(Reading time: 6 - 12 minutes)

 

தையா இருக்கே. நான் வேண்டாம்ன்னு சொன்னா அதுக்கு ரீஸன் நீங்கதான்னு அர்த்தமா. எனக்கு அந்த வரன்களை பிடிக்கலை, அதனாலதான் வேண்டாம்ன்னு சொன்னேன்”

“சரி அந்தக் கதை எல்லாம் விடு. நீ எனக்கு ப்ரொப்போஸ் பண்ணலை, நானும் அதை ரிஜெக்ட் பண்ணலை. பழச எல்லாம் மறந்துடலாம். இப்போ ஃபிரெஷ் ஸ்டார்ட். என்ன ரோஜாப்பூதான் இல்லை, அப்பறம் கார் ஓட்டிண்டு இருக்கறதால ஒத்தக் கால்ல முட்டிப்போட முடியாது. பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..... ஸ்வேதா எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு . நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். பதில் சொல்லு”

“ரெண்டு மூணு சென்டன்ஸ் முன்னாடி ஒரு வரி சொன்னேனே, அதுக்குள்ள மறந்துட்டேளா. எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே 

படிக்க தவறாதீர்கள்...

“பாரு திரும்பத் திரும்ப கல்யாணம் வேண்டாம்ன்னுதான் சொல்ற, என்னைப் பிடிக்கலைன்னு சொல்லலையே. நமக்குள்ள இந்த ஈகோ எல்லாம் வேண்டாமே. நான் அப்போ உண்மையா படிக்கற வயசுல இதெல்லாம் வேண்டாம்ன்னுதான் சொன்னேனேத் தவிர உன்னைப் பிடிக்காம இல்ல. சரி அப்படியே நான் பேசினது உனக்குத் தப்புன்னு தோணித்துன்னா அதுக்கு மனப்பூர்வமா சாரி கேட்டுக்கறேன்”, அடுத்த தடாலடி ஸ்டேட்மென்ட் ஹரி விட, இதற்கு என்ன பதில் பேச என்று தெரியாமல் ஸ்வேதா,

“நேக்கு பிளேன்ல சரியாத் தூங்காம தலைய வலிக்கறது. ப்ளீஸ் நாம இதைப் பத்தி அப்பறமா பேசலாமா. நான் கண்ணை மூடி தூங்கறேன்”, என்று கூறி, எங்கே அவன் அடுத்து பேசப் போகிறானோ என்று கண்ணை மூடிக் கொண்டாள். கண்ணை மூடினாலும், ஸ்வேதா தூங்கவில்லை. கெளரியிடம் பேசவேண்டும் என்று எடுத்த தீர்மானம் இன்னும் வலுப்பெற்றது. ஹரியும் வந்த அன்றே அவளை ரொம்பப் படுத்த வேண்டாம் என்று வாய் மூடி கார் ஓட்டும் வேலையை மட்டும் செய்தான்.

காரில் இருந்த பிளேயரில் ஹரி... ஃப்ளுட் இசையை ஒலிக்கவிட, அந்த மென்மையான இசைக்கு ஸ்வேதா என்ன முயன்றும் அவளால் தூக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறிது நேரத்தில் அவள் ஆழ்ந்த தூக்கத்திற்குள் செல்ல, அம்பாஸிடர் காராக இல்லாமல் போச்சே இன்னும் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டிருக்கலாமே என்ற ஆதங்கத்துடன், ஸ்வேதாவின் கையைப் பிடித்தபடியே கார் ஓட்டினான் ஹரி. இப்படியாக அடுத்த ஒரு மணியில் இருவரும் ஸ்வேதா தங்கப்போகும் அபார்ட்மெண்ட்டை அடைந்தார்கள்.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.