(Reading time: 14 - 28 minutes)

சும்மா.. பொய் சொல்லாத. நேற்று கூட மாப்பிள்ளை கிட்ட பேசிட்டு உடனே அவகிட்ட பேசியிருக்க”

“ஏன்மா.. அவர் பேசினது கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. அத அவகிட்ட ஷேர் பண்ணிகிட்டேன்”

“ஏன்.. நேத்து வந்தவ கிட்ட நம்ம வீட்டு மாபிள்ளைய விட்டு கொடுத்திருக்க?”

இது இன்னும் அவனுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

“என்னம்மா பேசறீங்க.. ? அவ என்ன மூணாம் மனுஷியா? என் பொண்டாட்டி .. இந்த வீட்டு மருமக. அவகிட்ட சொல்றதுலே என்ன தப்பு?”

“ஆமாடா.. மருமகதான்.. அதுக்காக தலையிலே தூக்கி வச்சுட்டு ஆட சொல்றியா?”

“நீங்க ஆடவும் வேண்டாம்... பாடவும் வேண்டாம்.. என்ன விஷயமா எனக்கு போன் பண்ணீங்க ? அத சொல்லுங்க”

“இங்கே பாரு.. நேத்து பேசின மாதிரி என்னை உன்கூட வெளிநாட்டுக்கு கூப்பிடற வேலை எல்லாம் வச்சுக்காத.. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு சொன்னா நான் வருவேன்னு எல்லாம் நினைக்காத,..அதோட வித்யா டெலிவரி முடிஞ்சாலும் நான் வர மாட்டேன்.. எப்போ நான் பேசின ஒரு வார்த்தைக்காக, என்னை என் பொண்ணுகிட்ட பிரிக்கன்னும்னு நினைசீன்களோ.. இனிமேல் நான் அவள விட்டு வர மாட்டேன்.. அதுக்காக அவ வீட்டுக்கும் போக மாட்டேன்.. நான் இங்கியே தனிய இருந்து, என் பொண்ணையும் பார்த்துப்பேன்.. இத சொல்லதான் கூப்பிட்டேன்.” என்று வைத்து விட்டார்.

ஆதிக்கு சற்று நேரம் திகைப்பாக இருந்தது.. இந்த அம்மா ஏன் இப்படி பேசுகிறார்கள்..? இத்தனைக்கும் நேற்று ப்ரயு மேலோட்டமாகதானே விஷயத்தை சொன்னாள். இதற்கே இப்படி என்றால், ப்ரயு அம்மாவிடம் எப்படி சமாளிக்க போகிறாள்? அவளுக்கு போன் பண்ணலாம் என்று பார்த்தால், அவள் டியூட்டி டைம் .. இப்போ அவளை டென்ஷன் ஆக்க வேண்டாம்.. இரவு பேசிக் கொள்ளலாம் என்று விட்டான்.

ங்கே பிரயுவோ இதை விட டென்ஷன் ஆக இருந்தாள். அன்று மதியம் இவள் சாப்பிட அமரும் போது போன் அடிக்கவே , எடுத்து பார்த்தால் வித்யா ..

யோசனையோடு எடுத்தவள் “ஹலோ” என்றாள்

எடுத்த எடுப்பிலேயே வித்யா “அண்ணி, மனசுலே என்ன நினச்சுட்டு இருக்கீங்க... எங்க மாமியார் ஏதோ சொன்னதற்கு அண்ணனிடம் சொல்லி, அண்ணன் இவர் கிட்ட பேசியிருக்கிறார்.. எங்க வாழ்க்கை நாங்க பார்த்துக் கொள்வோம்.. நேற்றே இவருக்கு நல்ல கோபம். நான் தான் சரி போனா போகுது அண்ணா ஏதோ கோபத்துலே பேசிட்டான்னு சமாளிச்சு வைச்சேன்.. ஆனால் நீங்க என்னடா என்றால், எங்க அம்மாவை கூப்பிட்டுகிட்டு அண்ணனோட போக போறேன்னு பேசி இருக்கீங்க..

எனக்கு யாரோட தயவும் தேவை இல்லை. என் புருஷன் என்னை நல்லா பார்த்துக்குவார். ஆனால் எங்க அம்மாவை உங்க கிட்ட விட்டு கொடுக்க முடியாது. அது என்னோட பொறந்த வீடு.. அங்க எனக்கு எல்லா உரிமையும் இருக்கு.. அதோட டெலிவரி பார்த்து விடறது எங்க அம்மாவோட கடமை.. அதுனால அதுலே எல்லாம் நீங்க தலையிடாதீங்க .

உங்களுக்கு எங்க அண்ணன் வேணும்னா நீங்க போய் கும்மாளம் போடுங்க..”

இந்த வார்த்தை வரும்போது கடுமையாக “வித்யா.. ஒழுங்கா பேசு.. “ என்று திட்டி விட்டாள் ப்ரத்யா..

வித்யாவிற்கு தான் பேசியது தவறோ என்று தோன்றியது.. ஆனாலும் காட்டி கொள்ளாமல் “சும்மா கத்தாதீங்க... இனிமேல் எங்க விஷயத்துலே தலையிடாதீங்க ... “ என்று வைத்து விட்டாள்.

அவள் பேசி வைத்த பின் பிரமை பிடித்தது போல் இருந்தவள், ப்ரியாவின் உலுக்கலில் தன் நினைவு கொண்டாள்

“என்னடி ஆச்சு.. யாரு போனில் ?”

“வித்யா... “ என்றவள், அவள் பேசியதை கண்ணீரோடு கூறவும்

“ஏண்டி .. நீ சும்மாவா விட்ட.. அவள .. நல்லா கேட்ட்ருக்க வேண்டியதுதானே?”

“இல்லடி .. எனக்கு ஒண்ணுமே புரியலடி.. நேற்றைக்கு இத்தனைக்கும் அவர் கிட்ட கடைசியில் இங்கேயே இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.. அப்புறமும் ஏண்டி இப்படி பேசுறாங்க?”

“நீ இப்பவே அண்ணாக்கு போன் போட்டு பேசு..”

“இல்லடி.. வேண்டாம் .. நேத்திக்கு அவர் என் முகத்தை பார்த்து ரொம்ப தவிசு போய்ட்டார்.. எனக்காவது சுத்தி ஆறுதல் சொல்ல நீ, அம்மா வீட்டுலே ன்னு இருக்கீங்க.. அவர் யாருமே இல்லாம தனியா இருக்கார்.. பாவம்.. அவர் கஷ்டபட்டா அவர சமாதானபடுத்த கூட ஆளில்லாம இருக்கார் .. விடு .. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன் “

“வேண்டாம் டி.. நீ சும்மா தியாகம் எல்லாம் பண்ணாத.. உன் வாழ்க்கை நீதாண்டி பார்த்துக்கணும்”

“தியாகம் இல்லடி.. ஒரு வகையில் அவர கஷ்டப்டுதாம பார்த்துகறதும் என்னோட கடமை தாண்டி..”

“என்னவோ போ.. ஆனால் மனசுக்குள்ளே வச்சுக்கிட்டு மறுகாம வெளிலீயாவது கொட்டிடு” என்று கூறவும்,

லஞ்ச் அவர் முடியவே இருவரும் வேலையை பார்க்க சென்றார்கள்..

அவள் எந்த வேளையில் தனக்கு ஆறுதல் சொல்ல தோழியும், பிறந்த வீடும் இருப்பதாக கூறினாளோ, இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் இல்லாமல் போக போவதை நினைத்து விதி அவளை பார்த்து சிரித்தது..

தொடரும்

Episode # 03

Episode # 05

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.