(Reading time: 18 - 35 minutes)

பைதவே இப்பவேல்லாம் பவி வீட்டுக்கு கால் பண்ணாதீங்க…..இத்தனை மார்னிங் நீங்க கூப்டீங்கன்னு அவங்க வீட்ல தெரிஞ்சுதுன்னா வித்யாசமா தோணும்…..மதியம் இன்னைக்கு உங்களுக்கு ரெண்டாவது மறுவீடு இருக்குதுல்ல…..அப்ப உங்க வீட்ல இருந்து கால் பண்ணுங்க…..எல்லோருக்கும் அது கேஷுவலா தோணும்…….. இப்ப காஃபி ஆறுது அண்ணி….”

அவனே பவி பேச்சை அதோடு முடிவுக்கு கொண்டு வருவது போல் தோண மேலுமாய் எதையும் கேட்க முடியாமல் நிலவினி இப்போது கலந்த காஃபியில் ஒரு கப்பை அவன் புறமாக வைத்துவிட்டு அடுத்த கப்பை கையில் எடுக்க

அதே நேரம் “என்னடா காலைலயே என்னத உருட்டிட்டு இருக்க…?” என தம்பியை பார்த்தும் “குட்மார்னிங் வினு “ என இவளைப் பார்த்தும் சொல்லியபடி மாடிப் படிகளில் இறங்கி வந்தான் யவ்வன்.

நேற்று நடந்த எதையும் அவன் வெளியே காண்பித்துக் கொள்ள தயாராயில்லை என்பது நிலவினிக்கு உடனடியாக புரிய… அவளும் அதையே பின்பற்றுவது தான் சரி என “குட்மார்னிங்” என முனங்கி வைத்தாள். ‘இங்க நடக்கிற விஷயமெல்லாம் அப்பாவுக்கு போனா எப்டி இருக்கும்’ என நேத்தே அவ யோசிச்சதின் பின்விளைவு அது….

 இவளுக்கு அவனது இயல்பான சிறு புன்னகையை காட்டிய அவள் கணவன் “டேய் அப்டியே ஆள வரச் சொல்லி அணில் ரூம்குள்ள வர்ற அந்த ஹோலை ப்ளாக் பண்ண சொல்லிடு……பால்கனி வரை வர்ற மாதிரி இருக்கட்டும்…..அதோட இப்ப இருக்கிற ரூம்ஸோட லாஃப்டுக்கு பேர்ல்லலா வீட்டுக்கு வெளிப்பக்கமா வுட்டன் டக்ட் ஒன்னு வீடு நீளத்துக்கே ஃபிட் பண்ண சொல்லு…..அணில் அதுக்குள்ள போய் வந்து இருக்கும்…..இப்ப இருக்ற அதே டைரக்க்ஷன்றப்ப அதுக்கு வித்யாசமாவும் தோணாது….ஸேஃபாவும் இருக்கும்…” தன் தம்பிக்கு இன்ஸ்ட்ரெக்க்ஷன் சொல்லியபடி வந்து இவள் கையில் வைத்திருந்த காஃபியை தானே எடுத்துக் கொண்டான் இயல்பாய்.

அப்படி ஒரு ஆச்சர்ய பார்வையாய் தன் அண்ணனை ஒரு கணம் பார்த்த அபயன் அடுத்த நொடி அதை உதடுக்குள் மறைத்த சிரிப்பில் ஒழித்தவனாய் “சரி சொல்லிடுறேன்…..” என்றபடி தன் காஃபியில் கவனம் செலுத்தினான்.

அபயனின் செய்கையே யவ்வனுக்கு இது எவ்வளவு பெரிய காரியமாய் இருந்திருக்கும் என விளக்குகிறது நிலவினிக்கு. இவளுக்காகத்தான் செய்கிறான் எனவும் புரிகிறதுதான். ‘ஆனால் எதுக்காக இந்த ஐஸ் வச்சிங் ஆக்டிவிடி?’

வர்றது அணில் தான்னு தெரிஞ்ச பிறகு இவளுக்கு அப்டி ஒன்னும் பயமா இல்லையே…. அதோட அவன் அணில் வச்சு போட்ட திட்டம்தான் கையும் களவுமா இவட்ட மாட்டிகிட்டே……அப்றம் எதுக்காம் இவ்ளவு சீன்? ஒருவேளை அவன் வீட்ல எல்லோர்ட்டயும் நான் என் வைஃப்க்காக இவ்ளவு விட்டு கொடுத்துப் போறேன்னு ஷோ காமிக்கிறதுக்கா? அப்பதான நாளைப் பின்ன என் பையன் அவ்ளவு நல்லவனாங்கும்…இவ்ளவு உத்தமனாங்கும்னு சாட்சி சொல்வாங்க….

இவள் மனம் அதை இப்படித்தான் யோசித்தது. அடுத்து அபயன் கிளம்பிப் போனதும் “நீ அணில்குத்தான் பயப்படுறன்னு நிஜமா எனக்கு தோணலை வினு”  என யவ்வன் விளக்கம் சொல்லத்தொடங்கிய போது… நின்று கேளாமல் இவள் போனதற்கும் அதுவே காரணம்.

அதே நேரம் யவ்வனும் ஒரு முடிவோடுதான் இருந்தான்…..இரவு முழுவதும் யோசிக்கவிட்டுறுக்கிறாளே மனைவி.

இரவில் வினி அப்படி நடந்து கொண்ட பின் மிகவும் யோசித்திருந்தான் யவ்வன். அவள் எதுக்கோ பயப்படுறா…..எப்படியும் மேரேஜுக்கு முன்னால் அவ அதை சொல்லலைனாலும் மேரேஜுக்கு பிறகு கிடைக்கிற முதல் தனிமையில் கண்டிப்பா அவட்ட அதைப் பத்தி பேசி சரி செய்துடனும் என இவன் முன்பு முடிவு செய்து வைத்திருந்தான்….. மத்தபடி அவளுக்கு இவனைப் பிடித்திருக்கிறது என்பதில் அவனுக்கு சந்தேகமே கிடையாது….

 ஆனால் நேற்றைய இரவு அதையும் தாண்டி அதிகமாகவே சிந்திக்க வைத்திருந்தது அவனை….திருமணத்திற்கு முந்தைய சந்திப்புகளில் நிலவினி என்னதான் இவனை விரும்புகிறாள் என ஒவ்வொரு அசைவிலும் காண்பித்துக் கொண்டாலும்…. அவள் இதுவரை அவனிடம் வாய்திறந்து கேட்ட ஒரே உதவி இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என்பது தானே…

அதை இவன் செய்து கொடுக்கவில்லை என்பதோடு சூழ்நிலை காரணமாக நீயே அத சமாளிச்சுக்கோன்னு வேற இவன் சொல்லி இருக்கான்….அப்படி இருக்க இப்போது அவளாக வந்து இவனிடம் தன் ப்ரச்சனை என்ன என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும் என இவன் எப்படி எதிர்பார்க்கலாம்? இவன்ட்ட சொன்னாலும் ஹெல்ப் பண்ண மாட்டான்னு தான அவளுக்கு தோணும்?

இவன் வீட்ல வர்ற ஒரு சின்ன பயத்தை கூட இவனை நம்பி சொல்ற நிலையை இவன் தான் அவளுக்கு உண்டு பண்ணி கொடுக்கலை….. அவள் முதல்ல பயந்தப்ப இவன் பக்கத்துல தானே இருந்தான்….அவள் என்ன விஷயம்னு சொல்லலையே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.