(Reading time: 13 - 26 minutes)

ன்னை செக் செய்ததில் பெரிய problem எதுவும் இல்லை.. ஆனால் சின்ன விஷயமும் இல்லை. நீ அதிக உணர்ச்சி வசபட்டால் , உன் இதய துடிப்பு சீராக இல்லை. ஒரு வகையில் இது பிரஷர் சம்பந்தப்பட்ட கேஸ்தான் என்றாலும், உன் வரையில் அது நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சீரில்லாத ரத்த ஓட்டம் உன் மூளையிலும் ஏற்பட்டு மயக்கத்தை தருகிறது.

இதற்கு சரியான சிகிச்சை என்றால் , நீ உன் மனதை முடிந்த அளவு அலட்டாமல் இருக்க வேண்டும். தினமும் குறைந்த பட்சம் ஏழு மணி நேரமாவது தூங்க வேண்டும். வேலைகள் செய்யும் போது கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு செய். ஒரே பிடியில் எல்லா வேலையும் முடிக்க நினைக்காதே.

உனக்கு சில வைட்டமின் மாத்திரைகளோடு , ஸ்லீபிங் டேபிலேட் தருகிறேன். தவறாமல் எடுத்துக் கொள்.” என்று டாக்டர் கூற,

“டாக்டர் இந்த பிரச்சினை மயக்கம் மட்டும் தானே வர வைக்கும்?”

“இல்லை .. ப்ரத்யா .. அந்த மயக்கம் நீடிக்கும் கால அளவு அதிகரித்தால் கோமாவில் கொண்டு விடும். அல்லது secizure (பிட்ஸ்) வரும்.”

“ஒஹ்...  “என்றவள் அவர் கொடுத்த prescription எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“ப்ரத்யா.. எனக்கு தெரிந்து உன் கணவரை நீ மிஸ் செய்கிறாய் என்று நினைக்கிறேன். இந்த விஷயத்தை சொல்லி ஒன்று அவரை இங்கே வரவழை... அல்லது நீ அவரோடு சென்று விடு. அது உன்னை கொஞ்சம் அமைதி படுத்தும்.” என்று சொன்னார்.

மெல்ல சிரித்தபடி “பார்க்கலாம் டாக்டர்” என்று விட்டு போனாள்.

அவளுக்கு தன் நிலைமையை யாரிடம் சொல்ல என்று தெரியவில்லை, யாருமே அவளிடம் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்காத போது அவள் எப்படி சொல்வது, எல்லோருமே அவரவருக்கு தெரிந்த படி நினைத்து கொண்டார்களே தவிர, அவளிடம் பேசவில்லை அவள் பெற்றோர் உட்பட.

ப்ரயு பெற்றோரும் அவள் ஏன் உடனே வேலைக்கு போனாள் என்று சத்தம் போட்டு விட்டு , உடம்பை பார்த்துக் கொள்ள சொல்லி வைத்து விட்டார்கள்.

வித்யா வந்து அவளை பார்த்துவிட்டு சென்றாள். வித்யா இப்போது எல்லாம் முன் போல் அடிக்கடி வருவதில்லை. அவள் குழந்தை, கணவன், மாமியார் என்று பிஸியாக இருந்தாள்.

ஆதி முதல் நாள் பேசியவன், மறுநாளில் இருந்து அவன் கூப்பிட்டாலும் ப்ரயு எடுக்கவில்லை. அவன் மெசேஜ் அனுப்பியதற்கும் அவள் பதில் அனுப்பவில்லை.

அவனுக்கு தெரியும் அவளுக்கு தன் மேல் கோபம் என்று. அவன் அன்று இருந்த நிலை , அவளுக்கு மயக்கம் என்று கேள்விப்பட்ட பின் ஏற்பட்ட துடிப்பு, அவனின் குற்ற உணர்ச்சி எல்லாம் சேர்த்து அவனை வேகமாக பேச வைத்து விட்டது. பிறகு அதை எண்ணி வருத்தப்பட்டான்.

தான் அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில், அவளை மேலும் வருத்தப்படும் படி பேசியதை எண்ணி வேதனை பட்டான். மறுநாள் அவளிடம் மன்னிப்பு கேட்க எண்ணியிருந்தவன், அவள் பேசவில்லை என்றதும் அது தனக்கு கிடைத்த தண்டனையாக எண்ணி காத்திருந்தான். அவள் இப்படி செய்யவில்லை என்றால் தனக்கும் கோபத்தில் பேசும் வார்த்தைகள் மீது கவனம் இருக்காது என்று புரிந்து கொண்டான்.

ஆனாலும் தினமும் விடாமல் காலை, இரவு இரண்டு வேளையும் மெசேஜ் அனுப்பி விடுவான். அவள் வீடு திரும்பும் நேரத்தை கணக்கிட்டு, போன் செய்து அவன் தாயிடம் அவள் எப்படி இருக்கிறாள், சாப்பிட்டாளா என்று விசாரித்து விடுவான்

ஆதி தனக்கு தண்டணையாக இதை எண்ணி இருக்க, பிரயுவின் மனதிலோ ஆதிக்கு தான் தேவை இல்லை என்ற எண்ணம் வளர ஆரம்பித்தது.

ஆதி தன் அம்மாவை பார்த்துக் கொள்ளத்தான் அவளை திருமணம் செய்து கொண்டான். தன் மேல் அவனுக்கு அன்போ, பாசமோ , நேசமோ எதுவுமே இல்லை.

அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? ஒரு வேளை அவன் எதிர்பார்ப்பது போல் தான் இல்லையோ?

வெளிநாடு சென்ற புதிதில் இருந்த ஆசையும், வேகமும் இப்போது அவனிடம் இல்லை,

ஆசை அறுபது நாள் பழமொழி அவனை பொறுத்தவரை உண்மையோ?

இந்த மாதிரி எல்லாம் தன் கற்பனை குதிரையை தட்டி விட்டிருந்தாள். ப்ரயு ..

யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்க ஆரம்பித்தாள். தன் அம்மா வீட்டிற்கு கூட போவதில்லை. அவர்கள் அவ்வப்போது வந்து பார்த்து சென்றார்கள். ஆனால் அடிக்கடி வருவதில்லை.

எட்டு மாதங்கள் கடந்திருக்க, எந்த மாற்றமும் இல்லாமல் வாழ்க்கை சென்றது.

பிரயுவின் வேலையில் எந்த பிரச்சினை இல்லாமல், முழு கவனமாக செய்பவள் என்பதால் அது அவளுக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ் relief ஆக இருந்தது. ப்ரயு வேலை செய்யும் hospitalஇல்  அவளுக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்க எண்ணி, அவளை அதற்கு பிரத்யோக ட்ரைனிங் ஒன்று மூன்று மாதத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.