(Reading time: 18 - 35 minutes)

'ரி மாப்பிள்ளை,' என்று ருத்ராவை ஒரு முறைப்பு முறைத்து விட்டு போய்விட்டாள்,

இருவரும் அதைப் பத்தி, பேசவே இல்லை,

‘சரி, நான் போய் வனிதாவை பார்த்து விட்டு வரேன் அதுக்குள்ளே நீங்க ரெடியாகிடுங்க’, என்று சொல்லி அங்கிருந்து மற்றவர்களைப் பார்க்கபோனான்

தன், தங்கை வனிதாவை சென்று பார்த்தான் அவளுக்கு ரிசப்ஷனுக்கு அழகு நிலையத்திலிருந்து வந்திருந்தார்கள், எல்லா பெண்களுக்கும் செய்ய சொல்லியிருந்தார்கள், எல்லோரையும் பார்த்தான் தன் தங்கை வித்யா தனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டாள், அங்கு போனவுடன், முதலில் வித்யாதான் 'சித்ரா அவங்க அம்மாவுக்கு எப்படியிருக்கு அண்ணா,' என்று கேட்டாள்

அவன் சொன்னான்,

'வணி, ரெடியா, எப்படியிருக்கே, என்று விசாரித்துவிட்டு, உன் ஆள் அங்கே பாவம் தனியா இருக்கார் உனக்கு பார் எவ்வளவு பேர் இருக்காங்க,'

'என்ன அண்ணா சொல்றீங்க, பாவம் நீயாவது இரு அண்ணா அவரோட,'

'ஏன் கவலைப்படறே, நீதான் நாளையிலிருந்து அவருடனேயே இருக்கப் போறியே இன்னிக்கு ஒரு நாள் தானே, கவலைப் படாதே, சரி இவ்வளவு அழகா இருந்தியானா, உன் ஆள் இப்பவே தாலி கட்டி கூட்டிப் போறேன் என்று சொல்லப் போறாரு,' என்று சொல்லி சத்தமாக சிரித்தான், எல்லோரும் கொல்லென சிரித்தார்கள், அவனும் மற்ற தங்கைகளின் தலையை வருடினான், ‘சரி, வா வித்யா,’ என்று தன் தங்கையை கூட்டிக் கொண்டு போனான்

‘செந்தில் கிட்டேயிருந்து ஏதாவது போன் வந்ததா,'

'ஆமாம் அண்ணா, வந்தது,’ என்று சொன்னாள் வித்யா வெட்கத்துடன்,

அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை, 'சரி எல்லாம் ரெடியா, உனக்கு ஏதாவது தேவையிருக்கா,’

‘அண்ணா அவருக்கு நீ போன் பண்ணி பேசினாயா,' என்று கேட்டாள் தங்கை,

'இல்லைம்மா, ஏன் ஏதாவது பேசணும் என்று சொன்னாரா செந்தில்,'

'இல்லைண்ணா, புடவை எடுக்க, நீ வருவேன்னு எதிர்பார்த்தார், கொஞ்சம் வருத்தபட்டார் அதான் நான் அவருக்கு சொல்லிட்டேன், ஒரு வேளை உன்னோடு பேசினாரா என்று கேட்டேன்,'

'நான் அவரோடு பேசி விளக்கறேன், நான் சித்ரா அம்மாவோட ஆபெரஷனில் பிசி, அது மட்டுமில்லை அவளுக்கு என்னை விட்டால் வேறு யாரு இருக்கா அதான், என்னால் போன் செய்து பேசக் கூட முடியலை, நீ கவலைப் படாதே, நான் செந்திலிடம் பேசுகிறேன்.'

'சரி, அண்ணா, அண்ணி எப்படியிருக்காங்க,'

'ம், அழுதிட்டிருக்கா பாவம், என்னையும் ரெண்டு நாளைக்கு வரவேண்டாம், வீட்டு விசேஷத்தில இருக்கணும் என்னாலதான் வரமுடியல என்று புலம்பினா,' என்று சொல்லும்போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர், அதை தங்கை பார்க்கக் கூடாதுன்னு, மறுபக்கம் திரும்பி துடைத்தான், ஆனால், அவள் பார்த்து விட்டாள்,

அவனிடம் சிறுது நேரம் பேசிவிட்டு, 'சரி அண்ணா நான் போய், ரெடியாகி விட்டு வரேன்,' என்றாள் வித்யா,

'சரிம்மா நானும் போய் மற்றவர்களை பார்த்து விட்டு வரேன்,'

நேரே பெண் வீட்டாரை போய் கவனித்தான்,

கனகா அப்பாவுடன் பேசி இன்னும் ஏதாவது வேண்டுமா என்று கேட்டான்

அவர் ஒன்றும் வேண்டாம்பா எல்லாம் நிறைய கவனிசீங்க, இது நம்ம வீட்டு கல்யாணம், நான் பார்த்துக்குறேன் கவலைப் படாதீங்க, மற்றவங்களை கவனீங்க, என்றார்

தன் சித்தப்பா, கார்த்திக்கை பார்க்கப் போனான் 'என்னடா என்னை மறந்து நீ ஊர் சுத்திட்டிருக்கே, எனக்கு யார், எல்லாம் செய்வாங்க,'

'இல்ல கார்த்திக், நான் மாப்பிளையை கவனிக்கணும் கூடவே இருக்கணும்னு தாத்தா சொல்லியிருக்கார், உன்னை பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன் அவ்வளவுதான்,'

'சரி பார்துட்டேயில்லே, போகலாம்,'

'என்ன கார்த்திக் சின்ன குழந்தையாட்டம் கோவம், உனக்கு நாளைக்கு கல்யாணம், உன் காதலியே உனக்கு மனைவி அதை நினைச்சு சந்தோசமா இரு, சரி நான் கிளம்பறேன்'

அங்கிருந்து கல்பனா குடும்பத்தை பார்க்க சென்றான்

செல்வம் எதிரில் வந்தான், சார், எப்படியிருக்கீங்க, உங்களைப் பார்க்க முடியலையே என்று நினைத்திருந்தேன்,'

'ஏன் செல்வம், எல்லாம் வந்ததில்லையா, ஏதாவது வேண்டுமா?,' என்று கேட்டான் ருத்ரா

'ஐயோ, இல்லை சார் எல்லாம் பக்காவா இருக்கு, உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லலாமென்றுதான் தேடினேன், ரொம்ப நல்லாயிருக்கு சார்,'

'சரி, செல்வம் அப்பா இருக்காரா, நான் பார்க்கணும் அதான் வந்தேன்,'

'இருக்கார் வாங்க,'

ரூமில், அவர்களை விசாரித்து விட்டு, கிளம்பி குமார் ரூமுக்கு போகையில், சித்ராவுக்கு போன் செய்தான், போனை எடுத்தாள், 'என்ன செய்யறே சித்து, உன் ஞாபகமாவே இருக்கும்மா,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.