(Reading time: 33 - 66 minutes)

"ல்லை மது எனக்கு இந்த முறை லீவ் போட்டு வரமுடியாது. ப்ராஜெக்ட் வொர்க் இருக்கு. நீ போயிட்டு வா. நீ வந்ததும் வில் ஹவ் அ பார்ட்டி ஹியர்." என்று சொல்ல,

"என்னது ப்ராஜெக்ட் வேலையா? எனக்கு தெரியாம என்னம்மா உனக்கு அப்படி ஒரு வேலை. நீயே வேலை செய்ய மாட்ட இதுல என்கிட்டே பொய் சொல்றியா. இந்த நாடகம் எல்லாம் வேணாம். மரியாதையா வந்து சேறு" என்று மிரட்டல் போல சொல்ல, ஐயோ சரணை அவாய்ட் பண்ணனும்னு நெனைச்சா இவ புரியாம பேசறாளே இவளை எப்படி சமாளிக்கிறது என்ற குழப்பமும் மனதிற்கு பிடித்திருந்தும் சரணை தவிர்க்க வேண்டுமே என்ற இயலாமையும் ஒன்று சேர," உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா. எனக்கு வேலை இருக்கோ இல்லையோ. எனக்கு வர இஷ்டம் இல்லை. ச்சே எப்போ பாரு எதுக்கெடுத்தாலும் கிண்டலும் கேலியும் தான். அடுத்தவங்களுடைய நிலமைய புரிஞ்சுக்கவே மாட்டியா " என அவளை திட்டி விட்டு வேகமாக சென்று பால்கனியில் நின்று கொண்டாள் திவ்யா.

இதுவரை திவ்யா இப்படி பேசி கண்டிராத மது கொஞ்சம் அல்ல நிறையவே மனம் புண்பட அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்தவள் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் விழுந்து தெறித்தது. மெதுவாக எழுந்து பால்கனியின் கதவருகே நின்றவள்

"சாரி. உங்களை நான் இனி எந்த விஷயத்துக்கும் கட்டாயபடுத்த மாட்டேன். என் தப்பு தான் நான் கிண்டல் பண்றதும் பேசறதும் உங்களுக்கு இவ்வளவு ஹர்ட் ஆகும்னு புரியல. உங்களுக்கு பிடிக்கலைனா நா வேற ரூம் மாத்திக்கிறேன்" என்று சொல்ல,

மதுவின் குரலில் இருந்த வேறுபாடும், திவ்யாவை அவள் பன்மையில் விழித்ததும் மனதை நெருட, திரும்பி பார்த்த திவ்யாவிற்க்கோ அங்கே கீழே அமர்ந்து கைகளில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த மதுவை கண்டதும் தாள முடியாமல் அவளருகே ஓடி சென்று அமர்ந்தவள், "ஹேய் மது முதல்ல அழுகையை நிறுத்துடா. ப்ளீஸ் சொன்னா கேளு நீ அழாத. ப்ளீஸ் டி " என்று கெஞ்ச, மதுவோ "நான் தான் உன்னை டிஸ்டர்ப் பண்றேன். சாரி சாரி" என்று அழுகையோடு கூற,

மதுவை கட்டி கொண்டு,"சாரிடி நான் ஏதோ டென்சன்ல கத்திட்டேன், ப்ளீஸ் என் செல்லம் ல, அழாதடி, உனக்கு என்ன இப்போ நான் ஊருக்கு உன்கூட வரணும் அவ்வளவு தான. நான் ரெடி என்ன இப்போவே போலாமா " என்று கேட்க, நிமிர்ந்து பார்த்த மது, "நெஜமா? இல்லை என்னை சமாதான படுத்த சொல்றியா? " என்று கேட்க, "பிராமிசா நான் வரேன். போதுமா. இப்போ எழுந்திரு. வா இங்க உக்காரு” என்று அவளை அங்கிருந்த சாரில் உட்காரவைத்து சிறிது தண்ணீர் பருக வைத்தவள், "சாரி மது. ஐ நோ ரியலி ஹர்டெட் யு. சாரி டியர். " என்று மனமார மன்னிப்பு கோர, "எனக்கு இப்படி எல்லாம் சாரி வேண்டாம். நீ வீட்டுக்கு வந்தாதான் நான் உன்னை மன்னிப்பேன்" என்று மது சொல்ல, "அண்ணனும் தங்கையும் ஒரே மாதிரி இருக்குங்க "என்று முணுமுணுத்தாள் திவ்யா.

"என்ன சொன்ன" -மது

"ஒண்ணும் இல்லை வரேன்னு சொன்னேன். ஆனாலும் நல்லாஅழுதே காரியம் சாதிச்சுருடி. ஏதோ இந்த டைம் தப்பு என்னுது அதனால விட்டுட்டேன். இனிமேல் ஆனா ஊனா அழுத மவளே பிச்சுடுவேன்."-திவ்யா

"ஹிஹிஹி ... இப்போ ஓகையா " -மது

"ஹ்ம்ம் இதுக்கொனும் கொறைச்சல் இல்லை" -திவ்யா.

இருவரும் ஒருவாறு சமாதானம் ஆகி உறங்க சென்றனர்.

இங்கேயோ மதி சரணின் அழைப்புக்காக காத்திருந்து பொறுமையை இழந்தவனாக சரணை அழைக்க, இம்முறை கனவில் இருந்த சரணோ போனில் மதியின் பெயரை பார்த்த பின் தான் அவனை அழைக்க மறந்ததை உணர்ந்து அவசராவசரமாக அழைப்பை ஏற்றவன்,"மதி சாரிப்பா நான் உனக்கு கால் பண்ணனும்னு நெனைச்சு வேற ஏதோ ஞாபகத்துல மறந்துட்டேன். சாரி பா. மது வரேன்னு சொல்லிட்டா. சோ நீ உன் பிளானை ரெடியா வெச்சுக்கோ. இன்னும் ஓனே வீக் தான் இருக்கு." என்று சொல்ல," தேங்க்ஸ் பா தேங்க்ஸ். நீ பண்ண வேண்டியதை பண்ணிட்ட. இனி நான் பார்த்துக்கறேன். தேங்க்ஸ் சரண்." என்று அழைப்பை துண்டித்து விட்டு என்ன செய்யலாம் என யோசிக்கலானான்.

புதன் கிழமை மதுவும் சரி திவ்யாவும் சரி மிகுந்த உற்சாகத்துடனும் இன்னும் சொல்ல தெரியாத உணர்வுகளுடனும் ஊருக்கு கிளம்பினர்.

"அம்மாட்ட பேசிட்டேன். எனக்கு டிரஸ் எல்லாம் அம்மாவே எடுத்துட்டாங்களாம். சின்னதா எவனிங் ஒரு பார்ட்டி இருக்கு. க்ளோஸ் ரிலேடிவேஸ் மட்டும் இன்விட் பண்ணிருக்கு" -மது

"ஒ அப்படியா. அப்போ நான் நாளைக்கு எவனிங் வந்தா போதுமா ?" -திவ்யா

"கொன்னுருவேன் நீ அம்மா அப்பாவையும் கூட்டிகிட்டு மதியம் லஞ்சுக்கு எங்க வீட்டுக்கு வந்துரு" -மது

"பாக்கறேண்டி அம்மாவும் அப்பாவும் நாளைக்கு ஏதோ தோட்டதுல அறுவடை இருக்கு. பாக்க ஆள் இல்லைனா வேலை வேகமா நடக்கதுன்னு சொன்னங்க. அப்படி அவங்க வர முடியலைனாலும் நான் வரேன். சரியா. இப்போ தூங்கலாம். இல்லைனா நாளைக்கு பார்ட்டில நீ தான் ரொம்ப டல்லா தெரிவ " -திவ்யா

இருவரும் நாளைய நாளை ஆவலுடன் எதிர்கொண்டபடி உறங்கினர்.

மதியோ, மதுவிற்காக தான் வாங்கிய பரிசை பார்த்தபடி அவனுடைய அறையில் அமர்ந்திருந்தான். இதை அவளுடைய கையில் தனிமையில் கொடுக்க வேண்டும். இதை காணும் பொது அவள் விழி விரித்து பார்க்கும் அழகை ரசிக்க வேண்டும். அவளுடைய உதடுகள் பேசாததையெல்லாம் அவளுடைய விழிகள் பேசிவிடும். மதுவை பற்றிய கற்பனைகளோடும் நாளையை பற்றிய கனவுகளோடும் கீழே வாட்ச்மேனின் ரேடியோவில் இருந்த பாடலை கேட்டவாறே உறங்கி போனான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.