(Reading time: 21 - 41 minutes)

ல்லை..இல்லை...அவர் பொய் உரைப்பவர் இல்லை...என் மனம் அவர் நல்லவர் என்றே சொல்கிறது.

ஒரு இளவரசருக்குரிய பண்புகள் அனைத்தும் அவரிடம் இருந்தன.நொடிக்கும் குரைவான நேரமே ஆயினும் அவரின் பார்வை என்னிடம் ஏதேதோ மாற்றத்தை ஏற்படுத்தியது.இதைக் காதலென்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது?..மிக நம்பிக்கையோடு பேசும் மதிவதனியைக் கண் கொட்டாமல் பார்த்தவாறு இருந்தாள் சுசீ..இனி இளவரசியை எக்காரணம் கொண்டும் மாற்ற முடியாது என்ற எண்ணம் அவளுக்கு உறுதியானது.விதி மதிவதனியை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்பது சுசீ பாவம் அவளுக்கு எப்படித் தெரியும்?இல்லாவிட்டால் மதிவதனி எப்பேர்ப்பட்ட ஆழ்ந்த அறிவும் ஆற்றலும் சிந்திக்கும் திறனும்  உடையவள்..?விதியின் சதி இல்லாவிட்டால் அவள் இப்படி கண்மூடித்தனமாகக் கண்டதும் காதலில் விழுவாளா?...காலம் என்ன செய்யக் காத்திருக்கிறதோ?

சேர நாட்டு இளவரசன் மாறவர்மனுக்கு விமலாதித்தன் மீது பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.எப்பேர்ப்பட்ட அழகி மதிவதனி?அவளை மனைவியாக்கிக் கொள்ளும் பேறு எனக்குக் கிடைக்காமல் போய்விட்டதே?ஏதோ சில போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் சோழ இளவரசன் எனைகாட்டிலும்  வீரனாக சிறந்தவனாக ஆகிவிடுவானா?போட்டிகளில் தோற்றதின் மூலம் நான் வீரமற்றவனாக ஆண்மையற்றவனாக ஆகிவிடுவேனா?அவனின் சோழ நாட்டிற்கு எவ்விதத்திலு குறைந்ததல்ல என் சேர நாடு..இன்று அவனுக்குக் கிடைத்த பாராட்டென்ன..கரகோஷம் என்ன..மன்னர் அவன் கரம்பிடித்தல்லவா தன் மகிழ்ச்சியைத் தெரிவித்து தன் மகளை மணக்கும் தகுதி அவனுக்கே இருப்பதாய்க் கூறினார்.என்னை சிறிதும் சட்டை செய்யவே இல்லையே...இருக்கட்டும் பாண்டிய மன்னருக்கும் விமலாதித்தனுக்கும் சேர்த்தே பாடம் கற்பிக்கிறேன்..எனக்குக் கிடைக்காத மதிவதனி விமலாதித்தனுக்கும் கிடைக்கக் கூடாது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்.... 

படிக்க தவறாதீர்கள்...

யாரங்கே..?

இளவரசே....சொல்லுங்கள் இளவரசே...மாறவர்மனோடு சேரனாட்டிலிருந்து வந்திருந்த அவனது ஆட்கள் பத்து பேர் இவன் அழைப்பைக் கேட்டு ஓடிவந்தார்கள்.

விமலாதித்தன் எப்போது இங்கிருந்து நாடு செல்லக் கிளம்புகிறான்...?ரகசியமாய் அறிந்து வாருங்கள்..

இளவரசே அவன் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பவிருக்கிறானாம்....அறிந்து வந்தோம்...

அப்படியாயின் நானும் கிளம்புகிறேன்...அதற்கு முன்.... இங்கே வாருங்கள் என் அருகில்...

ஆட்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொள்ள..மிகத் தாழ்ந்த குரலில் ரகசியமாய் அவர்களிடம் ஏதோ சொல்ல அவர்கள் அனைவரின் முகத்திலும் முதலில் பீதி தெரிந்தது..பின்னர் ஆகட்டும் இளவரசே உங்கள் ஆணைப்படியே செய்து முடித்து விடுகிறோமென்றனர் உறுதியாக.மதிவதனியை மையமாக வைத்து அவளின் பொருட்டு விழுந்தது பண்டிய நாட்டுக்கு அவிழ்க்க முடியாத முடிச்சொன்று.மாற்ற முடியாத பழி.

துடைக்க முடியாத துயர்.ஆரம்பமானது விதியின் விளையாட்டு. 

அது மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத காட்டுப் பகுதி.ஆனால் மிருகங்கள் நடமாட்டமெல்லாம் இல்லாத மரங்கள் அடர்ந்த பகுதி.அப்பகுதியின் ஊடாகவும் வெளியூர்களுக்குச் செல்வதுண்டு.அப்படிச் செல்வோர் பிரயாணக்களைப்பு நீங்க ஓய்வெடுத்துச் செல்ல சிறிய அளவில் தங்குமிடம் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும்.அவ்வாறான ஒரு ஓய்வு எடுக்கும் தங்குமிடம் ஒன்றில் படுத்திருந்தான் ஹஸ்த குப்தன்.

மனம் முழுதும் மதிவதனியைப் பற்றியே சிந்தனை நிரம்பியிருந்தது.எல்லாம் முடிந்து விட்டது.இனி இன்னாட்டில் தங்கியிருப்பதில் எந்த பயனும் இல்லை.இனி மதிவதனியின் நினைவினை மட்டுமே சுமந்துகொண்டு நாடு திரும்ப வேண்டியதுதான் என்று எண்ணியவாறு படுத்திருந்தவன் செவிகளில் அவன் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே ஏதேதோ சப்தம் கேட்டது.குதிரைகள் ஓடும் சப்தமும் அடிங்கடா..வெட்டுங்கடா..குத்துங்கடா என்ற சப்தமும் கேட்டது.சட்டென எழுந்து வெளியே வந்த ஹஸ்தனின் கண்களில் அந்தக் காட்சி பட்டபோது அதிர்ந்து போனான் அவன்.ஐயோ!இது என்ன?ஐந்தாறு ஆட்களாய் ஒருவனைப் பிடித்து அடிப்பதும் உதைப்பதுமாய்..இது என்ன கோழைத்தனம்..?இல்லை இதைப் பார்த்துக்கொண்டு வாளாய் இருக்க முடியாது..என்று என்ணியவன் இடுப்பிலிருந்த நீண்ட வாளை உருவிக் கொண்டு அந்த ஆட்கள் மீது பாய்ந்தான்.அப்போதுதான் அந்த ஒற்றை ஆள் யார் என்பது அவன் கண்களில் பட்டது.அது..அது..விமலாதித்தன்...ஐயோ இதென்ன விபரீதம்..?விமலாதித்தன் மதிவதனியைத் திருமணம் செய்து கொள்ளவிருப்பவன் இல்லையா..?இவன் மீது இப்படிக் கொலை வெறித் தாக்குதல் செய்யக் கூடியவர் யார்?என் உயிரே போனாலும் சரி இவனைக் காப்பாற்றியே தீருவேன் என்று நினைத்தபடி விமலாதித்தனைத் தாக்கியவர்களோடு சுழன்று சுழன்று சண்டையிட ஆரம்பித்தான்..விமலாதித்தனின் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்ததால் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.அப்போது மரத்தின் மீது அமர்ந்து கொண்டிருந்த ஒருவன் ஹஸ்த குப்தன் சற்றும் எதிர்பாராத நிலையில் அவன் மீது பாய்ந்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் ஹஸ்த குப்தன் கொஞ்சம் நிலை தடுமாறி கீழே விழ மாறவர்மனின் ஆட்கள் நாலைந்து பேர் அவன் மீது ஏறி அமர்ந்து அவன் எழாதவாறு அழுத்திப்பிடிக்க ஒருவன் ஹஸ்த குப்தனின் கையிலிருந்த நீண்ட வாளைப் பிடுங்கி விமலாதித்தனின் வயிற்றில் பாய்ச்ச வாள் வயிற்றில் நுழைந்து முதுகுப்புரமாய் வெளியேவர ஹா..என்ற கத்தலுடன் உயிரை விட்டான் விமலாதித்தன்.

கண்ணெதிரே நடந்த இந்த கொடூரத்தைக் கண்ட ஹஸ்தன் தன் மேல் அமர்ந்திருக்கும் ஆட்களைப் புறந்தள்ள எத்தனிக்க அவர்களில் ஒருவன் தன் கையிலிருந்த கத்தியால் ஹஸ்தனின் தோளிலும் இடுப்பிலும் ஆழமாய் இறக்க ரத்தம் பெருக அப்படியே மயங்கிப்போனான் ஹஸ்த குப்தன்.அவன் மீதிருந்து எழுந்தவர்களில் ஒருவன் இறந்து கிடந்த விமலாதித்தனின் வயிற்றில் பாய்ந்திருந்த ஹஸ்தகுப்தனின் நீண்ட ரத்தம் தோய்ந்த வாளை சரக் என உருவினான்.அப்படி அந்த வாளை உருவியவன் ரத்தம் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில் மயங்கிக் கிடந்த ஹஸ்த குப்தனின் வலது கையில் அந்த வாளை அந்த வாளின் பிடியை ஹஸ்தன் பிடித்திருப்பது போல் வைத்துவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு அவ்விடம் விட்டு நீங்கினான்.கண்கள் திறந்திருக்க வானைப் பார்த்தபடி குருதிக்குளத்தில் பிணமாய்க் கிடந்த விமலாதித்தனுக்கு சற்று தள்ளி குப்த ராஜ்ஜியத்தின் குருதி பாண்டிய நாட்டு மண்ணில் ஓர் சிறிய பள்ளத்தை நோக்கி ஓடித் தேங்க மயங்கிக்கிடந்தான் ஹஸ்தகுப்தன்.

இனி என்னென்ன நடக்குமோ பாண்டிய மண்ணில்..?..நன்றி...

தொடரும்...

Episode 15

Episode 17

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.