(Reading time: 18 - 35 minutes)

ன்று....

ரிஜிஸ்டர் ஆபீசின் வாசலில் சென்று நின்றது கோகுலின் கார். அங்கே காத்திருந்தனர் முரளியும் பெற்றோரும். வழக்கமான நலம் விசாரிப்புகளை தாண்டி அப்பாக்கள் மூவரும் எதுவும் பேசிக்கொள்ள வில்லை.

மனம் ஒரு நிலையிலேயே இல்லை. ஸ்ரீதரனுக்கு. ஏதோ ஒன்று சரி இல்லை என்றே தோன்றிக்கொண்டிருந்தது அவருக்கு.

கோதையின் அருகில் சென்று அவள் தோளை அணைத்துக்கொண்டார் யசோதா. அருகில் வந்து நின்றார் தேவகி.

'வாம்மா...' இரண்டு அம்மாக்களும் ஒன்றாக சொல்ல அவர்களது வாஞ்சையான புன்னகை கோதையின் மனதை ஊசி முனையாய் தைத்தது. அவளது முக மாற்றம் கோகுலுக்கும், முரளிக்கும் புரியாமல் இல்லை.

யசோதைக்கு ஏனோ மனம் இன்னமும் ஆறவில்லைதான். கோதையின் முகத்தை பார்த்து கேட்டார் அவர்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'அக்கா எங்கே மா??? ஊருக்கு போயிருக்காளா???' 

'ம்... ஆங்... ஆமாம் டெ... டெல்லிக்கு...' வார்த்தைகள் தட்டு தடுமாறி வெளியே வர கண்களின் ஓரத்தில் கண்ணீர் வெளியே வரட்டுமா என கேட்க... இரண்டு அம்மாக்களுக்கும் அவள் சொல்வது உண்மையில்லை என்று புரிந்தே போனது.

யசோதையின் கரம் கோதையின் தோளை மெல்ல வருடியது... 'சரி சரி விடு... எங்க கோதை சொன்னா சரி... வா..' உயிர் மொத்தமாக வற்றிப்போன ஒரு உணர்வு கோதைக்கு.

தேவகிக்குள் கொஞ்சம் வருத்தம் பரவத்தான் செய்தது. 'இவளுமா பொய் சொல்கிறாள்???'

'சரி சரி வாங்கோ எல்லாரும் உள்ளே போலாம்... வந்த வேலையை முதல்லே முடிச்சிடுவோம்...' ---- இது முரளி....

அவர்கள் உள்ளே நுழைய போக  'ஹேய்... கோதை..' கேட்டது ஒரு குரல். 'என்ன நீ மட்டும் வந்திருக்கே உங்க அக்கா எங்கே???' ஒரு நொடி இதயம் நின்று துடித்தது கோகுலுக்கும், முரளிக்கும்.

அங்கே புன்னகையுடன் நின்றிருந்தாள் வேதாவுடன் வேலை பார்க்கும் ரஞ்சனி. கவிதா அளவுக்கு பழக்கம் இல்லை என்றாலும் ஓரிரு முறை வேதாவுடன் அவர்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாள் ரஞ்சனி.

பதிலுக்கு கோதை மெல்ல புன்னகைக்க... 'ஏன் உங்க அக்கா ரெண்டு நாளா ஆபீஸ் வரலை...' அடுத்த கேள்வியாக கேட்டே விட்டாள் ரஞ்சனி 

'அது... அக்கா...  அக்....' கோதை தடுமாற

'எக்ஸ்க்யூஸ்மீ மேடம்....' இடை புகுந்தான் முரளி. 'உள்ளே கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்து உங்ககிட்டே பேசறோமே...'

'ஓ..ஷுயர்... ஷுயர்...' என்று புன்னகையுடன் சொல்லி விட்டு விடை பெற்றாள் ரஞ்சனி.'

'சரி... வாங்கோ உள்ளே போலாம்...' முரளி சொல்ல எல்லாரும் நடக்க ... கால்கள் பின்னவது போல் ஒரு உணர்வு கோதைக்கு... இரண்டு மூன்று அடிகள் எடுத்து வைத்தவள் நின்றே விட்டாள். சட்டென திரும்பினான் கோகுல்.

'சரி சரி விடு... எங்க கோதை சொன்னா சரி...' யசோதா சொன்னதே அவள் காதுக்குள் கேட்டுகொண்டிருந்தது.

'முடியாது. என்னால் இதற்கு மேல் பொய் சொல்ல முடியாது' அவள் மனம் அலற மெதுவாக விழி நிமிர்த்தி கோகுலின் முகம் பார்த்தாள் கோதை. கெஞ்சலும், தவிப்புமாக அவளது பார்வை அவனை ஊடுருவியது.... அவனுமே நின்று விட்டான்

'வேண்டாமே... பொய் வேண்டாமே... '  .இடம் வலமாக தலை அசைத்தாள் கோதை.

'என்னடா ரெண்டு பேரும் நின்னுட்டேள்... வாங்கோ...' அழைத்தான் முரளி. இவர்களின் எண்ண ஓட்டங்கள் போகும் திசை அவனுக்கு புரியாமல் இல்லை. அசையவில்லை கோதை. இமைக்காமல் கோதையின் முகம் பார்த்திருந்தான் கோகுல்.

அவனிடம் கெஞ்சின அவள் கண்கள் 'சொல்லிவிடவா??? எல்லாவற்றையும் சொல்லிவிடவா???'

புரிந்தது கோகுலுக்கு. அவள் உள்ளம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது அவனுக்கு. அதற்கு மேல் அவளை தவிக்க விட மனம் இல்லை அவனுக்கு. தலை அசைத்து விட்டான் அவன்.

'என்னாச்சுமா??? யசோதா கேட்க

கை கூப்பினாள் கோதை 'என்னை மன்னிச்சிடுங்கோ... அக்கா டெல்லி போகலை...'

மூன்று தந்தையரும் அதிர்ந்து போய் பார்க்க... இரண்டு அன்னையரும் வியப்புடன் நிற்க.. தோற்றுப்போன பாவத்துடன் முரளி பார்க்க... எந்த பாவமும் இல்லாமல் கோதையையே பார்த்திருந்தான் கோகுல்.

அதே நேரத்தில் சற்றே அதிர்ச்சியுடன் தனது நெஞ்சின் மீது கை வைத்துக்கொண்ட ஸ்ரீதரனின் கையில் தட்டுப்பட்டது அந்த காகிதம். எதோ ஒரு உந்துதலில் அவர் அதை வெளியில் எடுக்க... வேதாவின் கையெழுத்தில் சிரித்தது அந்த கடிதம்  

அப்பா...

என்னை மன்னிச்சிடுங்கோ. உங்களண்டை சொல்லாம நான் ஆத்தை விட்டு போறேன். நேக்கு கோகுலை பிடிச்சிருக்கு. ஜி.கே க்ரூப்ஸ் கோகுல். அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க போறார். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்னுக்கு என்னை வர சொல்லி இருக்கார். கல்யாணம்  பண்ணிண்டு ரெண்டு பேரும் ஒண்ணா ஆத்துக்கு வருவோம். நான் இப்படி பண்றதுனாலே கோதையோட வாழ்கை கஷ்டபடும்தான் நான் அவளுக்கு பண்றது துரோகம் தான். ஆனா நேக்கு வேறே வழி தெரியலை.

சாரிப்பா

வேதா...

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவு பெரும்..

Episode # 12

Episode # 14

{kunena_discuss:890}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.