(Reading time: 13 - 26 minutes)

" ன் குரல் கூட மறக்கலியா ?"

" எப்படி மறக்க முடியும் சந்துரு ? நான் அதிகம் கேட்ட குரலில் உன்னோடது .. இனி கேட்கவே மாட்டேன்ன்னு நினைச்சதும் உன் குரலை தானே " என்று சொல்லும்போதே வெடித்து அழுதாள்  அவள் ..

" ஷ்ஷ்ஷ்ஷ் ... நீ பெரிய ரௌடின்னு  ஒரு காலத்துல சொல்லிட்டு இருப்பியே .. இப்போ இப்படி அழுகுர ? "எதுவும் நடவாதது போல பேச முயற்சித்தான் அவன் .. ஆனால் , அதை அவள் கவனிக்கும் மனநிலையில் இல்லை .. இதுவரை அழுததெல்லாம் வெறும் ட்ரெய்லர்  என்பது  போல , இப்போதுதான் முழுமையாய் அழ தொடங்கினாள் ..

" சுபி "

" .."

" நீ அழுதுகிட்டே இருந்தா நான் போனை வெச்சிருவேன் "

" வேணாம் .. வேணாம் சந்துரு .. நான் அழல .. " என்று அழுகையை விழுங்கினாள் ..

" நீ எப்படி இருக்க இப்போ ?"

" ம்ம்ம் பரவாயில்லை "

" எப்போ ஹாஸ்பிட்டலுக்கு வர்ற ?"

" ஆ ... ஆங் ???"

" மேடம் , நோயாளியா இல்ல .. ஸ்டூடண்ட்டா ... "

" ம்ம்ம் வரேன் வரேன் "

" அவனையும் கூட்டிட்டு வா " என்றான் சந்துரு .. டக்கென நிமிர்ந்து பிரேமிடம் போனை கொடுத்தாள்  சுபத்ரா ..

" ஹ. ஹலோ "

" நான் சந்துரு பேசறேன் "

" சொல்லு மச் .... சந்துரு "

" மச்சி ப்ரீயா  இருக்கும்போது வீட்டுக்கு வாடா " என்றான் சந்துரு .. சொன்னவன் விழிகளிலும் கண்ணீர் , அதை கேட்டவன்  விழிகளிலும் கண்ணீர் துளிகள் ..

" மச்சி .. நீயா என் கிட்ட பேசுற ? என்னை மன்னிச்சுட்டியா டா ?"

" யாரு தான் மச்சி தப்பு பண்ணல  ? பழச பேச வேணாம் .. " என்றான் சந்துரு .. இருப்பினும் அவன் " மன்னிச்சிட்டேன் " என்று கூறாமல் இருந்தது அவனுக்கு வருத்தம் தான் .. அதே நேரம் " மன்னிச்சுட்டேன் " என்பர் உடனே சொல்லிடும் மனம் சந்துருவுக்கும் வரவில்லை .. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையை சரி படுத்தினால் போதும் என்று இருவரும் எண்ணினர் ..

" சுபீ வீட்டுலயா இருக்க நீ ?"

" ஆமா .. அவளை பார்க்க வந்தேன் .. "

" எப்படி இருக்கா "

" ம்ம்ம் நல்லா இருக்கா .. நீ வரலையா ?"

" இப்போ கொஞ்சம் பிரச்சனை  பிரேம் "

" என்னாச்சு சந்துரு ?"

" அதெல்லாம் அப்பறமா சொல்லுறேன் .. பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்ல "

" சரி மச்சான் பார்த்துக்கோ .."

"ம்ம்ம்"

" இரு அவகிட்ட கொடுக்குறேன் " என்று போனை கொடுத்தவன் அவள் முகத்தையே பார்த்தான் ...

" தேங்க்ஸ் சந்துரு "

" என்ன சுபி ?"

" குற்ற உணர்ச்சியிலே செத்துருவேன் நினைச்சேன் "

" நீ எனக்கு ஒரு நல்லது பண்ணனும்னு நினைச்சா இனிமே சாவுறத பத்தி பேசாத சுபி "

" ம்ம்ம்ம் "

" சரி உடம்ப பாத்துக்கோ " என்று போனை வைத்தான் சந்துரு .. அவனுக்குமே மனதில் இருந்த ஏதோ ஒரு பாரத்தை இறக்கி வைத்தது போல இருந்தது .. குணாவின் படத்தை பார்த்தான் .,.

" உனக்கு என்மேல கோபம் இல்லையே மச்சி ? நீ சந்தோஷப்படுவன்னு  நம்புறேன் டா .. நீதான் எப்பவும் எங்க கூடவே இருக்கணும் " என்றவன் அடுத்த என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டு கொண்டான் .. ஓரளவு நடக்க போவதை அனுமானித்தவன்  இதை நந்துவிடம் முன்கூட்டியே கூறி விடலாமா ? என்று யோசித்தான் .. " வேண்டாம் .. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம் " என்று நினைத்தவன் தெளிவுடன் அந்த அறையில் இருந்து வெளியேறினான் .. 

சுபத்ராவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது .. பிரேம் பார்வையாலேயே மன்னிப்பை யாசகமாய் கேட்டான் .. அதை அவள் கொடுப்பதற்கு முன் அவன் மூளை வேறு வகையாய் சிந்தித்தது .. சட்டென இடமும் வலமும்  தலை ஆட்டியவன்

" வேணாம் சுபத்ரா .. நீ இப்போ என்னிடம் எதுவும் பேச வேணாம் .. நான் கேட்க நினைக்கிறதை தான் நீ சொல்லுவன்னு தெரியும் .. ஆனா எனக்கது வேணாம் .. " என்றுவிட்டு விடுவிடுவென வெளியேறினான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.