(Reading time: 13 - 26 minutes)

28. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - புவனேஸ்வரி கலைச்செல்வி

தியோடு இணைந்த நீராய்

காற்றோடு இணைந்த பஞ்சாய்

தீயோடு சேர்ந்த ஜோதியாய்

Ithanai naalai engirunthai

 யாருக்கும் காத்திருக்காமல் ஓடியே விட்டிருந்தன  பத்து நாட்கள் ..

இந்த பத்து நாட்களில் தத்தம் வேலையை வெற்றிகரமாய் முடித்துவிட்டு சென்னை வந்திருந்தனர் மதியழகனும் , காவியதர்ஷினியும் .. காவியா இல்லாத நாட்களில் தன் மனம் போன போக்கை உணர்ந்த கதிர் இனி என்ன நடந்தாலும் அவளை நெருங்கிவிட கூடாது என்று முடிவெடுத்து இருந்தான் .. நம்ம நாகரீக விசுவாமித்ரரின் தவத்தை களைப்பாளா  காவியா ? பொறுத்திருந்தது பார்ப்போம் .. " மித்ரர்" ன்னு சொன்னதுமே மித்ராவின் ஞாபகம் ! இந்த பத்து நாட்களில் அவளுக்கும் ஷக்திக்கும்  இடையில் நிலவிய மௌனம் எந்த ஒரு தொந்தரவும் இன்றி அதே நிலையில் இருந்தது .. அவனோடு பேசாமல் இருந்தாலும் , வழக்கம் போல் அவனுக்கு தேவையானதை அவள்  பார்த்து பார்த்து செய்ய , அவன் பார்த்தும் பாரமல் இருந்தான் .. ஷக்தியுடன்  வாதமிட்டு அவள் கண்ணீர் விட்ட அடுத்த தினமே, நம்ம அன்பெழிலனின்  மூலம்  தனது படிப்பிற்கான புத்தகங்களை கொண்டு வந்தாள் .. ஷக்தியை  எண்ணி ஓடி கொண்டிருந்த மனதுக்கு பூட்டு போட்டு விட்டு படிக்க முயற்ச்சித்தாள்  ..( அஹெம் அஹெம் நம்பிட்டோம்னு யாரும் சிரிக்க கூடாது சொல்லிட்டேன் )

பத்து நாட்களில் இரண்டு முறைகள் தான் போனில் எழிலுடன் பேசினாள்  முகில்மதி .. சங்கமித்ராவின் புத்தகங்களை  எடுப்பதற்காக அவள் வீட்டிற்கு சென்றவன் முகில்மதியை  சந்திக்க நினைக்க , அவளோ அன்று கோவிலுக்கு சென்றிருந்தாள்  .. விதியை நொந்துகொண்டு தாடியுடன் வளம் வந்து கொண்டிருந்தான் அன்பு .. இவர்களுக்கிடையில் இடியே விழுந்தாலும் கருமமே கண்ணென வேலையில்  மூழ்கி இருந்தனர் இருவர் .. ஒன்னு நம்ம ஹனிமூன் .. இன்னொன்னு நம்ம மணிரத்னம்  ஹீரோ ..  சோ, இந்த பத்தாவது நாள் என்னென்ன நடந்ததுன்னு பார்ப்போம் ..

" மனோ ... மனோ எழுந்திரு ..பாக்கி நீயும்தான் " உறங்கி கொண்டிருந்த அன்னை தந்தையை எழுப்பினாள்  தேன்நிலா .. அடர்பச்சை நிற புடவை அணிந்து நெற்றியில் திருநீறு பளிச்சென்று தெரிய, பக்தி பழமாய்  கண்முன் நின்ற  மகளை பார்த்து குழப்பமும் தூக்க கலக்கமும் ஒரு சேர விழித்தனர் இருவரும் .. பாக்கியம் சட்டென் கடிகாரத்தை பார்த்தார் .. காலை மணி 7 ..

" என்னங்க, நம்ம பொண்ணு இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிக்க மாட்டா .. இது ஏதோ  கனவு போல .. நீங்க தூங்குங்க  " என்று முகத்தை அசால்ட்டாய் வைத்துகொண்டு மீண்டும் படுத்துக்கொள்ள பார்த்தார் பாக்கியம் . அவரது  சீண்டலில் கோபம் கொண்டவள்  மெத்தையில் தாவி குதித்து அன்னை தந்தை இருவருக்கும் இடையில்  அமர்ந்து  கொண்டாள் .. " என்ன பாக்கியம் .. ஏதோ  இன்னைக்கு ஒரு நாளாச்சும், உனக்கு மரியாதை கொடுக்கலாம்னு பார்த்தா, அதையும் நீயே கெடுத்துக்குற .. அண்ட் மிஸ்டர் மனோ , என்ன நீங்க உங்க மனைவிதான் என்னை கலாய்க்கிறாங்கன்னு பார்த்தா , நீங்களும் ஈஈன்னு பல்லை காட்டிட்டு இருக்கீங்க ? மகளுக்கு சப்போர்ட் பண்ணனும்னு கொஞ்சம் கூட எண்ணம் இல்லையா ?"

" அட நீ வேற ஏண்டி இப்படி பேசுற ? என்னைக்கு நீ பொறந்தியோ அப்போவே உங்கப்பா எனக்கு சப்போர்ட் பண்ணுறத நிறுத்திட்டாரு "

" ஆமாவா அப்பா ?"

" ஆமா ஆமா .. நான் சப்போர்ட் பண்ணாமதான் உங்கம்மா இத்தனை வருஷம் என்னோடு குடும்பம் நடத்துறா பாரு பேபி " என்று சலித்து கொண்டார் மனோகர் .

" ஷ்ஷ்ஷ்ஷ் .. போதும் போதும் .. ரெண்டு பேருக்கும் புது ட்ரெஸ் எடுத்து வெச்சு இருக்கேன் .. போயி குளிச்சிட்டு வாங்க .. கோவில் போயிட்டு , அப்படியே சரவணபவன்ல கை நனைச்சிட்டு வருவோம் .. "

" ஏன் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ?"

" மது சிங்கபூர்ல இருந்து வந்துகிட்டு இருக்கான் .. இன்னைக்கு இவினிங் ஸ்பார்க் எப் எம் ல ஸ்பெஷல் நிகழ்ச்சி இருக்கு .. அதுக்கு சார் நம்மை இன்வைட் பண்ணி இருக்கார் .. இன்னொரு விஷயம் என்னனு குளிச்சிட்டு வாங்க சொல்லுறேன் " என்றாள்  அவள் துள்ளலுடன் .. ஓர் அர்த்தமுள்ள புன்னகையை சிந்தியப்படி  குளிக்க நகர்ந்தார் பாக்கியம் ..

" உங்கம்மா சிரிச்சா , மல்லிகை பூ பூக்குற மாதிரி இருக்குல பேபி ?" என்று மனோ ரசித்து கூற, தந்தையின் தலையில் குட்டு வைத்தாள்  தேன்நிலா ..

" ஸ்ஸ்ஸ்  ஆ "

" லுசாப்பா நீங்க ?"

" என்னாச்சு நிலாம்மா "

" இன்னைக்கு என்ன நாள் தெரியலையா ?"

" ஏன் டா "

" இன்னைக்கு உங்க கல்யாண நாள் அப்பா "

" அப்படியா ?"

" என்ன நொப்படியா ? உங்க நல்ல நேரம் , நம்ம பாக்கியம் சூர்யாசிரிப்பை சிரிச்சு ஒரு ரொமாண்டிக் லுக்கோடு  போயிட்டாங்க .. இதுவே கோபம் வந்து உங்ககூட சண்டைக்கு வந்திருந்தா என்ன ஆயிருக்கும் ?" என்று அவள்  தலையை உலுக்கி கொள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.