(Reading time: 15 - 30 minutes)

ந்தோசம் , எதிர்பார்ப்பு , கனவுகள் , குறிக்கோள் , வேலை என இரண்டு மாதங்கள் சிட்டாய் பறந்து விட்டிருந்தது .. நள்ளிரவு மணி இரண்டாகி இருந்தது .. அந்த வீட்டின் சின்ன அறையில் , ஷக்தி கணக்கு வழக்கு பார்த்து கொண்டிருக்க , சங்கமித்ரா முழுமூச்சாய் அந்த கேஸ் பைலை படித்து கொண்டு இருந்தாள்  .. அவ்வப்போது சிந்திக்கிறேன் என்ற பெயரில் அவள் தனக்குத் தானே பேசிக்கொள்வதை ரகசியமாய் சிரித்து ரசித்து கொண்டிருந்தான் ஷக்தி ... ஒருவழியாய் தன் வேலை முடியவும் அவன் எழுந்து கொள்ள

" மாமா , காபி போட போறியா ? எனக்கும் ப்ளீஸ் " என்றாள்  சங்கமித்ரா .. இரண்டு நாளாய் அரைகுறையாய் அவள் உறங்குவதை பார்த்தவனுக்கு மறுத்து பேச மனமில்லை .. தூக்கம் ஒரு புறம் வாவென்றழைக்க , அதை ஒதுக்கிவிட்டு சமையலறைக்கு சென்றான் ..

" மகாராணி ,என்னமோ ஒரே கேசில் நாட்டையே மாற்ற போகிற மாதிரி இப்படி உழைக்கிறாளே  ! சொந்தமா ஒரு காபி போட்டுக்க வேண்டியது தானே ?" என்று அவன் ஒரு மனம் கேலியாய் கேட்க

" ச்ச , பாவம் அவளே தூக்கம் போதாமல் இருக்கா .. அவ முகத்தை பார்த்தால் வேலை வாங்கவா தோணும் ? பாவம் ..இந்த வாரகடைசி அவளுக்கு எந்த வேலையும் கொடுக்காமல் தூங்க விடனும் " என்று ஒத்து பாடியது இரண்டாம் மனம் ..

" ஆனாலும் ஷக்தி .. நீ ரொம்ப மாறிட்ட டா ..! ஓவரா இறங்கி போறியே " என்று அவன் முதல் மனம் மீண்டும் கேள்வி கேட்க

" போ மாமா , நீயே செல்லம் கொடு ..அப்பறம் நீயே நான் வம்பு பண்ணுறேன்னு சொல்லு " என்று அவ்வப்போது மித்ரா சிணுங்கும்  குரல் அசரீரியாய் அவனுக்கு கேட்டது ..

" என் பொண்டாடிக்கு நான் காபி போடுறேன் .. என்னை யாருடா கேள்வி கேட்குறது ?" என்று தனது இருமனங்களுக்கும்  அதட்டல் போட்டவன் காபியை எடுத்து கொண்டு அறைக்கு செல்ல, அங்கு திருட்டு முழியுடன் நின்று கொண்டிருந்தாள் மித்ரா ..

" ஹே என்ன டீ பண்ண?"

" வ ... வந்துட்டியா மாமா ? என்ன அவ்வளவு சீக்கிரம் காபி போட்டு வந்துட்ட ? சக்கரை போட்டியா ? " என்று சந்தேகமாய் கேட்பது போல  உளறி கொண்டினாள்  ..

" ஒரு காபி போடுறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும் .. சரி என்ன பண்ணிட்டு வர்ற நீ ?" என்றான் ஷக்தி

" ஒ ...ஒன்னும் இல்லையே "

" பொய் !"

" நிஜம் "

" அப்படியா ..இவ்வளவு நேரம் எங்க இருந்த ?"

" இங்கத்தான் "

" மறுபடியும் பொய் "

" போ மாமா , காபியை கொடு .." என்றவள் கை நீட்டிட ,அவள் கையில் சிக்காத வாறு காபியை உயர்த்தி பிடித்து போக்கு காட்டினான் ஷக்தி ..

" நோ ..நீ எதையோ மறைக்கிற என்னனு சொல்லு "

" முடியாது போ "

" அப்போ காபி கிடையாது போ "

" ஒன்னும் வேணாம் போ "

" சொல்லாட்டி போ " என்று அவனும் திரும்பி நடக்க

" ஐயோ .. சரி சரி வா  இங்க " என்று சமாதானமாய் அவள் அழைக்க , அவன் அப்படியே நின்றான் .. அவன் கையில் இருந்த காபியை வாங்கியவள் , தன்னால்  முயன்ற அளவு எக்கி , அவன் விழிகளை தன்  மென் விரல்களால் மூடினாள் ..

" என்னடி பண்ணுற ?"

" கண்ணாமூச்சி ஆடப்போறேன் மாமா "

" ஹும்கும் ..முதலில் கண்ணை நல்லா மூடு , என்னால நல்லா பார்க்க முடியுது " என்று கேலியாய் சிரித்தான் ஷக்தி ..

" போடா .. பனைமரம் மாதிரி வளர்ந்துட்டு என்னை குறை சொல்லுறான் .. என் செல்ல மாமால , ப்ளிஸ் நீயே கண்ணை மூடிகிட்டு நடந்து வா " என்றபடி அவன் தோளில்  கைவைத்தப்படி அவர்களின் அறைக்குள் நுழைந்தாள்  .. அங்கு ஒரு சின்ன கேக் மெழுகுவர்த்தியின் ஒளியில் மின்னியது ..

" ஹே இன்னைக்கு என் பெர்த்டே  இல்ல "

" ஹலோ மாமா , உங்க பிறந்தநாள் எப்போதுன்னு உங்களை விட எங்களுக்கு நல்லாவே தெரியும் " என்று அவள் பெருமையாய் கூற

" ஆஹான் அப்போ இது என்ன ? " என்றான் ஷக்தி .. பதில் ஏதும் கூறாமல் அவன் கையில் ஒரு வாழ்த்து மடலை நீட்டினாள்  சங்கமித்ரா ..

" என்னடி இது ?"

" நீயே படி !!"

" ம்ம்ம் ஓகே " அசுவாரஸ்யமாய் முகத்தை வைத்து கொண்டு அந்த கவரை திறந்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.