(Reading time: 23 - 46 minutes)

டுத்து அங்கிருந்த ரைடுகளில் அத்தனை ஆட்டம் போட்ட போது அவள் மகிழ்வினி…. அத்தனைக்கும் இடையில் அவன் காண்பித்த அக்கறையிலும்…. இவளுக்கு கொடுத்து எடுத்துக் கொண்ட உரிமையிலும் சுகவினி….

இப்படியாய் அவள் யவ்வனுடன் அந்த ஷிப்பை அடையும் போது இரவில் அத்தனை விளக்குகளுடன் வண்ணமயமாய் காத்திருந்தது அந்த வெள்ளைக் கப்பல்.

அந்த கப்பல் ஒன்றும் முழு பயணிகளுடன் கிளம்ப காத்திருக்கவில்லை…. சில மெயின்டனன்ஸ் வேலைக்காக வந்திருந்த அது தயாராக வேண்டிய தினத்துக்கு சில நாட்கள் முன்பாகவே முழு ஆயத்தமாகி இருக்க….

யவ்வனின் ஃப்ரெண்டுடையது அல்லவா….இவர்களைப் போல சிலருக்காக மட்டும் இந்த சில தினங்கள் குட்டி க்ரூஸ்க்கு அது கிளம்பிக் கொண்டிருந்தது….

.ஆக இவர்களுக்கான அறைக்கு செல்லும் போதே நிலவினிக்கு ஒன்று புரிந்தது… இவர்கள் தளத்தில் இவர்களைத் தவிர யாருமில்லை…..

“இங்க வச்சு எதுவும் ப்ராங் பண்ணப் போறீங்களா?” சற்று பரிதாபமாய் கேட்டாள் இவள்….. வழக்கமா இவ தனியா அவன் கைல மாட்னாலே அதான நடக்கும்….. இங்க வச்சுன்னா இவ எப்டி சமாளிக்க? அதை நினைத்து இவள் கேட்க….

அவனோ குனிந்து இவள் நெற்றி முட்டி, கண்களை இவள் மீதே வைத்துக் கொண்டு…மறுப்பாக சின்னதே சின்னதாய் தலை அசைத்தான்.

அவன் பார்வையில் இவளுக்குள் ஏதோ சிலீர் என உடைந்து சில் என பரவியது……

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நீலாவின் "இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“எதுனாலும் உனக்கு பிடிச்சது மட்டும்தான்….”

சிந்த துடித்த சிறு சிரிப்போடு இவன் சொன்ன இது ஆறுதலாமா?… மடை திறந்து ஏதோ ஒன்று இவளை அடித்துக் கொண்டு போனது..

“அப்ப இதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலைன்றீங்களா…?” அவன் எதிர் பாராத கோணத்தில் எகிறினாள் இவள்….உள்ளுக்குள் திக்குமுக்காட்டும் இனம் புரியா உணர்வு பிரளயத்திலிருந்து தப்பிக்க அவள் பக்க முயற்சி அது…..

ஏனென்று தெரியவில்லை எல்லாமே பிடித்திருந்தாலும், தன்னவனாய் அவனை தரை முதல் தலை வரை உணர்ந்திருந்தாலும்…அவளை அடக்கி ஆளும் அந்த உணர்ச்சி நதியின் போக்கில் போக ஏதோ ஒன்று சின்னதாய் தடுக்கிறது இவளை…..

மதித்து வந்திருந்த மரபு விதிகள் மாற்றி அமைக்கப்படும் மண வேளையில், கரைய மறுக்கும் கட்டி வைத்திருந்த காப்பு சுவரின் கடைசி கல் அது..…..

“ஹேய்….பயப்படுறதுக்கு ஒன்னுமில்லன்னு சொன்னேன்….” அவசரமாய் அவளுக்கு விளக்கம் சொன்னவன்…. ”உன் கூட இருக்ற ஒவ்வொரு நொடியும் எனக்குப் பிடிக்கும் குட்டிப் பொண்ணு….” தன்னிலை விளக்கி தன்னவளை சமனப் படுத்த முயன்றான்.

ஆனால் பயப்படாதே என்று அவன் சொன்னதில் இன்னுமாய் பயம்தான் வந்து சேர்ந்தது அவளுக்கு…..

அதே மூடில் இவர்களுக்கான அறைக்குள் நுழைந்தாள்…..தங்க மஞ்சள் நிறத்தில் பர்னிஷ் செய்யப்பட்ட சந்தன நிற ஒரு குட்டி வரவேற்பறையும்…..நீல நிற அலங்காரத்தில்  ஒரு க்யூட் பெட் ரூமுமாய் கண்ணுக்கும் மனதுக்கும் இதமாய் அது….

ஆனால் இருந்த  தகிட தகிட தம் உணர்வில் பொண்னுக்கு  எதையும் ரசிக்க முடியவில்லை….

அங்கிருந்த கனோஃபி பெட்டை பார்த்தாள்…. இவர்கள் திருமண இரவில் மல்லிகை மணம் வீசிக் கொண்டிருந்த இவள் பார்க்காத அந்த அறை ஞாபகம் வந்தது இவளுக்கு….. ‘அப்டி இருந்தா நல்ல இருக்குமோ என்ற ஒரு ஆசை அம்பு அதுவாக எழுகிறது விர்ரென மனதில்….

பயத்துக்கும் ஆசைக்கும் பாதிப் பாதியாய் பகிர்ந்தளித்தாள் தன்னை…. அதன் பலனாய்

“நான் குளிச்சுட்டு வர்றேன்…” என பாத்ரூமுக்குள் சென்று பதுங்கிக் கொண்டாள். வெகு நேரம் கழித்து தலைக்கு குளித்து அதை சற்றும் துவட்டாமல் வெளியே வந்தவளைக் கண்டு என்ன புரிந்தானோ கணவன்….

வரவேற்பறையிலிருந்த ஒரு கதவைத் திறந்தான்…..குட்டியாய் பால்கனி…. இவளை கை பிடித்துக் கூட்டிப் போய் அங்கு நிறுத்தினான்….. “முடிய காய வை வினு”

கடல்காற்று முகத்தில் அடித்தது… ஆம் கப்பலின் பக்கவாட்டில் அமைந்திருந்தது அந்த அறை….

 என்னதான் இரவென்றாலும் கப்பலை ஒட்டிய நீர் பரப்பில் விழுந்த வெளிச்சத்தில் சுழிந்து ஓடிய தண்ணீரைப் பார்க்கவும்…. பரந்து கிடந்த அந்த வானத்தைப் பார்க்கவும்…..

அந்நேரத்தில் நகரத் தொடங்கிய கப்பலினால் காணாமல் போகத் தொடங்கிய வெளிச்ச புள்ளி கரையைப் பார்க்கவும்…. நிலவினிக்கு நன்றாகவே இருந்தது….

 பால்கனியின் தடைச் சுவராக இருந்தது இரண்டே இரண்டு குறுக்குக் கம்பிகள்தான். அதை சுட்டிக் காட்டிய யவ்வன்

“கேர்ஃபுல்லா நில்லு வினு…. குளிச்சுட்டு வர்றேன்… என உள்ளே போய்விட்டான்.

எவ்வளவு நேரம் போனதென்று தெரியவில்லை இவளுக்கு….. அவன் இப்போது மறுபடியுமாக இங்கு வந்தான்….

“என்னாச்சு வினு….?”

அவன் கேள்விக்கு இடவலமாக மட்டுமாய் ஒரு தலையாட்டல் இவளிடமிருந்து பதிலாய்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.