து வெளியே விழும் நிலையில் தொங்கிக்கொண்டிருந்தாள். அவள் பாதி மயக்கத்தில் இருந்தாள்.

முகுந்த்தின் அருகே சென்றான். யாரோ அருகில் வந்து நிற்பதை உணர்ந்துகொண்ட முகுந்த் காப்பாத்துங்க" என்றபடியே திரும்பினான். இவனை கண்டதும் அதிர்ச்சியில் இதயம் ஒரு நொடி நின்றே போனது.

“நீயா? நீ இன்னும் சாகலையா?”

“ஹாய் முகுந்த்..எனக்கு அதிகமா நேரமில்ல..யாரவது வர்றதுக்குள்ள வேலைய முடிக்கணும்" என்றான் அவன்.

அந்த இடிபாடுகளுக்கிடையே மாட்டிகொண்ட தன் காலை வெளியே இழுக்க முயன்றான் முகுந்த்.  ஒவ்வொரு முறை இழுக்கும் போதும் ஒரு கூரிய தகடு காலைக் கிழித்து உயிர் போகும் வழியை ஏற்படுத்தியது. என்ஜினிலிருந்து புகை வரத்தொடங்கியது. நித்யா மூச்சுவிடப் போராடினாள்.

“அரவிந்த்...ப்ளீஸ்..காப்பாத்து..அன்னைக்கு எங்களுக்கு வேற வழி தெரியல.. நாங்க போலீஸ்ல சரண்டர் ஆகத் தயார். தயவு செஞ்சு காப்பாத்து" முகுந்த் கெஞ்சினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.