(Reading time: 13 - 26 minutes)

ப்போ என்னத்தான் தயக்கம் மாமா? நீங்க என்ன யோசிக்கிறிங்கன்னு எனக்கு புரியவில்லை..”

“ உன்னப்பத்திதான் யோசிக்கிறேன்.. நீயும் பிரபுவும் இப்போத்தான் சந்திக்கிறிங்க... உனக்கு அவனை முழுவதும் தெரியாது.. எதுக்காக நீ அவன் மேல் காதல் கொண்டு இருக்கன்னு புரியவில்லை..

இது பாரும்மா , நீ சின்ன பொண்ணு .. உனக்கு மாமாவாகவோ , வயசுல மூத்தவன் என்ற முறையிலயோ நான் சில விஷயங்களை சொல்லித்தான் ஆகணும் . இந்த குடும்பம் சேருவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கு .. இதுக்காக நீ சந்துருவை காதலிக்கனும்ன்னு அவசியம் இல்லை ... நளினியும் பாஸ்கரனும் எந்த எண்ணத்துல இருக்காங்கன்னு தெரியல .. ஆனா அவங்களை விட உன் மனசும் உன் முடிவும் தான் இதுல முக்கியம் .. "

"எனக்கு புரியுது மாமா .. வற்புறுத்தியோ , இல்ல வெறும் ஈர்ப்பு என்பதாலேயோ நான் அத்தானை விரும்பல .. அவரை பார்த்தபோதே எனக்குள் ஏதோ சொந்தம் மாதிரி உள்ளுணர்வு ... அவர் யாருன்னு தெரியாதப்போவே , அவர் உணர்வுகளுக்கு மரியாதை தந்தேன் நான் ..அதான் நிஜம் .."

".. "

" அத்தையை நீங்க எப்படி எதுக்கும் விட்டு தர மாட்டிங்களோ அதே மாதிரி தான் நானும் . அத்தானை எப்பவும் விட்டு தர மாட்டேன் .. "என்றாள்  நந்திதா தீர்க்கமாய் ..

ஞானபிரகாஷின் பதிலுக்கு காத்திருப்பவள் போல , அவரின் முகத்தை பார்த்திருந்தாள்  அவள் . ஆனால் , அவரோ எதுவுமே பேசாமல் இருந்தார் .. மனதிற்குள் லேசாய் பதட்டம்  இருந்தாலும், மனதில் இருந்ததை சொல்லி விட்டோம் என்று நிம்மதியாய் உணர்ந்தாள் அவள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

அங்கு நந்திதாவை தந்தையுடன் அனுப்பி வைத்து விட்டு இருப்பு கொள்ளவில்லை சந்துருவுக்கு ..

"அம்மு வா கோவில் போகலாம் 'என்று நளினியை அழைத்தான் .

"இருடா ..என்ன அவசரம் ?"

""என்ன அம்மு நீ விவரம் புரியாமல் இருக்க .. என் ஆளு  உன் ஆளுக்கூட கோவில் போயிருக்கா "

'' அதான் தெரியுமே ..அதுக்கென்ன ?"

"அதுக்கு என்னவா ? உன் ஆளு நம்பியார்  ரேஞ்சுக்கு பேசி  நந்து மனச மாத்திடடார்ன்னா "

"யாரு என்ன சொன்னாலும் கேட்டுட்டு நந்தும்மா உன்னை மறந்திடுவாளா ?"

"இல்லத்தான் .. ஆனா , மாமனார் வாக்கே வேதவாக்குன்னு என்  வேதவள்ளி  நினைச்சுட்டா , அப்பறம் நான்  பழனி முருகனாய் ஆண்டியாகத்தான் நிக்கணும் "

"டேய் , எத்தனை தடவ சொல்லுறேன் , சாமி விஷயத்துல இப்படி  எல்லாம் பேச கூடாதுன்னு "

"அட அம்மு , முருகனும் நானும் ப்ரண்ட்ஸ் .. நான் என்ன சொன்னாலும்  அவர் தப்பா எடுத்துக்க மாட்டார் .. நீ முதல்ல சீக்கிரமா கிளம்பு "என்றான் .. மகனின் அவசரத்தை பார்த்து நமட்டு சிரிப்புடனேயே கிளம்பினார் நளினி ..

கோவில் ..!

தனது மாமாவுடன் நிம்மதியாய் அம்மனை வேண்டி கொண்டிருந்தாள் நந்து .. கருணையே வடிவானவளும்  அவளை பார்த்து கருணையுடன் சிரிக்க, அங்கு வந்து சேர்ந்தான்  சந்துரு .

தனது தந்தை விழி மூடி இருந்த நேரமாய் பார்த்து அவளிடம்   ஜாடையாய் செய்கையிலேயே "என்ன  நடந்தது ?' என்று அவன் கேட்கவும் முகத்தை திருப்பி  கொண்டாள்  நந்து ..

"நான்தான் சொன்னேனே அம்மு , உன் மருமகளை பற்றி "என்றவன் வசைப்பாட ஆரம்பித்த நேரம்  கும்பலாய்  ஆண்கள் அவனை மோதி ஓடினர் ... அவர்களை  துரத்தி கொண்டு பெண்களும் ஓடினர் ..

"அம்மு "

"என்னடா

"வாட் ஐஸ் திஸ் ..நீ என்னமோ , கிராமம்ன்னா அடக்கி வாசிக்கணும்னு  உன் மருமகளை சைட் அடிக்க கூட  தடை பண்ண ? இங்க பொண்ணுங்க  பசங்களை  தொரத்துறாங்க ?"

"டேய் .. இது மஞ்சள் நீராட்டு விழா "

"அப்படின்னா  ?"

"பெரிய வெள்ளைக்கார துரை  .இவருக்கு ஒண்ணுமே  தெரியாதாம்  ? எத்தனை படத்துல பார்த்து  இருப்ப நீ ?"

"சோ நீ சொல்ல மாட் டீயா ?"என்று மிரட்டினான் குறும்பாய்  ..

"அதாவது மகனே , அத்தை மகள் , மொறைப்பொண்ணுங்க   எல்லாம் அவங்க மாமன்  மகன்  மீது மஞ்சள் தண்ணி ஊற்றி விளையாடுவாங்க  "கோவில் ..!

தனது மாமாவுடன் நிம்மதியாய் அம்மனை வேண்டி கொண்டிருந்தாள் நந்து .. கருணையே வடிவானவளும்  அவளை பார்த்து கருணையுடன் சிரிக்க, அங்கு வந்து சேர்ந்தான்  சந்துரு .

தனது தந்தை விழி மூடி இருந்த நேரமாய் பார்த்து அவளிடம்   ஜாடையாய் செய்கையிலேயே "என்ன  நடந்தது ?' என்று அவன் கேட்கவும் முகத்தை திருப்பி  கொண்டாள்  நந்து ..

"நான்தான் சொன்னேனே அம்மு , உன் மருமகளை பற்றி "என்றவன் வசைப்பாட ஆரம்பித்த நேரம்  கும்பலாய்  ஆண்கள் அவனை மோதி ஓடினர் ... அவர்களை  துரத்தி கொண்டு பெண்களும் ஓடினர் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.