(Reading time: 16 - 31 minutes)

35. கிருஷ்ண சகி - மீரா ராம்

ன்யா……” என்ற அவனின் சத்தம் அவள் காதுகளை எட்டியதும், துப்பாக்கியில் வைத்த அவள் விரல்களை அழுத்தம் கொடுக்க முனைந்தவள், சட்டென்று அதை எடுத்துவிட்டு, முகம் முழுவதும் கோபமும், ஏக்கமுமாய் திரும்பியவளின் பார்வையில் முதலில் மகத் தெரிந்தான்….

“இப்போ உனக்கு சந்தோஷமா?....” என அவனைப் பார்த்து கேட்டவள்,

“நீ என் வாழ்க்கையில வந்ததால என் நிம்மதி போச்சு, என் சந்தோஷம் போச்சு, இப்போ இப்படி கொலைபண்ணவும் துணிஞ்சிட்டேன்…. இதுக்கு தான ஆசப்பட்ட?... இப்போ உனக்கு திருப்தியா?...” என அவனைப் பார்த்து ஆத்திரம் மிக கேட்டவளிடம்,

krishna saki

“என்னால உன் நிம்மதி, சந்தோஷம், எதுவும் கெட்டு போகாது இனி… என் வார்த்தையை நம்பு…” என்றவன், தன் பின்னால் அனைவரும் நிற்பதை அறிந்து, காவேரியையும், ருணதியையும், குழந்தைகளை தூக்கி கொள்ள சொல்ல, அவர்கள் விரைந்து சென்று தூக்கிக் கொண்டனர்…

நதிகாவை தூக்கிய ருணதியின் பார்வை அங்கிருந்த ஜித்தின் மீது பதிய, அவனின் பார்வையோ ஒரு ஜோடி விழிகளின் மீது நின்றது கொஞ்சமும் அசையாது…

அவளைத் தொடர்ந்து மகத்தின் பார்வையும் ஜித்தின் மீது செல்ல, அவன் ஒரு பெருமூச்சோடு, “உன் நிம்மதி, சந்தோஷம் எல்லாம் இப்போ வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்…” என சொல்லிவிட்டு கன்யாவின் முகத்தினை பார்க்க, அவளோ, ஒரு விரக்தி புன்னகையோடு மகத்தினை பார்த்தாள்…

“நீ இப்படி விரக்தியா சிரிக்குற அளவுக்கு எதுவுமே ஆகலை கன்யா…” என அவன் நிதானமாக சொல்ல

அவள், “இன்னும் என்ன ஆகணும்னு சொல்லுற?... நீ என் வாழ்க்கையில வந்து பிரச்சினை பண்ணினது போதாதுன்னு, இ…ப்….போ…………..” என சொல்ல முடியாது இதழ்களை அழுந்த மூடி அவள் தன் உணர்வுகளை அடக்கிக்கொள்ள முயல,

காவேரி மகத்தின் அருகே வந்து, விசாரிக்க, அவனும் அவரிடத்தில் சொல்ல, அவர் முகமோ அதிர்ச்சியை பிரதிபலித்தது…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

“வி…..சி…..த்…..தி……ரா…………….” என காவேரி அழைக்க, சில நொடிகள் அவரை பார்த்து, சிலையென நின்றவள், அவர் வா என அழைக்க, அவரின் கைகளுக்குள் இருந்தாள் அவள் அடுத்த நொடி….

“பாட்டி………………………………” என்ற வார்த்தை அவரை மொத்தமாக உலுக்கிப்போட, அவரோ அவளின் தலையினை வருடிக்கொடுத்து கண்ணீர் வடித்தார்….

அவர் உதிர்க்கும் கண்ணீரினை துடைத்தவள், தன் உணர்வுகளை கண்ணீரால் வெளிப்படுத்தவில்லை… அடக்கிக்கொண்டாள் பிரம்மபிரயத்தனப்பட்டு….

அதே நேரம், ஜித்தின் தோள்களில் கைவைத்த மகத், காவேரியிடம் சொன்னதை அவனிடத்திலும் சொல்ல, அவன் அதிர்ச்சியுடன் அவனை பார்த்துவிட்டு மீண்டும் அந்த ஒரு ஜோடி கண்களின் மீது பார்வை பதித்தான்….

யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை…

மௌனத்தை கையிலெடுத்திருப்பதை உடைக்க விரும்பிய மகத், “ருணதி ஜித்தின் மனைவி இல்லை…” என அனைவருக்கும் கேட்கும்படி சொல்லியவன், “கன்யா என்னுடைய மனைவியும் இல்லை….” என சொல்ல, ஜித், கன்யா, ருணதி மூவரும் கிட்டத்தட்ட உறைந்து போனவராய் மகத்தினை பார்த்தனர்…

பிரபுவும், விஜய்யும் ஒருபக்கம் அதிர்ச்சியுடனும், ஒரு பக்கம் சந்தோஷத்துடனும், மகத்தினை பார்த்தனர்…

“கன்யா என்னுடைய மனைவியும் இல்லை….” என மகத் சொன்னதும், அந்த உண்மையை அறிந்த சதாசிவம் தாத்தாவும், காவேரியும் அந்த நாளின் நினைவில் மௌனமாய் இருந்தனர்…

குருமூர்த்தி… பெரிய பணக்காரர்… செல்வந்தர்… அவரின் ஒரே மகள் விசித்திர கன்யா… சிறு வயதிலே தாயை இழந்தவளை முழுக்க முழுக்க வளர்த்தது காவேரி தான்… விசித்திர கன்யா என்று பேர் வைத்தது கூட அவர் தான்…

குருமூர்த்திக்கு நிற்க நேரமில்லாது தொழில்கள் இருக்க, செல்லமாகவே வளர்த்தார் காவேரி அவளை உடனிருந்து….

காவேரி வளர்ப்பதில் அவருக்கு பெரிதும் உடன்பாடு இல்லை என்ற போதிலும், வேறு வழியில்லாது ஒப்புக்கொண்டார்… அவருக்கும் மகளுடன் இருக்க நேரம் இல்லை என்ற காரணம் புரிந்ததினால்….

கன்யாவின் எட்டு வயதில் அவளை விட்டு விட்டு ஆசிரமம் சென்றார் காவேரி…

அவரை விட்டு பிரிய முடியாமல் அழுத கன்யாவிடம், வந்து உன்னை பார்த்துக்கொள்வேன்டா.. அங்கே உன்னை போலவே நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு யாரும் இல்லடா நம்மளை விட்டா… என்று அறிவுரை கூற, அந்த வயதில் அவளுக்கு என்ன புரிந்ததோ, சரி என்று தலை ஆட்டினாள் அவள்…

எனினும் அவர் இல்லாத நாட்களில் குருமூர்த்திக்கு அவளை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை ஆரம்பத்தில்… அழுகிற சமயங்களில் எல்லாம் அவள் அழுகையை அவர் தனது பணத்துடன் கூடிய பாசத்தால் நிப்பாட்ட செய்ய, அவள் தனக்கு வேண்டியதை எல்லாம் தனது பிடிவாதங்களின் மூலம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்…

ஆனால், குருமூர்த்தியிடம் காட்டும் அந்த பிடிவாதம், ஏனோ அவள் காவேரியிடத்தில் காட்டியதில்லை… அவரிடம் எப்போதும் பிரியமாகவே நடந்து கொண்டாள்…

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது அவளின் பதினெட்டு வயது வரை… அதன் பிறகு கல்லூரியில் அவள் அடி எடுத்து வைத்த போது அவளுக்கு கிடைத்த நண்பர்கள் அவ்வளவாக அவளுக்கு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக்கொடுக்கவில்லை… திசை மாறி செல்லத்துவங்கினாள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.