(Reading time: 6 - 12 minutes)

05. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

 அனுபவம் இல்லை, அதனால் ஆயிரம் தொல்லை.....

 இந்த அன்பொரு தொல்லை, எதிலும் அடங்குவதில்லை......

றியதில் இருந்து அமைதியாக வந்த ஸ்வேதாவை ஓரக்கண்ணால் பார்த்தபடியே காரை ஓட்டினான் ஹரி. ஹரியை தவிர்ப்பது எப்படி என்ற அதி தீவிர சிந்தனையில் ஸ்வேதா இருக்க, பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையில் இருந்தான் ஹரி.

“ஸ்வேதா நாளைல இருந்தே ஆஃபீஸ் போறியா?”, ஹரி கேட்க, அது காதிலேயே விழாத அளவு யோசனையில் மூழ்கி இருந்தாள் ஸ்வேதா.

ஹரி, ஸ்வேதா.... ஸ்வேதா என்று இரண்டு, மூன்று முறை கத்தி கூப்பிட்ட பிறகே தன் சிந்தனா லோகத்திலிருந்து விடுபட்டு என்ன என்ற கேள்வியுடன் அவனை நோக்கினாள்.

“இல்லை நாளைல இருந்தே ஆஃபீஸ் போறியான்னு கேட்டேன். அப்படி நான் கேட்டது காதுல கூட விழாத அளவு என்ன யோசனை”

எல்லாம் உங்களைத் தவிர்க்கறதைப் பத்திதான் என்று மனதிற்குள் நினைத்தபடியே வெளியில், “ஹாங் ஒண்ணும் பெரிசா இல்லை. ஆமாம், நாளைக்கே போகணும். வேலை நிறைய இருக்கு. இன்ஃபாக்ட் இப்போக்கூட சென்னை ஆஃபீஸ் கொலீக்ஸ் கூட கான் கால் இருக்கு. போன உடன பேசணும்”, ஹப்பாடா வீட்டிற்குப் போனவுடன் இதையே சாக்காக வைத்து ரூமின் உள்ளே போய்த் தாள் போட்டுக் கொள்ளலாம், என்று அற்ப மகிழ்ச்சிக் கொண்டாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அது எப்படி அப்படி எல்லாம் சந்தோஷப் பட விடுவேனா என்று ஹரி உடனே, “ஷ்ஷப்பா முடியல. நானும் அதே IT கம்பெனிலதான்ம்மா குப்பை கொட்டறேன். அதனால எனக்கும் அங்க எப்படி வேலை நடக்கும்ன்னு தெரியும். பில் கேட்ஸா இருந்தாக் கூட ட்ரிப் முடிஞ்சு வந்த உடன கான்கால்ல உக்காற மாட்டார். அதனால கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு”, என்று சொல்ல, ஸ்வேதா பல்லைக் கடித்தாள். நியூயார்க் வந்ததிற்கு புதுசா எதை வாங்கறேனோ இல்லையோ ஹரியால் இப்படிக் கடித்து கடித்து ஒரிஜினல் பல் போய் பல்செட் வாங்குவது உறுதி என்ற முடிவிற்கு வந்தாள் ஸ்வேதா.

“தீபா இருக்கற அபார்ட்மென்ட்க்கு இன்னும் எத்தனை தூரம் இருக்கு. ஏற்கனவே அரைமணியா ட்ராவல் பண்றோம்”

“இப்போதான் கால்வாசி தூரம் கிராஸ் பண்ணி இருக்கோம், இன்னும் ஒரு ஒண்ணரை மணி நேரம் ஆகும். USல பக்கம் அப்படிங்கறதே அரை மணி நேரப்பயணத்துலதான் இருக்கும். இதுல தூரம் அப்படின்னா நீயேக் கால்குலேட் பண்ணிக்கோ”

“ஓ அப்படின்னா நான் கொஞ்சம் தூங்கவா, உங்களுக்கு பக்கத்துல உக்கார்ந்து தூங்கினா வண்டி ஓட்ட ஸ்ரமமா இருக்குமா”, ஹரியிடம் பேசாமல் எஸ்ஸாக ஸ்வேதா கேட்க, ஹரி வாயெல்லாம் பல்லாக அவளைப் பார்த்து,

“எனக்கு அப்ஜெச்ஷனே இல்லை. நல்லாத் தூங்கு”, என்று உடனடியாகக் பதில் கூறினான். இதில் ஏதேனும் உள்குத்து இருக்குமோ என்று ஸ்வேதா ஹரியைப் பார்த்தாள்.

“ஹெட் ரெஸ்ட்க்கு பில்லோ வேணும்ன்னா பாக் சீட்ல இருக்கு எடுத்துக்கோ”, என்று கூற ஸ்வேதா இத்தனை கரிசனையுடன் ஏன் தன்னை தூங்க சொல்கிறான் என்று யோசித்தாள். விமான நிலையத்தில் இறங்கியதில் இருந்து தான் பல்லைக் கடிக்கும் வேலையும், அதை விட்டால் யோசிக்கும் வேலையும் மட்டுமே செய்வதாகத் தோன்ற இது வேலைக்காகாது என்று வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் எப்படி யோசித்தாலும் இவனை ஆஃப் பண்ண மட்டும் ஐடியா கிளிக் ஆகா மாட்டேங்கறது, என்று தன்னைக் குறித்தே மிகவும் பரிதாபப்பட்டாள்.

“என்ன ஸ்வேதா தூங்கலையா?”

“இல்லை.... தீபா வீட்டுக்குப் போயிட்டே தூங்கிக்கறேன். இப்போத் தூங்கினா ரெண்டுங்கெட்டானா போய்டும் என்று சொல்ல”, ஹரி மனதுள், ச்சே கைக்கு எட்டினது தோளுக்கு எட்டலையே, இவத் தூங்கினா, அப்படியே அந்தத் தூக்கக் கலக்கத்துல என்னோட தோள்ள சாஞ்சுப்பான்னு எத்தனை ஆசையா இருந்தேன், இப்படி நிராசையாப் போச்சே என்று வட போச்சே ஃபீல் கொடுத்தான்.

“அப்பறம் நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்”, என்று தடாலடியாக ஹரி கேட்க, இவன் என்ன லூஸா என்பது போல் பார்த்த ஸ்வேதா,

“என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை, உங்க கல்யாணத்தைப் பத்தி யாரும் எனக்கு சொல்லலை. நீங்க எப்போன்னு சொன்னேள்ன்னா கரெக்ட்டா வந்துடுவேன்”, உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்று பதில் கூறினாள்.

“ஜோக்கா சகிக்கலை”

“ச்சே ச்சே ஜோக்லாம் இல்லை. நிஜமாத்தான் சொல்றேன்”

“சும்மா சொல்லாத ஸ்வேதா. உனக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு நீ வந்து சொன்ன உடனே நான் உன்னை ரிஜெக்ட் பண்ணிட்டேன், அந்தக் கோவத்தை இப்படி காட்டாத”

“இது என்ன அநியாயமா இருக்கு. உங்களுக்கு எப்படி... அப்போ என்னைப் பிடிக்காம கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேளோ, அதே மாதிரி எனக்கு இப்போ உங்களை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லை”

“சரி அப்போ ஏன் மாமா பாக்கற வரன் எல்லாம் வேண்டாம்ன்னு சொல்ற?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.